Blog Widget by LinkWithin

Thursday, November 12, 2009

167,100 இராணுவ வீரர்களைக்கொண்டு பிடிக்கப்பட்ட புகைப்படங்கள்.

முதலாம் உலக யுத்தம் நடைப்பெற்றிருக்கும் வேளை அமெரிக்காவின் இராணுவ வீரர்கள் தனது நாட்டு விடுதலை சின்னங்களுடன் அணிவகுப்பில் ஈடுப்பட்டிருந்த போது எடுக்கப்பட்டதாக கூறப்படும் படங்கள் இவை. இதன் படப்பிடிபாளர்கள் ஆதர் எஸ் மோல் மற்றும் ஜோன் டி தோமஸ் ஆகியோராகும். இந்த படங்களை 70 - 80 க்கும் இடைப்பட்ட அடி உயரமான கோபுரத்திலிருந்து எடுக்கப்பட்டதாக கூறப்ப்டுகின்றது. அதோடு 11 * 14 இன்ச் கெமரா பயன்படுத்தப்பட்டதாகவும் இந்த படங்கள் இப்போது Chicago Historical Society, the Museum of Modern Art and the Library of Congress இல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1. Living Insignia of the 27th Division "New York's Own"
10,000 officers and enlisted men, Breakers of the Hinderburg Line.
2. Human American Eagle
12,500 officers, nurses and men; Camp Gordon, Atlanta.
3. Human Liberty Bell
25,000 officers and men at Camp Dix, New Jersey
4. Human Statue of Liberty
18,000 officers and men at Camp Dodge, Des Moines, Ia.
5. Human U.S. Shield
30,000 officers and men, Camp Custer, Battle Creek, Mich
6. Living Uncle Sam
19,000 officers and men, Camp Lee, VA.
7. Machine Gun Insignia
22,500 officers and men, 600 machine guns at Machine Gun Training Center, Camp Hancock, Augusta, Ga.
8. Living Emblem of the United States Marines
100 officers and 9,000 enlisted men, Marine Barracks, Paris Islands, S.C.
6. Sincerely yours, Woodrow Wilson
21,000 officers and men, Camp Sherman, Chillicothe, Ohio



Read more...

Wednesday, August 12, 2009

நண்பர்களுக்குகோர் அழைப்பிதழ்

இலங்கைப் பதிவர் சந்திப்பு


காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்,
இல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா மாவத்தையின் பின்புறம்)
கொழும்பு 06.


நோக்கங்கள் :

இலங்கைத் தமிழ் வலைப்பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல்.

புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்

இலங்கைப் பதிவாளர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி செயதல்.

பதிவாளர்களிடையேயான கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.

பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான வழிமுறைகளை ஆராய்தல்

இன்னும் பல‌..

வலைப்பதிவாளர்கள், புதிதாக வலைப்பதிபவர்கள், வலையுலக வாசகர்கள், பின்னூட்டமிடுபவர்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மேலதிக விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் பின்வருவோரைத் தொடர்பு கொள்ளவும்.


லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com

முழுமையான நிகழ்ச்சி நிரல் அடுத்த வாரம் பிரசுரிக்கப்படும்.

இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.


பிற்குறிப்பு : மின்னஞ்சலினூடாக பலரை நாம் தொடர்புகொண்டோம் சிலரின் மின்னஞ்சல் முகவரிகள் எமக்கு கிடைக்கவில்லை ஆகவே தயவு செய்து மின்னஞ்சலில் இதனைப் பற்றிய தகவல்கள் கிடைக்காதவர்கள் எந்தவித தயக்கமின்றி எம்மைத் தொடர்பு கொள்ளவும்.

ஏதாவது கருத்துக்கள்,ஆட்சேபணைகள்,ஆலோசனைகள் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.

உங்களுக்கு தெரிந்த வலைப்பதிவாளர்கள், ஆர்வமுள்ளவர்களையும் அழைக்கவும்; உங்கள் வருகை பற்றி உறுதிப் படுத்தவும்.

யாரையும் தவறவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாயுள்ளோம்.. யாராவது ஆரம்பிக்க வேண்டும் என்பதால் தான் நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.. எம்முடன் இணைந்து முன்னெடுக்க ஆர்வமுள்ளோர் வரவேற்கப்படுகிறார்கள்.

