கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி
Showing posts with label சிந்தனைக்கு சில‌. Show all posts
Showing posts with label சிந்தனைக்கு சில‌. Show all posts

Wednesday, March 11, 2009

தியானம்


அன்பு,அமைதி, நிம்மதி, சந்தோஷம் போன்றவைகளை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம் என பொதுவாக நாம் வரையரை கூறலாம் என நான் நினைக்கின்றேன்.

தியானம் செய்வதற்காக பொதுவாக அமைதியான இடங்களையே தேர்ந்து எடுத்துக்கொள்வர். தியானத்தில் ஈடுபடும் போது, தான் விரும்பி வணங்கும் தெய்வத்தையோ , ஒரு பொருளையோ, அல்லது ஒரு கருத்தையோ நினைவில் நிறுத்திக்கொண்டு மன எண்ண ஓட்டங்கள் உருவாவதை தடுத்து நிறுத்துவதன் மூலம் அமைதியை அடையலாம் என்பதே தியானத்தின் நோக்கம் என எடுத்துக்கொள்ளலாம்.

மனதின் எண்ண ஓட்டத்தை துடுத்து நிறுத்துவதற்க்காக நமது ரிஷிகளும், முனிவர்களும் தியானம் செய்து வந்ததை நாம் புராணங்களில் படித்திருக்கின்றோம்.இப்படி தியானம் செய்பவர்கள் தன்னை வருத்திக்கொண்டு அதாவது ஒரு வேளை ஆகாரமருந்தி , மற்றும் நித்திரைக்கொள்ளாமல் தியானம் செய்ததாக நாம் கேள்விப்பட்டிடுப்போம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் இது எந்த வகையிலும் சரிவராத காரணியாகவே அமையும். அமைதியை தேட போய் உடலின் ஆரோக்கிய தன்மையை இழக்க வேண்டி வருமே தவிர அமைதியடைய முடையாது.மெலிந்தால் முனிவருக்கழகு என்பார்கள் ஆனால் நமக்கு எவ்வளவு பொருந்தும் என தெரியவில்லை எனக்கு.

என்னை பொருத்த வரை இப்படி எம்மை வருத்திக்கொண்டு எண்ண ஓட்டத்தை நிறுத்த வேண்டுமா என்பதே எனது கேள்வி. ஒரு அழகான பாடலையோ, இசையயோ அல்லது சம்பவங்களையோ நாம் கேட்டகும் போது பார்க்கும் போது எமது எண்ண ஓட்டம் நின்று ஓர் அமைதியான நிலைக்கு நாம் உந்தப்படுவோம். அந்த சந்தர்ப்பங்களில் நாம் எதையும் நினைப்பதில்லை எதற்கும் ஆசைப்படுவதுமில்லை.மெய் மறந்து அந்த பாடலை கேட்டேன் என நம்மில் பலர் சொல்ல கேட்டு இருக்கின்றோம், அதாவது நாம் செய்யும் எல்லா காரியங்களிலும் முழு மனதுடன் இருப்போமானால் மனதின் எண்ண ஓட்டத்தை நிறுத்த முடியும் ஆகவே எமக்கு
தனியே சென்று அமைதியான இடத்தில் தியானம் செய்ய வேண்டியிருக்காது.

ஒருவன் தன் முழு மனதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாதப்பட்சத்திலே தான் தனிமையான இடங்களுக்கு சென்று தியானம் செய்ய வேண்டி இருக்கின்றது. ஒருவன் தன் மனதை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க தனது மனதில் உள்ள எண்ண ஓட்டத்தை ஆழ்ந்து கவனித்துக்கொண்டு வர‌ வேண்டும் என கூறப்படுகின்றது. அப்படி கவனித்துக்கொள்ள சுய அறிவு அவசியாமாகும். அப்படி எமது மன எண்ண ஓட்டத்தை தெரிந்துக்கொண்டால் எம்முடைய ஆற்றலை நாமே உணர்ந்து கொள்ளலாம் அதன் மூலம் எமது புத்தி நுட்பத்தை அதிகரித்து கொள்ள முடியும்.இதன் மூலம் நாம் தெளிவான நிலையை அடையும் போது எது சரி பிழை என உணர்ந்து அதன் மூலம் அமைதியடையலாம்.

