கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Wednesday, March 11, 2009

தியானம்


அன்பு,அமைதி, நிம்மதி, சந்தோஷம் போன்றவைகளை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம் என பொதுவாக நாம் வரையரை கூறலாம் என நான் நினைக்கின்றேன்.

தியானம் செய்வதற்காக பொதுவாக அமைதியான இடங்களையே தேர்ந்து எடுத்துக்கொள்வர். தியானத்தில் ஈடுபடும் போது, தான் விரும்பி வணங்கும் தெய்வத்தையோ , ஒரு பொருளையோ, அல்லது ஒரு கருத்தையோ நினைவில் நிறுத்திக்கொண்டு மன எண்ண ஓட்டங்கள் உருவாவதை தடுத்து நிறுத்துவதன் மூலம் அமைதியை அடையலாம் என்பதே தியானத்தின் நோக்கம் என எடுத்துக்கொள்ளலாம்.

மனதின் எண்ண ஓட்டத்தை துடுத்து நிறுத்துவதற்க்காக நமது ரிஷிகளும், முனிவர்களும் தியானம் செய்து வந்ததை நாம் புராணங்களில் படித்திருக்கின்றோம்.இப்படி தியானம் செய்பவர்கள் தன்னை வருத்திக்கொண்டு அதாவது ஒரு வேளை ஆகாரமருந்தி , மற்றும் நித்திரைக்கொள்ளாமல் தியானம் செய்ததாக நாம் கேள்விப்பட்டிடுப்போம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் இது எந்த வகையிலும் சரிவராத காரணியாகவே அமையும். அமைதியை தேட போய் உடலின் ஆரோக்கிய தன்மையை இழக்க வேண்டி வருமே தவிர அமைதியடைய முடையாது.மெலிந்தால் முனிவருக்கழகு என்பார்கள் ஆனால் நமக்கு எவ்வளவு பொருந்தும் என தெரியவில்லை எனக்கு.

என்னை பொருத்த வரை இப்படி எம்மை வருத்திக்கொண்டு எண்ண ஓட்டத்தை நிறுத்த வேண்டுமா என்பதே எனது கேள்வி. ஒரு அழகான பாடலையோ, இசையயோ அல்லது சம்பவங்களையோ நாம் கேட்டகும் போது பார்க்கும் போது எமது எண்ண ஓட்டம் நின்று ஓர் அமைதியான நிலைக்கு நாம் உந்தப்படுவோம். அந்த சந்தர்ப்பங்களில் நாம் எதையும் நினைப்பதில்லை எதற்கும் ஆசைப்படுவதுமில்லை.மெய் மறந்து அந்த பாடலை கேட்டேன் என நம்மில் பலர் சொல்ல கேட்டு இருக்கின்றோம், அதாவது நாம் செய்யும் எல்லா காரியங்களிலும் முழு மனதுடன் இருப்போமானால் மனதின் எண்ண ஓட்டத்தை நிறுத்த முடியும் ஆகவே எமக்கு
தனியே சென்று அமைதியான இடத்தில் தியானம் செய்ய வேண்டியிருக்காது.

ஒருவன் தன் முழு மனதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாதப்பட்சத்திலே தான் தனிமையான இடங்களுக்கு சென்று தியானம் செய்ய வேண்டி இருக்கின்றது. ஒருவன் தன் மனதை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க தனது மனதில் உள்ள எண்ண ஓட்டத்தை ஆழ்ந்து கவனித்துக்கொண்டு வர‌ வேண்டும் என கூறப்படுகின்றது. அப்படி கவனித்துக்கொள்ள சுய அறிவு அவசியாமாகும். அப்படி எமது மன எண்ண ஓட்டத்தை தெரிந்துக்கொண்டால் எம்முடைய ஆற்றலை நாமே உணர்ந்து கொள்ளலாம் அதன் மூலம் எமது புத்தி நுட்பத்தை அதிகரித்து கொள்ள முடியும்.இதன் மூலம் நாம் தெளிவான நிலையை அடையும் போது எது சரி பிழை என உணர்ந்து அதன் மூலம் அமைதியடையலாம்.

