என்
பிரியமானவளே!
உள்ளத்தில்
சுடர்விட்டெரியும்
தீயை
கண்ணீர் துளி
கொண்டு அணைக்க
முயல்கின்றேன்
கண்ணீரே இல்லாமல்
வரண்ட விட்ட
என் கண்கள்
நீயின்றி
உன்
நினைவுகளுடன்
உறங்க மறுக்கின்றது
என்பதை நீ
அறிவாயா?
யார் எது
கூறினால் என்ன?
உன் மீது
நான் கொண்ட
அன்பும்
என் மீது
நீ கொண்ட அன்பும்
மாறிடுமோ?
கனவை தந்தவளே
என்
கண்மணியே
உறக்கத்தை மட்டும்
பறித்தாயே!
உன் மீது
கொண்ட காதலுக்கு
காலமே பதில்
சொல்லட்டும்.
- சானா.கலை
இராகலை
இராகலை
24 comments:
உன் மீது
கொண்ட காதலுக்கு
காலமே பதில்
சொல்லட்டும்.//
ஏன் எல்லோரும் காலத்தின் கையில் எல்லாவற்றையும் விட்டு விடுகிறோம்?
கவிதை தேடல் கலந்த புதுமை?
பெண்களிடம் மௌனமாக இருந்து பதிலை எதிர்பார்ப்பதை விட நாங்களாகப் பேசிப் பதிலை எதிர்பார்ப்பது சாலச் சிறந்தது என்று நினைக்கின்றேன்.
படம் யாரு நீங்களா கீறினது? தூக்கல்...!
"உன் மீது
கொண்ட காதலுக்கு
காலமே பதில்
சொல்லட்டும்."
காதலின் வலியையும்
காலத்தின் மீது போட்டதேனோ..?
காலம் எத்தனை தான் தாங்கும்....?
கலை வரிகளில் நலம்....
கலை தொடர் உன் கவிக் கலை..
(பல தடவை கண்ணில் பட்ட போதும் கலை உன் வலை இன்றுதான் வலைக்கு பின்னூட்டம் இட நாள் வந்தது கலை,
தொடர்ந்து வரும்.
தொடரட்டும் உன் இராக்கலை)
//கமல் March 13, 2009 2:42 PM
ஏன் எல்லோரும் காலத்தின் கையில் எல்லாவற்றையும் விட்டு விடுகிறோம்?
கவிதை தேடல் கலந்த புதுமை?
பெண்களிடம் மௌனமாக இருந்து பதிலை எதிர்பார்ப்பதை விட நாங்களாகப் பேசிப் பதிலை எதிர்பார்ப்பது சாலச் சிறந்தது என்று நினைக்கின்றேன்.//
அனுபவஸ்தர் சொல்கிறார் கேளுங்கோ தம்பியவை.
//உன் மீது
கொண்ட காதலுக்கு
காலமே பதில்
சொல்லட்டும்.//
காதலைப்பாடாத கவிஞரு இல்லையாம். காலத்திடம் மட்டும் காதலைக் கொடுத்துவிட்டு ஏன் கண்ணீர் வடிக்க வேண்டும். வெல்லப்படத்தானே காதல் அதில் ஏன் தோற்றுத் தொலைந்து போக வேண்டும்.
வெல்லுங்கள் கலை.
சாந்தி
உங்கள் மௌனம் என்று களையை உடனடியாக அறுத்து, காதல் என்ற அறுவடைக்கு தயார் ஆகுங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
//வரண்ட விட்ட//
வரண்டு விட் தானே கலை..
என்னங்க திடீர்னு காதல் கவிதையில இறங்கிட்டீங்க... பலே பலே!!!
கனவைத் தந்தவளே என்று சொல்றீங்க... கனவு என்பது உறக்கத்தில்தானே வரும் (நீங்களா காண்பது இல்லை) அப்பறம் உறக்கத்தை பறித்துவிட்டாயே என்று புலம்பறீங்களே!!! பெரிய முரணால்ல இருக்கு!!! ஹி ஹிஹி..... ஏதோ சொல்லணூம்னு தோணிச்சி!!!!
காலம் பதில் சொல்லட்டும்..... எல்லாவற்றிற்கும்....
best of Luck kalai
// கமல் said...
உன் மீது
கொண்ட காதலுக்கு
காலமே பதில்
சொல்லட்டும்.//
ஏன் எல்லோரும் காலத்தின் கையில் எல்லாவற்றையும் விட்டு விடுகிறோம்?
கவிதை தேடல் கலந்த புதுமை?
பெண்களிடம் மௌனமாக இருந்து பதிலை எதிர்பார்ப்பதை விட நாங்களாகப் பேசிப் பதிலை எதிர்பார்ப்பது சாலச் சிறந்தது என்று நினைக்கின்றேன்//
வாங்க கமல் நன்றி
காலத்தின் மேல் பழிபோட்டு பலகி போய்விட்டது. காலத்தால் தான் விடை காண முடியும்.
// கமல் said...
படம் யாரு நீங்களா கீறினது? தூக்கல்...!//
அய்யயோ அது நான் வரைய வில்லை. கூகுலில் தேடியதில் கிடைத்த படம். வரைந்த அந்த முகமறியா நண்பரின் பெயரை காண முடிய வில்லை அதனால் தான் நன்றி கூற முடியவில்லை.
