கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி
Showing posts with label பண்டிகைகள். Show all posts
Showing posts with label பண்டிகைகள். Show all posts

Sunday, February 22, 2009

மகா சிவராத்திரி

வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத சொல்லொணா அவலத்தை எமது உறவுகள் தினந்தினம் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். கொடுமைமிகு இந்த அவல நிலையிலிருந்து எமது மக்களைக் காப்பாற்றுவதற்கு உலகின் எந்த பெரிய மனித சக்தியுமே முன்வரவில்லை என்ற போதும் இனி எம்ம்க்களை காப்பாற்ற அந்த இறைவனால் தான் முடியும் என்று நம்பிக்கொண்டு மனதார இறைவனை பிராத்திப்போம் இந்த சிவராத்திரி தினதன்று.


திருச்சிற்றம்பலம்

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை

கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய

விலங்கும் மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின்

நோக்கரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து








Wednesday, October 29, 2008

எந்த காரியத்துக்கும் ராமாயண பாராயணம்.



நன்றி: தண்டாயுதபாணி ஜோதிடர் எழுதிய வேதங்கள் கூறும் வாழ்க்கை ரகசியம் எது?
எது?
  • வால்மீகி முனிவர் அருளிய ஸ்ரீ மத் ராமாயணத்திலுள்ள ஒவ்வொரு காண்டத்திலும் , சிற்சில ஸர்க்கங்களை பாராயணம் செய்தால் ஒவ்வொரு காரியமும் சுலபமாக நிறைவேறும் என்று கூறப்பட்டுள்ளது.

  • திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்க பாலகாண்டத்தில் சீதா கல்யாணத்தை காலை, மாலை இரு வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.

  • குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை உண்டாக பாலகாண்டத்தில் புத்திர காமேஷ்டி பாயாஸதான பாராயண கட்டத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

  • சுகப்பிரசவத்திற்கு பாலகாண்டத்தில் ஸ்ரீ ராமாவதாரத்தை காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

  • கெட்ட வழியில் செல்லும் பிள்ளை திருந்தி வாழ அயோத்யா காண்டத்தில் கௌசல்யா ராமா ஸம்வாதத்தை காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

  • அரச காரியங்களiல் வெற்றி கிட்ட அயோத்யா காண்டத்தில் ராஜதர்மங்களை காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

  • ஏவல், பில்லி, பேய், பிசாசு நீங்க சுந்தர காண்டத்தில் லங்கா விஜயத்தை மாலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

  • பித்தம் தெளிய சுந்தர காண்டத்தில் ஹுனுமத் சிந்தையை காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

  • தரித்திரம் நீங்க சுந்தர காண்டத்தில் சீதா தரிசனத்தை காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

  • பிரிந்தவர் சேர சுந்தர காண்டத்தில் அங்குலீயக பிரதானத்தை காலை, மாலை இரு வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.

  • கெட்ட கனவுகள் வராமலிருக்க சுந்தர காண்டத்தில் திரிஜடை ஸ்வப்னத்தை காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

  • தெய்வ குற்றம் நீங்க சுந்தர காண்டத்தில் காகாசுர விருத்தாந்தத்தை காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

  • ஆபத்து நீங்க யுத்த காண்டத்தில் வீபிஷண சரணாகதியை காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

  • சிறை பயம் நீங்க யுத்த காண்டத்தில் வீபிஷணன் சீதையை ஸ்ரீ ராமரிடம் சேர்த்ததை காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

  • மறு பிறவியில் சகல சுகம் பெற யுத்த காண்டத்தில் ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தை காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

  • குஷ்டம் போன்ற நோய்கள் தீர யுத்த காண்டத்தில் ராவண கிரீட பங்கத்தை காலை, மாலை இரு வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.

  • துன்பம் நீங்க யுத்த காண்டத்தில் சீதா ஆஞ்சநேய ஸம்வாதத்தை காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

  • மோட்ச பலன் கிடைக்க ஆரண்ய காண்டத்தில் ஜடாயு மோட்சத்தை காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

  • தொழிலில் இலாபம் அடைய அயோத்யா காண்டத்தில் யாத்ரா தானத்தை காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.


Wednesday, October 8, 2008

சரஸ்வதி பூஜை.

நவராத்திரியின் 9 நாள் பண்டிகையில் முக்கியமானதாக கருதப்படுவது சரஸ்வதி பூஜை.

