கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Wednesday, April 8, 2009

என்னைக் கவர்ந்தவர்கள்/ கவிழ்த்தவர்கள்..!

பெரிய பதிவாயிருக்குனு நினைத்து வாசிக்காம போயிடாதிங்க. நேரம் கிடைக்கும் போது அமைதியாய் கொஞம் கொஞ்சமா வாசித்து முடித்துவிடுங்க!

மார்ச் மாதம் 17ம் திகதி என்னை (என்னைக் கவர்ந்தவர்கள்/ கவிழ்த்தவர்கள்..!) ஒரு தொடர் பதிவிற்கு நண்பர் கமல் அழைத்திருந்தார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் "மிக மிக வேகமாக ஆடுகளத்தில் அடித்தாடுவார்கள்" என கமல் சொல்லியிருந்தார்.ராகுல் ட்ராவிட் வேகத்தில் ஆடுவது அனைவருக்கும் பிடிக்கும் என்பதால் அதைப்பின்பற்றி ஆடுகளத்தில் இப்போது நான்!(தான் உண்டு தன் வேளை உண்டு என நீயுசிலாந்தில் சாதனைப்படைத்து கொண்டிருக்கும் அந்த நல்ல மனுசனை ஏன்டா இங்க இலுக்கிறனு கேக்குறது விளங்குது)

மகாகவி பாரதியை பி(ப)டிக்காதவங்களே இருக்க முடியாதுங்க‌ (யாரும் இருப்பாங்களோ?) அவரைப்பற்றி எழுத இன்னும் வளர வேண்டும்னு நினைக்கிறோன் (அறிவை சொல்லுறேன் மற்றப்படி 5"9" உயரம் நான்)பாரதியைப்பற்றி ஆதவா எழுதியிக்காரு ஓடி போய் வாசிங்களேன் அவருதான் சரியான ஆளு பாரதியைபப்ற்றி எழுத! பாரதியின் கவிதைகளில் இந்த வரிகள் எனக்கு பல‌ம் சேர்த்தவைகள்!
"தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" இதை வாசிக்கும் போதே புது உத்வேகம் பிறக்கும். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.

சரி அடுத்தவர் விவேகானந்தர் ரொம்ப பிடிச்சவரு பாரதிமாதிரியே முண்டாசு கட்டியிருப்பாரு, சுவாமி விவேகானந்தரின் அமுத மொழிகளில் இவை எனக்கு மிக மிக பிடித்தவை

"வாய்ப்பு வரும் வரை அமைதியாய் இரு அது அமைந்து விட்டால் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" ,

"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்" .

சரி விவேகானந்தர்ப்பற்றி ஒரு பதிவு போடலாம் என்றால் முத்திக்கொண்டார் நண்பர் நிர்ஷன் நானும் ஏற்கனவே ஒரு குறிப்பு பதிவு செய்திருக்கின்றேன். பாரதிப்பற்றியும் தான்.


பிறகு கவியரசு, கவிபேரரசு, என்று இன்னும் நிரைய பேரு இருக்காங்க. அதோடு கவிஞர் புதுவை இரத்தினதுரை! அவர்களின் கவிதைகள் மிகவும் பிடித்தவை. அவருடைய குரலில் அவருடைய கவிதைகளை நான் கேட்டு இருக்க வில்லை நண்பர் கமலின் பதிவுகளை பார்ப்பதற்கு முன்பு. அவரது கவிதைகளை அவரின் குரலிலே ஒலிவடிவில் உங்களுக்கு கேட்க வேண்டுமா? இதோ இங்கே கிடைக்கிறது! ஓடி போங்க கேட்டுவிட்டடு மறுபடியும் இங்கே வாங்க ப்லீஸ்! கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதை ஒன்று தமிழ் மதுரம் கமலின் பதிவில் சுட்டதுங்கோ!!

(ஒலி வடிவிலும் உண்டு இங்கே)வெள்ளிக் கிழமை
விடிந்தாலே போதும்
சொல்லி மாளாத சுகம்
எல்லோரும் விரதம்
ஏழெட்டுக் கறி சோறு
குறட்டையுடன் ஒரு குட்டித் தூக்கம்
கோயில் மணி கேட்கக்
கும்பிட்டு எழுந்து காலாற
ஒரு தடவை கடைப் பக்கம் உலாத்தல்


குளத்தடிப் பிள்ளையாரப்பா
டேய் கொழுக்கட்டை தின்னி
எல்லாம் முடிஞ்சுதா ஐயனே???
இனி என்று அழியும் இத் துயர்??
ஊர் திரும்பல் எப்போது?
வீடு இழந்ததற்கே எனக்கு இந்தளவ
வில்லங்கம் என்றால்
நாடிழந்து போனது எந்தப் பெரிய இழப்பு???

