கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி
Showing posts with label அறிமுகம். Show all posts
Showing posts with label அறிமுகம். Show all posts

Sunday, March 29, 2009

பட்டாம் பூச்சி விருது யாரால், எப்போ, அறிமுகப்படுத்தப்பட்டது?


என்னையும் ஒரு வலைப்பதிவாளராக மதித்து என்னை ஊக்கப்படுத்தும் விதமாக எனக்கு பட்டாம்பூச்சி விருது வழங்கினார் நண்பர் ஷி‍-நிசி. அவருக்கு நன்றின்னு சொல்லி நட்பை தூரப்படுத்த விரும்பாவிட்டாலும் இப்போதைக்கு அதை தவிர வேறு வார்த்தை என்னிடம் இல்லையென்பதால் (ஆமா புதுசா இவரு வார்த்தை கண்டுப்பிடிக்க போறாறாம் அப்பிடினு கேக்க கூடாது) அவருக்கு எனது மன்மார்ந்த நன்றிகள்.

அட சத்தியமா விருது கொடுத்தார். நம்புங்கப்பா! நம்பமுடியலையா இதே அவருது படத்தின் மேல் ஒரு கிலிக் போடுங்க, போட்டாச்சா? நம்பிட்டிங்களா?. (ம்ம்ம் எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதாயிருக்கு. முடியல!!!)
இவர்தாங்க தங்க மனசுகாரர்

இந்த பட்டாம்பூச்சி எப்படா நம்ம வீட்டுப்பக்கம் வருமென்று எவ்வளவு நாளா காத்திருந்தேன் தெரியுமா? இதே வந்துடுச்சி. எனக்கே எனக்கா.. நீ எனக்கே எனக்கானு பேக்ரவுன்ட் மீயுசிக் போகுது! (அடப்பட்டாம் பூச்சி விருதை பாத்து பாடுனது! அதுக்குள்ள வீன் கற்பனை, அய்யோ அய்யோ..) சந்தோசமா இருக்கு.

இந்த வண்ணாத்திபூச்சி விருதை தந்த நண்பர் ஷி நிசி க்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை (ஒன்னே ஒன்னானு கேக்காதிங்க) என்வென்றால் நானும் வைரமுத்துவின் கவிப்பிரியன் அவரும்தான். காதல் கவிதைகள்,
சமூக கவிதைகள், குறுங்கவிதைகள், புகைப்பட கவிதைகள்,
உறவு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள், நட்பு இப்படி பலவகையாக பிரித்து கவிதைகளை அவருடைய வலைப்பூவில் தருகின்றார். கவிதைகள் சூப்பரா இருக்குமுங்க போய் வாசித்துப்பாருங்க!

சரி வலையுலக பட்டாம்பூச்சி விருதுகளின் விதிக்கு அமைய ( பட்டாம் பூச்சி விருது யாரால், எப்போ, அறிமுகப்படுத்தப்பட்டது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்) நமக்கு பிடித்த மூன்று நண்பர்களுக்கு கொடுக்கனும். சரி நம்ம விருது கொடுத்தா யாரு வாங்குவானு ஒரு பயத்தோடு யோசித்து யோசித்து யோசித்து... (யோசித்தது போதும் நிப்பாட்டுனு சொல்லுறிங்களா?) சரி பட்டாம் பூச்சி விருதை இவர்களுக்கு நான் கொடுத்தா வாங்குவார்கள் என்ற நம்பிக்கையில் ஒரு முன் அறிவித்தல் இல்லாமலே அறிவித்துட்டேன்! நண்பர் கமல் (தமிழ் மதுரம்!), நண்பர் கவின் (கவின் பார்வையில்), நண்பர் ஸ்ரீதர்ஷன் ஆகியோருக்குதான்.

என்னது நண்பர்களே வாங்கி கொள்வீர்கள் தானே?


சரி முதலில் கமலைப்பற்றி பார்ப்போம் இவர் எனக்கு வலையுலகில் அதிக ஊக்கம் கொடுத்தவர்களில் ஒருவர். அதோடு கமலின் பதிவுகளில் எதையுமே பிரித்து பாக்க முடியாதளவிற்கு எல்லாமே சூப்பரா இருக்கும்.
அரசியல் அலசல், ஒலி நயம், ஒளிக் கீற்றுக்கள், கவிதைக் கலசம்,
பல் சுவைக் கதம்பம், ஊர்ப் புதினம், என்ற பிரிவுகளில் கலக்கி இருபார்!

