கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி
Showing posts with label அரசியல் சமூகம். Show all posts
Showing posts with label அரசியல் சமூகம். Show all posts

Thursday, March 26, 2009

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்... (இலங்கை)

இன்று வீரகேசரி பத்திரிக்கையில் முதல் பக்கத்தில் உள்ள ஒரு படத்தை பார்த்த‌துமே நம்பவே முடியலங்க! ஷாக்காயிட்டேன்!

உலக நாடுகளோடு இலங்கையிலும் யுத்ததில் பாதிக்கப்பட்ட நமது சகோதரர்களுக்கு நிவாரண பொருட்களும் நிதிவுதவிகளும் சேகரித்து கொண்டிருக்கையில் மியன்மாரில் சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 22 ஆயிரம் அமெரிக்க டொலர்களை இலங்கை வழங்கிவுள்ளது, என புகைப்படத்துடன் ஒரு செய்தி. “ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்” என நினைத்திருப்பார்களே! ம்ம்ம்


சரி சந்தோசப்பட்டுக்கொண்டு பக்கங்களை திருப்பினா இடையில் சில புகைபடங்களுடன் ஒரு செய்தி. படங்கள் கீழே. படத்தின் மேல் சொடுக்கி கொஞ்ச‌ம் வாசித்து பாருங்களேன்.!!


நன்றி வீரகேசரி
http://www.virakesari.lk/VIRA/homeslide.asp



Saturday, March 7, 2009

பெண்கள் தினமும் மலையக பெண்களும்

மார்ச் 08 - மகளிர் தின வாழ்த்துக்கள்.(08.03.2009)

பெண்ணுக்குச் சொத்து கூடாதாம், காதல் சுதந்திரம் கூடாதாம். அப்படியானால் மனிதன் தன் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ரப்பர் பொம்மையா அது?

பெண்களை வீட்டுவேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்ட மடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள்.

ஒவ்வொரு பெண்ணும், தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதிபெறத் தக்கபடி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால், எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான்.
இவை பெரியாரின் கூற்றுக்கள்
இந்த கூற்றுக்கள் இன்று மகளிர் தினத்திற்காக ஒரு ஞாபக குறிப்பாக வைத்துக்கொள்ளுவோம்.

இன்று 150 ஆண்டுகளுக்கு முன் மேலைத்தேயவர்களினால் இந்தியாவிளிருந்து கோப்பித்தோட்டங்களுக்கும், தேயிலை தோட்டங்களுக்கும் கூலிகளாக கொண்டுவரப்பட்ட மக்கள் கூட்டமே இன்றும் இலங்கையின் பொருளாதரத்தில் முக்கிய பங்கை வகிப்பது யாவரும் அறிந்த உண்மைகள்.(1968 களில் இலங்கை தேசிய வருமானத்தில் 75% ) இன்றைய மகளிர் தினத்தில் அவர்கள் பற்றிய ஒரு பார்வையை உங்கள் முன் வைக்கலாம் என நினைக்கின்றேன். அதற்கு முன் இந்த பாடலையும் ஒரு முறை நினைவு கூறுவது பொருத்தமாகும்.

"கோண கோண மலை ஏறி

கோப்பி பழம் பறிக்கையிலே

ஒரு பழம் தப்பிச்சின்னு

ஒதச்சானாம் சின்ன தோர"


"ஊத்தாத அடமழையில்

ஒதறல் எடுக்குதடா - அந்த

தாத்தான் கணக்கப்புள்ள

கத்தி தொலைக்கிறானே

ஏத்தல ஏறி எறங்க முடியுமா

சீத்துபூத்தன் னெனக்கு

சீவன் வதை போகுதையோ

எத்தனை நாளைக்கிதான் - இந்த

எழவ எடுக்கிறது

வெக்கங்கெட்ட நாயிகளும்

எகத்தாளம் போடுதுன்னு

இருந்துதான் பாத்துடுவோம்"

இந்த பாடலின் வரிகள் மலையக பொண்கள் அவர்களுக்கு இழைக்கும் சுரண்டல்களுக்கு சினம்கொண்டு பாடுவதாகும்.மலையக பெண்கள் இந்த ஆண் ஆதிக்கத்தில் இருந்து இன்னும் முற்று முழுதாகா விடுப்படவில்லை எனபது குறிப்பிடகூடியவொன்று.

