கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Thursday, February 19, 2009

தியானம்


ஐவகைத் தியானங்கள்

1.அன்பு தியானம்

இதில் அனைத்து உயிரினங்களின் நன்மைக்காகவும் நீ ஏங்க வேண்டும்.எதிரிகளின் மகிழ்ச்சியையும் நாட வேண்டும்.அதற்காக உனது இதயத்தை தயார்படுத்த வேண்டும்.

2. கருணை தியானம்

இதில் துன்பப்படுகின்ற உயிர்கள் அனைத்தயும் நினைத்து,அவர்களது துன்பங்களையும் துயர்களையும் கற்பனையில் நீ அனுபவிக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் மீது ஆழ்ந்த கருணையை உனது உள்ளத்தில் ஏற்படுத்த வேண்டும்.

3.ஆனந்த தியானம்

இதில் பிறர் வளம் பெறுவதை எண்ணி அவர்களின் மகிழ்ச்சியில் நீ மகிழ வேண்டும்.

4. அசுத்த தியானம்

இதில் நேர்மையற்ற செயல்களின் விளைவாக நேர்கின்ற கேடுகளையும், பாவச் செயல்கள், நோய்கள் இவற்றின் விளைவுகளையும் சிந்திக்க வேண்டும்.இன்பம் கண நேரம்தான், அதன் விளைவு எவ்வளவு ஆபத்தானது என்று நினைக்க வேண்டும்.

5.அமைதி தியானம்

இதில் அன்பு, பகைமை, அடக்குமுறை, செல்வம், வறுமை ஆகியவற்றைக் கடந்து அப்பால் செல்ல வேண்டும்.பாரபட்சமற்ற அமைதியோடும், முழுச் சமத்துவ உணர்வோடும் உன் தலைவிதியைப் பார்க்க வேண்டும்.

4 comments:

ஆதவா said...

மனதிற்குள் அமைதியை இருத்தும் நிலை, தியானம்....



ஆனால் நீங்கள் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம். உதாரணத்தீற்கு, தியானம் எப்படி செய்வது, அதன் வகைகள் (இன்னும் உண்டு) பலன்கள்... இப்படி பல எழுதியிருக்கலாம்...

தியானம் செய்தவருக்குத்தான் தெரியும்... அமைதியின் முழுவடிவம்.

Sinthu said...

அண்ணா தியானம் என்றால் என்ன? அதை தேடி பலா நாட்கள் அலைந்தவள் நான்..
பலருக்கும் விளங்குவதட்காக கொஞ்சம் வரைவிலக்கணத்தைச் சொல்லுங்களேன்..

kuma36 said...

ஆதவா said...

மனதிற்குள் அமைதியை இருத்தும் நிலை, தியானம்....
///ஆனால் நீங்கள் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம். உதாரணத்தீற்கு, தியானம் எப்படி செய்வது, அதன் வகைகள் (இன்னும் உண்டு) பலன்கள்... இப்படி பல எழுதியிருக்கலாம்...///

ஒகே ஆதவா உங்கள் விருப்பபடியே மறுபடியும் தியானத்தைப்பற்றி விரைவில் இன்னொரு பதிவிடுகின்றேன். நன்றி

kuma36 said...

Sinthu said...

// அண்ணா தியானம் என்றால் என்ன? அதை தேடி பலா நாட்கள் அலைந்தவள் நான்..
பலருக்கும் விளங்குவதட்காக கொஞ்சம் வரைவிலக்கணத்தைச் சொல்லுங்களேன்.//

அன்பு,அமைதி, நிம்மதி, சந்தோஷம் போன்றவைகளை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம் என கூறலாம்.
நன்றி

.