தன்னை தானே அறிய முடியாதப்பட்டச்த்தில் தான் தியானம் தேவைப்படுகின்றது அல்லது வேண்டப்படுகின்றது என கூறலாம்.
தியானம் தொடரும்......

முதல் பதிவு
தியானம்
http://ckalaikumar.blogspot.com/2009/02/blog-post_19.html

பி.கு:
## ஆதவா February 20, 2009 7:47 AM
மனதிற்குள் அமைதியை இருத்தும் நிலை, தியானம்.... ஆனால் நீங்கள் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம். உதாரணத்தீற்கு, தியானம் எப்படி செய்வது, அதன் வகைகள் (இன்னும் உண்டு) பலன்கள்... இப்படி பல எழுதியிருக்கலாம்...தியானம் செய்தவருக்குத்தான் தெரியும்... அமைதியின் முழுவடிவம்.

Sinthu February 21, 2009 8:28 PM
## அண்ணா தியானம் என்றால் என்ன? அதை தேடி பலா நாட்கள் அலைந்தவள் நான்..பலருக்கும் விளங்குவதட்காக கொஞ்சம் வரைவிலக்கணத்தைச் சொல்லுங்களேன்..

28 comments:

Anonymous said...

//தன்னை தானே அறிய முடியாதப்பட்டச்த்தில் தான் தியானம் தேவைப்படுகின்றது அல்லது வேண்டப்படுகின்றது என கூறலாம்.//

ம் ம்

kuma36 said...

//த.அகிலன் March 11, 2009 10:11 PM
//தன்னை தானே அறிய முடியாதப்பட்டச்த்தில் தான் தியானம் தேவைப்படுகின்றது அல்லது வேண்டப்படுகின்றது என கூறலாம்.//

ம் ம்///

வாங்க த.அகிலன்
மிக்க நன்றி சார் முதல் வருகைக்கும் கருத்திற்கும்.

தர்ஷன் said...

அடிப்படையில் நான் மத நம்பிக்கை அற்றவனாய் இருந்தாலும் தியானம் மன அமைதியை தரும் என்ற கருத்தில் உங்களோடு ஒத்து போகிறேன்.
புத்தரின் விபாசனா தியான முறையில் எனக்கு மிகுந்த ஈர்ப்பு உண்டு.

kuma36 said...

//தர்ஷன் said...
அடிப்படையில் நான் மத நம்பிக்கை அற்றவனாய் இருந்தாலும் தியானம் மன அமைதியை தரும் என்ற கருத்தில் உங்களோடு ஒத்து போகிறேன்.
புத்தரின் விபாசனா தியான முறையில் எனக்கு மிகுந்த ஈர்ப்பு உண்டு.//

வாங்க தர்ஷன் நன்றி உங்களின் கருத்திற்கு
மத நம்பிகை அற்றவர் என்றால்??
புத்தரின் விபாசனா தியான முறைப்பற்றி முடிந்தால் ஓர் குறிப்பு தாங்களேன்

தமிழ் மதுரம் said...

உங்களிட்டை நிறையப் படிக்க வேண்டியிருக்கிறது போல இருக்கே??

மிகுதி எப்ப வரும்??/ நல்ல தொகுப்பு...

தர்ஷன் said...

எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது
அதிலும் வர்ணாசிரம முறையின் காரணமாகவே எனக்கு ஹிந்து மதத்தில் சற்று கடுமையான வெறுப்பும் ஏற்பட்டிருந்தது. அத்தோடு நான் விஞ்ஞானம் கற்றல், கற்பித்தல் என அத்துறை சார்ந்து சென்றதால் விஞ்ஞானத்திற்கு புறம்பான விடயங்களை நிராகரிக்க வேண்டி வந்தது.
என்னை பொறுத்தவரை பௌத்தம் ஓரளவேனும் விஞ்ஞான முறையியலை ஒட்டிய வழி என கருதுகிறேன்.
விபாசனா என்ற சொல் பாளி மொழிச் சொல்லாகும். இதற்கு உள்நோக்கி பார்த்தல் என பொருள் கொள்ளலாம். அதாவது மனதின் பிரச்சினைக்கு புறப் பொருளில்( கடவுள் போன்ற) தீர்வு தேடுவதை விடுத்து மனதை ஒருநிலைப் படுத்தியதான உள்ளார்ந்த தேடலின், தியானத்தின் மூலம் ஞானம் பெரும் தியான முறையே இதுவாகும். நண்பர் ஒருவரின் சிங்கள நூலில் முன்பொரு முறை வாசித்தது. இணையத்தில் எங்கேனும் தேடிப் பார்த்தால் மேலதிக தகவல்கள் கிட்டலாம்.

kuma36 said...

///கமல் said...
உங்களிட்டை நிறையப் படிக்க வேண்டியிருக்கிறது போல இருக்கே??
மிகுதி எப்ப வரும்??/ நல்ல தொகுப்பு.///

வாங்க கமல் நன்றி. எங்கு போயிருந்திங்க? ரொம்ப வேளையோ? நானே ஒரு மின்னஞ்சல் அனுபலாம் என நினைத்தேன் வந்திடிங்க.

மீதி சீக்கிரம்

kuma36 said...

நன்றி தர்ஷன்

ஆதவா said...

ஆஹா... அருமையான தொடக்கம்... இதை நீங்கள் தொடர்வீர்கள் என்று நினைக்கவே இல்லை.. நிச்சயம் நான் உடன் வருவேன்..

உங்கள் கருத்துக்கள் எளிமையாகவும் புரியும்படியும் இருப்பது சிறப்பு... அதாவது அந்த பாடல் கேட்கும் விவரணையை விளக்கும் விதம் டாப்...

தொடருங்க... நான் வருகிறேன்.

ஆதவா said...

தன்னை தானே அறிய முடியாதப்பட்டச்த்தில் தான் தியானம் தேவைப்படுகின்றது////


யோசித்துப்பார்த்தால்.... இது உண்மைதான் நண்பரே!!!! அருமையான கருத்து!

kuma36 said...

// ஆதவா said...

ஆஹா... அருமையான தொடக்கம்... இதை நீங்கள் தொடர்வீர்கள் என்று நினைக்கவே இல்லை.. நிச்சயம் நான் உடன் வருவேன்..
உங்கள் கருத்துக்கள் எளிமையாகவும் புரியும்படியும் இருப்பது சிறப்பு... அதாவது அந்த பாடல் கேட்கும் விவரணையை விளக்கும் விதம் டாப்...
தொடருங்க... நான் வருகிறேன்.
வாங்க ஆதவா நான் தியான பயிற்சி செய்திருக்கின்றேன் என்றாலும் உங்களால் தான் தியானத்ப்பற்றி இன்னும் சில தேடல்கள் தொடங்கின. நன்றி//

வாங்க ஆதவா நான் தியான பயிற்சி செய்திருக்கின்றேன் என்றாலும் உங்களால் தான் தியானத்ப்பற்றி இன்னும் சில தேடல்கள் தொடங்கின. நன்றி

Anonymous said...

என்னை பொருத்த வரை இப்படி எம்மை வருத்திக்கொண்டு எண்ண ஓட்டத்தை நிறுத்த வேண்டுமா என்பதே???
///////////////////////
அதை நாம் விரும்பாத பட்சத்தில் எம்மை வருத்திகொண்டு செய்ய வேண்டிய அவசியமில்லை! அதனால் எதுவுத பயனும் கிட்ட போவதில்லை என்பதே நிதர்சனம்!
பாடலின் சந்த் விவரணம் கலக்கல்!
சந்த மிகுந்த செயற்பாடுகளை தியானம் என்றும் கூறலாமா??
(! )

ஹேமா said...