இவர்களின் வேலைத்தளங்களைப் பற்றி சிலவற்றை கூற வேண்டும்.

# சாதரணமாக காலை 5 மணிக்கு துயில் எழுந்து (கடும் குளிரிளும்,பனியிலும்) கனவன் உட்டப்பட பிள்ளைகளுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு தயார் செய்து பிள்ளைகள் பாடசாலைக்கு செல்ல ஒழுங்கு செய்ய‌ வேண்டும்.

# அதே நேரம் 7.30 மணியலவில் புறப்பட்டு 8.00 மணிக்கு முன் சுமார் 4 - 8 வரையான கிலோ மீற்றர் வரை நடந்தே சொல்ல வேண்டும்.

# தான் பறித்த கொழுந்துகளை தேயிலை தொழிற்சாலையில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரம் இருக்கும் பட்சத்தில் தொழிற்சாலைக்கு தானே சுமந்து வர வேண்டும்.(கற்பினி பெண்கள் இதற்கு விதிவிலகல்ல‌)

# வேலை தளங்களில் இவர்களுக்கு தேனீர் வழங்கப்படமாட்டாது(பொதுவாக வேறு அனைத்து தொழிற்சாலைகளிலும் நிறுவனங்களிலும் தேனீர் வழங்குவது குறிப்பிட தக்கது)

# வேலை தளங்களில் கழிவரைகள் மற்றும் ஓய்வறைகள் இல்லை என்பது முக்கியாமாக கவனத்தில் கொள்ள வேண்டும். (கழிவரைகள் இல்லாத வேலைத்தளம் உலகிலே இதுவொன்றாக தான் இருக்க வேண்டும்)

# மழை காலங்களில் ரப்பர் பொலித்தீன்களை தலைகளுக்கு அணிந்துக் கொண்டு பணிபுரிவார்கள். (அட்டை பூச்சி மற்று விஷ ஜந்துகளிற்கு மத்தியில்)

# முதலுதவி சலுகைகள் கிடையாது.

இவை தவிர இன்னும் ஏராளமான அநீதிகள் இழைக்கப்பட்டும் கேட்டபதற்கு யாரு முன் வராத நிலையில் தொழில் புரிகின்றார்கள்.

இப்பிரசினைகளுக்கு தீர்விற்கு எந்த அரசியல்வாதிளையும் நம்பி பிரயோசனமில்லை. இதுவரை இது போன்ற விடயங்களை எந்த மேடைகளிலும் சரி வேறு இடங்களிலும் சரி அரசியவாதிகள் பேசியதாக சரித்திரம் இல்லை.மக்கள் முன் வந்து ஒன்றுப்பட்டு போராட்டங்களை நடத்தும் வரை விடிவோ விமோசனமோ கிடையாது என்பது மட்டும் உறுதி.

அடுத்ததாக பொண்களின் கல்வியை உற்று நோக்கினால்,

ஓரளவு தற்போது கல்வியில் முன்னேற்றம் கண்டுவருகின்றன என்ற போதும் முழுமை பெறவில்லை என கூறலாம். இவர்களுக்கு கல்வியில் முன்னேற முட்டுக்கட்ட்டையாக இருப்பது பொதுவாகவே வருமானமின்னையே.
மற்றது அக்கறையின்மை, சரியான வழிகாட்டல்கள் இல்லாதமை என்று இன்னும் ஏராளமாக கூறலாம்.

அதோடு ஆசிரியர் தொழிலை தவிர வேறு துறைகளில் அவர்களின் பங்கு மிக மிக அரிதாகவே காணப்படுகின்றது. இதற்கு காரணம் வேறு அரச துறைகளில் எமக்கு இடமில்லை என்பதோடு சகோதரயின‌த்தவர்களுக்கு இணையாக போட்டி போட்டு கல்வி கற்க பாடசாலைகளில் போதிய வளமின்மை.

