கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Thursday, February 5, 2009

முரளிதரனை பாராட்டுவோமாக!!

கிரிக்கட்டின் முடிசூடா மன்னன் என்று ஒரு பந்து வீச்சாளரை அழைப்பதில் பிழை இல்லை என்றுதான் நினைக்கின்றேன்.அதுவும் ஒரு தமிழர் என்பதால் பெருமையடைகின்றேன்.முத்தையா முரளிதரன் என்ற கிரிக்கட் விளையாட்டு வீரனை தெரியாதவரே இருக்க முடியாது அந்தளவு தன் துறையில் பல சாதனைகளின் மன்னாக திகழ்கின்றார். இலங்கையை பொருத்தவரை தழிழ் ஊடகங்களும் சரி தமிழ் நிறுவனங்களும் சரி அவருக்கு சிங்கள ஊடகங்கள் கொடுத்த அளவு விளம்பரத்தை இவர்கள் கொடுக்கமை ஏனோ தெரியவில்லை.ஆரம்பகாலத்தில் அவர் சரியாக தன் தாய்மொழியான தழிழை சரியாக பேசுவதில்லை என்று பல பேர் விமர்சித்ததை காண கூடியதாக இருந்தது அதையும் தாண்டி பந்துவீச்சில் பிழை உள்ளது என்ற குற்றசாட்டும் சரவதேச மட்டத்தில் இருந்தது என்பது யாவரும் அறிந்ததே. எது எப்படியாக இருந்தாலும் காய்க்கின்ற மரத்திற்க்கு கல்லடி என்பது முரளிக்கு பொருத்தமாகவே இருந்தது. சோதனைகளை தாண்டி சாதனை படைத்த தமிழனை மன்மார்ந்து பாராட்டுவோமாக.

முரளிதரன் சிறு குறிப்பு

முழுப்பெயர் : முத்தையா முரளிதரன்
பிறப்பு ஏப்ரல் 17 1972 (வயது 36) கண்டி, இலங்கை
பாடசாலை : கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில்

முரளியின் சாதனைகளுக்கு

முர‌ளியைப்ப‌ற்றி


Post a Comment
.