கலை,நல்ல விஷயம்.எனக்கும் அமைதி-தியானம் தேவைப்படுகிறது.
ஆனால் என் மன ஓட்ட உணர்வுகளைத் தடுக்கும் மனைதர்களைப்போல உள்ள அந்தத் தியானம் வேணாம் என்று நினைக்கிறேன்.காலப் போக்கில் பார்க்கலாம்.

சிவத்தமிழோன் said...

பல்கலைக்கழக கல்விச் சுமையினால் வலைப்பூக்களுடன் அடிக்கடி உறவாட முடிவதில்லை. போதிய நேரம் கிட்டும் சமயங்களில் வலைப்பூக்களை நுகரத் தவருவதுமில்லை. உங்களின் பல பதிவுகளை பல நாட்களின் பின்னர் பார்த்தேன். தங்களின் நூறாவது பதிவு கண்டு மகிழ்ந்தேன்.
தாமதமான வாழ்த்துக்கள்.
வாழ்த்தத் தவறுவதிலும் விட தாமதமாகவேனும் வாழ்த்துதல் அழகுடைய செயல் என நினைக்கிறேன்.

பெண்கள் நாளுக்கு மலையக தமிழ் சகோதரிகளின் வாழ்வியலை பதிவிட்டிருப்பது சாலச் சிறப்புடையது.

வாழ்க உங்கள் எழுத்துப்பணி
இடையிடையே வருவேன்....உரிமையுடன் பின்னூட்டங்கள் இடுவேன்.

தமிழ் மதுரம் said...

கலை தங்கள் மின்னஞ்சலைத் தந்துதவ முடியுமா??

நானும் நீங்களும் சேர்ந்து மலையக மக்களின் வாழ்க்கை முறை பற்றி ஒரு குரல் பதிவு போடுவோமா?? உங்களுக்கு ஆர்வமிருந்தால் melbkamal@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் போடுங்கோ

Anonymous said...

உங்களின் இந்த பதிவு யூத் விகடன் இணையத்தில் வந்திருக்கிறது...வாழ்த்துக்கள்...

kuma36 said...

// கவின் said...
என்னை பொருத்த வரை இப்படி எம்மை வருத்திக்கொண்டு எண்ண ஓட்டத்தை நிறுத்த வேண்டுமா என்பதே???
///////////////////////
அதை நாம் விரும்பாத பட்சத்தில் எம்மை வருத்திகொண்டு செய்ய வேண்டிய அவசியமில்லை! அதனால் எதுவுத பயனும் கிட்ட போவதில்லை என்பதே நிதர்சனம்!
பாடலின் சந்த் விவரணம் கலக்கல்!
சந்த மிகுந்த செயற்பாடுகளை தியானம் என்றும் கூறலாமா??
(! )///

வாங்க கவின்
ஊக்கத்திற்கு மிக்க நன்றி

kuma36 said...

//ஹேமா said...
கலை,நல்ல விஷயம்.எனக்கும் அமைதி-தியானம் தேவைப்படுகிறது.
ஆனால் என் மன ஓட்ட உணர்வுகளைத் தடுக்கும் மனைதர்களைப்போல உள்ள அந்தத் தியானம் வேணாம் என்று நினைக்கிறேன்.காலப் போக்கில் பார்க்கலாம்.//

வாங்க அக்கா
ம்ம்ம் எல்லோருக்கும் இப்ப அமைதி தேவைபடுகிறது

kuma36 said...

//கமல் said...
கலை தங்கள் மின்னஞ்சலைத் தந்துதவ முடியுமா??

நானும் நீங்களும் சேர்ந்து மலையக மக்களின் வாழ்க்கை முறை பற்றி ஒரு குரல் பதிவு போடுவோமா?? உங்களுக்கு ஆர்வமிருந்தால் melbkamal@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் போடுங்கோ///

நிச்சியமாக உங்களை தொடர்பு கொள்கிறேன்.

kuma36 said...

