சிப்பியில் விழுந்த மழைத்துளி,
தென்றல் தீண்டிய மலர்,
ஒளிவிடும் நட்சத்திரம்,
பக்கம் பக்கமாய் வாசித்த புத்தகம்,
பூக்கள் தூவிய பாதை,
புனிதமாய் உச்சரித்த பெயர்.
நானே!
சாக்க்டையில் விழுந்த மழைத்துளி,
புயலில் சிக்கிய மலர்,
எரிந்து விழுந்த நட்சத்திரம்,
வாசிக்கப்படாத புத்தகம்,
முட்கள் தூவிய பாதை,
பல உதடுகள் வசைபாடிய பெயர்.
ஊதி ஊதியே உருப்பெருத்த நீ,
உருகி உருகியே உருச்சிறுத்த நான்,
பருகிப் பருகியே மலர்ந்த நீ,
கருகிக் கருகியே உதிர்ந்த நான்,
பலர் முத்தமிட்ட பாவை நீ
பலர் காலில் அடிபட்ட பந்து நான்.
எனக்கோ உழைப்பின் ரணம்,
உனக்கோ ஏய்ப்பின் குணம்.
திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
No comments:
Post a Comment