கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Saturday, March 7, 2009

பெண்கள் தினமும் மலையக பெண்களும்

மார்ச் 08 - மகளிர் தின வாழ்த்துக்கள்.(08.03.2009)

பெண்ணுக்குச் சொத்து கூடாதாம், காதல் சுதந்திரம் கூடாதாம். அப்படியானால் மனிதன் தன் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ரப்பர் பொம்மையா அது?

பெண்களை வீட்டுவேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்ட மடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள்.

ஒவ்வொரு பெண்ணும், தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதிபெறத் தக்கபடி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால், எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான்.
இவை பெரியாரின் கூற்றுக்கள்
இந்த கூற்றுக்கள் இன்று மகளிர் தினத்திற்காக ஒரு ஞாபக குறிப்பாக வைத்துக்கொள்ளுவோம்.

இன்று 150 ஆண்டுகளுக்கு முன் மேலைத்தேயவர்களினால் இந்தியாவிளிருந்து கோப்பித்தோட்டங்களுக்கும், தேயிலை தோட்டங்களுக்கும் கூலிகளாக கொண்டுவரப்பட்ட மக்கள் கூட்டமே இன்றும் இலங்கையின் பொருளாதரத்தில் முக்கிய பங்கை வகிப்பது யாவரும் அறிந்த உண்மைகள்.(1968 களில் இலங்கை தேசிய வருமானத்தில் 75% ) இன்றைய மகளிர் தினத்தில் அவர்கள் பற்றிய ஒரு பார்வையை உங்கள் முன் வைக்கலாம் என நினைக்கின்றேன். அதற்கு முன் இந்த பாடலையும் ஒரு முறை நினைவு கூறுவது பொருத்தமாகும்.

"கோண கோண மலை ஏறி

கோப்பி பழம் பறிக்கையிலே

ஒரு பழம் தப்பிச்சின்னு

ஒதச்சானாம் சின்ன தோர"


"ஊத்தாத அடமழையில்

ஒதறல் எடுக்குதடா - அந்த

தாத்தான் கணக்கப்புள்ள

கத்தி தொலைக்கிறானே

ஏத்தல ஏறி எறங்க முடியுமா

சீத்துபூத்தன் னெனக்கு

சீவன் வதை போகுதையோ

எத்தனை நாளைக்கிதான் - இந்த

எழவ எடுக்கிறது

வெக்கங்கெட்ட நாயிகளும்

எகத்தாளம் போடுதுன்னு

இருந்துதான் பாத்துடுவோம்"

இந்த பாடலின் வரிகள் மலையக பொண்கள் அவர்களுக்கு இழைக்கும் சுரண்டல்களுக்கு சினம்கொண்டு பாடுவதாகும்.மலையக பெண்கள் இந்த ஆண் ஆதிக்கத்தில் இருந்து இன்னும் முற்று முழுதாகா விடுப்படவில்லை எனபது குறிப்பிடகூடியவொன்று.

இவர்களின் வேலைத்தளங்களைப் பற்றி சிலவற்றை கூற வேண்டும்.

# சாதரணமாக காலை 5 மணிக்கு துயில் எழுந்து (கடும் குளிரிளும்,பனியிலும்) கனவன் உட்டப்பட பிள்ளைகளுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு தயார் செய்து பிள்ளைகள் பாடசாலைக்கு செல்ல ஒழுங்கு செய்ய‌ வேண்டும்.

# அதே நேரம் 7.30 மணியலவில் புறப்பட்டு 8.00 மணிக்கு முன் சுமார் 4 - 8 வரையான கிலோ மீற்றர் வரை நடந்தே சொல்ல வேண்டும்.

# தான் பறித்த கொழுந்துகளை தேயிலை தொழிற்சாலையில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரம் இருக்கும் பட்சத்தில் தொழிற்சாலைக்கு தானே சுமந்து வர வேண்டும்.(கற்பினி பெண்கள் இதற்கு விதிவிலகல்ல‌)