இன்னும் ஏராளமான அநீதிகள் மலையகத்தில் நடந்து வருகின்ற அதே வேளை வடக்கில் யுத்த சூழ்நிலையில் எம் பொண்களுக்கு ஏற்ப்பட்டு வரும் கொடுமைகளும் ஏராளம் என்பது யாவரும் அறிந்த உண்மையே. இவ்வளவு நடந்தேறிக்கொண்டு இருக்கின்ற வேலையில் எம்மால் எப்படி கூற முடியும் பெண்கள் சரிசமமாக வாழ்கின்றார்கள், பெண் அடிமை ஒழிந்து விட்டது என்று.? ஒரு பக்கம் பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் முன்னேறி வந்தாலும் கூட இன்னும் பல அடிப்படை தேவைகள் கூட அற்ற நிலையிலே கிராமிய பெண்களின் வாழ்க்கை இன்னும் தொடர்கின்றது

பச்சை பசேலாக
பசுமை நிறைந்ததாக‌
காட்சி கொடுக்கும்

மலையகம் !

அதன்

பசுமைக்குள்
ஒழிந்திருக்கும்

எம் பெண்களின்

ரணங்களும்
வேதனைகளும்

அவள்

சிந்து கண்ணீரில்

பூத்து குழுங்கும்

தேயிலைச் சொடிகள்.

கண்ணீர் வெளிவராமல்
காவல் காக்கும்

மலைகளும்

அதிகாரவர்க்கமும்.


உனது

சோக கீதத்தை

காற்றினில்
பரவ செய்திடு


உனக்கொரு

விடிவு தேடி

விழித்திரு

இல்லையேல்

இன்னும்

பல யுகங்கள்
விடியாமலே

போய்விடும்.


உனக்கு
துணையாக‌

நாம்மிருப்போம்.

சிறகு
விரித்து பறந்திடு.


- சானா.கலை
இராகலை

உழைக்கும் கரங்களே உங்களுக்கு மணமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும். உங்களுக்கு தலைவணங்குகின்றேன்.






பெரியாரின் கூற்றுக்கள் பெரியார் என்ற வலைதளத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அத்தளத்திற்க்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

பெண்கள் தினத்தைப்பற்றி தகவல்களை இங்கு பெற்றுக்கொள்ளலாம்.
ரசனைக்காரி....
internationalwomensday...


இதனோடு தொடர்புடைய கவி்தைகள் சில

தேயிலைச் செடி
சந்தியில் நடந்த கதை

மலையகம் தொடர்பான வலைப்பதிவு
நண்பரும் சக வலைப்பதிவாளருமான நிர்ஷனின் புதிய மலையகம் வலைப்பதிவு

Friday, January 2, 2009

முச்சக்கர வண்டியும் கொழும்பும்

அண்மையில் ஏற்ப்பட்ட இந்த பெட்ரோல்,எரிவாயு விலை ஏற்றம்,குறைப்பு தான் இலங்கை அரசியலில் அதிகம் இடம் பிடித்தவை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி ஒரு வார கால பகுதிக்கு பிறகு 2ரூபா விலை குறைத்தது அரசாங்கம் என்பதெல்லாம் பழைய விடயமாக மாறும் தருவாயில் அதனோடு தொடர்புடைய ஒரு விடயத்தை எழுதுகிறேன்.கடந்த வருடம் தொடர்ச்சியாக ஏற்பபட்ட பெற்றோல், எரிவாயுவின் விலையேற்றதால் தொடர்ந்து அதனோடு சேர்த்து தொடர்சியாக போக்குவரத்து கட்டணங்களும் அதிகரித்தன என்பதை இலங்கையில் யாவரும் அறிந்த உண்மையே. கடந்த ஒருமாத கால்த்திற்க்குள் ஏற்ப்பட்ட விலைகுறைபினால் அரச மற்றும் தனியார் பேருந்திற்கான கட்டண்ங்களில் விலை குறைபதாக செய்திகளூடாக அறிந்தேன்.ஆனால் இந்த முச்சக்கர வண்டியினரும் அவர்கள் இந்த எரிவாயுவின் விலையேற்றதால் தொடர்ந்து கட்டணத்தை அதிகரித்தே வந்தன, ஆனால் விலை குறைப்பின் போது அதற்கான எந்த நடவடிக்கைகளும் அதன் நடத்துனர்களும் சரி அது சார்தோரும் சரி அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காத்தது சற்று வருத்ததிற்க்குரிய விடயமே. இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி மக்களே.

