பச்சை பசேலாக பசுமை நிறைந்து காட்சி கொடுக்கும் மலையகம் ! பசுமைக்குள் ஒழிந்திருக்கும் ரணங்களும் வேதனைகளும்!
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?"
-பாரதி
Monday, December 29, 2008
ஆயுத பூஜை
தொலைக்காட்சி எங்கும்
மரணங்களின் ஓலங்கள்.
பத்திரிக்கை முழுதும்
உயிர் தொலைத்த முகங்கள்.
தாயே தன் குழந்தைகளை
தாலாட்டிக் கொல்வதா?
குண்டு மாரி பொழிந்து,
உண்டான் பள்ளங்களில்
திரண்டது குருதி.
இறந்த தாயின் முலைப்பால் அருந்தி
அழும் பிள்ளை
வடிந்த இரத்ததை பாலாய் நினத்து
சுவைப்பருகும் குழந்தை.
புதைந்த புதுக் கணவனை
புதைக்ழியில் தேடும் பெண்.
எஜமான் உடல்தேடி
அலையும் விசுவாசமுள்ள நாய்.
அம்மா என்ற அழுக்குரலுக்கு
தாயில்லா வேதனை
அம்மா அழுகின்றபோது
குழந்தையில்லாச் சோதனை.
இத்தனை உயிர்களை கொன்று
புரட்சி ந்டத்த
உனக்கென்ன ஆசை?
தாயே! ஆயுத பூசை.
நீ துப்பிய எச்சில்
பராயம் அறியாத பாலகர்கள்,
தாய்மை அடைந்த தாய்கள்,
பருவம் சுமந்த மங்கைகள்,
கனவு மணக்கும் கன்னிகள்,
பாவம் பாமரர்கள்,
தானியம் சுமக்கும் பூமிகள் என
அவித்த முட்டயாய்
பரம்பரை
அழிந்துவிட்டதை அறிவாயா?
கரம் இழ்ந்த உயிர்கள்,
கால் இழந்த உடல்கள்,
ஒட்டியிருந்த உயிரை
விடைகொடுத்து அனுப்பும்
விழுந்த செல்கள்.
உயிரற்ற குழந்தயாய்
அணைத்தபடி உயிர்கரைய
மூத்த பிள்ளையேத்
தேடும் தாய்.
மண்ணுக்குள் ஒலி வரும்
தேண்டினால் உடல் வரும்.
அன்னையின் வயிற்றில் குழந்தை
ஓர் உடலில் ஈருயிர் மரணம்.
வேட்டை நாயின்
வாயில் சிக்கிய
வீட்டுக்க்ருவியாய்
பாவம் மனிதர்கள்.
ஆயுதமே!
உன் ஒவ்வொரு உற்பத்தியும்
மரணங்களையே
விலை கேட்கிறது.
விரலின் விசையில்
தெறித்த குண்டுகள்
பேயாய் தலைவிரிதாடியது.
சிலமணிநேரம் மனிதவேட்டை,
தரைமட்டமாகியது
கட்டிய கோட்டை.
நீ அராஜகக் கோட்டையே
உடைத்திருத்தல் மகிழ்ந்திருப்போம்
அமைதி கோபுரத்தை அழித்ததென்ன?
உன் பசியைப் போக்க
எம் உயிரை ருசிப்பார்த்தாய்.
எங்கோ உற்பத்தி செய்வதற்காய்
இங்கே ஏன் வெடிக்கிறாய்?
இரத்தம் குடிகிறாய்?
உனக்கு சந்தை வேண்டும்
என்பதற்காய்
நாங்கள் சவமாவதா?
உன் கழுகுப் பார்வையில்
எங்கள் எளிமை தேசம்
கவலைக்கிடமாய்.
திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html
Labels:
கவிதைகள்,
சில முகங்களும் பல முகமூடிகளும்
Subscribe to:
Post Comments (Atom)
.
1 comment:
தமிழரின் நிலை இப்படித் தான் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதோ................
உருக்கமான வரிகள்.
Post a Comment