கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி
Showing posts with label நினைவு தினம். Show all posts
Showing posts with label நினைவு தினம். Show all posts

Thursday, March 19, 2009

ஆர்தர் சி கிளார்க் நினைவு தினம் (19.03.2009)















(
Sir Arthur Charles Clarke, 16.12.1917 - 19.03.2008)
பிரித்தானியாவைச் சேர்ந்த ஆர்தர் சி கிளார்க் 1917 ஆம் ஆண்டு பிறந்தார். 1956 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்து குடியுரிமையைப் பெற்ற அவர், தனது இறுதிக்காலம் வரை இலங்கையிலே வாழ்ந்து வந்தார்.

2001: ஏ ஸ்பேஸ் ஒடிசி' மூலம்
அதிகளவுக்கு பிரபல்யம் பெற்ற ஆர்தர் சி கிளார்க் இங்கிலாந்தில் 1917 டிசம்பர் 16 இல் பிறந்தவர். இரண்டாம் உலக மகாயுத்தத்தின்போது பிரிட்டிஷ் றோயல் விமானப்படையின் ராடார் நிபுணராக பணிபுரிந்தார். தொடர்பாடல்களுக்கு பூமியை சுற்றிவரும் செய்மதிகளை உபயோகப்படுத்த முடியுமென முதலில் கருத்தினை முன்வைத்தவர்களில் கிளார்க்கும் ஒருவராவார். மனிதனால் சந்திரனுக்கு செல்ல முடியுமென்று 1940 களில் எதிர்வு கூறியவர் ஆர்தர் சி கிளார்க். அச்சமயம் இதனை உபயோகமற்ற கதையென சிந்தனையாளர்கள் நிராகரித்திருந்தனர்.

1969 இல் நீல் ஆம்ஸ் ரோங் சந்திரனில் இறங்கியபோது, கிளார்க்கின் புத்தி ஜீவித்தனமான வழிகாட்டுதலே சந்திரனுக்கு செல்வதற்கு தம்மை வழிநடத்தியதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

ஆர்தர் சி கிளார்க் சுமார் 100 புத்தகங்களையும் நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அநேகமாக எழுத்தாளர் என்றே அவர் நினைவு கூரப்பட்டார்.

விஞ்ஞானப்புனைகதைகளிலும் பார்க்க பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 2001: ஏ ஸ்பேஸ் ஒடிசி(2001: A space odyssey) அவருக்கு அதிக புகழை ஈட்டிக் கொடுத்தது.

இலங்கையில் அமைதி திரும்பவேண்டும் என்பதே தனது விருப்பம் என தனது இறுதி பிறந்த தினத்தை கொண்டாடிய போது அவர் கூறி இருந்தார் என்பது குறிப்பிட தக்கது.

மேலும் ஆர்தர் சி கிளார்க்ப்பற்றி படிக்க..


Wednesday, February 18, 2009

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (பெப்ரவரி 18, 1836 - ஆகஸ்ட் 16, 1886)


ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (பெப்ரவரி 18, 1836 - ஆகஸ்ட் 16, 1886) எனப் பரவலாக அறியப்படும் கதாதர் சாட்டர்ஜி 19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். இவர் விவேகானந்தரின் குருவாவார். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர். மேலதிக விபரங்களுக்கு....

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிந்தனை துளிகள்

ஒருவன் வாழ்வில் இறைவன் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற பின்னரே பிறருக்குப் போதனை செய்ய முன்வர வேண்டும். அப்போது தான் அது நல்ல பயனைப் பிறருக்குத் தரும். மனிதனைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் அவனைப் பெரிதும் பாதிக்கின்றன. அதனால் தெய்வீகப் படங்களை, நாம் இருக்குமிடத்தில் எப்போது கண்ணில் படும் வகையில் வைத்திருப்பது நல்லது. அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் நம் மனதில் அருள் உணர்வு உதிக்கத் தொடங்கும். செடி பெரிய மரமான பிறகு, அதற்கு வேலி தேவையில்லை. ஒரு யானையைக் கூட அதில் கட்டி வைக்கும் அளவிற்கு வலிமை அந்த மரத்திற்கு உண்டாகி விடும். அதைப் போல பக்குவம் உண்டான மனிதனுக்கும் உலக விஷயங்கள் எந்த இன்னலையும் உண்டாக்குவதில்லை.

