கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts

Saturday, March 7, 2009

பெண்கள் தினமும் மலையக பெண்களும்

மார்ச் 08 - மகளிர் தின வாழ்த்துக்கள்.(08.03.2009)

பெண்ணுக்குச் சொத்து கூடாதாம், காதல் சுதந்திரம் கூடாதாம். அப்படியானால் மனிதன் தன் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ரப்பர் பொம்மையா அது?

பெண்களை வீட்டுவேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்ட மடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள்.

ஒவ்வொரு பெண்ணும், தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதிபெறத் தக்கபடி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால், எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான்.
இவை பெரியாரின் கூற்றுக்கள்
இந்த கூற்றுக்கள் இன்று மகளிர் தினத்திற்காக ஒரு ஞாபக குறிப்பாக வைத்துக்கொள்ளுவோம்.

இன்று 150 ஆண்டுகளுக்கு முன் மேலைத்தேயவர்களினால் இந்தியாவிளிருந்து கோப்பித்தோட்டங்களுக்கும், தேயிலை தோட்டங்களுக்கும் கூலிகளாக கொண்டுவரப்பட்ட மக்கள் கூட்டமே இன்றும் இலங்கையின் பொருளாதரத்தில் முக்கிய பங்கை வகிப்பது யாவரும் அறிந்த உண்மைகள்.(1968 களில் இலங்கை தேசிய வருமானத்தில் 75% ) இன்றைய மகளிர் தினத்தில் அவர்கள் பற்றிய ஒரு பார்வையை உங்கள் முன் வைக்கலாம் என நினைக்கின்றேன். அதற்கு முன் இந்த பாடலையும் ஒரு முறை நினைவு கூறுவது பொருத்தமாகும்.

"கோண கோண மலை ஏறி

கோப்பி பழம் பறிக்கையிலே

ஒரு பழம் தப்பிச்சின்னு

ஒதச்சானாம் சின்ன தோர"


"ஊத்தாத அடமழையில்

ஒதறல் எடுக்குதடா - அந்த

தாத்தான் கணக்கப்புள்ள

கத்தி தொலைக்கிறானே

ஏத்தல ஏறி எறங்க முடியுமா

சீத்துபூத்தன் னெனக்கு

சீவன் வதை போகுதையோ

எத்தனை நாளைக்கிதான் - இந்த

எழவ எடுக்கிறது

வெக்கங்கெட்ட நாயிகளும்

எகத்தாளம் போடுதுன்னு

இருந்துதான் பாத்துடுவோம்"

இந்த பாடலின் வரிகள் மலையக பொண்கள் அவர்களுக்கு இழைக்கும் சுரண்டல்களுக்கு சினம்கொண்டு பாடுவதாகும்.மலையக பெண்கள் இந்த ஆண் ஆதிக்கத்தில் இருந்து இன்னும் முற்று முழுதாகா விடுப்படவில்லை எனபது குறிப்பிடகூடியவொன்று.

இவர்களின் வேலைத்தளங்களைப் பற்றி சிலவற்றை கூற வேண்டும்.

# சாதரணமாக காலை 5 மணிக்கு துயில் எழுந்து (கடும் குளிரிளும்,பனியிலும்) கனவன் உட்டப்பட பிள்ளைகளுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு தயார் செய்து பிள்ளைகள் பாடசாலைக்கு செல்ல ஒழுங்கு செய்ய‌ வேண்டும்.

# அதே நேரம் 7.30 மணியலவில் புறப்பட்டு 8.00 மணிக்கு முன் சுமார் 4 - 8 வரையான கிலோ மீற்றர் வரை நடந்தே சொல்ல வேண்டும்.

# தான் பறித்த கொழுந்துகளை தேயிலை தொழிற்சாலையில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரம் இருக்கும் பட்சத்தில் தொழிற்சாலைக்கு தானே சுமந்து வர வேண்டும்.(கற்பினி பெண்கள் இதற்கு விதிவிலகல்ல‌)

# வேலை தளங்களில் இவர்களுக்கு தேனீர் வழங்கப்படமாட்டாது(பொதுவாக வேறு அனைத்து தொழிற்சாலைகளிலும் நிறுவனங்களிலும் தேனீர் வழங்குவது குறிப்பிட தக்கது)

# வேலை தளங்களில் கழிவரைகள் மற்றும் ஓய்வறைகள் இல்லை என்பது முக்கியாமாக கவனத்தில் கொள்ள வேண்டும். (கழிவரைகள் இல்லாத வேலைத்தளம் உலகிலே இதுவொன்றாக தான் இருக்க வேண்டும்)

# மழை காலங்களில் ரப்பர் பொலித்தீன்களை தலைகளுக்கு அணிந்துக் கொண்டு பணிபுரிவார்கள். (அட்டை பூச்சி மற்று விஷ ஜந்துகளிற்கு மத்தியில்)

# முதலுதவி சலுகைகள் கிடையாது.

இவை தவிர இன்னும் ஏராளமான அநீதிகள் இழைக்கப்பட்டும் கேட்டபதற்கு யாரு முன் வராத நிலையில் தொழில் புரிகின்றார்கள்.