கமலின் ஒரு ஸ்பெசல் என்னவென்றால் குரல் பதிவு போடுவது தான். வலையுலக நண்பர்களுடன் இணைந்து பல்வேறு விடயங்களை அலசி ஒரு குரல் பதிவா தருவது. எதிர்கால யாழ்ப்பாணம் எப்படி இருக்கும்?? என்ற தலைப்பில் நண்பர் புல்லட்டுடனும், அப்புகுட்டியுடனும் இணைந்து ஒரு குரல் பதிவு சூப்பரா இருந்தது. கேட்டுப்பாருங்க! வளங்கொழித்த தமிழும் வழக்கொழிந்த தமிழும்..! தலைப்பில் ஹேமா அக்காவுடன் இணைந்து இன்னொரு பதிவு அதுவும் சூப்பர்.

நான் கட்ட(க்) கவுணொடு குட்டி ஒன்றைக் கண்டேன்..!, தேடலும் தெறிப்பும் . எரிகின்ற எனது நகரம்! (4) நக்கலும் நளினமும்! (02)
மறைந்திருக்கும் மர்மங்கள்...!
புதுமைகள் படைக்கும் புதுவையின் கவிதைகள்! பாகம் (04...

இப்படி இன்னும் ஏராளம் இருக்கு.

நன்றியுடன் வாழ்த்துக்கள் கமல்.



இன்னும் மீதமிருக்கின்றது வாழ்வின் இரகசியங்கள் எனும் தொடங்கும் கவினின் வலைப்பதிவு கவிதகள், காதல் கவிதைகள் என்று இரு பிரிவுகள் மட்டுமே இருந்தாலும் இன்னும் பல விடயங்களை பகிர்ந்திருக்கின்றார். அடிக்கடி பதிவுகள் போடாவிட்டாலும் போடுகின்ற பதிவுகள் சூப்பரா இருக்கும். எவ்வளவு சீரியஸ்சான் விஷயத்தையும் நகைச்சுவையாக தந்து சீரியஸாக்கிடுவார்.( நான் சொல்லுவது ஏதாவது புரிஞ்சதா, புரியாவிட்டால் உடனே கவினின் பார்வைக்கு போங்க புரியும்)

அடிக்கடி புது புது முகங்களுடன் வருவார் சின்ன குழந்தாயாய் சிரிந்து கொண்டுய்ருப்பார் திடிரென்று சீரியஸ்சான முகத்துடன் இருப்பார். இப்ப குழந்தையாய் தான் இருக்காரு, ஆனா பாருங்க கவினின் ஈ மெய்ல கடவுச்சொல்லை எந்தப்படும் பாவியோ திருடிவிட்டானாம், ம்ம்ம் எதை எதையெல்லாம் திருடுராங்க பாத்திங்களா?

கவினின் பதிவுகளில் பிடித்தது பல அவைகளில் சில‌

துர்தேவதைகளால் சபிக்கப்பட்டவர்கள்,

போராளிகள் பிறப்பதில்லை….

கண் எதிரில் ஒரு சோகம்

எனக்கு பிடித்தவர்கள் (அ) என்னை பிடித்தவர்கள்

காதல், திருமணமும்

யாழ்பாணத்து இராத்திரிகள்(3)கண் எதிரில் ஒரு சோகம்

நன்றியுடன் வாழ்த்துக்கள் கவின்.



பெரிதாக சொல்ல எதுவுமில்லை பல வலைப்பூக்களை பார்த்து ஆர்வத்தால் எழுத வந்த ஒருவன் என கூறிகொண்டு வலையுலகிற்கு நுழைந்தவர்தான் நம்ம நண்பர் தர்ஷன். இவர் ஒரு விஞ்ஞான ஆசிரியர்ங்க ( நமக்கு விஞ்ஞானம் எல்லாம் அலர்ஜிக்) இது அது என வகைப்படுத்தாமல் ஒரு மிக்ஸீங்க அண்மைகாலமாக கலக்கி வருகிறார். அதுலையும் சினிமாப்பற்றிய அலசல் சூப்பராகவே இருக்கும். சொதப்புவரா கமல் என்ற பதிவு விகடனிலும் சூப்பர் ஹிட்டானது! பெரியார் மேல் ரொம்ப பிரியமானவர் என நினைக்கின்றேன் அடிக்கடி பதிவுகளில் பெரியாரை ஞாபகப்படுத்துவார்.

