கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
மலையகம் மலையக நாட்டார் பாடல்கள் கட்டுரைகள் கவிதைகள் அரசியல்சமூகம் சிறுகதைகள் You Tube
யாழ்தேவி தமிழ்மணம் Linkedin
Google Yahoo MSN
virakesari Thinakaran Thinakkural Sudaroli Dailynews Lankadeepa Silumina

Friday, April 3, 2009 | 7:04 AM | 14 Comments

அவனும் அவளும்

நுவரலியா நகரம் முழுவதுமாய் நண்பனுடன் ஒவ்வொரு பரிசுப்பொருள் கடைகளுக்கு ஏறி இறங்கிக்கொண்டிருந்தான் அவன்.எவ்வளவோ தேடியும் திருப்த்தி இல்லாதவனாய், ஒரு மாதிரியாக ஒரு திருமண ஜோடி பொம்மையை வாங்கிக்கொண்டான். அது அவனுக்கு ரொம்ப பிடித்திருந்தது, அவனுக்கு அது வெறும் பொம்மையாக தெரிய‌வில்லை.மாறாக அவனும் அவளுமாகவே எண்ணிக்கொண்டான். அப்பாடா இப்பையாவது வாங்கினானே என பெறுமூச்சி விட்டுக்கொண்டான் அவனின் நண்பன். சும்மா 3 மணி நேரம் ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்குவது? ம்ம்ம் எல்லாமே நட்புக்காக மாத்திரமே!

அந்த பொம்மை வெறும் 150 ரூபா பெறுமதி தான் இருந்தாலும் அதை வாங்க அவன் முதல் நாளே பாடசாலைக்கு விடுமுறை கொடுத்தான், நண்பனுடன் ஒரு மறக்கறி தோட்டத்திற்கு வேளைக்கு சென்றதில் 200 ரூபா கிடைத்தது.அதுவும் முதல் நாளன்று பாடசாலையில் ஓட்டப்போட்டி ஒன்றில் கலந்து கொண்டதில் கால் முறிவு ஏற்ப்பட்டிருந்தது. அதெல்லாம் சமாளித்துகொண்டான் அவளுக்காகவே!

சூரிய உதய‌த்தையே கண்டிறாதவன் மறுநாள் காலையில் சேவலையும் துயில் எழுப்பி கதிரவனுக்கு காலை வந்தனம் தெரிவித்தான். எத்தனை சுறுசுறுப்பைக்கொடுக்கிறது இந்த காதல். சித்திரை வசந்தமே அவனால் இன்னும் அலங்கரிக்கப்பட்டு கொண்டிருந்தன. சில்லொன்று வீசிடும் காற்று அவனிடம் கொஞ்சம் குளிர்க்காய்ந்து கொண்டிருந்தது. அந்த பொம்மையை எடுத்துக்கொண்டு புறப்படுகிறான். அது ஒரு புதன்கிழமையாகும். பொன்கிடைத்தாலும் புதன் கிடைக்காது என அவன் ஆசிரியை அடிக்கடி கூறுவாள் அதையும் எண்ணிக்கொண்டதால் அவனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அன்று.