தன்னை தானே அறிய முடியாதப்பட்டச்த்தில் தான் தியானம் தேவைப்படுகின்றது அல்லது வேண்டப்படுகின்றது என கூறலாம்.
தியானம் தொடரும்......

முதல் பதிவு
தியானம்
http://ckalaikumar.blogspot.com/2009/02/blog-post_19.html

பி.கு:
## ஆதவா February 20, 2009 7:47 AM
மனதிற்குள் அமைதியை இருத்தும் நிலை, தியானம்.... ஆனால் நீங்கள் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம். உதாரணத்தீற்கு, தியானம் எப்படி செய்வது, அதன் வகைகள் (இன்னும் உண்டு) பலன்கள்... இப்படி பல எழுதியிருக்கலாம்...தியானம் செய்தவருக்குத்தான் தெரியும்... அமைதியின் முழுவடிவம்.

Sinthu February 21, 2009 8:28 PM
## அண்ணா தியானம் என்றால் என்ன? அதை தேடி பலா நாட்கள் அலைந்தவள் நான்..பலருக்கும் விளங்குவதட்காக கொஞ்சம் வரைவிலக்கணத்தைச் சொல்லுங்களேன்..

Friday, February 27, 2009

பாசகார பைய!!

கம்பீயுட்டருக்கு கொஞம் ஓய்வு கொடுத்துட்டு ஒரு 2 வருஷத்திற்க்கு முன் வெளியான குமுதம் வார இதழை புரட்டிப்பார்தத போது ஒரு குட்டி கதை கண்ணில்ப்பட்டது.வாசித்ததும் சுவாரஸ்யமாக இருந்தது. வாசித்ததே வாசித்தேன் நாலு பேரோடு பகிர்ந்துக்கொண்டால் நல்லாயிருக்குமே என்று நினைத்த கலை மறுபடியும் கம்பீயுட்டருக்கான ஓய்வை இரத்து செய்து விட்டு அந்த கதைய டைப் பன்ன ஆரபித்துவிட்டேன். சரி குமுதம் வார இதழுக்கு நன்றிய சொல்லிவிட்டு அதோட கதைக்கு சொந்தகாரருக்கும் நன்றிய சொலிட்டு கதைக்குள் போவோம்.

பாகா பை!! (கதையோட த்லைப்பூங்க)

மூன்று வருட அமெரிக்க வாசத்திற்குப் பிறகு அருண் திரும்பியிருந்தான். கை நிறைய பணம். அம்மா,அப்பா,உற்றார்,உறவினர், என்று அனைவருக்கும் ஐபோட்,டிஜிமூவிகாம், என்று ஏகப்பட்ட பரிசுகளை வழங்கி மிகிழ்வித்தான்.

"ட்ரீட் எப்போ?" என்று மாமா மகள் மாது ஆரம்பிக்க எல்லோரும் ஆர்பரிக்க "ஓகே... வருகிற சனி இரவு பிட்சா ஹாட்டில்" என்றான் அருண்.

சனிகிழமை இரவு‍ பிட்சா ஹட்!
எல்லா ஐட்டங்களையும் அமெரிக்கா ரிடர்ன் அருணே ஆர்டர் செய்வது அவன் தான் புதுப்புது விதமாக சாப்பிட்டுருப்பான் என்று முடிவாயிற்று.
"எல்லோருக்கும் ஜலபினோ சூப்.. அம்மாவுக்கு மட்டும் கேங் ஸ்வாஸா சூப்.." ஆர்டர் எடுப்பவர் குறித்துக்கொள்ள ஆரம்பித்தார்.