இலங்கையே பொருத்த வரையில் இந்த முச்சக்கர வண்டி கட்டணங்களுக்கான சட்டத்திட்டங்கள் எதுவும் இருபதாக இதுவரை எனக்கு தெரியவிலை.( அப்படி இருப்பின் தெரிந்த்வர்கள் சொன்னால் தெரிந்துக்கொள்வேன்)

சாதாரணமாக பேருந்தில் 6 ரூபா கொடுத்து போக வேண்டிய இடத்திற்கு 80ரூபா அறவிடுகின்றன.(6 மாதத்திற்ககு முன்பு 30ரூபா அதாவது எரிப்பொருள் விலையேற்ற்த்திற்க்கு முன்) இன்னும் வெள்ளவ்த்தை, பம்பலபிட்டிய, கொள்ளுப்பிட்டிய பகுதிகளில் 100 வரை அறவிடுகின்றன். இதைப்பற்றி அவர்களிடம் கேட்டால் இரண்டு விடயங்களை முன்வைப்பனர்.
(சகோதர மொழியில்: தெல் கனாங்கீலா, அனித்தெக்க பாரவல் வன்வே கரலா வட்டேமனே என்டடோனே )
1. எரிப்பொருள் விலையேற்றம்
2. பாதைகள் அடிக்கடி மூடப்படுவது, ஒரு வழி பாதை.

ஆனால் இந்த எரிப்பொருள் குறைப்பின் பின் அவர்கள் வாயே திறப்பதில்லை
இது போன்ற பிரச்சனைகளுக்கு அதிகமாக முகம் கொடுப்பவர்கள் சாதாரன மக்களே.இங்கு நான் முழுக்குற்றத்தையும் முச்சக்கர வண்டி நடத்துனர்களுக்கு சொல்லவோ அவர்களை பொறுப்பு கூறவோ முன் வரவில்லை. காரணம் அதையே வாழ்வாதாரமாக கொண்டு நாடாத்தும் நடத்துனர்களும் உண்டு ஆகவே இதற்க்கு பொருப்பானவர்கள் ஓர் கட்டண முறையே ஒழுங்கு செய்தால் இருதரப்பிற்க்கும் அது நன்மை பயிக்கும் என்பதே என் அவா!

இலங்கை போக்குவரத்து அமைச்சர் அவர்களே இது உங்களின் கவனத்திற்க்கு!!
மனதில்ப்பட்டதை சொன்னேன் பிழையிருப்பின் அடியேனை மன்னித்து பொருத்தருள வேண்டும்.

பி.கு. : தமிழக நண்பர்கள் இந்தியாவில் உள்ள நடைமுறைகளை பின்னோட்டத்தில் கூறினால் எமது அமைச்சு ஒரு குழு அமைத்து அதனை ஆலோசிக்கும்.

