உனக்கு சுடத்தெரியாது
இருந்த போதும்
உன் வீட்டு மூலை
முடுக்குகளிலும்
வேலியோரங்களிலும்
குப்பை மேடுகளிலும்
துப்பாக்கிகளும் ரவைகளும்
கண்டெடுக்கப்படும்
கைக்குண்டுகளை
நீ கண்டதும் கிடையாது
ஆனபோதும்
உன்பொதிகளுக்குள்
ஏகப்பட்ட குண்டுகள்
இருந்ததற்காய் நீ கைதவாய்
கத்திகளும் அரிவாளும்
நீ காடுகளை
வெட்டுவதற்குதான்
பயன்படுத்திருப்பாய்
ஆனால் கைகளும், கால்களும்
வெட்டப்பட்டதற்கான
அடையாளங்கள்
உன் வீட்டுக்கத்திகளில்
அடிக்கடி உன்னை
கைது செய்வார்கள்
எங்கெங்கோ வெடிக்கின்ற
குண்டுகளுக்கு,
அடையாள அணிவகுப்பிற்காய்
அழைத்திருப்பர் உன்னையும்
அரச மரியாதையுடன்,
திட்டுவதற்கே
யோசிகின்ற உன் பெயர்தான்
தீவிரவாதிகளின் பட்டியலில்
முதலில் இருக்கும்
நன்றி
நாச்சியாதீவு பர்வீன்
நூல் : சிரட்டையும் மண்ணும்.
2 comments:
யதார்த்தம் சொல்லும் அருமையான கவிதை.
சாந்தி
நியமாக நடப்பவற்றைத் தான் சொல்லியிருக்கிறீர்கள் அண்ணா.
கவலையான் விடயம் தான் ஆனால் அருமையான கவிதை வரிகள்.
Post a Comment