# வேலை தளங்களில் இவர்களுக்கு தேனீர் வழங்கப்படமாட்டாது(பொதுவாக வேறு அனைத்து தொழிற்சாலைகளிலும் நிறுவனங்களிலும் தேனீர் வழங்குவது குறிப்பிட தக்கது)

# வேலை தளங்களில் கழிவரைகள் மற்றும் ஓய்வறைகள் இல்லை என்பது முக்கியாமாக கவனத்தில் கொள்ள வேண்டும். (கழிவரைகள் இல்லாத வேலைத்தளம் உலகிலே இதுவொன்றாக தான் இருக்க வேண்டும்)

# மழை காலங்களில் ரப்பர் பொலித்தீன்களை தலைகளுக்கு அணிந்துக் கொண்டு பணிபுரிவார்கள். (அட்டை பூச்சி மற்று விஷ ஜந்துகளிற்கு மத்தியில்)

# முதலுதவி சலுகைகள் கிடையாது.

இவை தவிர இன்னும் ஏராளமான அநீதிகள் இழைக்கப்பட்டும் கேட்டபதற்கு யாரு முன் வராத நிலையில் தொழில் புரிகின்றார்கள்.

இப்பிரசினைகளுக்கு தீர்விற்கு எந்த அரசியல்வாதிளையும் நம்பி பிரயோசனமில்லை. இதுவரை இது போன்ற விடயங்களை எந்த மேடைகளிலும் சரி வேறு இடங்களிலும் சரி அரசியவாதிகள் பேசியதாக சரித்திரம் இல்லை.மக்கள் முன் வந்து ஒன்றுப்பட்டு போராட்டங்களை நடத்தும் வரை விடிவோ விமோசனமோ கிடையாது என்பது மட்டும் உறுதி.

அடுத்ததாக பொண்களின் கல்வியை உற்று நோக்கினால்,

ஓரளவு தற்போது கல்வியில் முன்னேற்றம் கண்டுவருகின்றன என்ற போதும் முழுமை பெறவில்லை என கூறலாம். இவர்களுக்கு கல்வியில் முன்னேற முட்டுக்கட்ட்டையாக இருப்பது பொதுவாகவே வருமானமின்னையே.
மற்றது அக்கறையின்மை, சரியான வழிகாட்டல்கள் இல்லாதமை என்று இன்னும் ஏராளமாக கூறலாம்.

அதோடு ஆசிரியர் தொழிலை தவிர வேறு துறைகளில் அவர்களின் பங்கு மிக மிக அரிதாகவே காணப்படுகின்றது. இதற்கு காரணம் வேறு அரச துறைகளில் எமக்கு இடமில்லை என்பதோடு சகோதரயின‌த்தவர்களுக்கு இணையாக போட்டி போட்டு கல்வி கற்க பாடசாலைகளில் போதிய வளமின்மை.

இன்னும் ஏராளமான அநீதிகள் மலையகத்தில் நடந்து வருகின்ற அதே வேளை வடக்கில் யுத்த சூழ்நிலையில் எம் பொண்களுக்கு ஏற்ப்பட்டு வரும் கொடுமைகளும் ஏராளம் என்பது யாவரும் அறிந்த உண்மையே. இவ்வளவு நடந்தேறிக்கொண்டு இருக்கின்ற வேலையில் எம்மால் எப்படி கூற முடியும் பெண்கள் சரிசமமாக வாழ்கின்றார்கள், பெண் அடிமை ஒழிந்து விட்டது என்று.? ஒரு பக்கம் பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் முன்னேறி வந்தாலும் கூட இன்னும் பல அடிப்படை தேவைகள் கூட அற்ற நிலையிலே கிராமிய பெண்களின் வாழ்க்கை இன்னும் தொடர்கின்றது

பச்சை பசேலாக
பசுமை நிறைந்ததாக‌
காட்சி கொடுக்கும்

மலையகம் !

அதன்

பசுமைக்குள்
ஒழிந்திருக்கும்

எம் பெண்களின்

ரணங்களும்
வேதனைகளும்

அவள்

சிந்து கண்ணீரில்

பூத்து குழுங்கும்

தேயிலைச் சொடிகள்.

