கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Wednesday, February 18, 2009

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (பெப்ரவரி 18, 1836 - ஆகஸ்ட் 16, 1886)


ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (பெப்ரவரி 18, 1836 - ஆகஸ்ட் 16, 1886) எனப் பரவலாக அறியப்படும் கதாதர் சாட்டர்ஜி 19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். இவர் விவேகானந்தரின் குருவாவார். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர். மேலதிக விபரங்களுக்கு....

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிந்தனை துளிகள்

ஒருவன் வாழ்வில் இறைவன் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற பின்னரே பிறருக்குப் போதனை செய்ய முன்வர வேண்டும். அப்போது தான் அது நல்ல பயனைப் பிறருக்குத் தரும். மனிதனைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் அவனைப் பெரிதும் பாதிக்கின்றன. அதனால் தெய்வீகப் படங்களை, நாம் இருக்குமிடத்தில் எப்போது கண்ணில் படும் வகையில் வைத்திருப்பது நல்லது. அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் நம் மனதில் அருள் உணர்வு உதிக்கத் தொடங்கும். செடி பெரிய மரமான பிறகு, அதற்கு வேலி தேவையில்லை. ஒரு யானையைக் கூட அதில் கட்டி வைக்கும் அளவிற்கு வலிமை அந்த மரத்திற்கு உண்டாகி விடும். அதைப் போல பக்குவம் உண்டான மனிதனுக்கும் உலக விஷயங்கள் எந்த இன்னலையும் உண்டாக்குவதில்லை.

இல்லற வாழ்வில் இருந்தாலும் இறையனுபூதி பெற விரும்புபவர்கள் அவ்வப்போது தனிமையை நாடிச் சென்று இறைவனுக்காக ஏங்கி அழ வேண்டும். உலக வாழ்க்கையில் இருப்பவர்கள் பலவிதமான கடமைகளால், ஆசைகளால், சூழப்பட்டிருக்கிறார்கள்; அதிலும் சாதனையின் ஆரம்ப காலத்தில் இருப்பவர்கள் பலவிதமான தடைகளைச் சந்திக்க
வேண்டியவர்களாகிறார்கள். அதனால் அவர்களின் கவனம் சிதறுகிறது

ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கதை ஒன்று

குரு ஒருவரை, அவருடைய சிஷ்யன் கேட்டான், "குருவே, இறைவனைக் காணும் வழியை
எனக்குச் சொல்லுங்கள்", என்று.

அவரும், "என்னுடன் வா, காட்டுகிறேன்", என்று கூறி, அந்த சிஷ்யனை அருகிலிருந்த
ஒரு ஏரிக்கு அழைத்துச் சென்றார்.

இருவரும் தண்ணீரில் இறங்கினர். திடீரென்று, குருவானவர், சிஷ்யனின்
தலையைப் பிடித்துத் தண்ணீருக்குள் அமிழ்த்தினார். சில நிமிடங்கள் கழித்துதான்
அவனை விடுவித்தார். மூச்சுத் திணறிக் கொண்டிருந்த சிஷ்யன், ஒருவழியாக விடுபட்டு
எழுந்து நின்றான்.

"எப்படி இருந்தது?", என்று குரு கேட்டார்.

"என்னால் மூச்சே விட முடியவில்லை. தவித்துப் போய் விட்டேன். செத்து விடுவேன்
என்றே நினைத்தேன்", என்றான் சிஷ்யன்.

"இதைப் போலவே சுவாசத்தை இழந்தாற்போல இறைவனுக்காக எப்போது தவிக்கிறாயோ, அப்போது
அவனைக் காண்பாய்", என்றார், குரு.

20 comments:

Sathis Kumar said...

//"ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (பெப்ரவரி 18, 1836 - ஆகஸ்ட் 16, 1886)"//

பகவான் சிறீ ராமகிருஷ்ணரின் பிறந்த தேதி 17 பிப்ரவரி என சில புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளதே.. எது சரி?

