கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Saturday, February 28, 2009

100வது பதிவும் எழுத்துச் சுதந்திரமும்

இது எனது நூறாவதுப்பதிவுங்க ஏதோ விளையாட்டா எழுத ஆரம்பித்து 100 பதிவு வரை உங்களுடன் பகிர்ந்து கொண்டதே பெரிய விடயம்.வலைப்பதிவு எழுத ஆரம்பித்ததிலிருந்து எவ்வளவோ முகம் காண நல்ல நண்பர்கள். ஒவ்வொரு பதிவிற்கும் பின்னூட்டத்தின் மூலம்மும், தங்களின் வலைப்பதிவில் தொடுப்பு தந்து, என்னை தொடர்ந்து வருவது மூலமும் ஊக்கம் தந்து, பிழைகளை சுட்டிக்காட்டி வலைப்பதிவிக்கு பலம் சேர்த்து என்னை ஊக்கப்பத்திய அனைத்து நண்பர்களுக்கும் மிக பனிவான வணக்கங்களும் நன்றிகளும்.நீங்கள் தான் என்னை இவ்வளவு தூரம் அழைத்து வந்துள்ளீர்கள்.

இன்னும் எவ்வளவு காலம் தொடர்ந்து எழுத சந்தர்பங்கள் அமைகின்றதோ தெரியவில்லை முடியும் வரை தொடர்ந்துக்கொண்டே இருப்பேன்.என்னுடைய அறுவல்களை நீங்கள் சகித்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்.........

ஒவ்வொரு நாளும் சொல்லிடங்கா துன்பங்களை அனுபவிக்கும் எம்மவர்கள் நிலை கண்டு வேதனையடைவது தான் மிச்சம். ஒவ்வொரு சம்பவங்கள் நடக்கும் போதும் எவ்வளவோ எழுத தோன்றியும் எழுத முடியாமல் இருக்கும் என் நிலை கண்டு வெட்கப்படுவதைத் தவிர வேறு என்ன சொய்வது.எதுவும் சொல்லமுடியாத நிலையில் இருக்கின்றோமா அல்லது அந்த நிலைக்கு தள்ளப்பட்டோமா தெரியவில்லை. உண்மையச் சொல்லப்போனால் இணையத்தளங்களில் செய்திகளை பார்ப்பவர்களை தவிர வேறு எவருக்கும் சரியான முறையில் என்ன நடக்குது என்றே தெரியாது. வெறும் பொய்ப்பிரச்சாரங்களை தான் நம்பியிருக்கின்றன்.காலம் காலமாக காலம் பதில் சொல்லும் எனற நம்பிக்கையில் இன்னும் எவ்வளவு காலம் தான் காத்திருப்பதோ தெரியவில்லை.வீசும் காற்றும் ஆர்ப்பரிக்கும் அலையும் எப்போதும் மிகத் திறமையான மாலுமியின் பக்கமே இருக்கும் என Edward Gibbon என்ற ஆங்கில வரலாற்று ஆசிரியர் ஒருவர் கூறுவது போல காத்திருப்போம்.

எழுத்துச் சுதந்திரம்

நான்
பேனையை ஏந்தினேன்
துப்பாக்கிக்கு அறிவூட்ட‌
அவன்
துப்பாக்கியை ஏந்தினான்
பேனையை அழிக்க‌!!

நான்
உண்மையைச் சொன்னேன்
மக்களை தெளிவாக்க‌
அவன்
பொய்யைச் சொன்னான்
மக்களை மூடனாக்க!!!

நான்
சரி என்றால்
அவன்
பிழை என்பான்

நான் பிழை என்றால்
அவன்
சரி என்கின்றானே!!

இதுயென்ன‌
பேனைக்கும்
துப்பாக்கிகும் ஒரு
யுத்தமா?
ஒன்று முடியும் முன்
இன்னொன்றா? அல்லது
ஒன்றோடு இன்னொன்றையும்
முடித்துவிடும்
சதியா?

நான்
நடந்ததை சொன்னால்
பயங்கிரவாதமாம்
அவன்
நடத்துவது பயங்கரவாதம்
கேட்டால்
அழித்து விடுவான் பின்
அறிக்கை விடுவான்
அழிந்தது பயங்கரவாதம்
என்று.

- சானா.கலை
இராகலை
Post a Comment
.