கண்ணீர் வெளிவராமல்
காவல் காக்கும்

மலைகளும்

அதிகாரவர்க்கமும்.


உனது

சோக கீதத்தை

காற்றினில்
பரவ செய்திடு


உனக்கொரு

விடிவு தேடி

விழித்திரு

இல்லையேல்

இன்னும்

பல யுகங்கள்
விடியாமலே

போய்விடும்.


உனக்கு
துணையாக‌

நாம்மிருப்போம்.

சிறகு
விரித்து பறந்திடு.


- சானா.கலை
இராகலை

உழைக்கும் கரங்களே உங்களுக்கு மணமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும். உங்களுக்கு தலைவணங்குகின்றேன்.






பெரியாரின் கூற்றுக்கள் பெரியார் என்ற வலைதளத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அத்தளத்திற்க்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

பெண்கள் தினத்தைப்பற்றி தகவல்களை இங்கு பெற்றுக்கொள்ளலாம்.
ரசனைக்காரி....
internationalwomensday...


இதனோடு தொடர்புடைய கவி்தைகள் சில

தேயிலைச் செடி
சந்தியில் நடந்த கதை

மலையகம் தொடர்பான வலைப்பதிவு
நண்பரும் சக வலைப்பதிவாளருமான நிர்ஷனின் புதிய மலையகம் வலைப்பதிவு

21 comments:

ஆதவா said...

/////////பெண்களை வீட்டுவேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்ட மடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள்./////

அவை அடிமை வேலைகள் அல்ல.. ஆனால் அவற்றில் அடிமைப் படுத்தக் கூடாது. பெண்கள் வீட்டு நிர்வாகிகள்... அவர்களுக்கான வெகுமதி அல்லது ப்ரோமஷன் ஒவ்வொரு நாளும் கணவன் வழங்க வேண்டும்....

பெண்கள் சிறுதொழில் ஒன்றை கைவசம் கற்றுக் கொண்டிருக்கவேண்டும்...

மலையக பெண்களைக் குறித்து இங்கே எழுதியமைக்கு உங்களைப் பாராட்டவேண்டும்.. அதிலும் அந்த நாட்டுப்புறப்பாடல்.. அதில் அவர்களது குமுறல்கள் அழகாகச் சொல்லப்படுகிறது.. அவர்களைப் பற்றிய விபரங்கள் (நீங்க ஊட்டியிலா இருக்கீங்க?)

தர்ஷன் said...

வணக்கம் கலை
தங்கள் ஆக்கம் பார்த்தேன் இன்றைய காலத்திற்கு பொருத்தமான வகையில் நம் பெண்களின் நிலை பற்றி அலசி இருந்தீர்கள். தங்களின் ஆக்கத்தில் பெரியார்! பெயர் கண்டு பெரிதும் மகிழ்ந்தேன்

kuma36 said...

//மலையக பெண்களைக் குறித்து இங்கே எழுதியமைக்கு உங்களைப் பாராட்டவேண்டும்.. அதிலும் அந்த நாட்டுப்புறப்பாடல்.. அதில் அவர்களது குமுறல்கள் அழகாகச் சொல்லப்படுகிறது.. அவர்களைப் பற்றிய விபரங்கள்///

வாங்க ஆதவா மிக்க நன்றி

(நீங்க ஊட்டியிலா இருக்கீங்க?)

ஆமா ஏன் இப்படி ஒரு கேள்வி?
நான் இலங்கையில் மத்தியில் பிரதேசமான மலையகத்தில் தான் இருக்கின்றேன்

kuma36 said...

///வணக்கம் கலை
தங்கள் ஆக்கம் பார்த்தேன் இன்றைய காலத்திற்கு பொருத்தமான வகையில் நம் பெண்களின் நிலை பற்றி அலசி இருந்தீர்கள். தங்களின் ஆக்கத்தில் பெரியார்! பெயர் கண்டு பெரிதும் மகிழ்ந்தேன்//

வாஙக தர்ஷன் வணக்கும் உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி

தேவன் மாயம் said...