இல்லற வாழ்வில் இருந்தாலும் இறையனுபூதி பெற விரும்புபவர்கள் அவ்வப்போது தனிமையை நாடிச் சென்று இறைவனுக்காக ஏங்கி அழ வேண்டும். உலக வாழ்க்கையில் இருப்பவர்கள் பலவிதமான கடமைகளால், ஆசைகளால், சூழப்பட்டிருக்கிறார்கள்; அதிலும் சாதனையின் ஆரம்ப காலத்தில் இருப்பவர்கள் பலவிதமான தடைகளைச் சந்திக்க
வேண்டியவர்களாகிறார்கள். அதனால் அவர்களின் கவனம் சிதறுகிறது

ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கதை ஒன்று

குரு ஒருவரை, அவருடைய சிஷ்யன் கேட்டான், "குருவே, இறைவனைக் காணும் வழியை
எனக்குச் சொல்லுங்கள்", என்று.

அவரும், "என்னுடன் வா, காட்டுகிறேன்", என்று கூறி, அந்த சிஷ்யனை அருகிலிருந்த
ஒரு ஏரிக்கு அழைத்துச் சென்றார்.

இருவரும் தண்ணீரில் இறங்கினர். திடீரென்று, குருவானவர், சிஷ்யனின்
தலையைப் பிடித்துத் தண்ணீருக்குள் அமிழ்த்தினார். சில நிமிடங்கள் கழித்துதான்
அவனை விடுவித்தார். மூச்சுத் திணறிக் கொண்டிருந்த சிஷ்யன், ஒருவழியாக விடுபட்டு
எழுந்து நின்றான்.

"எப்படி இருந்தது?", என்று குரு கேட்டார்.

"என்னால் மூச்சே விட முடியவில்லை. தவித்துப் போய் விட்டேன். செத்து விடுவேன்
என்றே நினைத்தேன்", என்றான் சிஷ்யன்.

"இதைப் போலவே சுவாசத்தை இழந்தாற்போல இறைவனுக்காக எப்போது தவிக்கிறாயோ, அப்போது
அவனைக் காண்பாய்", என்றார், குரு.

Saturday, January 31, 2009

நகைச்சுவை சிகரம் காலமானார்





நடிகர் நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ். கன்னட பிராமண குடும்பத்தில் 1933-செப்டம்பர் 27-ம் தேதி பிறந்தவர். நடித்த முதல் திரைப்படம் எதிர்நீச்சல்

எதிர்நீச்சல் மூலம் அறிமுகமானவர் எம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க செய்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்நீச்சலுடன் தான் வாழ்ந்தார்.
அவரது ஆத்தம் சாந்திக்கு பிரார்திக்கின்றேன்.

Friday, January 23, 2009

இராமலிங்க அடிகள் - வள்ளலார் நினைவு தினம் (1823-1874)

செவ்வண்ணம் பழுத்த தனித் திரு உருக்கண்டு எவர்க்கும் தெரியாமல் இருப்பம் எனச் சிந்தனை செய்திருந்தேன் இவ்வண்ணம் இருந்த எனைப் பிறர் அறியத் தெருவில் இழுத்துவிடுத்தது,கடவுள் இயற்கை அருட்செயலோ?

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!
பசித்திரு, தனித்திரு விழித்திரு


Thursday, January 15, 2009

கடைசிப் பயணம்


2003 - கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது. இது 7 விண்வெளி வீரர்களுடன் 16 நாட்களின் பின்னர் பூமி திரும்புகையில் வெடித்துச் சிதறியது.

தகவல்கள்

http://www.thinnai.com/?module=displaystory&story_id=40302095&format=html

Wednesday, January 14, 2009

நான் கனவு காண்கிறேன்

இன்று மார்டின் லூதர் கிங்கின் பிறந்த தினம்
வெள்ளையின மக்களின் இதயங்களைத் துளைத்த உரை, கருப்பின மக்களின் போராட்டத்தில் வெள்ளையர்களையும் பங்கேற்கச் செய்து, 1963ம் ஆண்டில்... லட்சக்கணக்கான கருப்பின மக்களைத் திரட்டி வாஷிங்டன் நோக்கி பேரணியாகச் சென்று அந்த இன மக்களுக்கு ஓட்டு போடும் உரிமை உள்ளிட்ட சம உரிமைகளும், வேலைகளும் வேண்டும் என்று கோரி ஆயுதமே இல்லாமல் போரை நடத்தி வெள்ளையர்களின் மனசாட்சியை தட்டி எழுப்பிய மகான் மார்ட்டின் லூதர் கிங் ஆற்றிய உரை நான் இன்று அவரது பிறந்த தினத்தில் பிரசுரிக்கின்றேன்.