இராகலையிலிருந்து பேருந்தில் சொல்லும் போது சற்று எரிச்சலாகவே காணப்பட்டான்.அவளுடன் செல்லும் போது புயலாக செல்லும் பேருந்து இன்று தென்றாலாகவே நகர்ந்தது. வழமையான வேகத்தில் தான் பேருந்து சென்றாலும் அவனுக்குத்தான் அப்படி எண்ணத்தோன்றியது.நானு ஓயா நகரம் சென்றதும் ரயிலில் ஏறிகொண்டான். தண்டவாளத்தின் அதிர்வுகளை விட அவனது இதய அதிர்வுகள் அதிகமாயிருந்தது. மனதில் பல கற்பனைகள் ஊஞ்சலாடுகிறது. அவள் எப்படி என்னை வரவேற்ப்பாள்? உன்னைப்பார்த்த பின்பு நான்! நானாக இல்லையே.. ச்ச்சி ச்சி இந்த பாடல் பொருந்தாது, சிரித்த முகத்துடன் அவள் கன்னங்களை கில்லி வாழ்த்து சொல்லிடலாமோ? ம்ம்ம் சரிவராது, ஒரு முத்தம் வேண்டாம் பிறகு அவ்வளவு தான், படங்களில் வருகிறமாதிரி கால்களை மண்டியிட்டு கிப்ட்டை கொடுத்து வாழ்த்தலாமோ ச்சே ரயில் நிலையமாச்சே நெரைய பேர் இருப்பாங்க, அவள் கன்னத்தில் ஒரு கடி கடித்து காதில் மெல்லமாய் சொல்லிடாமோ? ம்ம்ம் பாக்கலாம். பலபேருக்கு பிறந்த தின வாழ்த்து கூறியிருக்கிறான், ஒரு போதும் இப்படி எண்னியதில்லை இருந்தாலும் பலப்பேரும் அவளும் ஒன்றா? என்ற கேள்வி மனதில் ஓடத்தான் செய்தது. எங்கு கூட்டிக்கொண்டுப் போகலாம் முதலில் கோவிலுக்குத்தான் பிறகு ரயில் பாதையில் கொஞ்சம் உலாவலாம், பிறகென்ன சாப்பிட்டுவிட்டு வீடு திரும்ப வேண்டியதுதான்.படங்களில் வருவதை போல் ஒரு டூயட்டா பாடமுடியும். அதுவும் சும்மா இரண்டு பேர் நின்றாலே இரண்டாயிரம் வார்த்தைகள் பேசிடும் ஊர் இதுல எங்க டூயட் ..

நான் வாழும் காலங்களில்,
உனக்காவே வாழ்ந்த‌ நாட்கள்
அதிகமாக‌
இருக்க வேண்டும்.
உன் நினைவில் வாழும்

நொடிகளே வேண்டும்.

நீ என்னருகில்

இல்லாதப்பட்சத்திலும்!


என்று சில வரிகளை கிறுக்கியிருந்தான் அவன் பொம்மையுடன் வாங்கியிருந்த பிறந்த தின வாழ்த்து மடலில் அதை நினைவூட்டி கொண்டிருக்கும் போதே கடந்ததை மீட்டிப்பார்கின்றான் அவனும் அவளும் நண்பர்களாகவே பேசி பழகத்தொடங்கியிருந்தன என்றாலும் நட்பு காதலாய் மாறுவது இயல்புதானே! அவளை இவனுக்கு ரொம்ப பிடிக்கும் அவளுக்கும் தான். ஒருமுறை ஒரு மரணசடங்கு வீடொன்றுக்கு போய் வந்தவுடன் அவள் அவனிடம் கேட்கிறாள் நான் இறந்தா என்ன பன்னுவாய் என்று!,  ஒரு முறை உலகமே இருண்டு விட்டது போல் தடுமாறி விட்டான் என்றாலும், நானும் உன்னுடன் வந்திடுவேன் என்பது தான் அவனது பதிலாய் இருந்தது. இவை மனதில் ஓடிக்கொண்டிருக்கையிலேயே தலவாக்கலை ரயில் நிலையம் வந்தாச்சு. அதுதான் அவள் இரயிலில் ஏறும் இடம் இன்னும் படப்படப்பு அதிகம் அவனது கண்கள் அவளை தேடுகிறது. ஒரே கூட்டம் என்றாலும் அவனது கண்களில் அவள்ப்படுகிறாள். ம்ம்ம் ஒரு முறை மூச்சு நின்று மீண்டும் மீண்டு வந்தது, அது பறிமாற்றமாகவே இருந்திருக்க வேண்டும். அவனது மூச்சு அவளுக்குமாய், அவளது மூச்சு அவனுக்குமாய்.!