// சிவத்தமிழோன் said...

பல்கலைக்கழக கல்விச் சுமையினால் வலைப்பூக்களுடன் அடிக்கடி உறவாட முடிவதில்லை. போதிய நேரம் கிட்டும் சமயங்களில் வலைப்பூக்களை நுகரத் தவருவதுமில்லை. உங்களின் பல பதிவுகளை பல நாட்களின் பின்னர் பார்த்தேன். தங்களின் நூறாவது பதிவு கண்டு மகிழ்ந்தேன்.
தாமதமான வாழ்த்துக்கள்.
வாழ்த்தத் தவறுவதிலும் விட தாமதமாகவேனும் வாழ்த்துதல் அழகுடைய செயல் என நினைக்கிறேன்.
பெண்கள் நாளுக்கு மலையக தமிழ் சகோதரிகளின் வாழ்வியலை பதிவிட்டிருப்பது சாலச் சிறப்புடையது.

வாழ்க உங்கள் எழுத்துப்பணி
இடையிடையே வருவேன்....உரிமையுடன் பின்னூட்டங்கள் இடுவேன்.//

வாங்க சிவத்தமிழோன் உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. உங்களுடைய தளம் நான் தொடர்ந்து பார்பேன்.பின்னூட்டம் போடுமளவிற்கு இன்னும் ஞானம் பிறக்கவில்லை. காரணம் இன்னும் நெரைய படிக்க வேண்டியிருகிறது.

Anonymous said...

நிஜமாகவே நல்ல ஒரு ஆழ்ந்த கருத்துகளை உள்ளடக்கியுள்ளது உங்கள் பதிவு! வாழ்த்துக்கள் தோழரே!

நிகழ்காலத்தில்... said...

//இப்படி தியானம் செய்பவர்கள் தன்னை வருத்திக்கொண்டு அதாவது ஒரு வேளை ஆகாரமருந்தி , மற்றும் நித்திரைக்கொள்ளாமல் தியானம் செய்ததாக நாம் கேள்விப்பட்டிடுப்போம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் இது எந்த வகையிலும் சரிவராத காரணியாகவே அமையும். அமைதியை தேட போய் உடலின் ஆரோக்கிய தன்மையை இழக்க வேண்டி வருமே தவிர அமைதியடைய முடையாது.//

எதை வைத்து ஆரோக்கியம் இழக்கவேண்டியது வரும் என்று எழுதி
இருக்கிறீர்கள்..? ஒரு வார காலம் காலை உணவை முழுவதுமாக
ஒதுக்கியோ, அல்லது இயற்கையான காய் கனிகளை உண்டு பாருங்கள்
அதன் பின்னர் உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.
நன்றி

நிகழ்காலத்தில்... said...

www.vipassana.com/

www.dhamma.org/

kuma36 said...

வாங்க அறிவே தெய்வம் உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

///அறிவே தெய்வம் said...
//இப்படி தியானம் செய்பவர்கள் தன்னை வருத்திக்கொண்டு அதாவது ஒரு வேளை ஆகாரமருந்தி , மற்றும் நித்திரைக்கொள்ளாமல் தியானம் செய்ததாக நாம் கேள்விப்பட்டிடுப்போம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் இது எந்த வகையிலும் சரிவராத காரணியாகவே அமையும். அமைதியை தேட போய் உடலின் ஆரோக்கிய தன்மையை இழக்க வேண்டி வருமே தவிர அமைதியடைய முடையாது.//

/// எதை வைத்து ஆரோக்கியம் இழக்கவேண்டியது வரும் என்று எழுதி
இருக்கிறீர்கள்..? ஒரு வார காலம் காலை உணவை முழுவதுமாக
ஒதுக்கியோ, அல்லது இயற்கையான காய் கனிகளை உண்டு பாருங்கள்
அதன் பின்னர் உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.
நன்றி//