அடுத்தது நம்ம வலைப்பதிவாளர் லோஷன் அண்ணா! வலைப்பதிவிற்கு வருவதற்கு முன்பே 8 வருடமா அவரை பின்தொடர்வது வழக்கமாச்சு. அதாவது வானொலியில்.சூப்பரான ஒரு அறிவிப்பாளர் என நான் சொல்லி தெரியவேண்டியதில்லை பலருக்கு. ஒரு சகலகலா வல்லவன் என்றும் நான் சொல்ல தேவையில்லை.அவருடைய பத்திரிக்கைகளில் வந்த படங்கள் என்று ஏராளமா கலக்ஷ‌ன் இருக்கு. இரண்டு தடவைகள் சந்திதுள்ளேன்.www.vettri.lk என்ற முகவரியில் வாரநாட்களில் 6AM-10AM வரை அவரது குரலை நீங்களும் கேட்கலாம் வார இறுதி நாட்களில் சனி 6PM - 9PM வரையும் ஞாயிறு 3PM - 5PM வரையும் நேரலையில் இருப்பாருங்கோ! மேலதிகமா அவரைப்பற்றி தெரிந்துக்கொள்ள அவரது வலைபதிவிற்கு செல்லுங்கோ! அதோடு நான் வலைப்பதிவிற்கு வந்த புதுசுல (ஏய் நீ இப்பவும் புதுசு தான்னு யாரோ சொல்லுராங்கோ! நமக்கென்ன விளங்காத மாதிரியே இருந்திடுவோம்) லோஷன் அண்ணாவும் என்னை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்திருந்தார்.(நான்,சினிமா இன்னும் பல..) இப்போதெல்லாம் நம்ம வலைப்பக்கம் வருவதேயில்லை கூட்டிக்கொண்டாவது வரனும் ம்ம்ம்ம்) ரொம்ப சந்தோஷமாயிருந்தது வானொலி மூலமாகவும் நெரைய ஊக்கப்படுத்திவுள்ளார். இரவு எவ்வளவு நேரமாகி தூங்கினாலும் சரியா 6 மணிக்கு அவருடைய குரலை கேட்டவுடனே கண்முழிச்சிடுவேன். விடியலுடன் தான் என் விடியலும் விடியும்! நான் 10ம் வகுப்பில் படிக்கும் போது லோஷன் அண்ணா அபோது சக்தி எப் எம் இல் அறிவிப்பாளராக இருந்தார் ஆனால் இராகலையில் சக்தி எப் எம் தெளிவில்லை, நான் சூரியன் எப் எம் தான் கேட்பேன். எனது நண்பன் திவாகரன் மூலம் தான் லோஷன் அண்ணா அறிமுகமானார். காலையில் ஸ்கூல் வந்ததுமே லோஷன் அண்ணா இப்படி சொன்னார் அப்படி சொன்னார் என அய்யோ தாங்க முடியாது ஒரே அறுவலா இருக்கும் ஏன்னா நம்ம தான் சூரியன் பிரியராச்சே! திவா ஒரு லோஷன் பித்தன் இப்போ நானும் தான். திவா லோஷன் அண்ணாப்பற்றி சொல்லும் போதெல்லாம் மனதுக்குள் லோஷன் அண்ணாப்பற்றிய அபிப்பிராயங்கள் அதிகமாச்சு இருந்தாலும் நண்பனிடன் காட்டிகொள்ள வில்லை. பிறகு என்ன லோஷன் அண்ணா எனக்காகவே நம் வேண்டுதலின்ப்படி சூரியன் எப் எம்மிற்கு வந்துட்டார் பிறகென்ன நம்ம ஆட்சிதான்.சூரியராகங்கள் கலகட்டும்! "என்றென்றும் புன்னகை முடிவில்லா புன்னகை..." என்ற பாடலோடு தான் கலையகத்துக்குள் என்டர் ஆவார். அப்போது இருந்து இப்போ வெற்றி எப் எம் வரை வெற்றி தான். சில கசப்பான சம்பவங்கள் நடந்தாலும் அனைத்தையும் கடந்து வெற்றியின் வெற்றி பாதையில் இப்போ அவர்.இன்னும் வெற்றிகள் குவிய வாழ்த்துகளுடன் கதையோட கதையா ஒரு நன்றி சொல்லிடுவோம். மிக்க நன்றி அண்ணா!
பிறகு எனது ஆரம்ப கால ஆசிரியை ஜெசிமா உமா டீச்சர், என் தமிழாசிரியான‌ , 10 11 ஆம் ஆண்டு பாடசாலைப்படிக்கும் போது வகுப்பாசிரியைய் இருந்த சாந்தினி டீச்சர், உயர்தரத்தின் போது வகுப்பாசிரியர் பன்னீர் சேர் என்று இன்னும் பெரிய பட்டியலே இருக்கு. அப்பப்போ ஒவ்வொருத்தரையும் பற்றி கொஞ்சமாவது சொல்லனும் என நினைத்திருக்கின்றேன்.
இப்ப நான் இங்கு எழுத போவது தான் இன்றைய பதிவு (அப்ப இவ்வளவு நேரமா எழுதுயது?)