Monday, December 15, 2008

அனைத்துலக தேயிலை தினம். டிசம்பர் 15

2005 ஆம் ஆண்டு புதுடில்லியில் டிசம்பர் 15 ஆம் திகதி அனைத்துலக தேயிலை தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த வருடம் இது நான்காவது தடவையாக கொண்டாடபடவிருக்கிறது.வருடம்தோறும் பல்வேறுப்பட்ட தினங்கள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.அந்த அந்த தினங்களில் பல்வேறு மட்டங்களில் அதற்கான ஞாபகார்த்த நிகழ்வுகளையோ,விழிப்புனர்ச்சி நிகழ்சிகளையோ ஏற்பாடு செய்வது வழமை.இலங்கையில் மலையக பகுதிகளில் வாழும் பெருந்தோட்ட பகுதியினரில் பெரும்பாலானர் இது போன்ற நிகழ்வுகளை அறிந்திருப்பதே மிக அரிது. அதற்க்கு காரணம் இம்மக்கள் கால காலமாக நம்பி வருகின்ற அரசியல்வாதிகளே. 21ம் நூற்றாண்டின் நவீன அடிமைகளாக மனிதநாகரீகமே வெற்க்கி த‌லை குனியும் வகையில் அடக்கியாளப்படும் மக்கள் கூட்டம் தான் இந்த மலையக மக்ககள். பிரித்தானியர்கள் லயன்களில் இவர்களை அடிமைகளாக அடைத்துப் போட்டநாளிலிருந்து இன்னும் அடிமைகளாகவே வாழ்கின்றனர். மேலாதிக்கம், பேரினவாதம் என்பனவும் தமது கோரக் கரங்களை இவர்களின் குரல்வளைகளில் தான் பரிசோதித்துப் பார்த்திருக்கின்றன. சமூகம் பற்றியும் ஜனநாயகம் பற்றியும் பேசும் ஒவ்வொருமனிதனும் மலையகத்தையும் மிருகங்களாக நடாத்தப்படும் பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் மறந்த்துவிட்டு மூச்சுவிடுவதில் கூட அர்த்தமில்லை. இம்மக்கள் கூட்டத்தை சேர்ந்தவன் என்ற வகையில் ஒன்றை மட்டும் இவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன் இனியும் எந்த அரசியல்வாதிகளையும் நம்பி அவர்களுக்கு தலைவணங்கி , அவர்களுக்கு கொடிப்பிடிக்காமல் தன்க்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற்றுக்கொள்ள தாமாகவே முன்வந்து மார்த்தட்டி பெருவார்கள் எனின் எதிர்கால சமூதாயாம் தலை நிமிர்ந்து நிற்க்கும் என்பது மட்டும் உறுதி.(நான் கனவு காண்கிறேன்)

இம்முறை அனைத்துலக தேயிலை தினத்தின் கருப்பொருள் "பெருந்தோட்டத்துறையில் பெண்களின் தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவோம்'' என்பதாக நிர்ணயிக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது எனவே புதுடில்லி பிரகடனத்தில் பெண்கள் தொடர்பான முக்கிய விடயங்களை நினைவு கூருவது இந் நேரத்தில் பொருத்தமானதாகும்.

*பெருந்தோட்டத்துறை சார்ந்த தொழில் அணியில் 50வீதத்திற்கு மேலாகவுள்ள பெண் தொழிலாளர்கள் ஓரங்கட்டப்படுவதும் தீவிர சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதும் உடனடி யாக நிறுத்தப்பட வேண்டும்.

*சமமான ஊதியம் மற்றும் வேலை நிலைமைகளுக்குப் பெண் தொழிலாளர் உரித்துடையவர்கள் ஆவதோடு சகல பேச்சுவார்த்தைகள், தீர்மானமெடுத்தல் சம்பந்தமான விடயங்களில் சமமான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும்.

*தொழிற்சங்கங்கள் முக்கூட்டு அமைப்புக்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் பால் நிலை சமத்துவம் சார்ந்ததாக இருப்பதோடு சகல தீர்மானங்கள் எடுக்கும் மட்டத்திலும் பெண்களின் தலைமைத்துவத்தை ஊக்குவிப்பதாக அமைய வேண்டும்.

*பாலியல் தொல்லைகள் போன்ற பெண்கள்சம்பந்தப்பட்ட விசேட அம்சங்கள் குறித்து கடுமையான அணுகுமுறை கையாளப்பட வேண்டும்.

*பெண் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்கள் இன உற்பத்தி உ?மைகளைக் கட்டுப்படுத்தும் உரிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

*பால் நிலை அம்சங்களை கையாளும் வகையில் அரசாங்கம் பால் நிலை பிரிவு ஒன்றை அமைத்தல் வேண்டும்.
போன்ற முக்கிய விடயங்கள் இந்த பிரகடனத்தில் உள்ளன.

இந்த தினத்தின் முக்கியதுவத்தை இம்மக்களுக்கு உணரவைக்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே என் அவா.
.