கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Saturday, January 10, 2009

பாமியன் புத்தர் சிலைகலைப்பற்றிஎனக்கு வந்த மின்னஞ்சலில் வந்த இந்த படங்களை பார்த்ததுமே ஆச்சிரியமாக இருந்த்து என்னடா நடந்த்தது புத்தபகவானுக்கு என்ற. ஆச்சிரியத்துக்கு காரணம் என்னனு பாத்திங்கனா இத்ற்க்கு முன்பு இந்த படத்தை நான் பார்த்ததில்லை மற்றது எமது இலங்கை திரு நாட்டில் புத்தபகவான் சந்திக்கு சந்தி செழிப்புடன் இருபாரே என்பதுதாங்க.
என்ன நடந்தது என அலைசிபார்த்தில் கிடைத்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். அதுதாங்க பாமியன் புத்தர் சிலைகலைப்பற்றி

பாமியன் புத்தர் சிலைகள் எனப்படுவன, மத்திய ஆப்கனிஸ்தானின் ஹசாரஜாத் பகுதியில் உள்ள பாமியன் பள்ளத்தாக்கில், மலைச் சரிவுகளில் செதுக்கப்பட்டிருந்த இரு பாரிய புத்தர் சிலைகளைக் குறிக்கும்.

இஸ்லாமிய ஷாரியாச் சட்டத்தின் படி சிலைகள் தடை செய்யப்பட்டு இருப்பதாகக் கூறி, தலிபான்களின் தலைவரான முல்லா முகம்மத் ஓமார், ஆணையி்ன்ப்படி தலிபான் அரசு 2001 ஆம் ஆண்டில் இச் சிலைகளை வெடிவைத்துத் தகர்த்து விட்டதாக சொல்லப்படுகிறது.

இதன் வரலாறை கொஞ்சம் பாக்கலாமே!

பாமியன், இந்தியாவின் காந்தார அரசின் கீழ் இருந்தது. இது, கி.பி பதினோராம் நூற்றாண்டு வரை, சீனாவின் சந்தைகளையும், மேற்காசியப் பகுதிகளையும் இணைத்த பட்டுப் பாதையில் அமைந்திருந்தது. இவ்விடம், பல இந்து, பௌத்த துறவி மடங்களின் அமைவிடமாக இருந்ததுடன், சமயம், மெய்யியல், இந்திய-கிரேக்கக் கலை ஆகியவற்றின் மையமாகவும் விளங்கியது. இரண்டாம் நூற்றாண்டு முதல், ஒன்பதாம் நூற்றாண்டில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பு நிகழும் வரை இப்பகுதி ஒரு புத்த சமயத் தலமாக விளங்கியதாம்.

இப்பகுதி மடங்களில் வாழ்ந்து வந்த புத்த சமயத் துறவிகள் மலைச் சரிவுகளில் சிறிய குகைகள் அமைத்து.தங்கள் குகைகளைப் புத்தர் சிலைகளாலும், ஒளிர் நிறங்கள் தீட்டப்பட்ட சுவரோவியங்களாலும் அழகூட்டியிருந்தனர். இவற்றுள் முதன்மையானவை பாரிய, நிற்கும் புத்தர் சிலைகளான வைரோசனர் சிலையும், சாக்கியமுனி சிலையும் ஆகும். இவற்றுள் முதல் சிலை 55 மீட்டர்களும் அடுத்தது 37 மீட்டர்களும் உயரம் கொண்டவை.

11 ஆம் நூற்றாண்டில் மேற்கு இந்தியாவின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தானையும் கஜினி முகமது கைப்பற்றியபோது, துறவி மடங்களும், பிறவும் கொள்ளையிடப்பட்டு அழிக்கப்பட்ட போதும், இவ்விரு புத்தர் சிலைகளையும், சுவரோவியங்களையும் எதுவும் செய்யவில்லையாம்.

மார்ச் 2001 முதலாக, டைனமைட்டு வெடி பொருள்களைப் பயன்படுத்திப் பல வாரங்களாக உடைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது பல படிகளாக இடம்பெற்றது. முதலில், விமான எதிர்ப்புப் பீரங்கிகளையும், கனரகப் பீரங்கிகளையும் பயன்படுத்தி சிலைகளைத் தாக்கினர். பின்னர் தாங்கி எதிர்ப்புக் கண்ணிவெடிகளை அடிப்பகுதியில் வைத்து வெடிக்க வைத்தனர். மேலும் அப்பகுதி மக்களில் சிலரை மலை மீது ஏற்றி சிலைகளில் ஏற்கெனவே ஏற்பட்டிருந்த பிளவுகளில் வெடிபொருள்களைப் பொருத்தி வெடிக்கவைத்தனர்.

புத்தபகவானுக்கே இப்படியொரு நிலைமை ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
Post a Comment
.