மலையகப்பெண்களைப்பற்றி
சிறப்பாக அறியத்தந்ததற்கு
நன்றி!!!

உண்மையான பெண்கள்
தினம் அவர்களுக்குத்தான்!

kuma36 said...

மிக்க நன்றி தேவா சார்

Sinthu said...

அருமையான பதிவு அண்ணா..
பெண்களின் உரிமைக்காக நீங்கள் சொன்ன வார்த்தைகள் என்னை நன்கே பாதித்தன.
மலையகப் பெண்கள் மட்டுமல்ல நான் அறிந்து நகரப் புறத்தில் கூட பெண்கள் கீழ்த் தரமாக நடத்தப்படுகின்றனர் என்பது தான் வெட்க்கப் பட வேண்டிய விடயம்..

ஹேமா said...

கலை,ஒரு முறை என்னை மலையகத்திற்கே கூட்டிப் போய்விட்டீர்கள்.அந்தப் பாடல் என் காதில் கேட்டது.போட்டோக்கள் அப்படியே நான் ரசித்து வளர்ந்த காட்சிகள்.சென்ற 2003 லும் போயிருந்தேன்.என்ன ....
அட்டைக்குத்தான் இப்பவும் பயம்.

ஹேமா said...

நீங்கள் அவர்களின் வேலைத்தளங்களில் அவதி பற்றி சொன்னதை நானும் கண்டிருக்கிறேன்.இன்னும் நிலைமை மாறாமலே இருக்கிறதா!

அவர்கள் சுடும் ரொட்டியும் சம்பலும் ருசியே ஒரு தனிதான்.

Subankan said...

அண்ணா, நானும் சிறிது காலம் மலையகத்தில் இருந்தவன் தான். இப்பொது நினைத்தாலும் தேனாக இனிக்கும் நாட்கள் அவை. அவற்றை அசை போட வைத்து விட்டீர்கள். நன்றி !

kuma36 said...

// Sinthu said...
அருமையான பதிவு அண்ணா..
பெண்களின் உரிமைக்காக நீங்கள் சொன்ன வார்த்தைகள் என்னை நன்கே பாதித்தன.
மலையகப் பெண்கள் மட்டுமல்ல நான் அறிந்து நகரப் புறத்தில் கூட பெண்கள் கீழ்த் தரமாக நடத்தப்படுகின்றனர் என்பது தான் வெட்க்கப் பட வேண்டிய விடயம்.//

சரியா சொன்னிங்க சிந்து!!
நன்றி

kuma36 said...

//ஹேமா said...
கலை,ஒரு முறை என்னை மலையகத்திற்கே கூட்டிப் போய்விட்டீர்கள்.அந்தப் பாடல் என் காதில் கேட்டது.போட்டோக்கள் அப்படியே நான் ரசித்து வளர்ந்த காட்சிகள்.சென்ற 2003 லும் போயிருந்தேன்.என்ன ....
அட்டைக்குத்தான் இப்பவும் பயம்.///
ஆஹா அப்படியா!! எங்க போயிருந்திங்க‌ அக்கா

kuma36 said...

Blogger ஹேமா said...
நீங்கள் அவர்களின் வேலைத்தளங்களில் அவதி பற்றி சொன்னதை நானும் கண்டிருக்கிறேன்.இன்னும் நிலைமை மாறாமலே இருக்கிறதா!
அவர்கள் சுடும் ரொட்டியும் சம்பலும் ருசியே ஒரு தனிதான்.

எந்த மாற்றமும் இல்லை அக்கா அதே தான். ரொட்டியும் சம்பலும் ருசியே தனிதான் ஏன்னா மலையக தேசிய உணவாச்சே அக்கா!!

kuma36 said...

//Subankan said...
அண்ணா, நானும் சிறிது காலம் மலையகத்தில் இருந்தவன் தான். இப்பொது நினைத்தாலும் தேனாக இனிக்கும் நாட்கள் அவை. அவற்றை அசை போட வைத்து விட்டீர்கள். நன்றி !//

வாங்க சுபாங்கன் முதல் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி. அழகான பெயர் "சுபாங்கன்"

அனுபவம் said...

