அண்மையில் ஏற்ப்பட்ட இந்த பெட்ரோல்,எரிவாயு விலை ஏற்றம்,குறைப்பு தான் இலங்கை அரசியலில் அதிகம் இடம் பிடித்தவை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி ஒரு வார கால பகுதிக்கு பிறகு 2ரூபா விலை குறைத்தது அரசாங்கம் என்பதெல்லாம் பழைய விடயமாக மாறும் தருவாயில் அதனோடு தொடர்புடைய ஒரு விடயத்தை எழுதுகிறேன்.கடந்த வருடம் தொடர்ச்சியாக ஏற்பபட்ட பெற்றோல், எரிவாயுவின் விலையேற்றதால் தொடர்ந்து அதனோடு சேர்த்து தொடர்சியாக போக்குவரத்து கட்டணங்களும் அதிகரித்தன என்பதை இலங்கையில் யாவரும் அறிந்த உண்மையே. கடந்த ஒருமாத கால்த்திற்க்குள் ஏற்ப்பட்ட விலைகுறைபினால் அரச மற்றும் தனியார் பேருந்திற்கான கட்டண்ங்களில் விலை குறைபதாக செய்திகளூடாக அறிந்தேன்.ஆனால் இந்த முச்சக்கர வண்டியினரும் அவர்கள் இந்த எரிவாயுவின் விலையேற்றதால் தொடர்ந்து கட்டணத்தை அதிகரித்தே வந்தன, ஆனால் விலை குறைப்பின் போது அதற்கான எந்த நடவடிக்கைகளும் அதன் நடத்துனர்களும் சரி அது சார்தோரும் சரி அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காத்தது சற்று வருத்ததிற்க்குரிய விடயமே. இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி மக்களே.இலங்கையே பொருத்த வரையில் இந்த முச்சக்கர வண்டி கட்டணங்களுக்கான சட்டத்திட்டங்கள் எதுவும் இருபதாக இதுவரை எனக்கு தெரியவிலை.( அப்படி இருப்பின் தெரிந்த்வர்கள் சொன்னால் தெரிந்துக்கொள்வேன்)
சாதாரணமாக பேருந்தில் 6 ரூபா கொடுத்து போக வேண்டிய இடத்திற்கு 80ரூபா அறவிடுகின்றன.(6 மாதத்திற்ககு முன்பு 30ரூபா அதாவது எரிப்பொருள் விலையேற்ற்த்திற்க்கு முன்) இன்னும் வெள்ளவ்த்தை, பம்பலபிட்டிய, கொள்ளுப்பிட்டிய பகுதிகளில் 100 வரை அறவிடுகின்றன். இதைப்பற்றி அவர்களிடம் கேட்டால் இரண்டு விடயங்களை முன்வைப்பனர்.
(சகோதர மொழியில்: தெல் கனாங்கீலா, அனித்தெக்க பாரவல் வன்வே கரலா வட்டேமனே என்டடோனே )
1. எரிப்பொருள் விலையேற்றம்
2. பாதைகள் அடிக்கடி மூடப்படுவது, ஒரு வழி பாதை.
ஆனால் இந்த எரிப்பொருள் குறைப்பின் பின் அவர்கள் வாயே திறப்பதில்லை
இது போன்ற பிரச்சனைகளுக்கு அதிகமாக முகம் கொடுப்பவர்கள் சாதாரன மக்களே.இங்கு நான் முழுக்குற்றத்தையும் முச்சக்கர வண்டி நடத்துனர்களுக்கு சொல்லவோ அவர்களை பொறுப்பு கூறவோ முன் வரவில்லை. காரணம் அதையே வாழ்வாதாரமாக கொண்டு நாடாத்தும் நடத்துனர்களும் உண்டு ஆகவே இதற்க்கு பொருப்பானவர்கள் ஓர் கட்டண முறையே ஒழுங்கு செய்தால் இருதரப்பிற்க்கும் அது நன்மை பயிக்கும் என்பதே என் அவா!
இலங்கை போக்குவரத்து அமைச்சர் அவர்களே இது உங்களின் கவனத்திற்க்கு!!
மனதில்ப்பட்டதை சொன்னேன் பிழையிருப்பின் அடியேனை மன்னித்து பொருத்தருள வேண்டும்.
பி.கு. : தமிழக நண்பர்கள் இந்தியாவில் உள்ள நடைமுறைகளை பின்னோட்டத்தில் கூறினால் எமது அமைச்சு ஒரு குழு அமைத்து அதனை ஆலோசிக்கும்.
No comments:
Post a Comment