கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Wednesday, February 4, 2009

மனிதனுக்குள்ளே இருகின்ற விஷம்


"பொருத்தார் பூமி ஆள்வார்கட", "பொருமை கடலை விட பெரிது" , நல்லதோ கெட்டததோ பொருமை கொண்ட மனிதர்கள் திகைப்போ அச்சமோ கொள்ள மாட்டார்கள் அவர்கள் எப்போதுமே அமைதியாய் தான் இருப்பார்கள், என்பதெல்லாம் பெரியோர்களின் கூற்று. இப்படி இருக்கையில் தொட்ட தொன்னூறுக்கும் கோபம் கொள்பவர்களே அதிகம்.அன்றாட வாழ்க்கையில் வீட்டிலோ,பாடசாலைகளீளோ,அலுவலகங்களிளோ எத்தனையோ பேர் கோபம் கொள்வதை பார்த்திருப்போம். கோபம் வந்தவுடன் யார் எவர் என்ற வித்தியாசமே இல்லாமல் தனக்கு கிடைத்த வார்த்தைகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அள்ளி வீசிவிடுவார்கள்.


அப்படிப்பட்டவர்கள் ஒரு கனமேனும் சிந்திப்பதில்லை வார்த்தைகளின் வலியை. வார்த்தைகளால் வசைப்பாடிவிட்டு பின் வருந்துவதெல்லாம் கண்கெட்ட பின் நமஸ்காரமே, அவர்களின் வருத்ததால் பாதிக்கப்பட்டவருக்கு எந்த பிரயோசனமும் இல்லை.கோபம் இருக்கின்றவனிடம் குணம் இருக்கும் என்பதெல்லாம் வெறும் வாய்ப்பேச்சாகவே தான் இருக்கமுடியும்.இப்படிதான் நான் முன்பு வேளை செய்த நிறுவனத்தின் இயக்குனர் திடிரேன கோப்பட்டு தனது ஒரு லட்சம் பெருமதியான கையடக்க தொலைபேசியை ஓங்கி அடித்து நொருக்கி விட்டார் பிறகு அதற்க்காகவே வருந்தியும் கொண்டார்.கோபம் தீ போன்றது எரிய கூடிய பொருளை எரித்துவிட்டு பின் தானும் அணைந்து போகின்றது அதனால் எந்த பயனும் இல்லாத போது ஏன் நாம் அனாவசியமாக கோபப்படவேண்டும்.



கோபத்தால் அழிந்து போன எத்தனையோ சாம்ராஜியங்களை படித்திருக்கின்றோம் எத்தனையோ கல்விமான்கள் கோப்பத்தைப்பற்றி பல கருத்துக்களை சொல்லியும் கோபப்படுவதென்பது இன்னும் எம்மிடம் குறைந்தப்பாடில்லை, காரணம் இன்னும் புரியவில்லை. கோபம் முதலில் கோபப்ப‌டுபவனைதான் முதலில் நிலைகுலைய செய்கின்றது பின்புதான் மற்றவர்களை பாதிக்கின்றது.புகைத்தல் புற்று நோயை உண்டுப்பண்ணும் என்று தெரிந்தே புகைப்பவர்களும், கோபம் தன்னையே அழிக்கும் என்று தெரிந்தே கோபப்படுபவர்களும் அவர்களே பார்த்து சிந்தித்து நடந்து கொண்டால் தான் உண்டு. கடுமையான சொல், கோபம் போன்றவை மனிதனுடைய வீரியகுணங்களால் உருவானவை என்பார்கள் ஆகவே ஒரேடியாக அவைகளை நிறுத்த முடியாவிட்டாலும் மெல்ல மெல்ல மெல்ல முயன்றால் முடியாது என்பது கிடையாது. மனிதனுக்குள்ளே இருகின்ற விஷம் கோபம் மட்டும் தான்
கோபத்தை அன்பாலும், தீமையை நன்மையாலும், பேராசையைத் தாராள குணத்தாலும், பொய்யை உண்மையாலும் வெற்றிக்கொள்

7 comments:

Sinthu said...

"அப்படிப்பட்டவர்கள் ஒரு கனமேனும் சிந்திப்பதில்லை வார்த்தைகளின் வலியை. வார்த்தைகளால் வசைப்பாடிவிட்டு பின் வருந்துவதெல்லாம் கண்கெட்ட பின் நமஸ்காரமே"
முற்றிலும் உண்மை தான் அண்ணா...........
(அனுபவம்)

Prapa said...

கலைக்குமார் சிந்து சொல்றத நல்ல கேளுங்க ... அப்பத்தான் முன்னுக்கு வரலாம் .

kuma36 said...

அப்படி என்ன அனுபவம் சிந்து, நீங்க கோபப்பட்டிங்களா? அல்லது வாங்கிகட்டிகிட்டிங்களா?

kuma36 said...

வருகைக்கு மிக்க நன்றி பிரபா.

//சிந்து சொல்றத நல்ல கேளுங்க ... அப்பத்தான் முன்னுக்கு வரலாம் //


கட்டாயமா கேக்கனும். சிந்து சொல்லுவதை மட்டுமல்ல நீங்க சொன்னதையும், யாரு சொன்னாலும் ஆனால் முடிவை நம்ம தான் எடுக்கனும் அப்பதான் முன்னுக்கு வரலாம்

Prapa said...

ஓகே, நல்ல பிள்ளை கலை . உங்க "கலை" பயணம் தொடர என் நல் ,வாழ்த்துக்கள் கலை.

malar said...

நல்ல பதிவு ..

கோபம் கொள்ளுவோம் என்று தெரிந்தே பழக்கம் தருவார்கள் .கோப பட்டு முடிந்த பிறக்கு தான் ஞானம் பிறக்கும்

malar said...

சரி !என்னை ஒருத்தர் தாறுமாறாக திட்டுகிறார் அவர் கோபபடும் வேகம் 100 டிகிரிக்கு மேல் அந்த நிலையில் நான் என்னசெய்ய வேண்டும் ? உங்கள் பதிலை என்பதிவுக்கே அனுப்புங்கள் .நன்றி

.