கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Friday, December 12, 2008

நன்றிகள்

பரப்பரப்பான காலை பொழுது 6 மணியலவில் வெற்றியின் விடியல் நிகழ்சியின் உதவியோடு (லோஷன் அண்ணாவின் குரலை கேட்டதும்) கண்முழித்து வேக வேகமாக என்னை தயார்ப்படுத்திக்கொண்டு 6.30 மணியலவில் எனது மோட்டார் சைக்கிலை ஓட்டிக்கொண்டு இரத்மலானை நோக்கி வேகமாக போய் கொண்டிருக்கயில,அப்பப்பா குறுக்க போரவனையெல்லாம் நான் பேசிகொண்டே போக அவர்கள் என்னை பேச, அதையெல்லாம் வாங்கிகட்டிகிட்டு போய் (பணி நிமித்தமாக),பிறகு அங்கிருந்து 8.00 மணியலவில் புறப்பட்டு மறுபடியும் எனது அறைக்கு வந்தேன். இவ்வளவு அவசரத்திற்கு காரணம் என்னவென்றால் எல்லாம் வதீஸ் வருணன் ஏற்ப்படுத்தி தந்த ஒரு வாய்பிற்கு செல்ல ஆயுத்தம் ஆவதற்கே.
அப்படி என்ன வாய்ப்பு என்றால் YATV (Young Asia Television )யில் ஒரு கலந்துரையாடலில் பங்குப்பற்றுவது.நிகழ்ச்சியின் தலைப்பு "இலங்கையில் இன்று இளைய சமூதாயத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் அதற்கான எமது பங்களிப்பும்" இந்த கலந்துரையாடலுக்காக‌ என்னோடு சேர்ந்து நாச்சியா தீவு பர்வீனும் (கவிஞர்) , நோயல் (இசை துறை) ஆகிய மூவரும் கலந்து கொண்டனர்.
இதுபோன்ற அனுபவம் எனக்கு இதுவே முதல் தடவை. இந்த வாய்ப்பை ஏற்ப்படுத்தி தந்த நண்பர் வதீஸுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அதோடு இந்நிகழ்ச்சியயை தொகுத்து வழங்கிய இரஜீத்திற்கும் எனது நன்றிகள்.நிகழ்சிகான நேரத்தை வழங்கிய யா டிவியினருக்கும் எனது நன்றிகள்.

நான் எனது வலைப்பதிவில் பெரிதாக எதுவுமே செய்துவிடவில்லை, எனது நோக்கம் அரசியல் சார்ந்த பதிவுகளை தவிர்ப்பதுவே . மாறாக வெளிச்சதிற்கு வராத படைப்புகளை வெளிகொணர்வதாகும்.
கிடைக்கின்ற நேரத்தை வலைப்பதிவில் செலவு செய்கின்றேன் முடிந்தளவு பதிவுகளை இடுகின்ற முயற்சி.
http://www.yatv.net/
http://www.youtube.com/yatvwebcast
Post a Comment
.