கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Wednesday, October 8, 2008

சரஸ்வதி பூஜை.

நவராத்திரியின் 9 நாள் பண்டிகையில் முக்கியமானதாக கருதப்படுவது சரஸ்வதி பூஜை.

நான்முகன் பிரம்மாவின் மனைவி சரஸ்வதி. சரஸ்வதி கல்விக்கு அதிபதி. வெண்பட்டு உடுத்தி, கைகளில் வீணையும், ஏட்டுச்சுவடியும் ஏந்தி கல்விக்கும், ஏனையகலைகளுக்கும், அதிபதியாக வெண் தாமைரையில் வீற்றிருக்கும் அம்பாள் சரஸ்வதி.




அள்ள அள்ள குறையாத கல்வி செல்வத்தை வழங்கி அருள்பவள் சரஸ்வதி. எந்த செல்வங்களையும் விட கல்விச் செல்வம் மிக அவசியமானது. இதைத்தான்நம் முன்னோர், 'கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு' என்று கூறியுள்ளனர்.

'செல்வம் செல்வோம் என்று வரும், ஆனால், அழியாது நிலைத்து நிற்பது கல்வி செல்வம்தான்' என்றும் புகழ்ந்துரைத்துள்ளனர் பெரியோர்கள்.

முற் காலத்தில் சரஸ்வதி பூஜை தினத்தன்றுதான் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் (கல்வி கற்கஅனுப்புவது) நடைபெறும்.

Saraswathi with Lakshmi and Ganeshaஅக் காலத்தில் குழந்தைகள் குருகுலம் சென்று குருவின் வீட்டில்தான் கல்வி கற்கவேண்டும். இதற்கு குருகுல வாசம் என்று பெயர்.

பெற்றோர் தங்கள் குழந்தைகளை குருவின் வீட்டிற்கு அழைத்துச் செல்வர். பெரிய தட்டில்பட்டாடை, பழம், பூ, வெற்றிலை பாக்கு ஆகியவற்றுடன் குரு தட்சணையாக பணத்தையும்வைத்து குருவிடம் கொடுப்பார்கள்.

தங்கள் மகனை கல்வி, கேள்விகளில் சிறந்தவனாக உருவாக்க வேண்டும் என்று குருவைகேட்டுக் கொள்வர்.

அன்றைய தினம் முதல் எல்லாவற்றையும் கற்று தேறும்வரை குழந்தைகள் குருவின் வீட்டில்குருகுல வாசத்தை தொடங்குவர்.

சரஸ்வதி தினத்தன்றே குரு பாடத்தை துவக்கிவிடுவார். மணலில் குழந்தையின் கையைபிடித்து முதலில் 'ஓம்' என்று எழுத வைப்பார். அதுதான் பால பாடம். முதல் பாடம்.

இன்றைய மாடர்ன் உலகில் குருகுல வாசம் கிடையாது. சரஸ்வதி பூஜையின் போதுமாணவர்களை பள்ளியில் சேர்க்கும் வழக்கமும் போய்விட்டது.

ஆனால் சில கிராமங்களில் இந்த வழக்கம் இன்னமும் மங்காமல் இருக்கிறது. சரஸ்வதிபூஜையின் போது குருவை வணங்கி தங்கள் குழந்தைகளை குருவின் திண்ணை பள்ளியில்சேர்க்கும் பழக்கம் உள்ளது.

No comments:

.