இப்பிரசினைகளுக்கு தீர்விற்கு எந்த அரசியல்வாதிளையும் நம்பி பிரயோசனமில்லை. இதுவரை இது போன்ற விடயங்களை எந்த மேடைகளிலும் சரி வேறு இடங்களிலும் சரி அரசியவாதிகள் பேசியதாக சரித்திரம் இல்லை.மக்கள் முன் வந்து ஒன்றுப்பட்டு போராட்டங்களை நடத்தும் வரை விடிவோ விமோசனமோ கிடையாது என்பது மட்டும் உறுதி.

அடுத்ததாக பொண்களின் கல்வியை உற்று நோக்கினால்,

ஓரளவு தற்போது கல்வியில் முன்னேற்றம் கண்டுவருகின்றன என்ற போதும் முழுமை பெறவில்லை என கூறலாம். இவர்களுக்கு கல்வியில் முன்னேற முட்டுக்கட்ட்டையாக இருப்பது பொதுவாகவே வருமானமின்னையே.
மற்றது அக்கறையின்மை, சரியான வழிகாட்டல்கள் இல்லாதமை என்று இன்னும் ஏராளமாக கூறலாம்.

அதோடு ஆசிரியர் தொழிலை தவிர வேறு துறைகளில் அவர்களின் பங்கு மிக மிக அரிதாகவே காணப்படுகின்றது. இதற்கு காரணம் வேறு அரச துறைகளில் எமக்கு இடமில்லை என்பதோடு சகோதரயின‌த்தவர்களுக்கு இணையாக போட்டி போட்டு கல்வி கற்க பாடசாலைகளில் போதிய வளமின்மை.

இன்னும் ஏராளமான அநீதிகள் மலையகத்தில் நடந்து வருகின்ற அதே வேளை வடக்கில் யுத்த சூழ்நிலையில் எம் பொண்களுக்கு ஏற்ப்பட்டு வரும் கொடுமைகளும் ஏராளம் என்பது யாவரும் அறிந்த உண்மையே. இவ்வளவு நடந்தேறிக்கொண்டு இருக்கின்ற வேலையில் எம்மால் எப்படி கூற முடியும் பெண்கள் சரிசமமாக வாழ்கின்றார்கள், பெண் அடிமை ஒழிந்து விட்டது என்று.? ஒரு பக்கம் பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் முன்னேறி வந்தாலும் கூட இன்னும் பல அடிப்படை தேவைகள் கூட அற்ற நிலையிலே கிராமிய பெண்களின் வாழ்க்கை இன்னும் தொடர்கின்றது

பச்சை பசேலாக
பசுமை நிறைந்ததாக‌
காட்சி கொடுக்கும்

மலையகம் !

அதன்

பசுமைக்குள்
ஒழிந்திருக்கும்

எம் பெண்களின்

ரணங்களும்
வேதனைகளும்

அவள்

சிந்து கண்ணீரில்

பூத்து குழுங்கும்

தேயிலைச் சொடிகள்.

கண்ணீர் வெளிவராமல்
காவல் காக்கும்

மலைகளும்

அதிகாரவர்க்கமும்.


உனது

சோக கீதத்தை

காற்றினில்
பரவ செய்திடு


உனக்கொரு

விடிவு தேடி

விழித்திரு

இல்லையேல்

இன்னும்

பல யுகங்கள்
விடியாமலே

போய்விடும்.


உனக்கு
துணையாக‌

நாம்மிருப்போம்.

சிறகு
விரித்து பறந்திடு.


- சானா.கலை
இராகலை

உழைக்கும் கரங்களே உங்களுக்கு மணமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும். உங்களுக்கு தலைவணங்குகின்றேன்.






பெரியாரின் கூற்றுக்கள் பெரியார் என்ற வலைதளத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அத்தளத்திற்க்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

பெண்கள் தினத்தைப்பற்றி தகவல்களை இங்கு பெற்றுக்கொள்ளலாம்.
ரசனைக்காரி....
internationalwomensday...


இதனோடு தொடர்புடைய கவி்தைகள் சில

தேயிலைச் செடி
சந்தியில் நடந்த கதை

மலையகம் தொடர்பான வலைப்பதிவு
நண்பரும் சக வலைப்பதிவாளருமான நிர்ஷனின் புதிய மலையகம் வலைப்பதிவு

Monday, February 16, 2009

வாழ்த்துக்கள்



எத்தனை
விடியல்கள்
உன்னை
ஏமாற்றின?

