கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Monday, December 15, 2008

அனைத்துலக தேயிலை தினம். டிசம்பர் 15

2005 ஆம் ஆண்டு புதுடில்லியில் டிசம்பர் 15 ஆம் திகதி அனைத்துலக தேயிலை தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த வருடம் இது நான்காவது தடவையாக கொண்டாடபடவிருக்கிறது.வருடம்தோறும் பல்வேறுப்பட்ட தினங்கள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.அந்த அந்த தினங்களில் பல்வேறு மட்டங்களில் அதற்கான ஞாபகார்த்த நிகழ்வுகளையோ,விழிப்புனர்ச்சி நிகழ்சிகளையோ ஏற்பாடு செய்வது வழமை.இலங்கையில் மலையக பகுதிகளில் வாழும் பெருந்தோட்ட பகுதியினரில் பெரும்பாலானர் இது போன்ற நிகழ்வுகளை அறிந்திருப்பதே மிக அரிது. அதற்க்கு காரணம் இம்மக்கள் கால காலமாக நம்பி வருகின்ற அரசியல்வாதிகளே. 21ம் நூற்றாண்டின் நவீன அடிமைகளாக மனிதநாகரீகமே வெற்க்கி த‌லை குனியும் வகையில் அடக்கியாளப்படும் மக்கள் கூட்டம் தான் இந்த மலையக மக்ககள். பிரித்தானியர்கள் லயன்களில் இவர்களை அடிமைகளாக அடைத்துப் போட்டநாளிலிருந்து இன்னும் அடிமைகளாகவே வாழ்கின்றனர். மேலாதிக்கம், பேரினவாதம் என்பனவும் தமது கோரக் கரங்களை இவர்களின் குரல்வளைகளில் தான் பரிசோதித்துப் பார்த்திருக்கின்றன. சமூகம் பற்றியும் ஜனநாயகம் பற்றியும் பேசும் ஒவ்வொருமனிதனும் மலையகத்தையும் மிருகங்களாக நடாத்தப்படும் பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் மறந்த்துவிட்டு மூச்சுவிடுவதில் கூட அர்த்தமில்லை. இம்மக்கள் கூட்டத்தை சேர்ந்தவன் என்ற வகையில் ஒன்றை மட்டும் இவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன் இனியும் எந்த அரசியல்வாதிகளையும் நம்பி அவர்களுக்கு தலைவணங்கி , அவர்களுக்கு கொடிப்பிடிக்காமல் தன்க்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற்றுக்கொள்ள தாமாகவே முன்வந்து மார்த்தட்டி பெருவார்கள் எனின் எதிர்கால சமூதாயாம் தலை நிமிர்ந்து நிற்க்கும் என்பது மட்டும் உறுதி.(நான் கனவு காண்கிறேன்)

இம்முறை அனைத்துலக தேயிலை தினத்தின் கருப்பொருள் "பெருந்தோட்டத்துறையில் பெண்களின் தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவோம்'' என்பதாக நிர்ணயிக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது எனவே புதுடில்லி பிரகடனத்தில் பெண்கள் தொடர்பான முக்கிய விடயங்களை நினைவு கூருவது இந் நேரத்தில் பொருத்தமானதாகும்.

*பெருந்தோட்டத்துறை சார்ந்த தொழில் அணியில் 50வீதத்திற்கு மேலாகவுள்ள பெண் தொழிலாளர்கள் ஓரங்கட்டப்படுவதும் தீவிர சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதும் உடனடி யாக நிறுத்தப்பட வேண்டும்.

*சமமான ஊதியம் மற்றும் வேலை நிலைமைகளுக்குப் பெண் தொழிலாளர் உரித்துடையவர்கள் ஆவதோடு சகல பேச்சுவார்த்தைகள், தீர்மானமெடுத்தல் சம்பந்தமான விடயங்களில் சமமான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும்.

*தொழிற்சங்கங்கள் முக்கூட்டு அமைப்புக்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் பால் நிலை சமத்துவம் சார்ந்ததாக இருப்பதோடு சகல தீர்மானங்கள் எடுக்கும் மட்டத்திலும் பெண்களின் தலைமைத்துவத்தை ஊக்குவிப்பதாக அமைய வேண்டும்.

*பாலியல் தொல்லைகள் போன்ற பெண்கள்சம்பந்தப்பட்ட விசேட அம்சங்கள் குறித்து கடுமையான அணுகுமுறை கையாளப்பட வேண்டும்.

*பெண் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்கள் இன உற்பத்தி உ?மைகளைக் கட்டுப்படுத்தும் உரிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

*பால் நிலை அம்சங்களை கையாளும் வகையில் அரசாங்கம் பால் நிலை பிரிவு ஒன்றை அமைத்தல் வேண்டும்.
போன்ற முக்கிய விடயங்கள் இந்த பிரகடனத்தில் உள்ளன.

இந்த தினத்தின் முக்கியதுவத்தை இம்மக்களுக்கு உணரவைக்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே என் அவா.
Post a Comment
.