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் தொடுத்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இப்பூக்களில் சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

ஆதவா said...

இராமகிருஷ்ணர், விவேகானந்தர் போன்றோரின் அறிவுரைகள் கேட்க அவ்வளவு இனிமையாக இருக்கும்... நான் விவேகானந்தரின் புத்தகங்கள் வைத்திருக்கிறேன்.. அதைப் படிக்கும் பொழுது, நமக்குள் ஏற்படும் அமைதியை வேறொருவரால் உணரமுடியாது..



பரமஹம்ஸரின் கதையைப் போலத்தான்.... நானும் ஏங்கிக் கொண்டிருக்கிறேன்..



இறைவனுக்காக அல்ல.



அமைதிக்காக.

kuma36 said...

சதீசு குமார் உங்களின் வருகைக்கு மிக்க நன்றி.

//பகவான் சிறீ ராமகிருஷ்ணரின் பிறந்த தேதி 17 பிப்ரவரி என சில புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளதே.. எது சரி?//

நான் தேடிப்பார்த்ததில் தேதி 18.02. என்பதே சரி.அதோடு விக்கிப்பீடியாவில் எழுதியிருந்த முகவரியையும் இணைத்துள்ளேன். விக்கிப்பீடியாவில் ஆதாரம் இல்லாமல் எழுத மாட்டார்கள்.

kuma36 said...

ஆதவா said..
//இறைவனுக்காக அல்ல.

அமைதிக்காக.//

உங்களுடன் நானும் தான்

Sathis Kumar said...

18-ஆம் தேதி பிறப்பதற்கு சில மணித்திலாயங்கள் இருக்கும்பொழுதுதான் ராமகிருஷ்ணர் அவதரித்ததாக நான் படித்திருக்கிறேன். விக்கிபீடியாவில் உள்ள தகவல்களை யார் வேண்டுமானாலும் மாற்றி அமைக்க முடியும். எனவே, விக்கியில் உள்ள தகவல்கள் முழுவதையும் ஆதாரப்பூர்வமானவை என ஏற்றுக் கொள்ள இயலாது.

kuma36 said...

தகவலுக்கு மீண்டும் நன்றிகள் சதீசுகுமார்.

தமிழ் மதுரம் said...

"இதைப் போலவே சுவாசத்தை இழந்தாற்போல இறைவனுக்காக எப்போது தவிக்கிறாயோ, அப்போது
அவனைக் காண்பாய்", என்றார், குரு.//

ஆங்........அப்படியா விசயம்??? ஆனால் எத்தனையோ மக்கள் தங்கள் சுவாசத்தை இழந்து விட்டு தினமும் எமது தேசத்தில் தவிக்கிறார்களே?? அவர்கள் எப்போது இறைவனைக் காண்பார்கள் நண்பா???

Sinthu said...

இந்தக் கதை பலரையும் வழிப்படுத்தும் என்று நம்புகிறேன்.

Sinthu said...

கலை அண்ணா எனக்குத் தெரிந்த உண்மை விக்கிப்பீடியாவில் தகவல்களை மாற்ற முடியும் அதனால் அதை முடிந்தளவு நம்புவதைத் தவிர்ப்பது நன்றி...... (எங்கள் கல்லூரியில் விக்கிப்பீடியாவில் தகவல் எடுப்பதை அனுமதிப்பதில்லை.......)

தேவன் மாயம் said...

i have put a poem

தேவன் மாயம் said...

i have studied in ramakrishna mission

Prapa said...

கலை, இதுபோன்ற நல்ல விசயங்களை அடிக்கடி ஞாபகபடுத்தினால் நல்ல இருக்கும் இல்லையா ???

kuma36 said...