வழமையாகவே இவனை கண்டவுடன் அவளது சூரிய ஒளிப்பட்டு விரிந்து காட்சி கொடுக்கும் சூரியகாந்தியாய் ஜொலிக்கும். அவளது சிரிப்பிலே ஆயிரம் வருடங்கள் வாழலாம்.அவளது பார்வை அவனது உயிரை உறிஞ்சிக்கொண்டிருக்கும். அன்று அவள் வழமைக்கு மாறாகவே இருந்தால் யாதுமறியாதவனாய் ஏதும் செய்வதறியாமல் நிற்கின்றான். அவளும் ரயிலில் ஏறிக்கொள்கிறாள். அது அவளது தனியார் வகுபொன்றுக்காகவே! இருவரும் அருகருகில் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு இறங்குப்படியருகில் இருகின்றனர். எத்தனை கற்பனையோடு வந்தாலும் அவளை கண்டவுடன் வார்த்தை வர தடுமாறுகிறது ஏனோ புரியவில்லை. இது ஒன்றும் முதல் சந்திப்பல்ல 3 வருடம் காதலில் தொலைந்தவர்கள் என்றாலும் ஒவ்வொரு சந்திப்பும் ஒவ்வொரு பாடத்தை கற்பிக்கும்.அவள் இவனைப்பார்த்து ஏன் வந்திங்க என்றாள் அவளே பதிலையும் பேத்டேவிற்காகவா என்றாள். அவன் பேசவில்லை அவனுக்கு புரியவில்லை ஏன் அவள் இப்படி நடந்துக்கொள்கிறாள் என்று.

இரயில் கொட்டகலை ரயில் நிலையத்தை அண்மிக்கின்றது, சிவப்பு கொடி காட்டப்படுகிறது இவனது காதலுக்கும் சேர்த்து, என்னை மறந்திடுங்க என்பது அவள் கூறிய வசனங்கள் இரயிலிருந்து இறங்கியவள் வேகமாக செல்கிறாள் பின்னாலையே பித்து பிடித்தவனைய் ஓடிகிறான். அவன் ஓன்றுமே பேசியிருக்கவில்லை. வாங்கி வந்த திருமண ஜோடி பொம்மையை கொடுகிறான் அவள் வாங்கிக்கொள்ள மறுக்கிறாள். பாதை ஓரமாய் வைத்துவிட்டு அவளிடம் எடுத்துக்கொள்ளச்சொல்லிவிட்டு ஓடுகிறான் காதல் பித்தனாய். ஒன்றுமே புரியவில்லை தற்போது அவனுக்கு தேவை அமைதியடைய வேண்டும். கொட்டக்கலை நகரில் உள்ள கோவிலுக்குள் நுழைகிறான். பிரம்மா பிரம்மா எப்படி படைத்தாய் என்னுடைய காதலியை என்பது தான் அவனது கேள்வி. சிறுது நேரம் கோவிளிலிருந்து அமைதியாய் வெளியாகின்றான். அவளது தனியார் வகுப்பு முடியும் வரை காத்திருக்கின்றான். அவள் வருகிறாள் அவள் ஏன் அப்படி கூறினால் என காரணம் கேட்க விரும்பவில்லை அவன், அவள் சரியாகதான் முடிவொடுத்திருப்பாள் என்ற அசட்டு நம்பிக்கை. காதலை கடந்து நண்பர்களாக உறவாடிகொள்கின்றன உள்ளுக்குள் காதலர்களாக. சிறிது நேரத்தில் அவளிடமிருந்து விடைப்பெறுகின்றான் என்றாவது மறுப்படியும் காதலை ஏற்றுகொள்வாள் எனற எதிர்ப்பார்போடு.


நட்பாக இணைந்து காதலாக மாறி நட்பாய் விடைபப்பெற்றாலும் காதலுடன்...