அப்புறம் ஸ்டார்டரில் ஹரா கபாப் லாலி 5, ஷம்மி கபாப் 5, சிஸ்பின் ரோல் வித் அவுட் கார்லிக் 5.."

"அப்புறம் மெயின் கோர்ஸில் பேஷ்வரி சனா பனீர் 4, பிட்சா டாகா டக் 3, மார்கரிட்டா 5, ரபானோ 2, வெர்ட்யுர் 2, பார்பிக்யுட் வெஜ் 2.."

மகன் ஆர்டர் செய்யும் வேகத்தைப் பார்த்து அப்பாவும் அம்மாவும் மலைத்துப் போயினர்!

வித விதமான டெஸர்ட்டுகளுடன் விருந்து முடிந்து எல்லோரும் வீடு திரும்பும்போது மணி இரவு பன்னிரண்டரை.

அம்மா சற்றே கண்ணயர்ந்த போது மணி இரவு பன்னிரண்டரை.

அம்மா சற்றே கண்ணயர்ந்து போது, அருண் வந்து எழுப்பினான்.

"அம்மா சாதம் இருக்கா.."

"ஓ இருக்கே..." அம்மா ஆச்சிரியத்துடன் மகனை பார்த்தாள்.

"அதுலே கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைச்சு ஒரு டம்ளர் குடும்மா.."

வியப்புடன் மகனுக்கு சாதத்தில் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொடுத்தாள் அம்மா.

அதை அனுபவித்துக் குடித்து விட்டு அருண் சொன்னான்

"அம்மா இப்போதான் திருப்தியா இருக்கு!!.

நன்றி குமுதம்

பி.கு: கதை மீள்பிரசுரிப்பதனால் கதைய அப்படியே டைப் பன்னியிருக்கேன். ஜே.ஜே.விமலியோட கதைய மாற்ற நமக்கு உரிமையில்லை பாருங்கோ!!

Thursday, February 19, 2009

தியானம்


ஐவகைத் தியானங்கள்

1.அன்பு தியானம்

இதில் அனைத்து உயிரினங்களின் நன்மைக்காகவும் நீ ஏங்க வேண்டும்.எதிரிகளின் மகிழ்ச்சியையும் நாட வேண்டும்.அதற்காக உனது இதயத்தை தயார்படுத்த வேண்டும்.

2. கருணை தியானம்

இதில் துன்பப்படுகின்ற உயிர்கள் அனைத்தயும் நினைத்து,அவர்களது துன்பங்களையும் துயர்களையும் கற்பனையில் நீ அனுபவிக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் மீது ஆழ்ந்த கருணையை உனது உள்ளத்தில் ஏற்படுத்த வேண்டும்.

3.ஆனந்த தியானம்

இதில் பிறர் வளம் பெறுவதை எண்ணி அவர்களின் மகிழ்ச்சியில் நீ மகிழ வேண்டும்.

4. அசுத்த தியானம்

இதில் நேர்மையற்ற செயல்களின் விளைவாக நேர்கின்ற கேடுகளையும், பாவச் செயல்கள், நோய்கள் இவற்றின் விளைவுகளையும் சிந்திக்க வேண்டும்.இன்பம் கண நேரம்தான், அதன் விளைவு எவ்வளவு ஆபத்தானது என்று நினைக்க வேண்டும்.

5.அமைதி தியானம்

இதில் அன்பு, பகைமை, அடக்குமுறை, செல்வம், வறுமை ஆகியவற்றைக் கடந்து அப்பால் செல்ல வேண்டும்.பாரபட்சமற்ற அமைதியோடும், முழுச் சமத்துவ உணர்வோடும் உன் தலைவிதியைப் பார்க்க வேண்டும்.

Wednesday, February 18, 2009

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (பெப்ரவரி 18, 1836 - ஆகஸ்ட் 16, 1886)


ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (பெப்ரவரி 18, 1836 - ஆகஸ்ட் 16, 1886) எனப் பரவலாக அறியப்படும் கதாதர் சாட்டர்ஜி 19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். இவர் விவேகானந்தரின் குருவாவார். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர். மேலதிக விபரங்களுக்கு....

