பச்சை பசேலாக பசுமை நிறைந்து காட்சி கொடுக்கும் மலையகம் ! பசுமைக்குள் ஒழிந்திருக்கும் ரணங்களும் வேதனைகளும்!
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?"
-பாரதி
Wednesday, January 14, 2009
மாறிகள்
இதுவரை
மாறியாய் இருந்த நீ
திடிரென மாறிபோனாய்
கூட்டல், பெருக்கல்
என்பவற்றில் தானே
நீ குறியாக இருந்தாய்
இப்போது..
க்ழித்தலில் கவனம்
செலுத்த.. காரணமென்ன?
அடைப்புக்குறிக்குள்
வைத்துத்தான்..
நான் உன்னை
அடையாளம் கண்டேன்
நீ - மாறி விட்டாய் என்று
வினாக்குறி என்பது
விளையாட்டுக்காக
மட்டுமேதானே!
நீ - இட்டிருக்கும்
விளங்காக் குறிக்கு
விஞ்ஞான விளக்கமென்ன?
சந்திக்கு வந்தேன்
உன்னை சந்தித்து போக
நீ - ஏன்
சமாந்திரமாய்
விலகிப்போனாய்
உன் மாற்றங்களால்
நானும்...
மாறியாகி விட்டேன்
இனிமேல் நாமிருவருமே!
"மாறிகள்" தான்
நன்றி
நாச்சியாதீவு பர்வீன்
நூல் : சிரட்டையும் மண்ணும்.
Labels:
கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
.
1 comment:
மாறிலியாக இருந்துவிட்டால் வாழ்க்கை சுவாரசியமாக இருக்காது........
மாறியை விட சார்ந்த மாறி நல்லது......... சமாளித்துக் கொள்ளலாம்..........
Post a Comment