கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Tuesday, January 20, 2009

ஜனநாயகம் மக்களால், மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது"ஜனநாயகம் மக்களால், மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது" என்ற ஆப்ரஹாம் லிங்கனின் கருத்தை தனது கன்னி உரையில் சிக்காகோவில் வைத்து பராக் ஒபாமா நினைவுகூர்ந்தார். அதோடு வெற்றிப்பெற்றது நானல்ல அமெரிக்க மக்கள் தான் , தேர்தலில் வெற்றிப்பெற்றிருந்தாலும் ஜனநாயக கட்சியை அடையாளப்படுத்து நீல நிற கொடியாகவும், குடுயரசு கட்சியை அடையாளப்படுத்து சிவப்பு நிற கொடியாகவும் பிரிந்திராமல் நம் நாடு யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஒப் அமெரிக்காவாக இணைந்தே இருக்கும் எனவும் கூறியிருந்தார்.

இக்கூற்றுக்கு அமைவாகவே பதவியேற்ப்பு நாளா இன்று (20.01.2009) நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருந்த ஒபாமா நீல நிற சட்டையும் சிவப்பு நிற டையுமாக அவரது உடை தெரிவு அமைந்திருந்தது. எது எப்படியோ அவர் மீது நம்பிக்கை வைத்திருந்த மக்களை காப்பாற்றுவாராக!!!
உங்களுக்கு இறைவன் துணை இருக்கட்டும்!!!!!!!
மாற்றம் தேவை


வாழ்த்தி வழியனுப்புவோமாக‌!!!!!
Post a Comment
.