கமல் said...///ஆங்........அப்படியா விசயம்??? ஆனால் எத்தனையோ மக்கள் தங்கள் சுவாசத்தை இழந்து விட்டு தினமும் எமது தேசத்தில் தவிக்கிறார்களே?? அவர்கள் எப்போது இறைவனைக் காண்பார்கள் நண்பா???///

கடவுள் மேல் நம்பிக்கை கொள்வோம். நிச்சயம் எம் மக்களுக்கான அமைதியும் விடிவும் கிடைக்கும். யார் யாரையோ நம்பி நம்பியே வாழ்ந்து பழகிய கூட்டம் நாம். இனி நம்பிக்கைக் கொள்ள இறைவன் மட்டுமே உள்ளான் நண்பா

kuma36 said...

thevanmayam said...

i have studied in ramakrishna mission

தேவா சார் இதை நீங்க சொல்லமலே நமக்கு புரியும்.

kuma36 said...

Sinthu said...
//இந்தக் கதை பலரையும் வழிப்படுத்தும் என்று நம்புகிறேன்.//

உங்க நம்பிக்கை வீண்போகாக கூடாது சிந்து.

Sinthu said...

///கலை அண்ணா எனக்குத் தெரிந்த உண்மை விக்கிப்பீடியாவில் தகவல்களை மாற்ற முடியும் அதனால் அதை முடிந்தளவு நம்புவதைத் தவிர்ப்பது நன்றி...... (எங்கள் கல்லூரியில் விக்கிப்பீடியாவில் தகவல் எடுப்பதை அனுமதிப்பதில்லை.......)///

ஓர் இரு பிழைகளுக்காக ஒருவரை புரந்தள்ளுவது அவ்வளவு நல்லது இல்ல என்ன நான் சொல்வது சரியா சிந்து?

kuma36 said...

பிரபா said...
\\கலை, இதுபோன்ற நல்ல விசயங்களை அடிக்கடி ஞாபகபடுத்தினால் நல்ல இருக்கும் இல்லையா ???\\\

சரி நீங்க சொல்லி விட்டிங்க தானே ஞாபகப்படுத்தலாம். நீங்களும் அதோடு சேந்துக்கொள்லனும் சரியா?

Muruganandan M.K. said...

ராமகிருஷ்ண பரமஹம்சரை நினைவுபடுத்தியதற்கு நன்றி.
அவருடன் சுவாமி விவேகானந்தரிலும் எனக்கு நிறைய ஈடுபாடு உண்டு.
பருத்தித்துறை சாராதா சேவாஸ்ரமத்திலும், கொழும்பு ராமகிருஷ்ண மிஷனிலும் நீண்டகாலம் இலவச மருத்துவசேவைகளில் சேவையாற்றியுள்ளேன். மிகவும் மனநிறைவைத் தந்தன அவை.

Prapa said...

என்ன கலை இப்படி கேட்டுடீங்க .... கட்டாயம் .

Sinthu said...

"
கலை - இராகலை said...
Sinthu said...
//இந்தக் கதை பலரையும் வழிப்படுத்தும் என்று நம்புகிறேன்.//

உங்க நம்பிக்கை வீண்போகாக கூடாது சிந்து.

Sinthu said...

///கலை அண்ணா எனக்குத் தெரிந்த உண்மை விக்கிப்பீடியாவில் தகவல்களை மாற்ற முடியும் அதனால் அதை முடிந்தளவு நம்புவதைத் தவிர்ப்பது நன்றி...... (எங்கள் கல்லூரியில் விக்கிப்பீடியாவில் தகவல் எடுப்பதை அனுமதிப்பதில்லை.......)///

ஓர் இரு பிழைகளுக்காக ஒருவரை புரந்தள்ளுவது அவ்வளவு நல்லது இல்ல என்ன நான் சொல்வது சரியா சிந்து?"

தவறுகள் தண்டிக்கப் பட வேண்டியவை அல்ல திருத்தப் பட வேண்டியவை என்று karuthupaval நான்... தவறு தான். athu தான் எங்கள் கல்லூரியில் என்று sonnene............ aathaarankal nirupipikkap பட வேண்டியவை.

.