கெளதம புத்தர் ஜேத வனத்தில் தங்கியிருந்தபோது அவரிடம் கேட்ட சில கேள்விகளும் அவரின் பதில்களும்.
மிகவும் கூர்மையான வாள் எது?
கோபத்தில் கூறப்படும் வார்த்தை
மிகவும் கொடிய நஞ்சு எது?
எல்லாம் எனக்கு வேண்டும் என்கின்ற எண்ணம்
மிகவும் பெரிய தீ எது?
ஆசை
மிகவும் இருள் நிறைந்த இரவு எது?
அறியாமை
மிகப் பெரிய பலனை அடைபவன் யார்?
பிறருக்கு தருபவன்
அனைத்தையும் இழப்பவன் யார்?
பிறரிடம் பெறும், அதனை ஈடு செய்யும் வகையில் மற்றவர்களுக்கு கொடுக்காதவன்.
தோல்வி அடையாத ஆயுதம் எது?
பொறுமை
மிகச் சிறந்த ஆயுதம் எது?
ஆறிவு
மிகப்பயங்கரமான திருடன் யார்?
தீயசிந்தனை
மிக மேலான் செல்வம் எது?
தர்மம்
மிகவும் பாதுகாப்பான் புதையல் எது?
மரணமிலாப் பெருநிலை
வசிகரமானது எது?
நன்மை.
9 comments:
கெளதம புத்தர் ஜேத வனத்தில் தங்கியிருந்தபோது அவரிடம் கேட்ட சில கேள்விகளும் அவரின் பதில்களும்.
மிகவும் கூர்மையான வாள் எது?
கோபத்தில் கூறப்படும் வார்த்தை
மிகவும் கொடிய நஞ்சு எது?
எல்லாம் எனக்கு வேண்டும் என்கின்ற எண்ணம்
மிகவும் பெரிய தீ எது?
ஆசை
மிகவும் இருள் நிறைந்த இரவு எது?
அறியாமை
மிகப் பெரிய பலனை அடைபவன் யார்?
பிறருக்கு தருபவன்
அனைத்தையும் இழப்பவன் யார்?
பிறரிடம் பெறும், அதனை ஈடு செய்யும் வகையில் மற்றவர்களுக்கு கொடுக்காதவன்
//
அத்தினைக்கும் பதில் மகிந்தர் என்று சொல்லியிருக்கலாம்
இவைகள் யூகம்தான்.... சரி, நம்ம கோக்குமாக்கான மூளையை உபயோகிச்சுப் பார்ப்பம்.. என்ன வருதுன்னு..
மிகவும் கூர்மையான வாள் எது?
கோபத்தில் கூறப்படும் வார்த்தை
அந்த வார்த்தை எதைப் பற்றியது என்பதில் அடங்கியிருக்கிறது கூர்மை....
மழுப்பலான வார்த்தையும் (வாள்) கூட ஆபத்தானதுதான்...
மிகவும் கொடிய நஞ்சு எது?
எல்லாம் எனக்கு வேண்டும் என்கின்ற எண்ணம்
எல்லாம் எனக்கு வேண்டும் என்ற எண்ணம் தவறா??? மனிதன் வாழ்வதே அதற்காகத்தானே....
மிகவும் பெரிய தீ எது?
ஆசை
புத்தரே சந்நியாசியாக ஆசைப்பட்டாரே!!!! ஆசைகள்தான் வாழ்வின் அர்த்தங்கள்.... அது அடுத்தவரைக் காயப்படுத்தாத வரையிலும்..
மிகவும் இருள் நிறைந்த இரவு எது?
அறியாமை
உண்மைதான்.... சிலர் அறியாமலேயே பகல் நட்சத்திரங்களாக பிறக்கிறார்கள்...
மிகப் பெரிய பலனை அடைபவன் யார்?
பிறருக்கு தருபவன்
நிச்சயமாக இல்லை தனக்கில்லாதவன் பிறருக்குத் தர, எப்படி பலன் அடைவான்?