என் நண்பர்களே.. நான் கனவு காண்கிறேன்.. நம் உடலின் நிறத்தால் இன்று நாம் இத்தனை பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். நாளையும் இந்த பிரச்சனைகள் இருக்கத் தான் போகின்றன. ஆனாலும், எனக்கு ஒரு கனவு இருக்கிறது.

நிற பேதங்களையெல்லாம் தாண்டி நாம் அனைவரும் சமம் தான் என்று ஒரு நாள் இந்த தேசம் சொல்லும்...

பல ஆண்டுகளாக அடிமைகளாக நடத்தப்பட்ட நம் மக்கள் வெள்ளை இனத்தினரோடு இதோ இந்த ஜோர்ஜிய மலைப் பகுதியில் ஒன்றாக, சகோதரர்களாக நடமாடுவார்கள்...

ஆம், என்னிடம் ஒரு கனவு இருக்கிறது.

இதோ, அநீதி உச்சகட்டத்தில் நின்று பேயாட்டம் ஆடும் இந்த மிஸிஸிபி நதிக் கரையோரம் ஒரு நாள் சுதந்திரம்.. நியாயம் என்ற சோலை பூக்கும்.

என் நான்கு குழந்தைகளும் ஒரு நாள் இந்த நாட்டில் அவர்களது நிறத்தால் எடை போடப்படாமல், அவர்களின் செயல்களால், மனதால் எடைபோடப்படுவார்கள்..

ஆம், என்னிடம் ஒரு கனவு இருக்கிறது"

கருப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடி அதற்காக துப்பாக்கிக் குண்டுக்குப் பலியான வீரன் மார்ட்டின் லூதர் கிங்கின் இந்த உரை கருப்பின மக்களை மட்டுமல்ல, வெள்ளையின மக்களின் இதயங்களையும் கண்ணீ்ர் விடச் செய்தது.

குறிப்புகள் சில
பிறந்தது : ஜனவரி 15 1929
பிறந்த இடம் : அட்லாண்டா, ஜார்ஜியா, ஐக்கிய அமேரிக்கா
இறந்தது : ஏப்ரல் 4 1968 (அகவை 39)
இறந்த இடம் : மெம்பிஸ், ஐக்கிய அமேரிக்கா
இயக்கம் : ஆப்பிரிக்க அமெரிக்கர் சமுதாய உரிமைப் போராட்டம் (1955-1968)
தொடர்புடைய நிறுவனங்கள்: Southern Christian Leadership Conference
பெற்ற பரிசுகள் : நோபல் பரிசு (1964)
: சுதந்திரத்திற்கான ஜனாதிபதி விருது (1977)
:காங்கிரஸின் தங்கப் பதக்கம் (2004)
நினைவுச் சின்னங்கள்: மார்டின் லூதர் கிங் ஜூனியர் தேசிய நினைவுச் சின்னம் (

அவரது கனவு இன்று நினைவானது!! அதுவே பராக் ஒபாம எதிர்வரும் 20ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க்கவுள்ளார். அவருக்கு வாழ்த்துக்களோடு ஓர் வேண்டுக்கோள் !! ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காய் உங்களின் செயற்ப்பாடுகள் ஆரம்பமாகட்டுமாக!!!!!!!!

தகவல்கள்
நன்றி : www.thatstamil.com

Monday, January 12, 2009

இன்று சுவாமி விவேகானந்தர் நினைவு தினம்.


சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள் சில

"மனிதனே மேலானவன். எல்லா மிருகங்களை விடவும் எல்லா தேவர்களை விடவும் உயர்ந்தவன். மனிதனை விட உயர்ந்தவர் யாருமே இல்லை."

"தனி மனிதனின் நிலை உயர்த்தப்பட்டால், தேசமும் அதன் நிறுவனங்களும் உயர்வடைந்தே தீரும்."


"தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். இவை அனைத்திற்கும் மேலாக, அன்பு வேண்டும்."

