கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Friday, February 27, 2009

பாசகார பைய!!

கம்பீயுட்டருக்கு கொஞம் ஓய்வு கொடுத்துட்டு ஒரு 2 வருஷத்திற்க்கு முன் வெளியான குமுதம் வார இதழை புரட்டிப்பார்தத போது ஒரு குட்டி கதை கண்ணில்ப்பட்டது.வாசித்ததும் சுவாரஸ்யமாக இருந்தது. வாசித்ததே வாசித்தேன் நாலு பேரோடு பகிர்ந்துக்கொண்டால் நல்லாயிருக்குமே என்று நினைத்த கலை மறுபடியும் கம்பீயுட்டருக்கான ஓய்வை இரத்து செய்து விட்டு அந்த கதைய டைப் பன்ன ஆரபித்துவிட்டேன். சரி குமுதம் வார இதழுக்கு நன்றிய சொல்லிவிட்டு அதோட கதைக்கு சொந்தகாரருக்கும் நன்றிய சொலிட்டு கதைக்குள் போவோம்.

பாகா பை!! (கதையோட த்லைப்பூங்க)

மூன்று வருட அமெரிக்க வாசத்திற்குப் பிறகு அருண் திரும்பியிருந்தான். கை நிறைய பணம். அம்மா,அப்பா,உற்றார்,உறவினர், என்று அனைவருக்கும் ஐபோட்,டிஜிமூவிகாம், என்று ஏகப்பட்ட பரிசுகளை வழங்கி மிகிழ்வித்தான்.

"ட்ரீட் எப்போ?" என்று மாமா மகள் மாது ஆரம்பிக்க எல்லோரும் ஆர்பரிக்க "ஓகே... வருகிற சனி இரவு பிட்சா ஹாட்டில்" என்றான் அருண்.

சனிகிழமை இரவு‍ பிட்சா ஹட்!
எல்லா ஐட்டங்களையும் அமெரிக்கா ரிடர்ன் அருணே ஆர்டர் செய்வது அவன் தான் புதுப்புது விதமாக சாப்பிட்டுருப்பான் என்று முடிவாயிற்று.
"எல்லோருக்கும் ஜலபினோ சூப்.. அம்மாவுக்கு மட்டும் கேங் ஸ்வாஸா சூப்.." ஆர்டர் எடுப்பவர் குறித்துக்கொள்ள ஆரம்பித்தார்.

அப்புறம் ஸ்டார்டரில் ஹரா கபாப் லாலி 5, ஷம்மி கபாப் 5, சிஸ்பின் ரோல் வித் அவுட் கார்லிக் 5.."

"அப்புறம் மெயின் கோர்ஸில் பேஷ்வரி சனா பனீர் 4, பிட்சா டாகா டக் 3, மார்கரிட்டா 5, ரபானோ 2, வெர்ட்யுர் 2, பார்பிக்யுட் வெஜ் 2.."

மகன் ஆர்டர் செய்யும் வேகத்தைப் பார்த்து அப்பாவும் அம்மாவும் மலைத்துப் போயினர்!

வித விதமான டெஸர்ட்டுகளுடன் விருந்து முடிந்து எல்லோரும் வீடு திரும்பும்போது மணி இரவு பன்னிரண்டரை.

அம்மா சற்றே கண்ணயர்ந்த போது மணி இரவு பன்னிரண்டரை.

அம்மா சற்றே கண்ணயர்ந்து போது, அருண் வந்து எழுப்பினான்.

"அம்மா சாதம் இருக்கா.."

"ஓ இருக்கே..." அம்மா ஆச்சிரியத்துடன் மகனை பார்த்தாள்.

"அதுலே கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைச்சு ஒரு டம்ளர் குடும்மா.."

வியப்புடன் மகனுக்கு சாதத்தில் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொடுத்தாள் அம்மா.

அதை அனுபவித்துக் குடித்து விட்டு அருண் சொன்னான்

"அம்மா இப்போதான் திருப்தியா இருக்கு!!.

நன்றி குமுதம்

பி.கு: கதை மீள்பிரசுரிப்பதனால் கதைய அப்படியே டைப் பன்னியிருக்கேன். ஜே.ஜே.விமலியோட கதைய மாற்ற நமக்கு உரிமையில்லை பாருங்கோ!!

6 comments:

ஆதவா said...

அட போங்க சார்... நான் கூட நீங்க எழுதினதோன்னு நினைச்சேன்.. ஏமாத்திட்டீங்க....

sakthi said...

alagana kathai
palaya sathathirku edu enai enna ullathu
thanks palaya kathai type seythu padika vaipu thanthamaiku

kuma36 said...

ஆதவா said...
//அட போங்க சார்... நான் கூட நீங்க எழுதினதோன்னு நினைச்சேன்.. ஏமாத்திட்டீங்க....//

நான் எப்படி இப்படியெல்லாம் அழக எழுதுவேன் ஆதவன் சார்!! இன்னும் கொஞ்சம் காலம் ஆகும் இல்லையா!!

kuma36 said...

sakthi said...
//alagana kathai
palaya sathathirku edu enai enna ullathu
thanks palaya kathai type seythu padika vaipu thanthamaiku///

வாங்க சாந்தி ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும்.

தமிழ் மதுரம் said...

கலை சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா??? ‘

எங்களுடன் கதையைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்...


எப்போ உங்கள் கதை வரும்???

Sinthu said...

"பி.கு: கதை மீள்பிரசுரிப்பதனால் கதைய அப்படியே டைப் பன்னியிருக்கேன். ஜே.ஜே.விமலியோட கதைய மாற்ற நமக்கு உரிமையில்லை பாருங்கோ!!"
இது நல்ல இருக்கே

.