தோல்வி அடையாத ஆயுதம் எது?
பொறுமை
பல சமயங்களில் பொறுமை கூட ஆயுதம் தான்
மிகச் சிறந்த ஆயுதம் எது?
ஆறிவு
அறிவுதானே இன்றைக்கு மனிதன் கொல்லப்படுவதற்குக் காரணமாகிறது... என்று மனிதனுக்கு அறிவு வளர ஆரம்பித்ததோ, அன்றிலிருந்தே உலகம் கல்லறைகளை நிரப்பிக் கொண்டிருக்கிறது
மிகப்பயங்கரமான திருடன் யார்?
தீயசிந்தனை
யெஸ்ஸ்....... மாற்ற முடியாதது
மிக மேலான் செல்வம் எது?
தர்மம்
இல்லவே இல்லை... தனக்கென வாழும் வாழ்வே மேலான செல்வம்.. தன்க்கு மீறிதான் தர்மமே!! சும்மாவா சொன்னாங்க, தனக்கு மீறிதான் தானமும் தர்மமும்
மிகவும் பாதுகாப்பான் புதையல் எது?
மரணமிலாப் பெருநிலை
மரணம் என்பது ஒவ்வொரு மனித வாழ்வுக்கும் முடிவு நிலை.. மரணமில்லாமல் போனால் மனிதனுக்கு சலிப்பு வந்துவிடும்.. மேலும், இறப்பு என்று ஒன்று இருப்பதால்தான் உலகமே இருக்கிறது...
வசிகரமானது எது?
நன்மை.
யோசித்து செய்யாத நன்மையும் தீமையே!!
ஏதோ,... நம்மளால முடிஞ்சது...
வாழ்த்துக்கள் சார்
வருகைக்கு நன்றி கவின். யுத்தத்தின் ஒத்தகருத்துச் சொல்லாக கூட எடுத்துக்கொள்ளலாம் அந்த பெயரை
///இவைகள் யூகம்தான்.... சரி, நம்ம கோக்குமாக்கான மூளையை உபயோகிச்சுப் பார்ப்பம்.. என்ன வருதுன்னு.///
ஆதவா
உங்களைப்பற்றி தான் தெரியுமே நீங்கள் நல்லவரு ரொம்ப வல்லவரு. நாலு விஷயம் தெரிஞ்சவரு. சூப்பரா எழுதியிருந்திங்க தேவா!!
யுத்தம் யாதுமாகி இருக்கிறது என்று புத்தம் சொல்கிறது...? தத்ததுவம்
நித்தம், நித்தம் ரத்தம் காணும் நமக்கல்லவோ புரிகிறது அதன் யதார்த்தம்.....
மிகவும் கொடிய நஞ்சு எது?
பயங்கிரவாதம் அல்லது பயங்கிரவாதிகள்//
இது எந்தப் பயங்கரவாதம்??
தங்கராசா ஜீவராஜ் said...
// யுத்தம் யாதுமாகி இருக்கிறது என்று புத்தம் சொல்கிறது...? தத்ததுவம்
நித்தம், நித்தம் ரத்தம் காணும் நமக்கல்லவோ புரிகிறது அதன் யதார்த்தம்.....///
இந்த யாதார்த்தம் எப்போது புரியும் புத்தத்திற்க்கு?
Blogger கமல் said...
மிகவும் கொடிய நஞ்சு எது?
பயங்கிரவாதம் அல்லது பயங்கிரவாதிகள்//
//இது எந்தப் பயங்கரவாதம்??//
கமல் இலங்கை அரசின் பயங்கரவாதம் என உங்களுக்கு தெரியாதா என்ன
புனிதமான மதத்தில் பிறந்த இவர்களுக்கு ஏன் இந்த பேராசை... எப்போது புரிந்து கொள்வார்கள்..?
Post a Comment