கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Friday, February 6, 2009

தலைவன் எவ்வழியோ குடிகளும் அவ்வழி


ஓர் அடர்ந்த காடு அதில் ஓர் அழகிய மான் கூட்டம் அமைதியாக வாழ்ந்து வந்ததாம், ஏன்னா அந்த மான் கூட்டத்திற்ககு ஓர் புத்திசாலியான தலைவன் இருந்தானாம். அதாங்க மான் கூட்ட தலைவன் ஒரு மான் தான் மனிதன் என்று யாருமே பிழையாக நினைத்து விட கூடாது சரியா? அந்த அடர்ந்த காட்டில் வாழ்ந்து வந்த ஒரு வேடன் நீண்ட காலமா இந்த மானை அடித்து சாப்பிட பல்வேறு திட்டம் தீட்டினாலும் தோற்றே போனான். ஏன்னா தலைவன் புத்திசாலியாச்சே!! இப்படி ஒரு நாள் மான்கள் எல்லம் இறைத்தேடி போனது. இதை கவனித்து கொண்டிருந்த அந்த வேடன் இந்த முறை எப்படியாவது ஒரு மானை கொன்றுவிட வேனும் என நினைத்து அந்த மான் கூட்டத்தை பின் தொடர்கின்றான். இப்டியே சென்று கொண்டிருக்கையில் அந்த வழியில் ஒரு பெரிய மா மரம் ஒன்று இருந்தது அதில் ஏறிகொண்ட வேடன் மறைந்திருந்து மாம்பழங்களை பிடிங்கி மான் கூட்டம் இருக்கும் பக்கத்திற்கு எறிந்தான் அதை கண்ட குட்டி மான்கள் எல்லாம் துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி ஒடும் போது , ஓடாதீர்கள் நில்லுங்கள் என்று தலைவனின் கட்டளை குரல் இதை கேட்ட மான் குட்டியெல்லாம் திரும்பி வந்துடிச்சி.பிறகு மரத்தை நன்றாக கூர்ந்து கவனித்த தலைவன் வேடன் இருப்பதை கண்டுக்கொண்டு குட்டி மான்களுக்கெல்லாம் அந்த தலைவன் மான் சொன்னதாம் அதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது நாம் விரைவாக பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என சொல்லிவிட்டு அந்த மா மரத்தை பார்த்து சொன்னதாம் ஏய் மாமரமே இவ்வள்வு நாளாக நீ உனது பழங்களை நேரே கீழ் தான் போடுவாய் இன்று என்ன வழமைக்கு மாறாக வீசி எறிகிறாய் உன்னை நம்பி இனி எப்படி நாங்கள் இனி அங்கு வருவது உனது பழங்கள் இனி எங்களுக்கு வேண்டாம் இனி நாங்க இங்கு வரமாட்டோம் என கூறி விட்டு எல்லா மான்களும் துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி ஓடி போய்ட்டதாம்.புத்திசாலியான தலைவன் பேச்சை கேட்ட மான்களும் தப்பி பிழைத்தது. ஆகவே தலைவன் எவ்வழியோ குடிகளும் அவ்வழி செல்வது தானே நல்லது.ஆகவே தலைவனை தெரிவு செய்யும் போது கொஞ்சம் இல்ல நல்லாவே யோசித்து தெரிவு செய்வது தானே நல்லது.‌
Post a Comment
.