ஒவ்வொரு
விடியலிலும்
எதிர்ப்பார்ப்பு?

இன்றாவது
கிடைக்குமா
ஓர்
நற்ச்செய்தி
என்ற ஏக்கங்கள்
எத்தனை

பல பொழுதுகள்
கழிந்தாலும்
மனம் தளராத‌
என்
தோழிக்கு
இன்று
கிடைத்ததாம்
தேங்கியிருந்த‌
தொழில் நியமனம்.

உன் திறமையுடன்
பொறுமை சேர்ந்ததால்
காலம் கனிந்தது!!
வெற்றி உன்வசமானது!!

வாழ்த்துக்கள் தோழியே
இனி உன்
காலம் பொற்காலமாகட்டும்.

- சானா.கலை
இராகலை

Friday, February 13, 2009

காதல்


காதல்
ஒரு கடல்
நீந்திகடந்தவர்கள்
இன்பப்டுகிறார்கள்
மூழ்கி கவிழ்ந்தவர்கள்
துன்பப்ப்டுகிறார்கள்.
ஆயினும்
ஆயிரம்
கனவுகளோடு
ஆயிரம்
இதயங்கள்
அதன்
கரையினில்....

காதல் வாழ்க!!!
காதலர்கள் வாழ்க!!!

- சானா.கலை
இராகலை

Thursday, February 5, 2009

முரளிதரனை பாராட்டுவோமாக!!

கிரிக்கட்டின் முடிசூடா மன்னன் என்று ஒரு பந்து வீச்சாளரை அழைப்பதில் பிழை இல்லை என்றுதான் நினைக்கின்றேன்.அதுவும் ஒரு தமிழர் என்பதால் பெருமையடைகின்றேன்.முத்தையா முரளிதரன் என்ற கிரிக்கட் விளையாட்டு வீரனை தெரியாதவரே இருக்க முடியாது அந்தளவு தன் துறையில் பல சாதனைகளின் மன்னாக திகழ்கின்றார். இலங்கையை பொருத்தவரை தழிழ் ஊடகங்களும் சரி தமிழ் நிறுவனங்களும் சரி அவருக்கு சிங்கள ஊடகங்கள் கொடுத்த அளவு விளம்பரத்தை இவர்கள் கொடுக்கமை ஏனோ தெரியவில்லை.ஆரம்பகாலத்தில் அவர் சரியாக தன் தாய்மொழியான தழிழை சரியாக பேசுவதில்லை என்று பல பேர் விமர்சித்ததை காண கூடியதாக இருந்தது அதையும் தாண்டி பந்துவீச்சில் பிழை உள்ளது என்ற குற்றசாட்டும் சரவதேச மட்டத்தில் இருந்தது என்பது யாவரும் அறிந்ததே. எது எப்படியாக இருந்தாலும் காய்க்கின்ற மரத்திற்க்கு கல்லடி என்பது முரளிக்கு பொருத்தமாகவே இருந்தது. சோதனைகளை தாண்டி சாதனை படைத்த தமிழனை மன்மார்ந்து பாராட்டுவோமாக.

முரளிதரன் சிறு குறிப்பு

முழுப்பெயர் : முத்தையா முரளிதரன்
பிறப்பு ஏப்ரல் 17 1972 (வயது 36) கண்டி, இலங்கை
பாடசாலை : கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில்

முரளியின் சாதனைகளுக்கு

முர‌ளியைப்ப‌ற்றி


















Tuesday, January 20, 2009

ஜனநாயகம் மக்களால், மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது



"ஜனநாயகம் மக்களால், மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது" என்ற ஆப்ரஹாம் லிங்கனின் கருத்தை தனது கன்னி உரையில் சிக்காகோவில் வைத்து பராக் ஒபாமா நினைவுகூர்ந்தார். அதோடு வெற்றிப்பெற்றது நானல்ல அமெரிக்க மக்கள் தான் , தேர்தலில் வெற்றிப்பெற்றிருந்தாலும் ஜனநாயக கட்சியை அடையாளப்படுத்து நீல நிற கொடியாகவும், குடுயரசு கட்சியை அடையாளப்படுத்து சிவப்பு நிற கொடியாகவும் பிரிந்திராமல் நம் நாடு யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஒப் அமெரிக்காவாக இணைந்தே இருக்கும் எனவும் கூறியிருந்தார்.

இக்கூற்றுக்கு அமைவாகவே பதவியேற்ப்பு நாளா இன்று (20.01.2009) நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருந்த ஒபாமா நீல நிற சட்டையும் சிவப்பு நிற டையுமாக அவரது உடை தெரிவு அமைந்திருந்தது. எது எப்படியோ அவர் மீது நம்பிக்கை வைத்திருந்த மக்களை காப்பாற்றுவாராக!!!
உங்களுக்கு இறைவன் துணை இருக்கட்டும்!!!!!!!