இருவாரங்கள் தாராளமாக இருப்பதால் இலங்கை முழுவதும் இருந்து பங்கேற்பை எதிர்பார்க்கிறோம்.

உங்கள் வலைத்தளங்களிலும் இதனைப் பிரசுரித்து வருகைகளை அதிகரிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

Read more...

Sunday, August 2, 2009

எம லோகம் போகலாம் வாடி தாயே!!


மலையக நாட்டார் பாடல் - 01 இங்கே



கண்டிக்குத்தான் போறமுன்னு
கறி சோறு தின்னுப்புட்டு
தோணி ஏற மாட்டமுன்னு
தொங்கலிலே ஒழிஞ்சிக்கிட்டா
தங்க ரத்தினமே..! அவனந்
தொலைச்சுடுவான் ஆளுக்கட்டி
பொன்னே ரத்தினமே..!

தோணி வருகுதுண்ணு
துறைமுகமே காத்திருந்தேன்
தோணி கவுந்திருச்சே
துறைமுகமே ஆசையில்ல‌

கப்பல் வருகுதுண்ணு
கடற் கரையே காத்திருந்தேன்
கப்பல் கவுந்திருச்சே
கடற் கரையே ஆசையில்ல‌

எட்டடி குடிசையிலே
இருப்பது நியாயமில்லே
எம லோகம் போகலாம் வாடி தாயே
எம லோகம் போகலாம் வாடி தாயே!!

பட்டுப் பாவாடைக் கட்டி
பகட்டு மினுக்கி கொண்டு
பரதேசம் போகலாம் வாடி தாயே
பரதேசம் போகலாம் வாடி

கங்காணி கோவத்துக்கும்
காட்டுத் தொங்க ஏத்தத்துக்கும்
இந்த இடைஞ்சலிலே
இனி இருக்க நியாயமில்லே
வாடி செவத்தப் புள்ள‌
வதுளை பக்கம் போய் பொழைப்போம்..!!!!

Read more...

Wednesday, July 15, 2009

எல்லாமே சந்தர்ப்பம்

Naadodigal
Artists: Ananya, Sasi Kumar
Director: Samuthirakani
Music Director: Sundar C Babu
Singer : ஹரிஹரன்

உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது..
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது
காதல் தோற்றதாய் கதைகள் ஏது?
தோற்றால் தோற்றது காதல் ஆகாது.
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தத்பர்த்தம்
உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது..
வலிகள் தாங்கும் காதல் மிகவம் வலியது

நினைவுகளாலே நிச்சயதார்த்தம் நடந்தது அவனோடு..
அவனில்லாது அடுத்தவன் மாலை ஏற்பது பெரும்பாடு
ஒரு புறம் தலைவன் மறுபுறம் தகப்பன் இதற்குள் எறும்பானாள்
பாசத்துக்காக காதலை தொலைத்து ஆலையில் கரும்பானாள்
யார் காரணம் ? யார் காரணம் ?
யார் பாவம் யாரைச்சேரும் யார்தான் சொல்ல..
கண்ணீர் வார்த்தாள் கன்னி மானே
சுற்றம் செய்த குற்றம்தானே..

உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ்நிலை
உணர்வைப்பார்ப்பதேது உறவின் சூழ்நிலை.

மனமெனும் குளத்தில் விழி என்னும் கல்லை முதல் முதல் எறிந்தாளே..
அலையலையாக ஆசைகள் எழும்ப அவன் வசம் விழுந்தானே
நதிவழி போனால் கரைவரக்கூடும் விதிவழி போனானே..
விதையொன்று போட வேறொன்று முளைத்த கதையென்று ஆனானே
என் சொல்வது..???என் சொல்வது ?
தான் கொண்ட நட்புக்காக தானே தேய்ந்தான்
கற்பைப்போலே நட்பைக்காத்தான்..
காதல் தோற்கும் என்றா பார்த்தான்..

உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது..
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது
காதல் தோற்றதாய் கதைகள் ஏது?
தோற்றால் தோற்றது காதல் ஆகாது.
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தத்பர்த்தம்
உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது..
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது

உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ்நிலை
உணர்வைப்பார்ப்பதேது உறவின் சூழ்நிலை.



Get Your Own Hindi Songs Player at Music Plugin

Read more...
"தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?"
‍‍‍-பாரதி

  © All Rights Reserved by கலை-இராகலை @ 2008-2009 Template by Ourblogtemplates.com

Back to TOP