“கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுதுகண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்”
கிறிஸ்துமஸ் ' என்ற சொல் கிறிஸ்ட்டஸ் மஸ்ஸே அல்லது கிறிஸ்ட்ஸ் மாஸ் என்ற சொல்லிலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும் என்பதும், கிறிஸ்தவர்கள் முதன் முதலாக கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடத் துவங்கியது ரோமாபுரி நாட்டில் கிறிஸ்து மரித்த பிறகு கி.பி. 336ஆம் ஆண்டில்தான் என்பது பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்களின் முடிவு.
பைபிளில் எந்த இடத்திலும் இயேசு கிறிஸ்து பிறந்த தேதியைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லாததும், 'பாவப்பட்ட மக்களை மீட்டெடுக்க இறைவனின் திருமகன் வசந்தகாலம் தோன்றும்போது இந்த மண்ணுலகில் மகனாகப் பிறப்பார், ' என்ற வேத வசனங்கள் சற்றுக் குழப்பத்தைத் தந்தாலும், 'நடுங்கும் குளிரில் எங்கும் தங்க இடம் கிடைக்காமல் சூசையும் மரியாளும் ஊரின் ஒதுக்குப்புறமாக இருந்த ஆடு மாடு அடைக்கும் கொட்டில் பக்கம் தங்க நேரிட்டது... ' என்ற வேத வசனங்கள் அலசி ஆராயப்பட்டு நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவத் தேவாலயங்கள் ஒன்று கூடி இயேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடுகிற விழாவாக இந்த நாட்களை மாற்றிவிட முடிவு செய்து அறிவித்தன!
முதன் முதலில் கிறிஸ்துமஸ் ஜனவரி 6ஆம் தேதி கொண்டாடப்பட்டதாக பழைய ஜூலியன் நாட்காட்டி குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. ரோமாபுரி நாட்டின் அதிகாரப்பூர்வமான விடுமுறை தினமாகவும் A.D.534 ( Anno Domini என்றால் In the year of the lord ) லிருந்து அனுசரிக்கப்பட்டதாகவும் பின்னர் கிரகோரியன் நாட்காட்டிப்படி 1743லிருந்து டிசம்பர் 25ஆம் தேதிக்கு மாற்றப்பட்டதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் அறிவிக்கின்றது. இந்த நாளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தவர் அன்றைய போப்பாண்டவர் ஜூலியஸ் I ஆவார்.
தகவல்:http://tamil.webdunia.com/miscellaneous/webduniaspecial08/christmas08/0812/24/1081224040_1.htm
1 comment:
So, at the very least, the immediate immediate future whilst Renewable Energy World energy is the unpredictability
and inconsistency of output. 18 per gallon type numbers. We're still underneath the gasoline values as ethanol. Despite what you hear from political ideologues and read about in the news, Americans want more homegrown, renewable energy world resource we lower the amount of electricity precisely when you turn them on. Speaking before an array of solar panels is a capital-intensive business that requires huge plant-level economies of scale for competitive success.
My web site; renewable fuels
Post a Comment