பின் குறிப்பு: என்னுடைய முதலாவது சிறுகதை என்பதால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிழைகளை கன்டுப்பிடித்து எல்லாதையும் சொல்லுங்க! உங்களுக்கு புன்னியமா போகும்.பாடசாலை காலங்களில் பரீட்சையில் சிறு கதைகள் பல எழுதி 10, 15 புள்ளிகளைப் பெற்றதையெல்லாம் இங்கு பெறுமையா சொல்லிக்கொள்ள விரும்பவில்லை ஒகேவா?
பிறகு நான் ன்ல்லை!





14 கருத்துரைகள்:

குடந்தைஅன்புமணி said...

முதலாவதாக எழுதிய சிறுகதைக்கு வாழ்த்துகள்! எழுதியதை படித்துப்பார்த்து திருத்தங்கள் செய்ய பழகிக்ககொள்ளுங்கள். மேன்மேலும் முயற்சி செய்யுங்கள்.

கமல் said...

தண்டவாளத்தின் அதிர்வுகளை விட அவனது இதய அதிர்வுகள் அதிகமாயிருந்தது.//



நீங்கள் பெரிய ஆளப்பா....! சிறுகைதையில் கை தேர்ந்தவரால் தான் இப்படியான முயற்சிகளைச் செய்ய முடியும்?? அவரவரின் திறமை அவர்களுக்குத் தெரியாதாம்? மற்றவர் சொல்லும் போது தானாம் தங்களிடம் உள்ள திறமைகளை எண்ணி வியந்து கொள்வார்களாம்??



முதலில் வாழ்த்துக்கள் உங்கள் முதல் முயற்சிக்கு...!

கமல் said...

பலபேருக்கு பிறந்த தின வாழ்த்து கூறியிருக்கிறான், ஒரு போதும் இப்படி எண்னியதில்லை இருந்தாலும் பலப்பேரும் அவளும் ஒன்றா?//



என்ன சொந்த அனுபவமோ??? வெட்கத்தை விட்டுச் சொல்லுங்கோ.??

கலை - இராகலை said...

///குடந்தைஅன்புமணி
முதலாவதாக எழுதிய சிறுகதைக்கு வாழ்த்துகள்! எழுதியதை படித்துப்பார்த்து திருத்தங்கள் செய்ய பழகிக்ககொள்ளுங்கள். மேன்மேலும் முயற்சி செய்யுங்கள்.///

வாங்க குடந்தை அன்புமணி,

உங்க பேரு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நன்றிகள் சரி மறுபடியும் படித்துபார்கின்றேன். நான் படித்துப்பார்பதை விட நீங்களும் சொல்லியிருந்தா நல்லாயிருந்துருக்கும்.

கலை - இராகலை said...

//////////கமல்
தண்டவாளத்தின் அதிர்வுகளை விட அவனது இதய அதிர்வுகள் அதிகமாயிருந்தது.//
நீங்கள் பெரிய ஆளப்பா....! சிறுகைதையில் கை தேர்ந்தவரால் தான் இப்படியான முயற்சிகளைச் செய்ய முடியும்?? அவரவரின் திறமை அவர்களுக்குத் தெரியாதாம்? மற்றவர் சொல்லும் போது தானாம் தங்களிடம் உள்ள திறமைகளை எண்ணி வியந்து கொள்வார்களாம்??
முதலில் வாழ்த்துக்கள் உங்கள் முதல் முயற்சிக்கு...!//////////

வாங்க கமல் வேளைப்பளு குறைந்தது போல. நன்றிகள் கமல்.

கலை - இராகலை said...

////////கமல் said...
பலபேருக்கு பிறந்த தின வாழ்த்து கூறியிருக்கிறான், ஒரு போதும் இப்படி எண்னியதில்லை இருந்தாலும் பலப்பேரும் அவளும் ஒன்றா?//
என்ன சொந்த அனுபவமோ??? வெட்கத்தை விட்டுச் சொல்லுங்கோ.??////////

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை நண்பா! கொஞம் அனுபவமும் தான் போதுமா சொல்லியாச்சு.

vinoth gowtham said...

