கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Wednesday, February 11, 2009

நகைசுவை முக்கியம் ஏளனம் கூடாது

நீ சிரித்துக்கொண்டு வாழும் ஒவ்வொரு நொடியிலும் உன் ஆயுளில் ஒரு நொடி அதிகரித்து செல்கின்றது என சொல்வார்கள். அதாவது எவ்வளவுக்கு, எவ்வளவு நாம் சிரித்து வாழ்கின்றோமோ அவ்வளவிற்க்கு நாமூம் நாம் சார்ந்த சமூதாயமும் நம்ம சூழவுள்ளவர்களும் மகிழ்ச்சியடைவர். சிரிப்பு எவ்வள்வு முக்கியம் என்பதுப்பற்றியெல்லாம் நாம் நிறைய படித்திருப்போம். அதில் அடுத்தவரை இழிவுப்படித்தியோ அல்லது ஏளனம் செய்து சிரித்து மகிழும் ஒரு ரகம் உண்டு. அந்த சிரிப்பு அள‌விற்க்கு அதிகமானால் சகித்துக்கொள்ள முடியாது. பாடசாலை நாட்களில் இவ்வகையான கேலிப்பேச்சுக்கள் அதிகமாக இருக்கும். அந்த கேலி பேச்சுக்கள் சில சமயம் வரம்புமீரி போய் பல விபரீதங்கள் நடந்ததும் உண்டு.

மற்றவர்களை கேலி செய்து அகம் மிகிழ்வது என்பது ஒரு உண்மையான மகிழ்ச்சியை தராது.இப்படி கேலி செய்வதால் மற்றவ்ர்கள் மீது தனக்கு உள்ள உரிமையை வெளிக்காட்டவே அதிகமானோர் கேலிப்பேச்சுக்களில் ஈடுபடுகின்றனர்.தன் உரிமையை காட்ட தன் நண்பனை மற்றவர்கள் முன்பு தலை குனிய செய்யலாமா?
அதுவும் பாடசாலை காலங்களில் இப்படிப்பட்ட கேலிப்பேச்சுக்கள் பொதுவாக சுவார்ஸ்யமாகவே இருக்கும். யாராவது ஒருத்தன் மாட்டினா போதும் அவனை கலாய்ச்சுட வேண்டியதுதான். அத நாங்க பைய்ட் ஆக்குறதுனு சொல்லுவேம். அந்த மாதிரியான கேலிப்பேச்சுக்கள் கட்டாயம் பாடசாலை காலங்களில் தேவைதான்.அப்போது தான் அந்த பசுமையான நாட்களை நாம் கண்மூடும் வரை நெஞ்சில் நிறுத்திக்கொள்ளலாம்.

பாடசாலைக்குப் பிறகு வேலை தளங்களில் இவ்வகையான கேலிப்பேச்சுக்களை வைத்துக்கொள்ளும் அது பல விபரீதங்களை உண்டுப்பன்னலாம்.பல்வேறு சமூகத்தினர் ஒன்று கூடி வேலை செய்யும் போது தன்னை மற்றவர்கள் கேலி செய்வதை விரும்ப மாட்டார்கள்.பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் வேலை செய்யும் போது மனதிற்க்கு இதமாக ஒரு நகைச்சுவை இருந்தால் நன்றாக தான் இருக்கும் அது ஒரு கேலிக்கையாக மாறாதப்பட்சத்ததில். ஒவ்வொரு தனி மனிதனும் தான் எவ்வளவு தாழ்தவனாக இருந்தாலும் ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி ஒரு மதிப்பீடு வைத்திருப்பர்.எமது கேலிப்பேச்சுக்களால் அவர்களின் அவர்களது மதீப்பீடு மாறும்ப்பட்சத்தில் மிகவும் வருத்தமடைய கூடும். மற்றவனை கவலையடைய செய்து நாம் சிரிக்க தான் வேண்டுமா? எந்த விடயத்தையும் சிரிப்புடன் சொல்வது நல்லது தான் , அது அடுத்தவரை பாதிக்காத வரை.

சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

பி.கு. ஏதோ சொல்ல வந்து ஏதோ செதப்பலா சொன்ன மாதிரி ஒரு உணர்வு.சரியா சொல்லியிருக்கேனா அப்டினு நீங்க தான் சொல்லனும்.

19 comments:

RJ Dyena said...

சொல்ல நினைத்ததை சரியாக அழுத்தமாக சொல்லி, உண்மையை உணர்த்தும் திறமையை மீண்டும் நிருபித்தீர்...கலை

தமிழ் மதுரம் said...

கலை நல்ல தொகுப்பு. ஏன் தங்கள் பதிவைத் தமிழ் மணத்தில் இணைக்கலாம் தானே? ம்..தொடர்க.....சிரிப்பிற்குள் இத்தனை மகத்துவங்களா? நாம் சிறு வயதில் சிரிப்பிற்காகச் செய்யும் ஏதோ ஒன்று நாம் வளர்ந்த பிறகு எமக்கே இயமனாக மாறுவது இயல்பு.

butterfly Surya said...

நல்லாயிருக்கு

வாழ்த்துக்கள்

kuma36 said...

டயானா சதா'சக்தி'நாதன் said...
மிக்க நன்றி

வண்ணத்துபூச்சியார் said...
நல்லாயிருக்கு

வாழ்த்துக்கள்

வ‌ருகைக்கு மிக்க நன்றி சார்

kuma36 said...

கமல் said...
கலை நல்ல தொகுப்பு. ஏன் தங்கள் பதிவைத் தமிழ் மணத்தில் இணைக்கலாம் தானே?

நான் தமிழ் மணத்தில் அண்மையில் இணைத்துள்ளேன்.

நன்றி கமல் உங்களின் கருத்திற்க்கு

Sinthu said...

"அதில் அடுத்தவரை இழிவுப்படித்தியோ அல்லது ஏளனம் செய்து சிரித்து மகிழும் ஒரு ரகம் உண்டு. அந்த சிரிப்பு அள‌விற்க்கு அதிகமானால் சகித்துக்கொள்ள முடியாது. பாடசாலை நாட்களில் இவ்வகையான கேலிப்பேச்சுக்கள் அதிகமாக இருக்கும். "
இது வெளிப்படை உண்மை.. எனக்கு அனுபவம் உண்டு உங்களுக்கு எப்படி......?

Sinthu said...

"அதுவும் பாடசாலை காலங்களில் இப்படிப்பட்ட கேலிப்பேச்சுக்கள் பொதுவாக சுவார்ஸ்யமாகவே இருக்கும்"
காலப் போக்கில் வருத்தமே விளைவு...

Sinthu said...

ஒரு மனிதன் சிரிக்கக் கூடாது என்று நினைப்பவர்களை என்ன செய்ய?

Sinthu said...

"ஏதோ சொல்ல வந்து ஏதோ செதப்பலா சொன்ன மாதிரி ஒரு உணர்வு.சரியா சொல்லியிருக்கேனா அப்டினு நீங்க தான் சொல்லனும்."
சொதப்பல் மாதிரி தெரியவில்லை.. ஆனால் பலர் புரிந்து கொள்ள மறுப்பார்கள் என்று நினைக்கிறேன்....

Sinthu said...

"கமல் said...
கலை நல்ல தொகுப்பு. ஏன் தங்கள் பதிவைத் தமிழ் மணத்தில் இணைக்கலாம் தானே? ம்..தொடர்க.....சிரிப்பிற்குள் இத்தனை மகத்துவங்களா? நாம் சிறு வயதில் சிரிப்பிற்காகச் செய்யும் ஏதோ ஒன்று நாம் வளர்ந்த பிறகு எமக்கே இயமனாக மாறுவது இயல்பு."

நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை வளர்ந்த பிறகு இல்லை சில நாட்களின் பின்னரும் கூட(அனுபவம் தான் வேறு என்ன சொல்ல - நான் நல்லவிடயத்தை நினைத்து சொல்வேன் அதை இன்னொருவன் வேறு அர்த்தத்தில் பார்த்தல் கதை அந்தோ........ பரிதாபம்)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

என்ன செய்வது; கோமட்டி வாயா! கொழுக்கட்டைத் தலையா! என்பதையெல்லாம்; நம் சமுதாயம்
நகைச்சுவையென எண்ணிக் குடும்பத்துடன் பார்த்துச் சிரித்துப் பழகி; நகைச்சுவைக்கும்; கேலி - கிண்டல் - ஏளனம் என்பவற்றிற்கு வேறுபாடு தெரியாமல் வாழப் பழகிவிட்டதே!!!

kuma36 said...

Sinthu said...
"அதில் அடுத்தவரை இழிவுப்படித்தியோ அல்லது ஏளனம் செய்து சிரித்து மகிழும் ஒரு ரகம் உண்டு. அந்த சிரிப்பு அள‌விற்க்கு அதிகமானால் சகித்துக்கொள்ள முடியாது. பாடசாலை நாட்களில் இவ்வகையான கேலிப்பேச்சுக்கள் அதிகமாக இருக்கும். "
///இது வெளிப்படை உண்மை.. எனக்கு அனுபவம் உண்டு உங்களுக்கு எப்படி......?//////

ம்ம்ம் உண்டு

kuma36 said...

Sinthu said...
ஒரு மனிதன் சிரிக்கக் கூடாது என்று நினைப்பவர்களை என்ன செய்ய?

நினைப்பை மாற்ற வேண்டியதுதானே சிந்து. உங்களுக்கு முடியாததா என்ன?

kuma36 said...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
//என்ன செய்வது; கோமட்டி வாயா! கொழுக்கட்டைத் தலையா! என்பதையெல்லாம்; நம் சமுதாயம்
நகைச்சுவையென எண்ணிக் குடும்பத்துடன் பார்த்துச் சிரித்துப் பழகி; நகைச்சுவைக்கும்; கேலி - கிண்டல் - ஏளனம் என்பவற்றிற்கு
வேறுபாடு தெரியாமல் வாழப் ////

உங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி

ஆதவா said...

சிரிப்பு.. மனிதன் மிருகங்களுக்கு மாறுபட்டவன் என்பததைக் காட்டும் அடையாளம்....

கேலி - மனிதன் தான் மிருகம் என்பதைச் சொல்லாமல் சொல்லும் குறீயீடு..

நல்ல கட்டுரைஒ.... இன்ன்னும் நிறைய எழுதியிருக்கலாம்...

Anonymous said...

சரியாதான் சொன்னிங்க........

kuma36 said...

//ஆதவா said...
சிரிப்பு.. மனிதன் மிருகங்களுக்கு மாறுபட்டவன் என்பததைக் காட்டும் அடையாளம்....//

//கேலி - மனிதன் தான் மிருகம் என்பதைச் சொல்லாமல் சொல்லும் குறீயீடு..//

அருமையான கருத்து

நல்ல கட்டுரைஒ.... இன்ன்னும் நிறைய எழுதியிருக்கலாம்..

எழுதி இருக்கலாம் கட்டுரை பெரிதாக இருந்தால் யாரும் வாசிக்க மாட்டாக்களேனு நினைச்சிட்டேன். இனி முயற்சி பண்ணுகின்றேன்.
நன்றி

kuma36 said...

கவின் said...
சரியாதான் சொன்னிங்க......

மிக்க நன்றி கவின்

கும்மாச்சி said...

நல்லபதிவு, இன்னும் நிறைய எழுதுங்க

.