கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Wednesday, January 14, 2009

நான் கனவு காண்கிறேன்

இன்று மார்டின் லூதர் கிங்கின் பிறந்த தினம்
வெள்ளையின மக்களின் இதயங்களைத் துளைத்த உரை, கருப்பின மக்களின் போராட்டத்தில் வெள்ளையர்களையும் பங்கேற்கச் செய்து, 1963ம் ஆண்டில்... லட்சக்கணக்கான கருப்பின மக்களைத் திரட்டி வாஷிங்டன் நோக்கி பேரணியாகச் சென்று அந்த இன மக்களுக்கு ஓட்டு போடும் உரிமை உள்ளிட்ட சம உரிமைகளும், வேலைகளும் வேண்டும் என்று கோரி ஆயுதமே இல்லாமல் போரை நடத்தி வெள்ளையர்களின் மனசாட்சியை தட்டி எழுப்பிய மகான் மார்ட்டின் லூதர் கிங் ஆற்றிய உரை நான் இன்று அவரது பிறந்த தினத்தில் பிரசுரிக்கின்றேன்.

என் நண்பர்களே.. நான் கனவு காண்கிறேன்.. நம் உடலின் நிறத்தால் இன்று நாம் இத்தனை பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். நாளையும் இந்த பிரச்சனைகள் இருக்கத் தான் போகின்றன. ஆனாலும், எனக்கு ஒரு கனவு இருக்கிறது.

நிற பேதங்களையெல்லாம் தாண்டி நாம் அனைவரும் சமம் தான் என்று ஒரு நாள் இந்த தேசம் சொல்லும்...

பல ஆண்டுகளாக அடிமைகளாக நடத்தப்பட்ட நம் மக்கள் வெள்ளை இனத்தினரோடு இதோ இந்த ஜோர்ஜிய மலைப் பகுதியில் ஒன்றாக, சகோதரர்களாக நடமாடுவார்கள்...

ஆம், என்னிடம் ஒரு கனவு இருக்கிறது.

இதோ, அநீதி உச்சகட்டத்தில் நின்று பேயாட்டம் ஆடும் இந்த மிஸிஸிபி நதிக் கரையோரம் ஒரு நாள் சுதந்திரம்.. நியாயம் என்ற சோலை பூக்கும்.

என் நான்கு குழந்தைகளும் ஒரு நாள் இந்த நாட்டில் அவர்களது நிறத்தால் எடை போடப்படாமல், அவர்களின் செயல்களால், மனதால் எடைபோடப்படுவார்கள்..

ஆம், என்னிடம் ஒரு கனவு இருக்கிறது"

கருப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடி அதற்காக துப்பாக்கிக் குண்டுக்குப் பலியான வீரன் மார்ட்டின் லூதர் கிங்கின் இந்த உரை கருப்பின மக்களை மட்டுமல்ல, வெள்ளையின மக்களின் இதயங்களையும் கண்ணீ்ர் விடச் செய்தது.

குறிப்புகள் சில
பிறந்தது : ஜனவரி 15 1929
பிறந்த இடம் : அட்லாண்டா, ஜார்ஜியா, ஐக்கிய அமேரிக்கா
இறந்தது : ஏப்ரல் 4 1968 (அகவை 39)
இறந்த இடம் : மெம்பிஸ், ஐக்கிய அமேரிக்கா
இயக்கம் : ஆப்பிரிக்க அமெரிக்கர் சமுதாய உரிமைப் போராட்டம் (1955-1968)
தொடர்புடைய நிறுவனங்கள்: Southern Christian Leadership Conference
பெற்ற பரிசுகள் : நோபல் பரிசு (1964)
: சுதந்திரத்திற்கான ஜனாதிபதி விருது (1977)
:காங்கிரஸின் தங்கப் பதக்கம் (2004)
நினைவுச் சின்னங்கள்: மார்டின் லூதர் கிங் ஜூனியர் தேசிய நினைவுச் சின்னம் (

அவரது கனவு இன்று நினைவானது!! அதுவே பராக் ஒபாம எதிர்வரும் 20ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க்கவுள்ளார். அவருக்கு வாழ்த்துக்களோடு ஓர் வேண்டுக்கோள் !! ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காய் உங்களின் செயற்ப்பாடுகள் ஆரம்பமாகட்டுமாக!!!!!!!!

தகவல்கள்
நன்றி : www.thatstamil.com

2 comments:

Anonymous said...

இவரை போல் ஒருவர் இனி இந்த பூமியில் மிண்டும் பிறக்க வேண்டும்.

நமிதாவையும், சனா கானையும் பற்றி எழுத வாலைப்பு திறப்பவர்களுக்கு மத்தியில் சமுதாயத்த்தின் குரலாலக இருந்த ஒருவரை பற்றி பதிவு செய்த உங்களுக்கு என் பாராட்டுக்கள். தெட ர்ந்தும் நல்ல பதிவுகள் தர வேண்டும் கலை நிங்கள்.

ஜெனித்தா பிரதிப்.

kuma36 said...

வருகைக்கு மிக்க நன்றி ஜெனித்தா பிரதிப். உங்கள் போன்ரோரின் பின்னூட்டங்கள் இன்னும் எமது வலைப்பதிவை மெருகூட்டும்!!!!!!!

.