//சூரிய உதய‌த்தையே கண்டிறாதவன் மறுநாள் காலையில் சேவலையும் துயில் எழுப்பி கதிரவனுக்கு காலை வந்தனம் தெரிவித்தான். எத்தனை சுறுசுறுப்பைக்கொடுக்கிறது இந்த காதல்.//

உண்மை தான் நண்பா.

ஆ.முத்துராமலிங்கம் said...

முதல் சிறுகதைக்கு வாழ்த்துகள் .

முதல் சிறுகதை நல்லா முயற்சி பண்ணிருக்கீங்க. கதையின் ஓட்டம் இடையிடையே தளர்கின்றத்து.
|மீட்டிப்பார்கின்றான்|
|அவள்ப்படுகிறாள்|
|புறப்படுகிறான்|
|காட்டப்படுகிறது|
|நிற்கின்றான்|
இது போன்ற வார்த்தைகளை பிரயோகித்திருப்பது கதையை விளக்குவதாக உள்ளது எழுத்து நடைக்கு மாற்றுங்கள் இன்னும் நல்லாவரும்.

|அவள் எப்படி என்னை வரவேற்ப்பாள்? உன்னைப்பார்த்த பின்பு நான்! நானாக இல்லையே.. ச்ச்சி ச்சி இந்த பாடல் பொருந்தாது, சிரித்த முகத்துடன் அவள் கன்னங்களை கில்லி வாழ்த்து சொல்லிடலாமோ? ம்ம்ம் சரிவராது, ஒரு முத்தம் வேண்டாம் பிறகு அவ்வளவு தான், படங்களில் வருகிறமாதிரி கால்களை மண்டியிட்டு கிப்ட்டை கொடுத்து வாழ்த்தலாமோ ச்சே ரயில் நிலையமாச்சே நெரைய பேர் இருப்பாங்க, அவள் கன்னத்தில் ஒரு கடி கடித்து காதில் மெல்லமாய் சொல்லிடாமோ? ம்ம்ம் பாக்கலாம். பலபேருக்கு பிறந்த தின வாழ்த்து கூறியிருக்கிறான், ஒரு போதும் இப்படி எண்னியதில்லை இருந்தாலும் பலப்பேரும் அவளும் ஒன்றா? என்ற கேள்வி மனதில் ஓடத்தான் செய்தது.|

இந்த இடம் நல்லா இருக்கு

//தண்டவாளத்தின் அதிர்வுகளை விட அவனது இதய அதிர்வுகள் அதிகமாயிருந்தது.//

//சூரிய உதய‌த்தையே கண்டிறாதவன் மறுநாள் காலையில் சேவலையும் துயில் எழுப்பி கதிரவனுக்கு காலை வந்தனம் தெரிவித்தான். எத்தனை சுறுசுறுப்பைக்கொடுக்கிறது இந்த காதல்.//
இது நல்ல வரிகள். இப்படி இன்னும் யோசிங்க இன்னும் கதை நல்லா வரும்.

(இப்படில்லா கட்டம்போட்டுல்லாம் சொல்லுரதால நானொன்னும் நிறைய கதை எழுதினவனில்ல நானும் இரண்டு கதைதான் (அது கதையா) எழுதியிருகேன் அதும் குழந்தை தவளுவது போல்தான் இருந்தாலும் நிறைய கதை படிக்கிரதால சொல்லிட்டேன்)

வாழ்த்துகள். கதை.. ச்சீ ச்சீ கலை.

கமல் said...

நான் இறந்தா என்ன பன்னுவாய் என்று ஒரு முறை உலகமே இருண்டு விட்டது போல் தடுமாறி விட்டான் என்றாலும் நானும் உன்னுடன் வந்திடுவேன் என்பது தான் அவனது பதிலாய் இருந்தது//


இது யதார்த்தம் கலந்த வசனம்? கதையின் திருப்பு முனையை பரிசுப் பொருள் கொடுக்க நாயகன் முற்படும் இடத்தில் வைத்துத் திடீரென மாற்றி விட்டீர்கள்!