கோ. நடேசய்யர்.


இலங்கை அரசியலில், தொழிற்சங்கம், பத்திரிக்கை, இலக்கிய முயற்சிகளில் ஈடுப்பட்டவர் தான் கோதண்டராம நடேசய்யர். தமிழகத்தின் தஞ்சாவூரில் 14.01.1891 ம் ஆண்டு பிறந்தவர்.தஞ்சாவூரில் இந்திய வியாபாரிகள் சங்கம் ஒன்றினை உருவாக்கி வெற்றிகரமாக இயக்கிவந்தவர். அதே நேரம் வர்த்தக மித்திரன் என்ற பத்திரிக்கையையும் நடாத்தி வந்தார்.இந்தியர்கள் கொழும்பில் வர்த்தகத்தில் ஈடுப்பட்ட அந்நாட்களில் கொழும்பில் அதன் கிளையொன்றையும் நிறுவியிருந்தார். அதன் ஆண்டு விழாவிற்காகவே 1915ம் ஆண்டு முதல் முதலாக இவரது இலங்கைக்கான வருகை அமைந்திருந்தது. அந்த வருகையின் போது கோ.நடேசய்யர் தேயிலை தோட்டங்களில் வாழுகின்ற இந்தியத் தொழிலாளர்களின் நிலமையை நேரில் கண்டறிய விருப்பினார். ஆனால் அவருக்கு அங்கு சென்று பார்க்கமுடியாதவாறு சட்டங்கள் கடுமையாக இருந்தது. அதாவது தேயிலை தோட்ட்ங்கள் யாவும் துரைமார்களின் பலத்த அதிகாரத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தது. தோட்டத்துக்குள்ளிருப்பவர்கள் தோட்ட எல்லையை தாண்டி வெளியே போவதும் வெளியார் தோட்டங்களுக்குள் வருவதும் சேவை ஒப்பந்தக் கட்டளைச்சட்டம், அத்துமீறல் தடைச்சட்டம் ஆகியவற்றின் பிரகாரம் தண்டணைக்குரிய குற்றங்களாக இருந்தது. புடவை வியாபாரிகள் மாத்திரம் செல்வது வழக்கமாயிருந்திருக்கிறது எனவே கோ.நடேசய்யர் புடவை வியாபாரியாக‌ உள்ளே சென்று மக்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அம்மக்கள் திறந்தவெளிச் சிறை வாழ்க்கையை அறிந்து கொண்ட அவர் ஆண்டு விழாவை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பினார்.
இலங்கையில் குடியியல் உரிமை அற்றிருந்த இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு இந்த மக்கள் பிறந்து வளர்ந்த தாயகமான இந்திய அரசு எவ்வித முன்னெனடுப்புகளையோ, இராஜதந்திர அழுத்தங்களையோ மேற்கொள்ள வில்லை அதேவேளை புகுந்த வீடான இலங்கை அரசும் எவ்வித அக்கறையும் காட்டாத வேளையிலே இம்மக்களின் விடியலுக்காக நீண்ட காலம் த‌ங்கியிருந்து பாடுப்பட வேண்டும் என்ற நோக்குடன் மீண்டும் 1920 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தார்.