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிந்தனை துளிகள்

ஒருவன் வாழ்வில் இறைவன் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற பின்னரே பிறருக்குப் போதனை செய்ய முன்வர வேண்டும். அப்போது தான் அது நல்ல பயனைப் பிறருக்குத் தரும். மனிதனைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் அவனைப் பெரிதும் பாதிக்கின்றன. அதனால் தெய்வீகப் படங்களை, நாம் இருக்குமிடத்தில் எப்போது கண்ணில் படும் வகையில் வைத்திருப்பது நல்லது. அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் நம் மனதில் அருள் உணர்வு உதிக்கத் தொடங்கும். செடி பெரிய மரமான பிறகு, அதற்கு வேலி தேவையில்லை. ஒரு யானையைக் கூட அதில் கட்டி வைக்கும் அளவிற்கு வலிமை அந்த மரத்திற்கு உண்டாகி விடும். அதைப் போல பக்குவம் உண்டான மனிதனுக்கும் உலக விஷயங்கள் எந்த இன்னலையும் உண்டாக்குவதில்லை.

இல்லற வாழ்வில் இருந்தாலும் இறையனுபூதி பெற விரும்புபவர்கள் அவ்வப்போது தனிமையை நாடிச் சென்று இறைவனுக்காக ஏங்கி அழ வேண்டும். உலக வாழ்க்கையில் இருப்பவர்கள் பலவிதமான கடமைகளால், ஆசைகளால், சூழப்பட்டிருக்கிறார்கள்; அதிலும் சாதனையின் ஆரம்ப காலத்தில் இருப்பவர்கள் பலவிதமான தடைகளைச் சந்திக்க
வேண்டியவர்களாகிறார்கள். அதனால் அவர்களின் கவனம் சிதறுகிறது

ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கதை ஒன்று

குரு ஒருவரை, அவருடைய சிஷ்யன் கேட்டான், "குருவே, இறைவனைக் காணும் வழியை
எனக்குச் சொல்லுங்கள்", என்று.

அவரும், "என்னுடன் வா, காட்டுகிறேன்", என்று கூறி, அந்த சிஷ்யனை அருகிலிருந்த
ஒரு ஏரிக்கு அழைத்துச் சென்றார்.

இருவரும் தண்ணீரில் இறங்கினர். திடீரென்று, குருவானவர், சிஷ்யனின்
தலையைப் பிடித்துத் தண்ணீருக்குள் அமிழ்த்தினார். சில நிமிடங்கள் கழித்துதான்
அவனை விடுவித்தார். மூச்சுத் திணறிக் கொண்டிருந்த சிஷ்யன், ஒருவழியாக விடுபட்டு
எழுந்து நின்றான்.

"எப்படி இருந்தது?", என்று குரு கேட்டார்.

"என்னால் மூச்சே விட முடியவில்லை. தவித்துப் போய் விட்டேன். செத்து விடுவேன்
என்றே நினைத்தேன்", என்றான் சிஷ்யன்.

"இதைப் போலவே சுவாசத்தை இழந்தாற்போல இறைவனுக்காக எப்போது தவிக்கிறாயோ, அப்போது
அவனைக் காண்பாய்", என்றார், குரு.