"கண்டனக் சொல் எதையுமே சொல்ல வேண்டாம். உதடுகளை மூடிக்கொண்டு உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள்"

"பலவீனத்திற்கான பரிகாரம், பலவீனத்தைக் குறித்து ஒயாது சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பது தான்."

"உங்கள் நாடு வீரர்களை வேண்டி நிற்கின்றது. வீரர்களாகுக; ஒரு பாறையைப் போல் உறுதியாக நிற்பீர்களாக. உண்மையே எப்பொழுதும் வெல்கின்றது. இந்தியா வேண்டுவது,நாட்டினரின் இரத்தக் குழாய்களிலே ஒரு புது வலிமையை ஊட்டும் புதியதொரு மின்சாரத்தீயையே, துணியுங்கள்!"

Thursday, December 11, 2008

இன்று மகாகவி பாரதி நினைவு தினம்!

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்கள் எல்லாம் சொப்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களோ
சொப்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்கள் எல்லாம் அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ

வானகமே! இளவெயிலே! மரச்சரிவே
வானகமே இளவெயிலே மரச்சரிவே
நீங்கள் எல்லாம் கானலின் நீரோ
வெறும் காட்சிப் பிழைதானோ

போனதெல்லாம் கனவினைப் போல்
புதைந்(து)தழிந்தே போனதனால்
நானும் ஒர் கனவோ
இந்த ஞாலமும் பொய்தானோ

நிற்பதுவே...

காலமென்றே ஒரு நினைவும்
காட்சி என்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ
அங்கு குணங்களும் பொய்களோ
காண்பதெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ
நானும் ஒர் கனவோ
இந்த ஞாலமும் பொய்தானோ

நிற்பதுவே...

பாரதியைப் பற்றி மேலதிக தகவல்கள்: http://www.tamilnation.org/literature/bharathy/index.htm

Friday, October 17, 2008

கவியரசு கண்ணதாசன் நினைவு தினம் - 24 - 6 - 1927 to 17-10-1981


போனால் போகட்டும் போடா -
இந்த பூமியில் நிலையாய் வழ்ந்தவர் யாரடா?
வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டால்
இந்த மண்ணில் நமக்கெ இடமேது?
வாழ்க்கை என்பது வியாபராம்
வரும் ஜனனம் என்பது வரவாகும் அதில்
மரணம் என்பது செலவாகும்



வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு - 24.6.1927, சிறுகூடல்பட்டி
பெற்றோர் - சாத்தப்பன், விசாலாட்சி
மரபு - தன வணிகர்
இயற்பெயர் - முத்தையா
உடன்பிறந்தோர் - எண்மர்
கல்வி - ஆரம்பக் கல்வி சிறுகூடல்பட்டியில்
உயர்நிலைப் பள்ளி - அமராவதி புதூர், எட்டாவது வரை
1943 - முதற் பணி - திருவொற்றியூர், அஜாக்ஸ கம்பெனி
1944 - இலக்கியப் பணி - திருமகள் ஆசிரியர்
1944 - முதற் கவிதை - முதற் கவிதை
1945/46 திரை ஒலி, மேதாவி ஆசிரியர்
1949 சண்டமாருதம் ஆசிரியர்
1949 திரைப்படத் துறை பயிற்சி
1949 -முதற் பாடல் - படம் கன்னியின் காதலி,
பாடல் கலங்காதேதிருமனமே
1949 - அரசியல் - தி.மு.கழகம், ஆரம்ப கால உறுப்பினர்
1950 - திருமணங்கள் - பொன்னழகி, பார்வதி
1952-53 - முதற்காவியம் - மாங்கனி, டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தண்டனைக் குள்ளாகிச் சிறையில் இருந்தபோது எழுதப்பட்டது
1952-53 - கதை வசனம் - இல்லற ஜோதி, சிறையில் இருந்தபோது
1954, - முதற் பத்திரிகை - தென்றல் கிழமை இதழ், தொடர்ந்து தென்றல் திரை சண்டமாருதம், மாதம் இருமுறை,
1956 முல்லை இலக்கிய மாத இதழ்
1957 - தேர்தல் - இரண்டாவது பொதுத் தேர்தலில் திருக்கோஷடியூர் தொகுதியில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வி
1957 - திரைப்படத் தயாரிப்பு - - மாலையிட்ட மங்கை
1958-59 - சிவகங்கைச்சீமை, கவலை இல்லாத மனிதன்
1960 - 61 - அரசியல் மாற்றம் - - தி.மு.கழகத்திலிருந்து விலகல், தென்றல் நாளிதழ் துவக்கம்
புதிய கட்சி -தமிழ்த் தேசியக் கட்சி - சம்பத் தலைமையில் துவக்கம்,
தென்றல் திரை நாளிதழ் துவக்கம்,
1962-63இல் காங்கிரஸில் இணைப்பு
மீண்டும் திரைப்படம் - வானம்பாடி, இரத்தத் திலகம், கறுப்புப் பணம் 1964 - 66 - அகில இந்திய காங்கிரஸ செயற்குழு உறுப்பினர்
1968-1969 - கண்ணதாசன் மாத இதழ், கடிதம் நாளிதழ்
1970 - ரஷயப் பயணம், சிறந்த பாடலாசிரியர் விருது -மத்திய, மாநில அரசுகள்
1971, 1975 - மலேஷியா பயணம்
1978 - அரசவைக் கவிஞர்
1979 - சாகித்ய அகாடமி பரிசு - சேரமான் காதலி
1979 - அண்ணாமலை அரசர் நினைவுப் பரிசு (சிறந்த கவிஞர்)
1981 - அமெரிக்கா பயணம் (டெட்ராய்ட் நகர் தமிழ் சங்க விழா
இறுதி நாட்கள் - உடல்நிலை காரணமாக 24.7.81 சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 17.10.81 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு அமரநிலை எய்தினார். 20.10.81 அமெரிக்காவிலிருந்து பொன்னுடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் 22.10.81இல் எரியூட்டப்பட்டது.
புனைபெயர்கள் - காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
குடும்பம் - இருமனைவியரும் ஒன்பது ஆண் மக்களும் ஐந்து பெண் மக்களும் உள்ளனர்.