இலங்கைக்கு விஜயம் செய்த அவர் அவ்ருக்கு நன்கு பரிட்சயமான பத்திரிக்கை தொழிலில் ஈடுப்படலானார். 1922 ம் ஆண்டு, "தேசநேசன்" என்ற தினசரியும், 1924ம் ஆண்டு "தேசபக்தன்" என்ற தினசரியும் அவரால் தொடங்கப்பட்டது. அதே வேளை தனி ஆங்கிலப் பத்திரிகைகளான Indian opinion, Indian Easte Labourer citizen, Forward ஆகிய மூன்று பத்திரிக்கைகளையும் நடாத்தினார். 1947 ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி சுதந்திரன் பத்திரிக்கை அரசியல தினசரியாக வெளிவந்தபோது அதன் ஆசிரியராக கோ.நடேசய்யர் கடமையாற்றிவுள்ளார். பத்திரிக்கையின் நோக்கம் பற்றிய செய்தியினை மிகத் தெளிவாக அதன் முதலாவது இதழிலேயே கீழ்கண்டவாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

"தமிழர் யார் என்ற பிரச்சினை கிளம்புகிறது. வெகு காலத்திற்கு முன் வந்தவர்கள் தங்களை இலங்கை தமிழர் என்கிறார்கள். பின் வந்த வந்தவர்களை இந்திய தழிழர்கள் என்கிறார்கள். எல்லோரும் தமிழர் என்பதை மறந்து விட்டனர். இந்தியத் தமிழர்களில் சிலர் தங்களை இந்தியன் என கூறிக்கொள்வதில் தங்களுக்கு ஏதோ பிரத்தியோக நன்மை இருப்பதாகவும் கனவு காண்கிறார்கள். இந்த பிரிவினைகள் யாரால் ஏற்படுத்தப்பட்டதென்பதை அறிவாறா? இவ்விரு தமிழர்களையும் பிரித்து வைப்பதில் தங்களுக்கு பயன் ஏற்படும் என சிங்களச் சோதரர்கள் செய்துவந்துள்ள சூழ்ச்சி. இந்த சூழ்ச்சியிலீடுப்பட்டுள்ள சில சுயநலத் தமிழர்களும் இருக்கின்றனர். ஆகவே இந்தச் சூழ்ச்சிகாரர்களிடமிருந்து தமிழ் பொதுமக்கள் தப்பவேண்டும்.இந்த ஒரே நோக்கம் கொண்டுதான் சுதந்திரன் ஆரம்பிக்கப்பெற்றிருக்கிறது. சாதாரண மக்களிடம் அரசியல் ஞானத்தை பரப்ப வேண்டியது முதல் கடமையாகும்."

01.06.1947 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரன் 1983ம் ஆண்டு தனது பயணத்தை நிறுத்திக்கொண்டது என்பது குறிப்பிடதக்கது. தொழிற்சங்கத் தலைவரான ஏ.ஈ. குணசிங்காவுடன் இணைந்து கொழும்பில் தொழிற்சங்க பணிகளில் ஈடுப்படலானார். ஏ.ஈ குணசிங்காவின் இந்தியத்துவேசம் இனவாத போக்கின் காரணமாக கருத்துவேருபாடுகள் கொண்டு 1928 ஆம் ஆண்டு அவ் அமைப்பை விட்டு வெளியேறினார். இலங்கை தொழிலாளர் கழகத்திலிருந்து வெளியேறிய கோ.நடேசய்யர் அவர்களின் 1931ம் ஆண்டு அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சம்மேளனத்தை ஆரம்பித்ததிலிருந்துதான் மலையக தொழிற்சங்க வரலாறு தொடங்குகிறது! அதற்கு முன்னர் 1930 வரையில் தோட்டதுறையில் எந்த வித தொழிற்சங்க நடவடிக்கைகள் இருக்கவில்லை. ஆகவே தான் மலையகப் பெருருந்தோட்டத் துறையில் தொழிலாளர்களுக்காக அமைப்பு ரீதியாக முதலாவதாக‌ தொழிற்சங்கத்தை ஆரம்பித்தவராக கோ. நடேசய்யர் கருதப்படுகிறார்.