Wednesday, February 11, 2009

நகைசுவை முக்கியம் ஏளனம் கூடாது

நீ சிரித்துக்கொண்டு வாழும் ஒவ்வொரு நொடியிலும் உன் ஆயுளில் ஒரு நொடி அதிகரித்து செல்கின்றது என சொல்வார்கள். அதாவது எவ்வளவுக்கு, எவ்வளவு நாம் சிரித்து வாழ்கின்றோமோ அவ்வளவிற்க்கு நாமூம் நாம் சார்ந்த சமூதாயமும் நம்ம சூழவுள்ளவர்களும் மகிழ்ச்சியடைவர். சிரிப்பு எவ்வள்வு முக்கியம் என்பதுப்பற்றியெல்லாம் நாம் நிறைய படித்திருப்போம். அதில் அடுத்தவரை இழிவுப்படித்தியோ அல்லது ஏளனம் செய்து சிரித்து மகிழும் ஒரு ரகம் உண்டு. அந்த சிரிப்பு அள‌விற்க்கு அதிகமானால் சகித்துக்கொள்ள முடியாது. பாடசாலை நாட்களில் இவ்வகையான கேலிப்பேச்சுக்கள் அதிகமாக இருக்கும். அந்த கேலி பேச்சுக்கள் சில சமயம் வரம்புமீரி போய் பல விபரீதங்கள் நடந்ததும் உண்டு.

மற்றவர்களை கேலி செய்து அகம் மிகிழ்வது என்பது ஒரு உண்மையான மகிழ்ச்சியை தராது.இப்படி கேலி செய்வதால் மற்றவ்ர்கள் மீது தனக்கு உள்ள உரிமையை வெளிக்காட்டவே அதிகமானோர் கேலிப்பேச்சுக்களில் ஈடுபடுகின்றனர்.தன் உரிமையை காட்ட தன் நண்பனை மற்றவர்கள் முன்பு தலை குனிய செய்யலாமா?
அதுவும் பாடசாலை காலங்களில் இப்படிப்பட்ட கேலிப்பேச்சுக்கள் பொதுவாக சுவார்ஸ்யமாகவே இருக்கும். யாராவது ஒருத்தன் மாட்டினா போதும் அவனை கலாய்ச்சுட வேண்டியதுதான். அத நாங்க பைய்ட் ஆக்குறதுனு சொல்லுவேம். அந்த மாதிரியான கேலிப்பேச்சுக்கள் கட்டாயம் பாடசாலை காலங்களில் தேவைதான்.அப்போது தான் அந்த பசுமையான நாட்களை நாம் கண்மூடும் வரை நெஞ்சில் நிறுத்திக்கொள்ளலாம்.

பாடசாலைக்குப் பிறகு வேலை தளங்களில் இவ்வகையான கேலிப்பேச்சுக்களை வைத்துக்கொள்ளும் அது பல விபரீதங்களை உண்டுப்பன்னலாம்.பல்வேறு சமூகத்தினர் ஒன்று கூடி வேலை செய்யும் போது தன்னை மற்றவர்கள் கேலி செய்வதை விரும்ப மாட்டார்கள்.பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் வேலை செய்யும் போது மனதிற்க்கு இதமாக ஒரு நகைச்சுவை இருந்தால் நன்றாக தான் இருக்கும் அது ஒரு கேலிக்கையாக மாறாதப்பட்சத்ததில். ஒவ்வொரு தனி மனிதனும் தான் எவ்வளவு தாழ்தவனாக இருந்தாலும் ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி ஒரு மதிப்பீடு வைத்திருப்பர்.எமது கேலிப்பேச்சுக்களால் அவர்களின் அவர்களது மதீப்பீடு மாறும்ப்பட்சத்தில் மிகவும் வருத்தமடைய கூடும். மற்றவனை கவலையடைய செய்து நாம் சிரிக்க தான் வேண்டுமா? எந்த விடயத்தையும் சிரிப்புடன் சொல்வது நல்லது தான் , அது அடுத்தவரை பாதிக்காத வரை.

சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

பி.கு. ஏதோ சொல்ல வந்து ஏதோ செதப்பலா சொன்ன மாதிரி ஒரு உணர்வு.சரியா சொல்லியிருக்கேனா அப்டினு நீங்க தான் சொல்லனும்.

