கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Saturday, October 4, 2008

இளமையின் இரகசியம்

கோப்பெரும் சோழன் என்னும் அரசன் தன்னரசு துறந்து உயிர் நீத்தற் பொருட்டு வடக்கு நோக்கி இருந்தான். அவரது நண்பரான புலவர் பிசிராந்தையார் அவனைப் பி?ந்து வாழ மாட்டாராய் தா?ம் ஒருங்கு உயிர் நீக்க அவன் இருந்த இடத்திற்குச் சென்றார்.

அப்பொழுது அரசுடன் இருந்த சான்றோர், பிசிராந்தையார் ஆண்டில் ?திர்ந்தும் உருவத்தில் இளையராய் இருத்தல் கண்டு வியந்து "கேட்குங்காலம் பலவாலோ, நரை நுமக்கு இல்லையாலோ' என அவரை நோக்கி வினவ அதற்கு பிசிராந்தையார், ""யாண்டு பல ஆக நரை இல ஆகுதல் யங்கா கியரென வினவுதிராயின் மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர் யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே (புறநானுறு) என்றும் செய்யுளால் விடை கூறினார்.

தாம் ஆண்டில் ?திர்ந்தும் நரையிலா இளமை உருவத்தோடு ஏற்ற காரணங்களை கூறப் புகுந்த பிசிராந்தையார், தம் மனைவி மக்கள் எல்லா நற்குணங்களும் நிரம்பினாராக இருந்ததை ?தலில் எடுத்துரைக்கிறார் ஓராண் மகன் தானும் குடும்பத்தவரும் இனிது வாழ்வதற்கு வெளியே சென்று பொருள் ஈட்டும் பொழுது, தன்னோடு உடன் பழகுபவர்களுடன் இருக்கும் நேரம் சிறிதாகும்.

அத்துடன் தன் உள்ளத்தைத் திறந்து வைத்து அவர்களுடன் பழகவும் இயலாது.

தான் வேலை செய்யுமிடத்தில் தலைவர்களும் உடன் வேலை செய்பவர்களும் தன்னோடு ?ரண்படுபவராக இருந்தால் அவன் படும் துன்பமோ அளப்ப?யது.

இவ்வாறெல்லாம் வெளியே பலவகை அல்லல்களுக்கு உட்பட்டு விட்டு, ஆடவன் மாலைப் பொழுதில் அயர்ந்து இல்லத்திற்குத் திரும்புகையில், தன் அழகிய கற்பிற் சிறந்த அறிவுடைய மனையாளால் குளிர் ?கத்தோடு அன்பாக வரவேற்கப்படுவானானால் அவன் தான் வெளியே பட்ட துன்பங்களை எல்லாம் மறந்து எவ்வளவு ஆறுதலும் களிப்பும் உள்ளவனாக தன் வீட்டிற்குள் செல்வான். அவ்வாறன்றி கடுகடுத்த ?கத்துடன் வெடுவெடுத்த சொல்லால் அவனை வாட்டும் தீய மனைவியெனில் அந்தக் கணவன் அகத்தில் துன்புற்று, கவலையும் நோயும் கொண்டவனாய் இளமையிலேயே ?த்துப் போவான்.

எனவே ஆடவரும் மகளிரும் அன்பினால் குளிர்ந்த ?க?ம் இழைந்த சொல்லும் கொண்டு ஒருவருடன் ஒருவர் பழகினால் இளமையுடன் இனிது வாழலாம்.

இந்த நுட்பத்தைக் கண்டு தமது இளமைக்கு ?தற் காரணமாக எடுத்துரைத்தமை பாராட்டத்தக்கது.

இனிப் பிசிராந்தையார் தன் இளமைக்கான இரண்டாவது காரணம் தமது ஏவலர்கள் என்கி றார். தலைவன் கருத்தறிந்து பிள்ளைகளும் ஏவலர்களும் நடந்தால் தலைவனுக்குத் துன்பமில்லை. அவ்வாறல்லாவிடின் கோபத்திற்கு ஆளாகித் தலைவன் விரைவில் ?ப்பு அடைந்து விடுவான்.இனி ஒருவன் கவலை இல்லாமல் நீண்டநாட்கள் வாழ்வதற்கு அவன் இல்லத்திற்குப் புறத்தே உள்ள இரண்டு காரணங்களை புலவர் கூறியுள்ளமை ஆராயத்தக்கது.

பிசிராந்தையார் குடியிருந்த ஊருக்கு அரசனாய் இருந்தவன் செங்கோல் செலுத்தி ?றையாக ஆண்டான். அரசன் கொடி யனாய் குடி மக்களை வருத்தினால் குடி மக்கள் கவலையின்றி வாழ ?டியுமா? அரசின் நீதி தவறுமிடத்து குடி, சூது, காமம், வறுமை என்று நாட்டில் பல கேடுகள் பெருகும். பிசிராந்தையார் காலத்தில் ஆண்ட அரசனோ அரசியல் நெறி பிறழாதவன். அவனது ஆட்சியில் வாழ்ந்த புலவருக்கு துன்ப?ம் நோயும் இருக்கவில்லை.

ஆண்டில் ?தியோராகியும் உருவில் இளைஞராகக் காணப்பட்டார்.

இனிப் புலவர் தாம் வாழ்ந்த நாட்டில் கல்வி கேள்விகளில் சிறந்த நற்குண?டையோர் வாழ்ந்ததாகவும் கூறுகிறார்.இந்தச் சான்றோர் குழுவில் சேர்ந்து பொய்யுரைக்காது அவர்கள் கூறிய மெய்யுரைகளைக் கேட்கும் பேறு கிடைத்ததாகவும் பிசிராந்தையார் கூறுகிறார். சான்றோ?ன் சொற்களைக் கேட்டு பொருட் சுவையில் உள்ளம் திளைப்பதால் இன்பம் பெருகும் இதனாலும் இளமை நிலைக்கும். ஆசி?யர் பிசிராந்தையார் பாடிய பாடல் ?லம் அவர் காலத்தில் தமிழ் மக்களின் இல்லற ஒழுக்க?ம் சிறந்து விளங்கியதை அறிகிறோம். மனைவியும் புதல்வர்களும் அன்பின் சேர்க்கையால் இதமாக ஒருவருடன் ஒருவர் பழகினர். அரசர்கள் குடி மக்களுக்காக வாழ்ந்தனர்.அந் நாட்களில் கல்வியறிவு மிக்க சான்றோர் குழாம் பிறரை சொல்லாலும் செயலாலும் நல்வ ழிப்படுத்தியமையும் காணக்கூடியதாக உள்ளது.

பெருந்தொகையானோர் குணநலம் வாய்ந்தவர்களாக இருந்ததால் பலரும் நரையின்றி கேசத்திற்கு சாயம் பூசாமலே இளமைப் பொலிவுடன் வாழ்ந்தார்கள் என்ற உண்மையும் தெ?கிறது.

No comments:

.