கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Sunday, October 12, 2008

தேன்கூடு-தமிழோவியம் டிசம்பர் மாதப் போட்டிக்கான குறும்பு தலைப்பிலான சிறுவர் இலக்கியம்.

நன்றி Blogger "சும்மா டைம்பாஸ் மச்சி"!(மோகனகிருஷ்ணகுமார்)

ஒரு ஊர்ல ஐஸ்க்ரீம், தக்காளி, வெங்காயம் மூணும் ப்ரெண்ட்ஸா இருந்துச்சாம். மூணு பேரும் எங்கே போனாலும் ஒண்ணாவே போவாங்க. ஒருத்தருக்கு ஏதாவதுன்னா மத்த ரெண்டு பேரும் துடிச்சுப் போவாங்க. இவங்க ப்ரெண்ஷிப்ப பாத்து ஊரே மூக்கு மேல விரல வெச்சதாம்.

ஒரு முறை பீச்சுக்கு போவணும்னு ஐஸ்க்ரீம் ஆசைப் பட்டுச்சாம். தக்காளிக்கும், வெங்காயத்துக்கு அது புடிக்கல. "நீ பீச்சுக்கு போனா குளிப்பே. உனக்கு ஜலதோஷம் புடிச்சுக்கும், உன் உடம்புக்கும் அது நல்லதில்லன்னு" தக்காளியும், வெங்காயமும் சொல்லிச்சாம். ஐஸ்க்ரீம் மூஞ்சத் தொங்கப் போட்டுக்கிட்டு ரெண்டுநாளா ப்ரெண்ட்ஸ் கிட்டே பேசாம இருந்திச்சாம்.

"இதென்னடா தொல்லையாப் போச்சுன்னு" சொல்லிட்டு தக்காளியும், வெங்காயமும் பீச்சுக்கு போவ சம்மதம் தெரிவிச்சிச்சாம். சரின்னு மூணு பேரும் மெரினா பீச்சுக்கு வந்திருக்காங்க. எவ்வளவு சொல்லியும் கேக்காம ஐஸ்க்ரீம் பீச்சுல குளிக்கணும்னு அடம் புடிச்சிருக்கான். தக்காளியும், வெங்காயமும் கவலையா பார்த்திருக்காங்க. என்னா சோகம்! பீச்சுல குளிச்ச ஐஸ்க்ரீம் அப்படியே கரைஞ்சுப் போயி செத்துப் போயிட்டான். தக்காளியும், வெங்காயமும் அங்கேயே அழுதுப் புரண்டாங்க.

போலிஸ்லே கம்ப்ளையண்ட் கொடுத்துட்டு பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிச்சிட்டு தக்காளியும், வெங்காயமும் வீட்டுக்கு கிளம்பினாங்க. ரோடு கிராஸ் பண்ணுறப்போ கண்ண மூடிக்கிட்டு வந்த தண்ணி லாரி ஒண்ணு இவங்க மேல மோதிச்சி. வெங்காயம் தூக்கி வீசப்பட்டான். துரதிருஷ்ட வசமா தக்காளி டயருக்கு கீழே மாட்டி நசுங்கி செத்துப் போயிட்டான். வெங்காயத்துக்கு அழுகை அழுகையா வந்தது. அழுது புலம்பினான். ஆருயிர் நண்பர்கள் ரெண்டு பேரும் செத்துப் போனதை நெனைச்சு அவனுக்கு பயங்கர சோகம்.

வீட்டுக்கு போயி யோசிச்சிப் பார்த்தான். ஐஸ்க்ரீம் செத்ததுக்காக தக்காளியும், அவனும் கண்ணீர் விட்டு அழுதாங்க. தக்காளி செத்ததுக்காக இவன் அழுதான். இவன் செத்தா நாளைக்கு யார் அழுவா? வெங்காயத்துக்கு கடவுள் மேல கோவம் கோவமா வந்தது. தன்னை மட்டும் நிர்க்கதியா விட்டுட்டு நண்பர்களைக் கூட்டிக்கிட்டாரேன்னு. நேரா கடவுள் கிட்டேயே போயி நியாயம் கேட்டுடலாம்னு முடிவு பண்ணினான்.

சிவபெருமானைப் போயி கைலாயத்துலே வெங்காயம் சந்திச்சான். சிவன் "என்னய்யா வெங்காயம்? என்ன மேட்டருன்னு" கேட்டாரு. வெங்காயம் இதுமாதிரி சொன்னான். "என் நண்பர்கள் ஒவ்வொருத்தரா செத்துப் போயிட்டாங்க. அவங்க செத்ததுக்கெல்லாம் நான் அழுதேன். நாளைக்கு நான் செத்தா யார் அழுவா?" என்று கேட்டான்.

உடனே சிவன் சிரித்தபடி, "நீ யாருடா "வெங்காயம்", நீ செத்தேன்னா ஊரே அழுவும்டா. அதுமாதிரி ஒரு வரம் தர்றேன்.எதுக்கு கவலைப்படறே?" என்று கேட்டார். வெங்காயம் மனத்திருப்தியுடன் ஊருக்கு கிளம்பினான்.

அன்றிலிருந்து வெங்காயத்தை அருவாமனையில் அரிந்தாலோ அல்லது உரித்தாலோ மனிதர் கண்களில் நீர் வருவது வழக்கமாயிற்று. சிவபெருமானின் குறும்பான வெங்காயத்துடனான திருவிளையாடலால் இன்று சமையலறையில் நாம் கண்ணீர் சிந்தவேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது :-)

No comments:

.