ஆதவா என்றால் சூப்பரா சித்திரம் வரைவார்!!!
இங்கயும் ஒரு காதல் கிறுக்கனா !கலை உங்களைத்தான்.
கமல்,கவின்,ஆதவா,இனி நீங்களும்.
//கமல்...பெண்களிடம் மௌனமாக இருந்து பதிலை எதிர்பார்ப்பதை விட நாங்களாகப் பேசிப் பதிலை எதிர்பார்ப்பது சாலச் சிறந்தது என்று நினைக்கின்றேன்.//
கலை,கமல் சொல்றதைக் கவனமா கேட்டுக்கொள்ளுங்க.அனுபவசாலி அவர்.
// SASee said...
"உன் மீது
கொண்ட காதலுக்கு
காலமே பதில்
சொல்லட்டும்."
காதலின் வலியையும்
காலத்தின் மீது போட்டதேனோ..?
காலம் எத்தனை தான் தாங்கும்....?
கலை வரிகளில் நலம்....
கலை தொடர் உன் கவிக் கலை..
(பல தடவை கண்ணில் பட்ட போதும் கலை உன் வலை இன்றுதான் வலைக்கு பின்னூட்டம் இட நாள் வந்தது கலை,
தொடர்ந்து வரும்.
தொடரட்டும் உன் இராக்கலை//
வாங்க சசி ரொம்ப நன்றி முதல் வருகையிலே கவிதயுடன் கலக்கல்.
//tamil24.blogspot.com said...
//உன் மீது
கொண்ட காதலுக்கு
காலமே பதில்
சொல்லட்டும்.//
காதலைப்பாடாத கவிஞரு இல்லையாம். காலத்திடம் மட்டும் காதலைக் கொடுத்துவிட்டு ஏன் கண்ணீர் வடிக்க வேண்டும். வெல்லப்படத்தானே காதல் அதில் ஏன் தோற்றுத் தொலைந்து போக வேண்டும்.
வெல்லுங்கள் கலை.
சாந்தி//
வாங்க அக்கா வருகைக்கு நன்றி
ம்ம்ம் பாக்கலாம்.
// சந்துரு said...
உங்கள் மௌனம் என்று களையை உடனடியாக அறுத்து, காதல் என்ற அறுவடைக்கு தயார் ஆகுங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.//
வாங்க சந்துரு முதல் வருகைக்கு கருத்திற்கும் நன்றி.
// த.அகிலன் said...
//வரண்ட விட்ட//
வரண்டு விட் தானே கலை..//
வாங்க சார்
/// ஆதவா said...
என்னங்க திடீர்னு காதல் கவிதையில இறங்கிட்டீங்க... பலே பலே!!!
கனவைத் தந்தவளே என்று சொல்றீங்க... கனவு என்பது உறக்கத்தில்தானே வரும் (நீங்களா காண்பது இல்லை) அப்பறம் உறக்கத்தை பறித்துவிட்டாயே என்று புலம்பறீங்களே!!! பெரிய முரணால்ல இருக்கு!!! ஹி ஹிஹி..... ஏதோ சொல்லணூம்னு தோணிச்சி!!!!
காலம் பதில் சொல்லட்டும்..... எல்லாவற்றிற்கும்....///
சும்மாதாங்க!!!
கனவு தூங்கும் போது வருகிறது என்பதை விட தூக்கத்தை கெடுக்க வருகிறது என்றால் பொருத்தமா இருக்குமா?
// COOL SUTHAN said...
best of Luck kalai//
thanks suthan
/// ஹேமா said...
இங்கயும் ஒரு காதல் கிறுக்கனா !கலை உங்களைத்தான்.
கமல்,கவின்,ஆதவா,இனி நீங்களும்.///
ஆஹா எனக்கு முன் மூனு பேரா!!!
// ஹேமா said...
//கமல்...பெண்களிடம் மௌனமாக இருந்து பதிலை எதிர்பார்ப்பதை விட நாங்களாகப் பேசிப் பதிலை எதிர்பார்ப்பது சாலச் சிறந்தது என்று நினைக்கின்றேன்.//
கலை,கமல் சொல்றதைக் கவனமா கேட்டுக்கொள்ளுங்க.அனுபவசாலி அவர்.//
கட்டாயமா நீங்களும் தானே!!!
//உள்ளத்தில்
சுடர்விட்டெரியும்
தீயை
கண்ணீர் துளி
கொண்டு அணைக்க
முயல்கின்றேன்//
நல்லா இருக்கே
ஓ... காதலா அதெல்லாம் நமக்கு தெரியாதப்ப..
காதல் பிரிவை.. உணர்வுடன் பதிந்துள்ளீர்
பெண்களிடம் மௌனமாக இருந்து பதிலை எதிர்பார்ப்பதை விட நாங்களாகப் பேசிப் பதிலை எதிர்பார்ப்பது சாலச் சிறந்தது என்று நினைக்கின்றேன்.
*****************
ஆஹா... ஓஹோ.. அப்படியா???
அவங்ககிட்டை பேச தில் இருந்தா கவிதை எல்லாம் எழுதிட்டா இருப்பம்!
Post a Comment