இன்றைய சூழ்நிலையில் எந்த காடுகளில் சென்று காய் கனிகளை உண்டு தியானம் செய்ய முடியும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்? அன்று அப்படி இருந்தவர்களை நான் பிழையாக கூறவில்லை என்பதை கொஞம் கவனத்தில் கொள்ளுங்கள்.இயற்கையான காய்கறிகளைப் பற்றியும் நான் எதுவும் கூறவில்லை. தாங்கள் எப்படி பொருள் கொண்டீர்கள் என எனக்கு தெளிவில்லை.பிழையாயின் எப்படி எழுதி இருக்க வேண்டும் என கூறினால் திருத்திக்கொள்வேன். நன்றி

மாதேவி said...

தியானம், மந்திர உச்சாடனம், யோகா, போன்ற பலவும் சமயம் சார்ந்தவற்றிக்கு அப்பால் மனஒருமைப்பாடு வளர்ச்சி மற்றும் உளநோய் சிகிச்சை ஆகியவற்றிலும் நிறையப் பயன்படுகிறது.

Anonymous said...

nann 10 varudangala dyana payirchi seidu varu giren.
dyanam enbadu tannai tane utrup parthal.
neengal eppaDi oru paravaiyaiyo alladu oru maraththaiyo enda vida ul padivum illamal parkkirirgala appdi ungalai yum parppadu.
dyanam pazhaga pazhaga, adu ungal vazhkaiyilum pradi balikka aarambikkum.NAAN enra ahngaram chatru valuvizhAKKUM.IDU EN ANUBHAVAM.
vetri tolvigalai enda badippum illamal samamaga parthal muyarchi illamale nadakkum
idu enn anu bavam.

Anonymous said...

\\இப்படி தியானம் செய்பவர்கள் தன்னை வருத்திக்கொண்டு அதாவது ஒரு வேளை ஆகாரமருந்தி , மற்றும் நித்திரைக்கொள்ளாமல் தியானம் செய்ததாக நாம் கேள்விப்பட்டிடுப்போம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் இது எந்த வகையிலும் சரிவராத காரணியாகவே அமையும். அமைதியை தேட போய் உடலின் ஆரோக்கிய தன்மையை இழக்க வேண்டி வருமே தவிர அமைதியடைய முடையாது.//

\\இன்றைய சூழ்நிலையில் எந்த காடுகளில் சென்று காய் கனிகளை உண்டு தியானம் செய்ய முடியும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?\\


நண்பரே,எது சரி வராது என இன்னும் தெளிவு படுத்தி இருக்கவேண்டும். காடுகளுக்கு சென்று
தவம் செய்வது தற்காலத்தில் சாத்தியமில்லை. அவசியமும் இல்லை. ஆமாம், தியானம் காட்டுக்கு சென்றால்தான் வருமா?
இங்கு வராதா?

\\ஒரு வார காலம் காலை உணவை முழுவதுமாக ஒதுக்கியோ, அல்லது இயற்கையான காய் கனிகளை உண்டு பாருங்கள்\\
ஆரோக்கியம் கெடாமல் தியானம் செய்யத்தான் வலியுறுத்துகிறேன்.

ஆரோக்கியம் இழப்பு என்று சொன்னதை மட்டும் ம்றுக்கிறேன்.

நம் முன்னோரை பிழை கூறியதாக நான் எங்கே சொன்னேன்..?

வாழ்த்துக்களுடன்.

Sinthu said...

அண்ணா சோகமே வாழ்க்கையான பின்னர் மனம் ஒரு நிலைப்பட மறுத்தால்.. என்ன செய்யலாம்? மன அமைதியைப் பெறுவதற்காகத் தான் தியானம், ஆனால் அந்தத் தியானத்தை வழிப் படுத்த முன்னர் சிறு அமைதி வேண்டுமே. எப்படி?

.