பெண்ணியமும் பெரியாரும் என்ற தலைப்பில் மகளிர் தினத்தன்று ஒரு அருமையான ஆக்கம் இருந்தது, ஆனாலும் அன்மைகாலமாக சினிமாப்பற்றிய பதிவுகளினால் தான் அதிகமானோர் கண்களில்ப்பட்டிருக்கார் என்று சொன்னால் மிகையில்லை. ஆனால் அவருடைய பதிவுகளில் அதைவிட அழகான ஆக்கங்கள் பல் உள்ளன்.
தமிழகச் சொந்தங்களுக்கு மலையகத்திலிருந்து ஓர் விண்ணப்பம் என்ற தலைப்பில் ஒரு அருமாயான ஆக்கம் பதிவு செய்திருந்தார். பகுத்தறிவு சிந்தனை கொண்டவர்தாங்க நம்ம தர்ஷன்? என்ன தர்ஷன் நான் சொல்வது சரியா? ஏதாவது பிழையென்றால் பக்கத்துல உள்ளவருக்கு இழுத்து மூஞ்சில குத்திடுஙக . ஹா ஹா..

தர்ஷனின் பதிவுகளில் சில,
அம்மா தமிழனக் காப்பாத்தும்மா

எல்லாப் புகழும் ரஹ்மானுக்கே

படமெடுப்பது எப்படி Dr.விஜய் கௌதம் மேனனுக்கு ஆலோசனை

தமிழா தமிழா

ரஜினி the mass

சொதப்புவரா கமல்

கவிதை போல ஏதோ ஒன்று

தமிழகச் சொந்தங்களுக்கு மலையகத்திலிருந்து ஓர் விண்ணப்பம்


நன்றியுடன் வாழ்த்துக்கள் தர்ஷன்


பட்டாம்பூச்சி விருதின் விதிப்படி உங்கள் தளத்தில் இந்த பட்டாம்பூச்சியை பறக்கவிட்டு, பட்டாம்பூச்சியை சொடிக்கினால் இந்த பதிவுக்கு வருமாறு தொடர்பு கொடுத்துவிடுங்கள். நீங்கள் உங்களுக்கு பிடித்த மூன்று நண்பர்களுக்கு இந்த விருதை அளித்திடுங்கள்.

அன்புடன்
கலை ‍- இராகலை




Saturday, February 28, 2009

100வது பதிவும் எழுத்துச் சுதந்திரமும்

இது எனது நூறாவதுப்பதிவுங்க ஏதோ விளையாட்டா எழுத ஆரம்பித்து 100 பதிவு வரை உங்களுடன் பகிர்ந்து கொண்டதே பெரிய விடயம்.வலைப்பதிவு எழுத ஆரம்பித்ததிலிருந்து எவ்வளவோ முகம் காண நல்ல நண்பர்கள். ஒவ்வொரு பதிவிற்கும் பின்னூட்டத்தின் மூலம்மும், தங்களின் வலைப்பதிவில் தொடுப்பு தந்து, என்னை தொடர்ந்து வருவது மூலமும் ஊக்கம் தந்து, பிழைகளை சுட்டிக்காட்டி வலைப்பதிவிக்கு பலம் சேர்த்து என்னை ஊக்கப்பத்திய அனைத்து நண்பர்களுக்கும் மிக பனிவான வணக்கங்களும் நன்றிகளும்.நீங்கள் தான் என்னை இவ்வளவு தூரம் அழைத்து வந்துள்ளீர்கள்.

இன்னும் எவ்வளவு காலம் தொடர்ந்து எழுத சந்தர்பங்கள் அமைகின்றதோ தெரியவில்லை முடியும் வரை தொடர்ந்துக்கொண்டே இருப்பேன்.என்னுடைய அறுவல்களை நீங்கள் சகித்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்.........

