கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Wednesday, October 8, 2008

நவராத்திரி பண்டிகைThanks Thatstamil.com
Durgai Amman
நவராத்திரி பண்டிகை 9 நாட்கள் நிறைவடைந்த பின் கொண்டாடப்படுவதுவிஜயதசமி.

விஜயதசமி பற்றி இரண்டு விதமான கதைகள் கூறப்படுகின்றன.

9 நாட்கள் தவமிருந்த அம்மன் விஜய தசமி தினத்தன்றுதான் மகிஷாசுரனை சம்ஹாரம்செய்து மகிஷாசுரமர்த்தினியானாள். அசுரனை அம்மன் சம்ஹாரம் செய்து ஜெயம்பெற்றதால் இந்த தினம் விஜயதசமி (ஜெயதசமி என்பது மருவி விஜயதசமியானது)என்று கொண்டாடப்படுவதாக ஒரு கதை கூறுகிறது.

மற்றொரு கதையில் அஷ்டமி தினமான துர்காஷ்டமி தினத்தன்று அம்மன்மகிஷாசுரனை சம்ஹாரம் செய்ததாகவும், தசமி தினத்தன்று மணீத்வீபம் (மூலஸ்தானம்)சென்றாள் என்றும் கூறப்படுகிறது

அநீதியை அழிக்க அவதரித்து அதை அழித்து வெற்றி பெற்று அம்மன் மணீத்வீபம்சென்ற நாள்தான் விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது என்று கூறப்படுகிறது.

Durgai Ammanதென்னகத்தில் மகிஷாசுரனை அம்மன் அழித்தாள் என்று கூறப்படுகிறது ஆனால்வடநாட்டில் அம்மன் ராவணனை அழித்தாள் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் விஜயதசமியன்று மகிஷாசுரனை கொல்லஅம்மன் அம்பு போடுவதாக கூறி விழா கொண்டாடப்படும்.

மகிஷாசுரன் பொம்மையின் தலையை அம்மன் சார்பாக அர்ச்சகர் அம்பு வீசிகொய்-வார்.

வடநாட்டில் பெரிய ராவணன் உருவ பொம்மை செய்து அதில் பட்டாசுகளை போட்டுவைப்பார்கள். பல அம்புகள் அந்த பொம்மை மீது ஏவப்படும். ஒரே ஒரு அம்பு மட்டும்துணியில் தீ வைக்கப்பட்டு நெருப்பு அம்பாக ஏவப்படும். அந்த அம்பு ராவணன்பொம்மையில் பட்டு தீ பிடித்ததும் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பட்டாசுகள் பலத்தசத்தத்துடன் வெடித்து ராவணன் பொம்மை சுக்குநூறாக வெடித்து சிதறும்.
Post a Comment
.