நாவல்கள்

அவள் ஒரு இந்துப் பெண்
சிவப்புக்கல் முக்குத்தி
ரத்த புஷபங்கள்
சுவர்ணா சரஸவதி
நடந்த கதை
மிசா
சுருதி சேராத ராகங்கள்
முப்பது நாளும் பவுர்ணமி
அரங்கமும் அந்தரங்கமும்
ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி
தெய்வத் திருமணங்கள்
ஆயிரங்கால் மண்டபம்
காதல் கொண்ட தென்னாடு
அதைவிட ரகசியம்
ஒரு கவிஞனின் கதை
சிங்காரி பார்த்த சென்னை
வேலங்காட்டியூர் விழா
விளக்கு மட்டுமா சிவப்பு
வனவாசம்
அத்வைத ரகசியம்
பிருந்தாவனம்


வாழ்க்கைச்சரிதம்

எனது வசந்த காலங்கள்
எனது சுயசரிதம்
வனவாசம்
அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)



கட்டுரைகள்

கடைசிப்பக்கம்
போய் வருகிறேன்
அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
நான் பார்த்த அரசியல்
எண்ணங்கள்
தாயகங்கள்
கட்டுரைகள்
வாழ்க்கை என்னும் சோலையிலே
குடும்பசுகம்
ஞானாம்பிகா
ராகமாலிகா
இலக்கியத்தில் காதல்
தோட்டத்து மலர்கள்
இலக்கிய யுத்தங்கள்
போய் வருகிறேன்

நாடகங்கள்
அனார்கலி
சிவகங்கைச்சீமை
ராஜ தண்டனை

கவிதை நூல்கள்

கண்ணதாசன் கவிதைகள் - 6 பாகங்களில்
திரைப்படப் பாடல்கள் - 2 பாகங்களில்
பாடிக்கொடுத்த மங்களங்கள்
கவிதாஞ்சலி
தாய்ப்பாவை
ஸ்ரீகிருஷண கவசம்
அவளுக்கு ஒரு பாடல்
சுருதி சேராத ராகங்கள்
முற்றுப்பெறாத காவியங்கள்
பஜகோவிந்தம்
கிருஷண அந்தாதி,
கிருஷண கானம்



அன்புக்கோ இருவர் வேண்டும்
அழுகைக்கோ ஒருவர் போதும்
இன்பத்துக் கிருவர் வேண்டும்
ஏக்கத்துக் கொருவர் போதும்.

நன்றி : தமிழ்னேசன் இணையம்
.