//வேலை தளங்களில் இவர்களுக்கு தேனீர் வழங்கப்படமாட்டாது(பொதுவாக வேறு அனைத்து தொழிற்சாலைகளிலும் நிறுவனங்களிலும் தேனீர் வழங்குவது குறிப்பிட தக்கது)//

நன்றி கெட்ட மனிதத்துக்கு இதைவிட எடுத்துக்காட்டு வேணுமாங்க?
அவங்க இல்லாட்டி நமக்கு தேனீர் ஏது?

kuma36 said...

//அனுபவம் said...
//வேலை தளங்களில் இவர்களுக்கு தேனீர் வழங்கப்படமாட்டாது(பொதுவாக வேறு அனைத்து தொழிற்சாலைகளிலும் நிறுவனங்களிலும் தேனீர் வழங்குவது குறிப்பிட தக்கது)//

நன்றி கெட்ட மனிதத்துக்கு இதைவிட எடுத்துக்காட்டு வேணுமாங்க?
அவங்க இல்லாட்டி நமக்கு தேனீர் ஏது?///

மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

ஹேமா said...

கலை,என் ஆரம்பகால,கிட்டத்தட்ட
14 வருட காலம் மலையக மக்களோடு ஒன்றிக் கலந்தது.அந்த வாழ்க்கை என்னும் என் மனதில் வசந்த காலம்.அந்த ரப்பர் காடுகள்,தேயிலைக் காடுகள்,
அட்டைகள்,நத்தைகள்,ஆறுகள் எல்லாம் என் சிநேகிதிகள்.ஆமாம் கலை,நான் இரத்தினபுரி-ஹப்புகஸ்தன்னை-டேனாக்கந்தையில் வாழ்ந்தேன்.

இன்றும் அந்த வீட்டின் கதவுகள் பாதியாய் வெட்டப்பட்டே கிடக்கிறது.ஏன் தெரியுமா?நான் கதவைத் திறந்து கொண்டு வெளியில் போய் விடுகிறேன் என்று,எனக்காக அந்தக் கதவு தன்னைப் பாதியாக்கிக் கொண்டது.

தமிழ் மதுரம் said...

கலை மனது வலிக்கிறது? எப்போது தான் விடிவு வருமோ அம் மக்கள் வாழ்விற்கு?? நல்ல முறையில் பதிவிட்டிருக்கிறீர்கள்.

தமிழ் மதுரம் said...

இன்று தான் ஒரு சில விடயங்களைப் புதிதாகவும் அறிந்துள்ளேன் நண்பா...முடிந்தால் தங்களின் இந்தப் பதிவை வீரகேசரிக்கோ அல்லது தினக்குரலுக்கோ அனுப்பி வையுங்கள். அவர்கள் நிச்சயம் பிரசுரிப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

தமிழ் மதுரம் said...

"கோண கோண மலை ஏறி

கோப்பி பழம் பறிக்கையிலே

ஒரு பழம் தப்பிச்சின்னு

ஒதச்சானாம் சின்ன தோர"//

இந்தப் பாடல் சின்ன வயசில் ஏதோ ஓர் பாடப் புத்தகத்தில் படித்ததாய் ஞாபகம். மீளவும் அப்பாடலையும் அங்குள்ள மக்களின் வாழ்க்கையையும் நினைவுகளிற்குள் கொண்டு வந்தமைக்கு நன்றிகள் கலை..

kuma36 said...

//கமல் said...
இன்று தான் ஒரு சில விடயங்களைப் புதிதாகவும் அறிந்துள்ளேன் நண்பா...முடிந்தால் தங்களின் இந்தப் பதிவை வீரகேசரிக்கோ அல்லது தினக்குரலுக்கோ அனுப்பி வையுங்கள். அவர்கள் நிச்சயம் பிரசுரிப்பார்கள் என்று நினைக்கின்றேன்.///

நன்றி கமல் ம்ம்ம் பார்கின்றேன்

.