கொள்ளைக்காரனிடம்
தப்பி வந்து
காக்கிச்சட்டையிடம்
பறிகொடுக்கும் நீ!
~~~~~~~~~~~~~~~~~~
வயிற்றுப் பிழைப்பிற்காய்
வெளிநாடு சென்று
வயிறு சுமந்து வரும் நீ!
~~~~~~~~~~~~~~~~~~
காமுகனிடம்
தப்பித்து
காதலனிடம் கற்பிழக்கும் நீ!
~~~~~~~~~~~~~~~~~~
வறுமைக் கோட்டை கடக்க
ஆயுள் ரேகை அழிய
உழைத்து உயராத நீ!
~~~~~~~~~~~~~~~~~~
நீ என்ன
முரண்களின் முகவரியா?
யார் யாரையோ
குளிர்ச்சிப்படுத்தும்
கவரியா?
திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html
10 comments:
முரண்கள் ஒவ்வொன்றூம் அழுத்தமாக ஆழமாக இருக்கின்றன.....
முரண்பாக்கள் எப்பொழுதும் குறும்பாக்களாக இருந்து நல்ல கருத்தைச் சொல்லும்...
பகிர்தலுக்கு நன்றி!!!
கலை நல்ல கவிதையைத் தந்துள்ளீர்கள்..
தொடருங்கோ.....
கவிதைகள் நன்றாயுள்ளன.
நீங்கள் உங்கள் ஆசிரியரில் வைத்துள்ள பற்று ஓர் ஆசிரியராக என்னை மிகவும் நெகிழச் செய்தது.
ஆதவா , கமல், தர்ஷன்
மிக்க நன்றிகள்.
இந்த கவிதை நூலில் உள்ள கவிதகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே என் நோக்கம்.
கலை முரண்பாடுகள் வாழ்வோடு பின்னியே கிடக்கிடது.பிரித்தெடுக்கும் முயற்சி மனிதனது.வெற்றி பெறுபவன் உயர்ந்துவிடுகிறான்.அருமை.
அருமை.
வாழ்த்துகள்..
வாங்க ஹேமா
வாங்க வண்ணாத்திப்பூச்சியார்
மிக்க நன்றி இருவருக்கும்
வாவ்!
முரண்கள் ரொம்ப அழுத்தமாக இருக்கிறது... வாழ்த்துக்கள் நண்பரே!
மிக அழகிய கவிதை!
//ஷீ-நிசி said...
வாவ்!
முரண்கள் ரொம்ப அழுத்தமாக இருக்கிறது... வாழ்த்துக்கள் நண்பரே!
மிக அழகிய கவிதை!//
நன்றி நண்பரே முதல் வருகைக்கும் கருத்திற்கும்
Ich werde mich der Kommentare enthalten. viagra generika viagra generika bestellen [url=http//t7-isis.org]cialis rezeptfrei kaufen[/url]
Post a Comment