Sunday, August 2, 2009

எம லோகம் போகலாம் வாடி தாயே!!


மலையக நாட்டார் பாடல் - 01 இங்கே



கண்டிக்குத்தான் போறமுன்னு
கறி சோறு தின்னுப்புட்டு
தோணி ஏற மாட்டமுன்னு
தொங்கலிலே ஒழிஞ்சிக்கிட்டா
தங்க ரத்தினமே..! அவனந்
தொலைச்சுடுவான் ஆளுக்கட்டி
பொன்னே ரத்தினமே..!

தோணி வருகுதுண்ணு
துறைமுகமே காத்திருந்தேன்
தோணி கவுந்திருச்சே
துறைமுகமே ஆசையில்ல‌

கப்பல் வருகுதுண்ணு
கடற் கரையே காத்திருந்தேன்
கப்பல் கவுந்திருச்சே
கடற் கரையே ஆசையில்ல‌

எட்டடி குடிசையிலே
இருப்பது நியாயமில்லே
எம லோகம் போகலாம் வாடி தாயே
எம லோகம் போகலாம் வாடி தாயே!!

பட்டுப் பாவாடைக் கட்டி
பகட்டு மினுக்கி கொண்டு
பரதேசம் போகலாம் வாடி தாயே
பரதேசம் போகலாம் வாடி

கங்காணி கோவத்துக்கும்
காட்டுத் தொங்க ஏத்தத்துக்கும்
இந்த இடைஞ்சலிலே
இனி இருக்க நியாயமில்லே
வாடி செவத்தப் புள்ள‌
வதுளை பக்கம் போய் பொழைப்போம்..!!!!

10 comments:

  1. வாங்கோ...வாங்கோ பாட்டுப் பாடிக்கொண்டு வந்தீங்களோ.

    //கங்காணி கோவத்துக்கும்
    காட்டுத் தொங்க ஏத்தத்துக்கும்
    இந்த இடைஞ்சலிலே
    இனி இருக்க நியாயமில்லே
    வாடி செவத்தப் புள்ள‌
    வதுளை பக்கம் போய் பொழைப்போம்..!!!!//

    என்னவோ மனசுக்கு சிநேகமான வரிகள் போல இருக்கு.

    கலை சுகம்தானே.திரும்பவும் வந்திருக்கீங்க.சந்தோஷமாயிருக்கு.
    ஏன் வேலைப்பளுவா?இருந்தாலும் முடிஞ்ச நேரங்களில் தலை காட்டிப் போங்கோ.

    இனிய நண்பியாய் வாழ்த்துக்கள் பல.

    ReplyDelete
  2. அருமையா இருக்கு தோழா.. பாராட்டுகள்

    ReplyDelete
  3. நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பா

    ReplyDelete
  4. வழமை போல அருமை! யாரெழுதியது?

    ReplyDelete
  5. நாட்டார் பாடல் அருமை.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. பாடினேன்.... ஆனால் நாட்டுப் புற நடனம் தான் வரமாட்டேங்குது அண்ணா....

    அருமை... வாழ்த்துக்கள்.......

    ReplyDelete
  7. நல்ல பதிவு. படித்து மகிழ்ந்தேன். நன்றி

    ReplyDelete
  8. நாட்டுப் பாடல் வடிவில் அமைந்த உங்கள் பாடல் வரிகள் அழகு
    மேலும் தொடருங்கள் வாசிக்க காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  9. அனைவரின் கருத்துக்களுக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள்!! எனது தாமதமான பின்னூட்டளுக்கு வருந்துகின்றேன்.

    ReplyDelete
  10. /////புல்லட் said...

    வழமை போல அருமை! யாரெழுதியது?////

    நன்றி புல்லட்! மலைக நாட்டார் பாடல்கள் உண்மையில் எழுதப்பட்டவைகள் என்பதைவிட தொகுக்கப்பட்டவைகள் என்பதே சரியானதாகும்! இதுவும் அப்படி ஒன்றே!

    ReplyDelete

வணக்கம். வாங்க நலமா இருக்கின்றீர்களா? இருக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை " எல்லோரும் இன்புற்றி இருப்பதன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே" ஓகே ஓகே வாங்க சரியோ பிழையோ எதுவானலும் ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க. அந்த ஒரு வார்த்தை என்னை சந்தோஷப்படுத்தும், ஊக்கப்படுத்தும். நன்றி.

என்றும் அன்புடன்,
சானா. கலைகுமார்
இராகலை