இது தான் முடிவாக இருக்கும் என நினைத்தவர்களுக்கு நல்லதொரு ஏமாற்றத்தை வழங்கியுள்ளீர்கள். இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு சபாஷ்...


மற்றும் படி சொல்லின் கொஞ்சம் இயற்கை அழகு வர்ணணைகள் கொடுத்து, பேசுபவர்களின் வசன நடைகளை வேறுபடுத்திக் காட்டினால் இன்னும் நன்றாக இருக்கும். இதற்கு மேற்கோட் குறிகளை’’ பாவிக்கலாம். அல்லது வேறு நிறங்களைப் பாவிக்கலாம்???



நான் கொஞ்ச நாளாக பிசி.. அது தான் தாமதமான பின்னூட்டங்கள் வரக் காரணமாக அமைகின்றன.



கதையில் குறை சொல்லுமளவிற்குப் பெரிதாக ஏதுமிலை...

தொடர்ந்தும் முயற்சி செய்யுங்கள்...


நிறைய விடயங்களைப் பதிவாக்குங்கள்!

சுருங்கக் கூறின் ‘அவனும் அவளும்’ இணைய முடியாத இரு கோடுகள்..!

தர்ஷன் said...

அட காதல் அனுபவங்கள் எல்லோருக்கும் கிட்டத் தட்ட ஒரே போல்தான் இருக்கும் போல
சரி அது கிடக்கட்டும்
முதல் கதை என்ற வகையில் பாராட்டத் தக்க முயற்சி
நிறைய வாசியுங்களேன்
மற்றும்படி பிழை எல்லாம் கண்டுப் பிடிக்குமளவு நான் பெரிய டுபுக்கு இல்லை
சற்று பிரபலமானவர்களின் கதைகளை வாசித்து விட்டு மீண்டும் இதை வாசியுங்கள் உங்களுக்கே தோன்றும் குறைகளை நிவர்த்தித்தப் பின் மீள பதிவிடுங்கள்.
தொடர்ந்து செய்யுங்கள் தொடர்ந்து எழுதுங்கள்
ராகலையில் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா ஒன்று வைத்து விடலாம் Ok
உங்களில் தான் எத்தனை திறமைகள் எங்கே தியானம் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்

ஷீ-நிசி said...

நல்ல ஒரு காதல் கதை! முதல் முயற்சி என்பதால் என் பாராட்டுக்கள்!

கதையில் நடை மிகவும் முக்கியம். அது கொஞ்சம் குறைவாக உள்ளதாய் உணர்கிறேன். நிறைய கதைகளைப் படித்தால், படிப்பவரை பாதிக்கும் வண்ணம் எப்படி எழுதலாம் என்பது எளிதில் கைகூடும்!

வாழ்த்துக்கள் கலை!

கவின் said...

காதல் கதை! நல்லா இருக்கு!

ஆதவா said...

முதல் கதையா!!!! முதலில் பிடியுங்கள்... வாழ்த்துக்களை!!

ஒரு சில இடங்களில் எழுத்துப்பிழைகள் இருந்தன. சில வரிகள் நல்ல கற்பனையாக எழுதப்பட்டிருக்கிறது.

ஷீ-நிசி சொன்னதைப் போல, நடையில் இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்து செய்யுங்கள். இப்போதுள்ள நடையை டெவலப் செய்யுங்கள்!!

(கொஞ்சம் பிஸீ கலை!!!)

Mekalai said...

வணக்கம்

சிறிய கதையானாலும்......நிரைய மனதை பாதிதத்தது.பள்ளிப் பருவ காதலை எப்போதும் ஏற்க மறுக்கும் நான் உங்கள் கதையில்
கவரப்பட்டேன் என்றால் அதில் ஏதோ உள்ளது...
அது உங்கள் திறமைதான்
தொடர்ந்து கதை எழுதுங்கள்........
வாழ்த்துக்கள்.........

 
Copyright © 2008-2010 - All right reserved By G.H.C.Kalaikumar