உலகநாயகன் "மகி"யின் ஐ.நா.உரை - அமெரிக்காவில் இருந்து ரவிக்குமார்
என் வணக்கத்திற்குரிய உலக மக்களே….
மாண்புமிகு அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் அவர்களும், எப்போதும் அவரை கரித்துக்கொட்டும் வெனிசூலா ஜனாதிபதி ஷாவேசும், நான் ஆரத்தளுவி குசலம் விசாரித்த ஈரானிய ஜனாதிபதி மஹ்முத் அஹ்மடி நஜாத்தும் அமர்ந்திருக்கும் இந்த ஐக்கிய நாடுகள் சபை 63 ஆவது கூட்டத்தொடர் சரித்திர விழா மேடையில் நானும் பேச வாய்ப்பு கிடைத்த கதை பெரிய கதை…. உலகமே சம்பந்தப்பட்ட கதை…ஏன் இது ஒரு கேனைக்கதையும் கூட…
சிறி லங்காவின் ஜனாதிபதி கேனைக்கதை சொல்கின்றானே! என்ற கேள்வி எழலாம்….இங்கு கொலுவீற்றிருக்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்த கதையின் ஒரு முக்கிய பாத்திரம்.அதனால் இந்த சர்தாஜியின் கதையும் சொல்லவேண்டியதாயிருக்கின்றது.
எமது நாட்டிற்கு நிறைய சரித்திரக்கதைகள் உண்டு அதை சுருங்க சொல்வதென்றாலும் கி.மு. பலநூற்றாண்டுகள் வரை போகவேண்டும். சிங்கமும், மனிதப்பெண்ணும் உறவுகொண்டு பிறந்தவர்களே நாங்கள் என்ற மகாவம்சத்தையும் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
அந்த நூற்றண்டு ஆபிரிக்க காடுகளில் மனிதர்களாகவே, மற்றய வேடுவர்கள் கணக்கெடுக்காத காரணத்தால்;, விஜயனும், அவனது தந்தையும் வேறு யாரும் தம்முடன் மோத முற்படாததனால் தம்முள் மோதிக்கொண்ட சிறந்த நூற்றாண்டு.
விஜயன் என்பவன் தம்பவன்னி அடைந்தது காலத்தின் சூழ்ச்சியும் அல்ல…அங்கு ஏற்கனவே குடியிருந்த தமிழர்கள் குவேனி என்ற இயக்கர் குலமாக்கப்பட்டது எமது சூழ்ச்சியும் அல்ல.
ஆதிக்குடிகள் அடிமைகள் ஆக்கப்பட்டகதைகள் அழிக்கப்பட்ட கதைகள் எமது நாட்டில் மட்டும் அல்ல ஒவ்வொரு நாட்டிலும் உண்டு. சரி…எம்மை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தினால் என்ன செவ்வது என்று தொலை நோக்கு கொண்டு சிந்தித்த படியாலேயே மகாவம்சம் என்ற அம்புலிமாமா கதையை நாம் ஆதாரமாக்கொண்டு இன்றும் வாதிட்டுவருகின்றோம்.
சரி…சக நிகழ்வுகளுக்கு வருவோம்… நான் முன்பே குறிப்பட்டபடி மன்மோகன் சர்தாஜி… தமிழர்கள் வான்பலம் பெற்றுவிட்டனர் என நாம் அறிந்ததும் ஒடிச்சென்றது என்னமோ இவரிடம் தான்…ஆம் ராடர்….எங்கெங்கு விமானங்கள் உள்ளன, எப்போது அவைகள் மேலெழும், அவற்றுக்கு என்ன செய்யலாம் என கண்டறியும் என நம்பி இவரிடம் இருந்து அந்த அதிஉயர் தொழிநுட்ப சக்தியை பெற்றோம். விமானங்களை கண்காணிக்கும் இந்த சக்தியும் சரி, உலகையே படைத்தாக கூறும் சக்தியும் சரி காக்க வேண்டிய நேரத்தில் எங்களை காக்கவில்லை. உதாரணம் வவனியா மீதான வான் தாக்குதல்.