நான்முகன் பிரம்மாவின் மனைவி சரஸ்வதி. சரஸ்வதி கல்விக்கு அதிபதி. வெண்பட்டு உடுத்தி, கைகளில் வீணையும், ஏட்டுச்சுவடியும் ஏந்தி கல்விக்கும், ஏனையகலைகளுக்கும், அதிபதியாக வெண் தாமைரையில் வீற்றிருக்கும் அம்பாள் சரஸ்வதி.




அள்ள அள்ள குறையாத கல்வி செல்வத்தை வழங்கி அருள்பவள் சரஸ்வதி. எந்த செல்வங்களையும் விட கல்விச் செல்வம் மிக அவசியமானது. இதைத்தான்நம் முன்னோர், 'கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு' என்று கூறியுள்ளனர்.

'செல்வம் செல்வோம் என்று வரும், ஆனால், அழியாது நிலைத்து நிற்பது கல்வி செல்வம்தான்' என்றும் புகழ்ந்துரைத்துள்ளனர் பெரியோர்கள்.

முற் காலத்தில் சரஸ்வதி பூஜை தினத்தன்றுதான் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் (கல்வி கற்கஅனுப்புவது) நடைபெறும்.

Saraswathi with Lakshmi and Ganeshaஅக் காலத்தில் குழந்தைகள் குருகுலம் சென்று குருவின் வீட்டில்தான் கல்வி கற்கவேண்டும். இதற்கு குருகுல வாசம் என்று பெயர்.

பெற்றோர் தங்கள் குழந்தைகளை குருவின் வீட்டிற்கு அழைத்துச் செல்வர். பெரிய தட்டில்பட்டாடை, பழம், பூ, வெற்றிலை பாக்கு ஆகியவற்றுடன் குரு தட்சணையாக பணத்தையும்வைத்து குருவிடம் கொடுப்பார்கள்.

தங்கள் மகனை கல்வி, கேள்விகளில் சிறந்தவனாக உருவாக்க வேண்டும் என்று குருவைகேட்டுக் கொள்வர்.

அன்றைய தினம் முதல் எல்லாவற்றையும் கற்று தேறும்வரை குழந்தைகள் குருவின் வீட்டில்குருகுல வாசத்தை தொடங்குவர்.

சரஸ்வதி தினத்தன்றே குரு பாடத்தை துவக்கிவிடுவார். மணலில் குழந்தையின் கையைபிடித்து முதலில் 'ஓம்' என்று எழுத வைப்பார். அதுதான் பால பாடம். முதல் பாடம்.

இன்றைய மாடர்ன் உலகில் குருகுல வாசம் கிடையாது. சரஸ்வதி பூஜையின் போதுமாணவர்களை பள்ளியில் சேர்க்கும் வழக்கமும் போய்விட்டது.

ஆனால் சில கிராமங்களில் இந்த வழக்கம் இன்னமும் மங்காமல் இருக்கிறது. சரஸ்வதிபூஜையின் போது குருவை வணங்கி தங்கள் குழந்தைகளை குருவின் திண்ணை பள்ளியில்சேர்க்கும் பழக்கம் உள்ளது.

நவராத்திரி பண்டிகை



Thanks Thatstamil.com
Durgai Amman
நவராத்திரி பண்டிகை 9 நாட்கள் நிறைவடைந்த பின் கொண்டாடப்படுவதுவிஜயதசமி.

விஜயதசமி பற்றி இரண்டு விதமான கதைகள் கூறப்படுகின்றன.

9 நாட்கள் தவமிருந்த அம்மன் விஜய தசமி தினத்தன்றுதான் மகிஷாசுரனை சம்ஹாரம்செய்து மகிஷாசுரமர்த்தினியானாள். அசுரனை அம்மன் சம்ஹாரம் செய்து ஜெயம்பெற்றதால் இந்த தினம் விஜயதசமி (ஜெயதசமி என்பது மருவி விஜயதசமியானது)என்று கொண்டாடப்படுவதாக ஒரு கதை கூறுகிறது.

மற்றொரு கதையில் அஷ்டமி தினமான துர்காஷ்டமி தினத்தன்று அம்மன்மகிஷாசுரனை சம்ஹாரம் செய்ததாகவும், தசமி தினத்தன்று மணீத்வீபம் (மூலஸ்தானம்)சென்றாள் என்றும் கூறப்படுகிறது

அநீதியை அழிக்க அவதரித்து அதை அழித்து வெற்றி பெற்று அம்மன் மணீத்வீபம்சென்ற நாள்தான் விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது என்று கூறப்படுகிறது.

Durgai Ammanதென்னகத்தில் மகிஷாசுரனை அம்மன் அழித்தாள் என்று கூறப்படுகிறது ஆனால்வடநாட்டில் அம்மன் ராவணனை அழித்தாள் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் விஜயதசமியன்று மகிஷாசுரனை கொல்லஅம்மன் அம்பு போடுவதாக கூறி விழா கொண்டாடப்படும்.