1936 ஆம் ஆண்டு நடந்த அரசாங்க சபை தேர்தலில் கோ.நடேசய்யர் போட்டியிட்டு மகத்தான வெற்றியைப் பெற்றார்.ஆறு ஆண்டுகள் சட்ட நிறுவன சபையினதும், அதன் பின்னர் பதினொறு ஆண்டுகள் சட்டசபையிலும் மலையக தோட்ட தொழிலாளர்களுக்காக பிரதிநிதிதுவம் செய்தார்.
ோ.நடேசய்யர் இலங்கையில் குடியேறியது முதல் மறையும் வரை ஒன்பது தழிழ் நூல்களயும் இரு ஆங்கில நூல்களையும் வெளியிட்டுள்ளார். "தோட்ட் முதலாளிகள் இராச்சியம்" என்ற இவரது ஆங்கில நூல் மிகவும் பிரபல்யமானது என கூறப்படுகிறது. அதே சமயம் இவரது மனைவியான மீனாட்சியம்மை இவருது அரசியல், இலக்கிய வாழ்விற்கு முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.இவர் தான் ம்லைகத்தின் முதற்பெண்மணியாகவும் கூறப்படுகிறது. மீனாட்சியம்மையைப்பற்றி வேறொரு பதிவில் முழுமையான விபரங்களை தருகிறேன்.

கோ. நடேசய்யரின் நூல்லகள் யாவும் உறங்கிக் கிடக்கும் ஒரு மக்கள் கூட்டத்தை தட்டியெழுப்பும் போக்கிலே காணப்படுகிறது. "1931ம் ஆண்டு வெளியான "நீ மயங்குவதேன்" என்ற கட்டுரை நூலில் உள்ள இறுதி கட்டுரையான "ராமசாமி வேர்வையின் ச‌ரிதம்" என்ற கட்டுரையாகவல்லாது மலையகத்தின் முதன் முதலில் வெளிவந்த சிறுகதையாகக் கருதப்படுகிறது.
இன்னும் ஏராளமான விடயங்கள் நடேசய்யர்ப் பற்றி இருக்கின்றன அவை இன்னொறு முறை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைகிறேன். மக்களுக்காக பாடுப்பட்டவர்களின் வரலாறு இலகுவில் சொல்லி முடிக்கயிலாத காரியம் என்பது நீங்க அறிவீர்கள். இன்னொரு விடயம் 06.11.1947 நடேசய்யர் கொழும்பில் அமரரானார். அவர் அமரராகி ஒரு வருடம் கழித்த நிலையில் மலையக மக்களின் அரசியல் வாழ்வினை அழித்தொழிக்க வகை செய்த குடியுரிமை சட்டம் 15.11.1948இல் இலங்கை நாடாளுமன்றத்தில் அரங்கேறியது என்றால் எவ்வளவு நெருக்கடியாக அரசிற்கு அமரர் கோ.நடேசய்யர் இருதிருப்பார் என நாம் ஊகித்துக்கொள்ளலாம்.

இன்றிலிருந்து ஒருவாரகாலமாக வலைப்பதிவிற்கு விடுமுறை கொடுக்கலாம் என் எண்ணியுள்ளேன். இடைக்கிடையில் உங்களை சந்திக்கின்றேன். ஒரு வருடத்தின் பின் வீட்டுக்கு சொல்வதால் சிறு ஓய்வு எடுத்துவிட்டு நண்பர்கள், உறவினர்கள் சந்தித்து விட்டு மீண்டு பல சுவாரஸ்யமான விடயங்களோடு தியானத்தின் 3வது பதிவின் ஊடாக உங்களை சந்திக்கிறேன். வடக்கின் வசந்தம் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள் சிலர் எது எப்படியோ ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் சித்திரை வருட பிறப்பில் வசந்தம் வீசட்டும் என எப்போதும் போல இறைவனை பிரார்த்திப்போம் என கூறிக்கொண்டு விடைபெறுகின்றேன்.

எனது மனமார்ந்த நன்றிகள் இவர்களுக்கு
பட உதவி திரு.அந்தனி ஜிவா (எழுத்தாளர்)
உதவி நூல்கள் : மலையக இலக்கிய கர்த்தாக்கள், மலையகத் தொழிற்சங்க வரலாறு

பின் குறிப்பு: இந்த பதிவில் மற்றுமொருவர் இருக்கின்றார் அவரைப்பற்றிய தகவல்களை தந்து விட்டு மூன்று பேரை தொடர்பதிவிற்கு அழைகின்றேன்.எவ்வளவு முடியுமோ அவ்வளவு பின்னூட்டம் போடுங்க! நட்புடன் ஜமால் அண்ணே சாதனையை முறியடிக்க தேவையில்லை. கொஞ்சமாகவே பின்னுட்டம் போடுங்க ப்பீஸ்.


Post a Comment
.