Wednesday, February 4, 2009

மனிதனுக்குள்ளே இருகின்ற விஷம்


"பொருத்தார் பூமி ஆள்வார்கட", "பொருமை கடலை விட பெரிது" , நல்லதோ கெட்டததோ பொருமை கொண்ட மனிதர்கள் திகைப்போ அச்சமோ கொள்ள மாட்டார்கள் அவர்கள் எப்போதுமே அமைதியாய் தான் இருப்பார்கள், என்பதெல்லாம் பெரியோர்களின் கூற்று. இப்படி இருக்கையில் தொட்ட தொன்னூறுக்கும் கோபம் கொள்பவர்களே அதிகம்.அன்றாட வாழ்க்கையில் வீட்டிலோ,பாடசாலைகளீளோ,அலுவலகங்களிளோ எத்தனையோ பேர் கோபம் கொள்வதை பார்த்திருப்போம். கோபம் வந்தவுடன் யார் எவர் என்ற வித்தியாசமே இல்லாமல் தனக்கு கிடைத்த வார்த்தைகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அள்ளி வீசிவிடுவார்கள்.


அப்படிப்பட்டவர்கள் ஒரு கனமேனும் சிந்திப்பதில்லை வார்த்தைகளின் வலியை. வார்த்தைகளால் வசைப்பாடிவிட்டு பின் வருந்துவதெல்லாம் கண்கெட்ட பின் நமஸ்காரமே, அவர்களின் வருத்ததால் பாதிக்கப்பட்டவருக்கு எந்த பிரயோசனமும் இல்லை.கோபம் இருக்கின்றவனிடம் குணம் இருக்கும் என்பதெல்லாம் வெறும் வாய்ப்பேச்சாகவே தான் இருக்கமுடியும்.இப்படிதான் நான் முன்பு வேளை செய்த நிறுவனத்தின் இயக்குனர் திடிரேன கோப்பட்டு தனது ஒரு லட்சம் பெருமதியான கையடக்க தொலைபேசியை ஓங்கி அடித்து நொருக்கி விட்டார் பிறகு அதற்க்காகவே வருந்தியும் கொண்டார்.கோபம் தீ போன்றது எரிய கூடிய பொருளை எரித்துவிட்டு பின் தானும் அணைந்து போகின்றது அதனால் எந்த பயனும் இல்லாத போது ஏன் நாம் அனாவசியமாக கோபப்படவேண்டும்.



கோபத்தால் அழிந்து போன எத்தனையோ சாம்ராஜியங்களை படித்திருக்கின்றோம் எத்தனையோ கல்விமான்கள் கோப்பத்தைப்பற்றி பல கருத்துக்களை சொல்லியும் கோபப்படுவதென்பது இன்னும் எம்மிடம் குறைந்தப்பாடில்லை, காரணம் இன்னும் புரியவில்லை. கோபம் முதலில் கோபப்ப‌டுபவனைதான் முதலில் நிலைகுலைய செய்கின்றது பின்புதான் மற்றவர்களை பாதிக்கின்றது.புகைத்தல் புற்று நோயை உண்டுப்பண்ணும் என்று தெரிந்தே புகைப்பவர்களும், கோபம் தன்னையே அழிக்கும் என்று தெரிந்தே கோபப்படுபவர்களும் அவர்களே பார்த்து சிந்தித்து நடந்து கொண்டால் தான் உண்டு. கடுமையான சொல், கோபம் போன்றவை மனிதனுடைய வீரியகுணங்களால் உருவானவை என்பார்கள் ஆகவே ஒரேடியாக அவைகளை நிறுத்த முடியாவிட்டாலும் மெல்ல மெல்ல மெல்ல முயன்றால் முடியாது என்பது கிடையாது. மனிதனுக்குள்ளே இருகின்ற விஷம் கோபம் மட்டும் தான்
கோபத்தை அன்பாலும், தீமையை நன்மையாலும், பேராசையைத் தாராள குணத்தாலும், பொய்யை உண்மையாலும் வெற்றிக்கொள்

Sunday, February 1, 2009

கெளதம புத்தரின் கேள்வி பதில்கள்

கெளதம புத்தர் ஜேத வனத்தில் தங்கியிருந்தபோது அவரிடம் கேட்ட சில கேள்விகளும் அவரின் பதில்களும்.