மாற்றம் தேவை


வாழ்த்தி வழியனுப்புவோமாக‌!!!!!




Wednesday, December 31, 2008

பதிவுலக மூத்த பதிவாளர்களுக்கும் நண்பர்களுக்கும்


தழிழர் இனப்படுகொலை, இனத்துவேசம் தலைவிரிதாடிய போது எனக்கு சரியாக வயது ஒருமாதமே (ஜூலை இனகலவரம் 1983) பிறகு நான் வளர்ந்து அனைவருக்கும் புதுவருட வாழ்த்து தெரிவிக்கும் போதோ சரி, பத்திரிகைகளிலும், தொலைகாட்சியிளும், வானொலிகளிலும், இவர்களுடன் அரசியல் வாதிகளும்,வாழ்த்து தெரிவிப்பது இப்படிதான்." அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் சுபிட்சமும் நிறைந்த புதுவருட நல்வாழ்த்துக்கள்" இதுதான். ஒவொருவரும் சொல்லும் விதம் வேராயினும் அந்த சாந்தியும், சமாதானமும் என்ற வரிகள் கட்டாயாம் இருக்கும். இப்படி வாழ்த்து கேட்டும் சொல்லியும் பலகிய நான் இந்தவருடம் எப்படி வாழ்த்து சொல்லுறது, அதே மாதிரி தான் இன்னும். இறைவா வருகின்ற புத்தாண்டிலாவது சாந்தியும் சமாதானமும் நிலவி மிகிழ்ச்சி பொங்க பிரார்திகிறேன். வலைபதிவுலக மூத்த பதிவாளர்களுக்கும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Wednesday, December 24, 2008

இனிய நத்தார் வாழ்த்துக்கள்

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுதுகண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்


கிறிஸ்துமஸ் ' என்சொலகிறிஸ்ட்டஸமஸ்ஸஅல்லதகிறிஸ்ட்ஸமாஸஎன்சொல்லிலிருந்ததானபிறந்திருக்வேண்டுமஎன்பதும், கிறிஸ்தவ‌ர்க‌ள் முதனமுதலாகிறிஸ்துமஸவிழாவைககொண்டாடத் துவங்கியதரோமாபுரி நாட்டிலகிறிஸ்தமரித்பிறககி.பி. 336ஆமஆண்டில்தானஎன்பதபெரும்பாலாவரலாற்றஆய்வாளர்களினமுடிவு.

பைபிளிலஎந்இடத்திலும் இயேசகிறிஸ்தபிறந்தேதியைபபற்றிஎந்தததகவலுமஇல்லாததும், 'பாவப்பட்மக்களமீட்டெடுக்இறைவனினதிருமகனவசந்தகாலமதோன்றும்போதஇந்மண்ணுலகிலமகனாகபபிறப்பார், ' என்வேவசனங்களசற்றுககுழப்பத்தைததந்தாலும், 'நடு‌ங்குமகுளிரிலஎங்குமதங்இடமகிடைக்காமலசூசையுமமரியாளுமஊரினஒதுக்குப்புறமாக இருந்ஆடு மாடஅடைக்குமகொட்டிலபக்கமதங்நேரிட்டது... ' என்வேவசனங்களஅலசி ஆராயப்பட்டநான்காமநூற்றாண்டிலகிறிஸ்தவததேவாலயங்களஒன்று கூடி இயேசகிறிஸ்தபிறப்பகொண்டாடுகிவிழாவாஇந்நாட்களமாற்றிவிமுடிவசெய்தஅறிவித்தன!

முதனமுதலிலகிறிஸ்துமஸ் ஜனவரி 6ஆமதேதி கொண்டாடப்பட்டதாபழைஜூலியனநாட்காட்டி குறிப்புக்களதெரிவிக்கின்றன. ரோமாபுரி நாட்டினஅதிகாரப்பூர்வமாவிடுமுறதினமாகவும் A.D.534 ( Anno Domini என்றால் In the year of the lord ) லிருந்தஅனுசரிக்கப்பட்டதாகவுமபின்னரகிரகோரியனநாட்காட்டிப்படி 1743லிருந்தடிசம்பர் 25ஆமதேதிக்கமாற்றப்பட்டதாகவுமவரலாற்றுககுறிப்புகள் அறிவிக்கின்றது. இந்நாளஅதிகாரப்பூர்வமாஅறிவித்தவரஅன்றைபோப்பாண்டவர் ஜூலியஸ் I ஆவார்.

தகவல்:http://tamil.webdunia.com/miscellaneous/webduniaspecial08/christmas08/0812/24/1081224040_1.htm
.