ஒவ்வொரு நாளும் சொல்லிடங்கா துன்பங்களை அனுபவிக்கும் எம்மவர்கள் நிலை கண்டு வேதனையடைவது தான் மிச்சம். ஒவ்வொரு சம்பவங்கள் நடக்கும் போதும் எவ்வளவோ எழுத தோன்றியும் எழுத முடியாமல் இருக்கும் என் நிலை கண்டு வெட்கப்படுவதைத் தவிர வேறு என்ன சொய்வது.எதுவும் சொல்லமுடியாத நிலையில் இருக்கின்றோமா அல்லது அந்த நிலைக்கு தள்ளப்பட்டோமா தெரியவில்லை. உண்மையச் சொல்லப்போனால் இணையத்தளங்களில் செய்திகளை பார்ப்பவர்களை தவிர வேறு எவருக்கும் சரியான முறையில் என்ன நடக்குது என்றே தெரியாது. வெறும் பொய்ப்பிரச்சாரங்களை தான் நம்பியிருக்கின்றன்.காலம் காலமாக காலம் பதில் சொல்லும் எனற நம்பிக்கையில் இன்னும் எவ்வளவு காலம் தான் காத்திருப்பதோ தெரியவில்லை.வீசும் காற்றும் ஆர்ப்பரிக்கும் அலையும் எப்போதும் மிகத் திறமையான மாலுமியின் பக்கமே இருக்கும் என Edward Gibbon என்ற ஆங்கில வரலாற்று ஆசிரியர் ஒருவர் கூறுவது போல காத்திருப்போம்.

எழுத்துச் சுதந்திரம்

நான்
பேனையை ஏந்தினேன்
துப்பாக்கிக்கு அறிவூட்ட‌
அவன்
துப்பாக்கியை ஏந்தினான்
பேனையை அழிக்க‌!!

நான்
உண்மையைச் சொன்னேன்
மக்களை தெளிவாக்க‌
அவன்
பொய்யைச் சொன்னான்
மக்களை மூடனாக்க!!!

நான்
சரி என்றால்
அவன்
பிழை என்பான்

நான் பிழை என்றால்
அவன்
சரி என்கின்றானே!!

இதுயென்ன‌
பேனைக்கும்
துப்பாக்கிகும் ஒரு
யுத்தமா?
ஒன்று முடியும் முன்
இன்னொன்றா? அல்லது
ஒன்றோடு இன்னொன்றையும்
முடித்துவிடும்
சதியா?

நான்
நடந்ததை சொன்னால்
பயங்கிரவாதமாம்
அவன்
நடத்துவது பயங்கரவாதம்
கேட்டால்
அழித்து விடுவான் பின்
அறிக்கை விடுவான்
அழிந்தது பயங்கரவாதம்
என்று.

- சானா.கலை
இராகலை

Wednesday, October 22, 2008

நான்,சினிமா இன்னும் பல...

இந்த சங்கிலித் தொடர் விளையாட்டுக்கு என்னையும் அழைத்து ஊக்கபடுத்தியதர்கு மிக்க நன்றி லோஷன் அண்ணா .

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
ஐந்து வயதில் நான் பார்த்த முதல் திரைப்படம் (ஜெமினி திரை அரங்கு- இராகலை) பந்தம் பாச பந்தம், ஆனாலும் அத்திரைப்படம் நினைவில் இல்லை. அதன் பிறகு நான் பார்த்தது சின்ன தம்பி திரைப்படம்.அந்த படத்தில் வரும் கவுண்டமணியின் நகைச்சுவை காட்சிகளை பார்த்து மிகவும் ரசித்தேன்.அதோடு அதில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் இன்னும் நினைவில் இருக்கும் அளவிற்கு காட்சி அமைப்புகள் இருந்தது.குறிப்பாக பிரபுவின் சிரிபிள்ளைதனமான நடிப்பு நடிப்பு சூப்பர்.


கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
அண்மையில் வெளிவந்த அர்ஜுன் நடித்த துறை திரைப்படம்.(சமந்தா திரையரங்கு- தெமட்டகொட) படம் பார்க்கும் அளவிற்கு சுமாராக இருந்தது.வழமையான அர்ஜுனை பார்க்கக்கூடியதாய் இருந்தது இமானின் இசை அவரின் பழைய இசையை நினைவூட்டி ரசிக்கும் படியாக இருந்தது. குறிப்பாக ஆயிரம் ஆயிரம் ஆசிகளை வாங்கிய வீடு இது... பாடல் இனிமை.

கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது,எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
நான் சினிமா DVD ,CD களை வாங்கி படம் பார்ப்பது கொஞ்சம் குறைவு காரணம் wwe Wrestling ல் அதிக நாட்டம் உண்டு , அதிலும் John Cena என்றால் ரொம்பவே பிடிக்கும்.
அண்மையில் டிவியில் புதுபுது அர்த்தங்கள் படம் பார்த்தேன். படத்தை விட பாடல்களை மிகவும் ரசித்தேன். "கல்யாண மாலை கொண்டாடும்......" இந்த பாடல் ரொம்பவே எனக்கு பிடிக்கும் '' சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கு சிரிக்காத நாள் இல்லையே....... '' இந்த வரி ரொம்பவே பிடிக்கும் . விழித்திருந்து படம் பார்ப்பது குறைவு. ஆனாலும் இப்படத்தை பார்த்ததற்கு விசேட காரணம் உண்டு. எனது பாடசாலை கால நண்பனான (இப்பவும்தான்) செல்வகுமார் இப்படத்தை, அவனது காதலி (முன்னைய ///இப்போது யாருன்னு சத்தியமா எனக்கு தெரியாது ) பார்க்க சொன்னதால் தேடி அலைதோம் CD கிடைக்க வில்லை. ஏன் பார்க்க சொல்லியிருபால் அந்த கேள்விக்கு விடை தேடவே இப்பொது பார்த்தேன். (பார்க்கும் போது நண்பனுக்கு SMS மூலம் நினைவு படுத்தினேன்) ஆனாலும் விடை கிடைக்கவேயில்லை. என்ன கொடுமைனு பாத்திங்களா ? Ladies are very dangerous

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?
சேது, குணா, நாயகன் , பாசமலர், சுமைதாங்கி, பருத்திவீரன், கஜனி,மொழி, அடுத்து பிரியதவரம் வேண்டும் இந்த படம் 2000 ம் வெளிவந்த போது நான் O/L எக்ஸாம் எழுத ஆயுத்தம் அதில் நெறைய பிரிவுகளை சந்தித்த போது சொல்லிலடங்காத வேதனை இருந்தது.அதோடு நான் ஒரே பாடசாலையில் 11 வருடம் படித்து பிரியும் போது , இப்ப நினைத்தாலும் அத்தருனங்கள் கண்கலங்க வைக்கும். அந்த சமயத்தில் பார்த்த படம் என்பதால் நெறயவே தாக்கியது .

உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?
இதுவரையில்லை.

தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
அவ்வளவு ஆர்வம் காட்டி வசிப்பதில்லை காரணம் தெரியவில்லை அல்லது புரியவில்லை

தமிழ் சினிமா இசை?
மனதுக்கு இனிமையான அனைத்து இசையும் மிகவும் பிடிக்கும்
குறிப்பாக இளையராஜா , வித்யாசாகர் , A.R.ரஹ்மான், யுவன் இவர்களின் இசையில் அதிக பிரியம் உண்டு.

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
மனதை தாக்கும் அளவுக்கு உள்ள படம் ஏதும் இன்னும் பார்க்கவில்லை, பார்த்த படங்களும் அப்படியில்லை.

தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவும?
இல்லவே இல்லை

தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சரியா சொல்லத்தெரியல

அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
எனக்கு சந்தோஷம் தான்.

காசு கொஞ்சம் மிச்சம்.
தியட்டர் உரிமையாளர்களின் குடும்பம் ???????????

ப்லொக்ஸும் நானும்

இந்த ப்ளொக்ஸ் பற்றி கொஞ்ச நட்ட்களுக்கு முன் என் நண்பன் ஒருவன் மூலம் தெரிந்துகொண்டேன்,அவன் கூறியது ப்ளொக்ஸ் ஒன்று கிரியேட் பண்ணிக்கொண்டு அதில் கூகுளின் விளம்பரத்தை (எட் சென்ஸ்) எட் பண்ணிகொண்டல் அதில் காசு உழைக்கலாம் என்னபதே, ஆனாலும் அதில் என்னக்கு அவ்வளவு ஈடு பாடு இருக்கவில்லை.

