வறுமை வாட்டினாலும் சில
வரிகள் படித்து வைத்தோம்.
வரிகள் படித்துவைத்ததெல்லாம்
வளைந்து கொடுப்பதற்கோ!
பாடுகள் பல் பட்டும் பல
பாட்டுக்கள் கோர்த்து வைத்தோம்.
பாட்டுக்கள் கோர்த்து வைத்ததெல்லாம்
பாடையில் வைப்பதற்கோ!
ஏழ்மை தரித்திரத்திலும் சில
ஏட்டை எழுதுவித்ததெல்லாம்
ஏட்டுச்சுரக்காடய் ஆவதற்கோ!
பூ மாலை சாந்தி புரியாத பல
பூசைகள் செய்து வந்தோம்.
பூசைகள் செய்துவந்ததெல்லாம்
பூசாரி வாழ்வதற்க்கோ!
சக்கையாய் போனாலும் சில
சாப்தம் தேயிலைக்கே சந்தாகிப் போனோம்.
சத்தாகிப் போனதெல்லாம்
சந்தியாகி சாவதற்கோ!
இதுவோ! எம்விதி ?
இல்லை இல்லை
இது எமக்கான் சதி
இனியும் பொறுக்காது பொறுத்தால்!
இம்மண்ணே நிலைக்காது.
திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
1 comment:
//வறுமை வாட்டினாலும் சில
வரிகள் படித்து வைத்தோம்.
வரிகள் படித்துவைத்ததெல்லாம்
வளைந்து கொடுப்பதற்கோ!//
வளைக்கிறோம் என்று சம்மளித்துக் கொண்டு போனால் ஏறி மிதிக்கும் உலகம் இது..ஆரம்பத்திலேயே தட்டிக் கேட்ட தான் எங்களிம் பக்க நியாயம் எடுபடும்..
Post a Comment