கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Saturday, November 1, 2008

சிரிக்க

ஆசிரியர்: பொய் சொல்லக்கூடாது, பிறர் பொருள் மேல் ஆசை வைக்கக் கூடாது,பிறர் மனம் நோகப் பேசக் கூடாது.
மாணவன்: இந்த உலகத்திலேயே வாழக் கூடாதுன்னு சொல்லிடுங்க சார்...


ஆசிரியர்: பள்ளிக்கூடத்திற்கு ‘கட்’ அடித்து விட்டு சினிமாவுக்கு போனியாமே, நாளை உன் அப்பாவைக் கூப்பிட்டு வா...
மாணவன்: அவர் படம் பார்க்கலே சார்... கதையை நான் சொல்றேன்...


ஆசிரியர்: எது கேட்டாலும் தெரியாதுன்னு சொல்ற ஒரு பையன் நேற்று ஒரு கேள்விக்கு சரியாகப் பதில் சொல்லி விட்டான்...
மாணவன்: என்ன கேட்டீங்க...?
ஆசிரியர்: ஆந்தைக்கு பகல்ல கண் தெரியுமான்னு கேட்டேன். தெரியாது...ன்னுட்டான்.


ஆசிரியர்: நீ இவ்வளவு மார்க் வாங்குவேன்னு நான் நினைக்கல ரமேஷ்...
மாணவன்: என் உங்களைச் சந்தோஷப் படுத்தனுமின்னுதான் பிட் வைத்து எழுதினேன் சார்...


ஆசிரியர்: நான் தினமும் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று படித்து வந்தேன்...
மாணவன்: அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரமா சார்...


நன்றி - தேனி.எஸ்.மாரியப்பன்

முத்துக்கமலம்

No comments:

.