மகிஷாசுரன் பொம்மையின் தலையை அம்மன் சார்பாக அர்ச்சகர் அம்பு வீசிகொய்-வார்.

வடநாட்டில் பெரிய ராவணன் உருவ பொம்மை செய்து அதில் பட்டாசுகளை போட்டுவைப்பார்கள். பல அம்புகள் அந்த பொம்மை மீது ஏவப்படும். ஒரே ஒரு அம்பு மட்டும்துணியில் தீ வைக்கப்பட்டு நெருப்பு அம்பாக ஏவப்படும். அந்த அம்பு ராவணன்பொம்மையில் பட்டு தீ பிடித்ததும் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பட்டாசுகள் பலத்தசத்தத்துடன் வெடித்து ராவணன் பொம்மை சுக்குநூறாக வெடித்து சிதறும்.

Monday, October 6, 2008

Vidya Mala - A movement for Intelligence


Mr.M.Nirosh...
Mr.M.Niroshan-Mr.M.Nirosh...
Mr.M.Niroshan-
na


Mr.M.Niroshanna has invited you to the event 'Vidya Mala - A movement for Intelligence' on Amma Bhagavan Worldwide Youth!

Vidya Mala - A movement for Intelligence

Vidya Mala - A movement for Intelligence Time: October 14, 2008 at 8am
Location: Kathiresan Hall
Organized By: FRIENDS Oneness Movement, SriLanka

Event Description:
Vidya mala is a 21 day ritual that brings about excellence in studies and skills. During the day ritual the students are completely guided by Divine Intelligence to overcome their inner obstacles and walk their way to success.It is a ritual based on ancient technology and latest findings of Science. Following rules and regulations with sincerity would lead you one step closer to the fulfillment of your life dreams.

We are happy to inform you that we have organized a Vidiya Mala programme in Sri Lanka to help the students in achieving their excellence & to climb the ladder of success. It has been organized to held on 14th of October - Tuesday(Full moon poya day) at the Kathiresan hall Colombo 04 @ 8.30 am.

We wormely welcome all the students who are above the age of 12, especially students who are sitting for their G.C.E (O/L) exams this December, to come and take Vidya Mala and get the benefits of it & score best results in your exams with the grace & blessings of the Divine. Please be kind enough to register your names at your relevant Satsangs on coming Saturday evening; or else you may register at the entrance before 8.00 am.

For further clarifications please contact: 2734895, 2361821, 2605562, 2554909, 2365415, 0777150512, 0717341194.

Please pass this message to your FRIENDS, those who wish to excel in their Academics!

"Life without a VISION , is a journey without a Destination " - Sri Bhagavan

Best of Grace!
FRIENDS
Oneness Movement, SriLanka

www.onenesslk.org
Mr.M.Niroshanna has invited you to the event 'Vidya Mala - A movement for Intelligence' on Amma Bhagavan Worldwide Youth!

Vidya Mala - A movement for Intelligence

Vidya Mala - A movement for Intelligence Time: October 14, 2008 at 8am
Location: Kathiresan Hall
Organized By: FRIENDS Oneness Movement, SriLanka

Event Description:
Vidya mala is a 21 day ritual that brings about excellence in studies and skills. During the day ritual the students are completely guided by Divine Intelligence to overcome their inner obstacles and walk their way to success.It is a ritual based on ancient technology and latest findings of Science. Following rules and regulations with sincerity would lead you one step closer to the fulfillment of your life dreams.

We are happy to inform you that we have organized a Vidiya Mala programme in Sri Lanka to help the students in achieving their excellence & to climb the ladder of success. It has been organized to held on 14th of October - Tuesday(Full moon poya day) at the Kathiresan hall Colombo 04 @ 8.30 am.

We wormely welcome all the students who are above the age of 12, especially students who are sitting for their G.C.E (O/L) exams this December, to come and take Vidya Mala and get the benefits of it & score best results in your exams with the grace & blessings of the Divine. Please be kind enough to register your names at your relevant Satsangs on coming Saturday evening; or else you may register at the entrance before 8.00 am.

For further clarifications please contact: 2734895, 2361821, 2605562, 2554909, 2365415, 0777150512, 0717341194.

Please pass this message to your FRIENDS, those who wish to excel in their Academics!

"Life without a VISION , is a journey without a Destination " - Sri Bhagavan

Best of Grace!
FRIENDS
Oneness Movement, SriLanka

www.onenesslk.org
.