மிகவும் கூர்மையான வாள் எது?
கோபத்தில் கூறப்படும் வார்த்தை

மிகவும் கொடிய நஞ்சு எது?
எல்லாம் எனக்கு வேண்டும் என்கின்ற எண்ணம்

மிகவும் பெரிய தீ எது?
ஆசை

மிகவும் இருள் நிறைந்த இரவு எது?
அறியாமை

மிகப் பெரிய பலனை அடைபவன் யார்?
பிறருக்கு தருபவன்

அனைத்தையும் இழப்பவன் யார்?
பிறரிடம் பெறும், அதனை ஈடு செய்யும் வகையில் மற்றவர்களுக்கு கொடுக்காதவன்.

தோல்வி அடையாத ஆயுதம் எது?
பொறுமை

மிகச் சிறந்த ஆயுதம் எது?
ஆறிவு

மிகப்பயங்கரமான திருடன் யார்?
தீயசிந்தனை

மிக மேலான் செல்வம் எது?
தர்மம்

மிகவும் பாதுகாப்பான் புதையல் எது?
மரணமிலாப் பெருநிலை

வசிகரமானது எது?
நன்மை.







Sunday, November 2, 2008

அனுபவம்

அமெரிக்கா - வியட்நாம் போர் நடந்த சமயம்.

யுத்தம், வியட்நாம் நாட்டை நார்நாராகக் கிழித்துப் போட்டிருந்தது. வீட்டை இழந்த
மக்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள். கணவனை இழந்த மனைவி என்று நாடு முழுவதும் கண்ணீராலும் ரத்தத்தாலும் நனைந்திருந்தது. போரின் விளைவுகளைப் பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிதற்காக அமெரிக்க அரசு, இரண்டு தளபதிகளை அப்போது வியட்நாமுக்கு அனுப்பியது.

கை. கால் சிதைந்து துடிக்கும் சிப்பாய்கள், குழந்தையின் பிணத்துக்குப்
பக்கத்தில் உட்கார்ந்து கதறும் தாய்மார்கள் என்று காட்சிகளைப் பார்த்த ஒரு
தளபதியால் இந்தச் சோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை தற்கொலை செய்து கொண்டு. அவர் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்

இந்தத் தளபதி பார்த்த, அதே காட்சிகளை அடுத்த தளபதியும் பார்த்தார்.. பார்த்த
பிறகு தனக்கிருந்த சின்னச் சின்னக் கவலைகளெல்லாம் இதற்கு முன் ஒன்றுமே இல்லை என்றாகி விட்டது அவருக்கு. ஊர் திரும்பியதும் அவர், 'கொடுத்த கடன் திரும்பி வரவில்லையே.. சொந்தமாக கார் வாங்க முடியவில்லையே..' என்பது போன்ற தினப்படிக் கவலைகளில் இருக்கும் மனிதர்களிடம்,. வியட்நாம் மக்களின் அவதிகளை எடுத்துச் சொன்னார். மக்கள் மனமுருகிக் கேட்டார்கள். அதன் பிறகு வியட்நாம் அனுபவம் பற்றிப் பேசச் சொல்லி இந்தத் தளபதிக்கு நிறைய அழைப்பு இதை வைத்தே அவர் பெரிய பணக்காரராகி விட்டார்

ஒரு தளபதி தற்கொலை செய்து கொள்கிறhர். அடுத்தவரோ, தனக்கிருந்த பிரச்னைகளையே மறந்து, மற்றவர்களின் பிரச்னைகளையும் மறக்கடிக்கிறhர். ஆனால். அடிப்படையில் இருவரும் பார்த்த காட்சிகள் ஒன்றுதான்.

