கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Sunday, December 21, 2008

நிஜம்

காகங்களுக்கு பட்டுக்குஞ்சம்
நீங்கள் கட்டிவிட்டதால்
அவை குயில்கள் என்று
ஊரெல்லாம் கூறித்திரிகின்றன.

நரிகளுக்கு நாட்டுச்சாயம்
நீங்கள் பூசிவிட்டதால்
அவை சிங்கங்கள் என்று
சிங்காரித்து திரிகின்றன.

குயில்கள்,
மெளனம் கலைத்து
கூவத்தொடங்கினால்!
சிங்கங்கள்,
சிலிர்த்து கர்ஜிக்கத் தொடங்கினால்!

முணுமுணுக்ககூட முடியாமல்
மூலையில் முடங்கிப் போவீர்.

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html

2 comments:

தேவன் மாயம் said...

நரிகளுக்கு நாட்டுச்சாயம்
நீங்கள் பூசிவிட்டதால்
அவை சிங்கங்கள் என்று
சிங்காரித்து திரிகின்றன.

நல்லா எழுதியிருக்கீங்க!!!!

தேவா...

Sinthu said...

பொய்மை எப்போதுமே நிலைத்திருக்காது தானே. வாய்மை வெல்லும் என்று சும்மாவா சொன்னங்க...........

.