சரி இவற்றுக்கும் நான் சொல்ல வந்த கதைக்கும் என்ன தொடர்பு? சக நிகழ்வகளின் கோர்வைதான் உலக சரித்திரம், மேற்கத்தையே சிந்தனையில் ஹயாஸ் தியறி என்று ஒன்று உண்டு. இந்த விஞ்ஞான தத்துவப்படி உலக நிகழ்வுகள் யாவும் ஒன்றுக்கொன்று சம்பந்தமுடையவை. சகநிகழ்வுகள்…ஒரு பட்டாம் பூச்சியின் இறக்கை படபடப்பில் தொடங்கும் அதிர்வுக்கும் ஒரு பூகம்பத்திற்கும் தொடர்பு உண்டு என்கின்றது அந்த தத்துவம்.என்கதை ஒரு பூகம்பத்தில் தொடங்கி ஒரு பட்டாம்பூச்சியின் படபடப்பில் முடிந்தது. ஆம் ரணில் பேச்சுவார்த்தை என்று சொல்லி…விடுதலைப்புலிகளை முதுகில் குத்தி அழித்துவிடலாம் என நினைத்ததுக்கும் நான் ஜனாதிபதியாகியதன் தொடர்பையும் தான் சொல்கின்றேன்.
இந்த எங்கள் நாட்டுக்கதையின் முக்கியமான அத்தியாயம் 2005 களில் தொடங்கியது. அன்று இங்கு கதைசொல்கின்ற நானே கதாநாயகன் ஆனேன் நானும் ஒரு வகையில் இலங்கை கண்ட விஜயன்தான்.
ஹம்பாந்தோட்டையில் ராஜபக்ஸவின் இரண்டாவது மகானாக பிறந்து மனித உரிமை மீறல்களில் பி.எச்.டி பெற்று அண்ணா மற்றும் தம்பியரை முக்கிய பதவிகளில் அமர்த்தி யுத்தத்தின் மூலம் தினமும் டொலர்களை எண்ணும் விஜயன்.
என்னைப்போல் பல டொலர் எண்ணும் பலர் எம் அமைச்சுக்களில் கூடி விளையாடிய செயல் வினையாக மாறத்தொடங்கியது சதாரணமக்களின் வயிற்றில் அடி என.
1983 களில் ஏற்பட்ட எங்கள் பெரு எழுச்சியின் பிரகாரம் தமிழர்கள் சில அசௌகரிங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கின்றார்கள். அந்த சம்பவத்தின் பின்னர் தமிழர்களிடமிருந்து எங்களை தற்பாதுகாத்துக்கொள்ள அவர்களை அழிக்கும் நடவடிக்கைகளில் நாம் மும்மரமாக இருக்கின்றோம்.அந்த வரிசையில் ஐந்தாவதாக வந்திருக்கும் நான் மகிந்த ராஜபக்ஸ…சிரந்தி கோல் மீ… டார்லிங்…. தமிழ்ஸ் கோல் மீ…. காட்டான்.
உண்மையில் நான் தான் உலக நாயகன் என்று சொன்னாலும் அது மிகை ஆவதற்கில்லை. வன்னியில் இருந்து யூ.என் ஐ கெட்அவுட் சொல்லிவிட்டு, நேரே அதே யூ.என்னில் வந்து தில்லாக பேசுகின்றேனே….இறுதியாக ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.
வாழ்க யூ.என்., வாழ்க சிங்கள, வாழிய யூ.என்னின் கொள்கைகள்….மேடையில் இருந்து மகிந்த அவரது வெள்ளை வேட்டியை தூக்கிக்கொண்டு இறங்ககின்றார்…..
இந்தியப்பிரதமர் கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு பல நடன மங்கைகளுடன் மகிந்தவை நோக்கி பாடுகின்றார்….."உலகமெங்கினும் உன்னை வெல்ல யாரு? உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது லங்கா….உலக நாயகனே…உலகநாயகனே…..
- அமெரிக்காவில் இருந்து ரவிக்குமார்
Thanks Face Book & Thaya
1 comment:
aiyo!!! midiyala!!! hahahaah!
Post a Comment