இதே மாதிரியே இன்னொரு உதாரணத்தைச் சொல்லிவிட்டு விஷயத்துக்கு வருகிறேன்

அது ஷூ தயாரிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம். தனது கம்பெனியின் ஷூக்களுக்கு குறிப்பிட்ட ஓர் ஆப்பிரிக்க நாட்டில் எவ்வளவு 'டிமாண்ட்' இருக்கிறது என்று தெரிந்து கொள்ள கம்பெனி முதலாளி அந்த நாட்டுக்கு ஒரு மேனேஜரை அனுப்பினார். போன வேகத்திலேயே தனது நாட்டுக்குப் பறந்து வந்த மானேஜர், 'அந்த நாட்டில் நாம் ஷூக்களையே விற்க முடியாது..' என்று ரிப்போர்ட் கொடுத்தார்* 'ஏன்..?' என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்.. 'அந்த நாட்டில் யாருமே ஷூ அணிவதில்லை'முதலாளி, 'முடியாது' என்ற வார்த்தையை அத்தனை சுலபமாக ஏற்றுக் கொள்ளும் ரகம் கிடையாது.அதே ஆப்பிரிக்க நாட்டுக்கு இன்னொரு மானேஜரை அனுப்பினார். அந்த நாட்டுக்குப் போய் ஸ்டடி செய்த இரண்டாவது மானேஜர் சந்தோஷத்தில் துள்ளிக் கொண்டு முதலாளியின் அறைக்குள் ஓடி வந்து சொன்னார்- 'நமது கம்பெனியின் ஷூக்களுக்கு
அங்கே மிகப் பெரிய மார்க்கெட் இருக்கிறது'

'எப்படி..?' என்று அவரிடம் முதலாளி கேட்டார் அதற்கு இரண்டாவது மானேஜர் சொன்ன
பதில்.. 'அந்த நாட்டில் யாருமே ஷூ அணிவதில்லை'

இதிலிருந்து நாம் படிக்கவேண்டிய பாடம் இதுதான் ஒவ்வொரு மனிதனும் அலுவலகம்,. வியாபாரம், வீடு என்று வகைவகையான சந்தர்ப்பங்களில் விதவிதமான அனுபவங்களுக்கு ஆட்படுகிறhன் ஆனால். என்னைப் பொறுத்தவரை, எல்லா அனுபவங்களையும் இரண்டே வகையாகத்தான் பிரிக்க முடியும்.ஆட்படும் அனுபவம் எதுவாக இருந்தாலும், அதிலிருந்து ஏதாவது ஒரு பாடம் படிக்க வேண்டும் அது - சிறப்பான அனுபவம் எந்த அனுபவத்திலிருந்து அவன் பாடம் எதுவுமே கற்றுக் கொள்ளவில்லையோ, அது - மோசமான அனுபவம்மின்சார விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், தனது முதல் முயற்சியிலேயே வெற்றியைத் தொட்டு விடவில்லை. ஏற்க்குறைய ஆயிரம் சோதனைகளுக்குப் பிறகுதான் அவர் 'பல்ப்' கண்டுபிடித்தார். 'நீங்கள் ஆயிரம் சோதனை செய்தீர்கள்.. அதில் 999 சோதனைகள் தோல்வியடைந்தன. ஒன்றே ஒன்றுதான் வெற்றி பெற்றது இல்லையா..?' என்று அவரிடம் யாரோ ஒருமுறை கேட்டார்கள,; அதற்கு எடிசன் சொன்னார் -

'முதல் 999 சோதனைகளிலும் நான் எதுவுமே கண்டுபிடிக்கவில்லை என்று யார்
சொன்னது..? ஒரு பல்ப்பை உருவாக்கத் தவறாக முயற்சி செய்வது எப்படி..? என்று இந்த
999 சோதனைகளிலிருந்து நான் கற்றுக் கொண்டேனே என்றாராம்

நன்றி கல்யாண்ஜி

Thursday, October 9, 2008

தன்நம்பிகை

கரைகளே...
நெருப்பாய் இருந்தால்
நதிக்கொன்றும்
நஷ்டம் இல்லை...
நண்பர் உனக்கு
நம்பிக்கை இருந்தால?
.