அதோடு பேஸ் புக்கில் வலம் வருவதில் அதிகம் நாட்டம் இருந்தது அதில் வதீஸ் வருணன் அதிகமாக தமிழ்லில் டைப் செய்திருப்பார்.நீண்ட நாட்களாகவே தமிழில் இணையத்தில் டைப் பண்ண வேண்டும் என்ற ஆவல் இருந்தது ஆனால் எனக்கு தெரியாது. அதே போல் நண்பர் சர்வேசின் "தமிழ்ப்பற்றி" க்கு ஏதாவது எழுதவேண்டும் என்ற ஆசையும் கூட.அப்போதுதான் நான் செய்த புத்திசாலியான வேலை வதீஸ்க்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன். அந்த மேசெகேக்கு பதிலில் எப்படி தமிழ் தட்டச்சி பண்ணும் முறையேய் அனுப்பினார்.கொஞ்ச கொஞ்சமாய் பழகிவிட்டேன். ஆகவே நான் இணையத்தில் தமிழ் எழுத கற்று தந்த வதீஸ்க்கு பணிவு கலந்த நன்றிகள்.

அடுத்தது நான் பலமுறை பேஸ் புக்கில் நண்பராக சேர்த்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தும் என்னை சேர்த்து கொள்ளாமல் இருந்த லோஷன் அண்ணாவின் மேல் மிகவும் (இன்னும் சேர்த்துகொள்ளவில்லை) கடுப்பாக இருந்த வேலை எனக்கு ஒரு மெயில் வந்தது லோஷன் அண்ணாவிடம் இருந்து அதில் அவருடைய ப்ளொக்ஸ் முகவரி இருந்தது, அதை க்ளிக் செய்து பார்த்தவுடன் மிகவும் சந்தோசமா இருந்தது.அதற்கு பிறகு இணையத்தில் தேடி பிடித்து பல பதிவுகளை பார்த்ததுமே அடடா இவ்வளவு நாலா வெட்டியா இருந்திருகோமே என வெட்ட்கபடவேண்டியத்ய்ட்டு, பிறகுதான் ப்ளொக்ஸ் கிரியேட் பண்ண ஆரம்பித்தேன்.
இந்த ப்ளொக்ஸ் கிரியேட் பண்ணி சில பதிவுகளை போட தூண்டிய லோஷன் அண்ணாவிற்கு மிக்க நன்றி.
அதோடு அவருடைய வலைபதிவிற்கு என்னை அழைத்திருபதில் மிக்க மகிழ்ச்சியோடு (பெருமையும் அடைகிறேன்) நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த சங்கிலித் தொடர் பதிவு மிக விரைவில் ......

லோஷன் அண்ணா அழைத்திருந்த வலை பதிவின் விபரம் பின்வருமாறு

http://loshan-loshan.blogspot.com/2008/10/blog-post_17.html
இந்த சங்கிலித் தொடர் விளையாட்டுக்கு நான் அன்பாக அழைக்கும் என் நண்பர்கள்/ வலைப்பதிவாளர்கள்
1.சஜீ(சயந்தன்)
2. வதீஸ்வருணன்
3. ஹிஷாம்
4. யாழ்தமிழ்
5. நிமல்
6.இராகலை - கலை

Saturday, October 4, 2008

அறிமுகம்

வாழ்க்கை நீரோட்டத்தில் தட்டு தடுமாறி வழிகாட்ட யாருமின்றி! சென்ற பாதை ஒன்று, செல்ல நினைத்த பாதை ஒன்று,செல்கின்ற பாதை ஒன்றாக காலத்தை வென்றிட துடிக்கும் ஒருவன்!!!!!

எழுதி வைக்கப்படாத எந்த காவியமும் நிலைப்பதில்லை என்பார்கள், அதற்காக மட்டுமே எழுதவில்லை.மனதில் ஏற்ப்படுகின்ற எண்ணங்களையும் ஏமாற்றங்களையும், கவ்லைகளையும் கண்ணீரையும், இவற்றுக்கு மேலாக அனுபவித்த சுவாரஸ்யமான விடயங்களையும், கண்ப்பார்த்தவைகளையும், காதில் கேட்டவைகளையும் நான் இரசித்தவைகளையும் நாளுப்பேருடன் பகிர்ந்து கொள்ளவேனும்கிற ஆசைதானுங்க இந்த வலைப்பதிவு.

தனக்கு கிடைக்கின்ற காற்றை தன்னிடம் வைத்துக்கொள்ளாமல் இனிமையான இசையாய் வெளிப்படுத்தி எல்லோரையும் மகிழ்விக்கும் புல்லாங்குழாய் இருக்க ஆசை.பார்க்கலாம் இந்த ஆசை எவ்வளவு நாளுக்கு நீடிக்குதுனு!!!!!!

அன்புடன்,
சானா.கலைகுமார்
இராகலை
.