இதுதான் இலங்கை பாராளுமன்றத்தின் அதிகாரச் சின்னமாகத் திகழும் செங்கோல்.நேர்த்திமிக்க அலங்கரிப்பும் புரதான வணக்கத்தலங்களின் வடிவமைப்பையும்,அலங்காரத்தினையும் கொண்டதாக இது காணப்படுகிறது.
அத்துடன் பாராளுமன்ற ஆட்சியின் விழுமியங்களையும்,தத்துவ கோட்பாடுகளையும் குறிக்கும் நித்தியதன்மை,அழகு,பரிபூரண
சமாதானம்,நிரந்தரத் தன்மை,வளர்ச்சி, செழுமை,தூய்மை என்பவற்றின், அடையாளமாக இது திகழ்கிறது. செங்கோலானது பாராளுமன்றத்தில் சபாநாயகரின் அதிகாரச்சின்னமாகவும் திகழ்வதால் பாராளுமன்றம் கூடும் போது செங்கோல் வைக்கப்படுவது அவசியமாகும்.

இப்படிப்பட்ட செங்கோலை ஆளுங்கட்சியின் அமைச்சர் ஒருவர் அதனை தூக்கிக் கொண்டு சபையைவிட்டு ஓடினார்,ஓடிய அவர் அதனை எங்கோ ஒளித்து விட்டு பின்னர் பிற்பகலில் அது மீட்கப்பட்டது , என்பதலாம் வேறுவிடயம். சரி நாம் விசயதுக்கு வருவோம்.
செங்கோல் 1949 ம் ஆண்டு பிரித்தானியப் பொதுச்சபையினால் இலங்கைப் பிரதிநிதிகள் சபைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அது 28 இறாத்தல் நிறையைக் கொண்டுள்ளதோடு 48 அங்குல நீளமுடையது. இச் செங்கோல், கருங்காலி மரத்தினால் செய்யப்பட்டு, வெள்ளி, 18 கரட் தங்கம், நீலமாணிக்கக்கற்கள் என்பவற்றினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் சபாமண்டபத்திற்கு வருகை தரும் போதும், வெளியேறும் போதும், அவருக்கு முன்னே, படைக்கலச்சேவிதர் செங்கோலை ஏந்தியபடி செல்ல, அவரைத் தொடர்ந்து பாராளுமன்றச் செயலாளர் நாயகமும், பிரதிச் செயலாளர் நாயகமும் உதவிச் செயலாளர் நாயகமும் செல்வர்.
பாராளுமன்ற அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கான மேசைக்குக் கீழே, அதற்கென அமைக்கப்பட்டுள்ள தாங்கியில் செங்கோல் காணப்படும்.
செங்கோல் மட்டுமே இருக்கும், ஆனால் செங்கோல் ஆட்சி.......???.....
20 comments:
செங்கோல் மட்டுமே இருக்கும், ஆனால் செங்கோல் ஆட்சி.......???..... //
அது சரி...இதைத் தானே றக்பி பந்து மாதிரி ஆள் மாறி ஆள் எடுத்துக் கொண்டு போய் ஓடி விளையாடுறாங்கள்?
பேசாமல் இலங்கையில் கொடுங்கோல் என்று பேரை மாற்றியிருக்கலாம்..
நல்ல அலசல்... இப்படி ஒரு கோல் இருப்பதே எனக்கு இப்பொழுதுதான் தெரியும்... பகிர்தலுக்கு நன்றி கலை. இறுதி கேள்விக்கு பதில்????
யாரிடமும் இல்லை
"செங்கோல் மட்டுமே இருக்கும்,
ஆனால் செங்கோல் ஆட்சி.......???..... //"
அதுக்கும் இலங்கைக்கும் வெகு துரம் கலை. இப்ப செங்கோல் ஆட்சி இல்ல் அது வேற கோல் ஆட்சி நடக்குதென்று........................ ஐயோ இனி வேண்டாம் ஆளவிடுங்க சாமி...
கலை,என்ன திடீர் என்று எங்கள் செங்கோலைப் பற்றிய ஒரு நினைவு-அலசல்.உது எங்களுக்குத் தேவையிலாத ஒன்று.
பிரயோசனமில்லாத ஒரு தடி.
சாக்கடை கழுவவும்,இலங்கைப் பாரளுமன்றத் தூசுக்கள் துடைக்கவும் பாவிக்க உதவும் ஒரு தும்புத்தடி.
உதைப் பற்றின கதை எங்களுக்கெதுக்கு !
அதையும் ஒவ்வொருத்தனும் தூக்கிக் கொண்டு ஓடி ஒளிச்சு வேற வைக்கிறாங்கள்.
/// கமல் said...
செங்கோல் மட்டுமே இருக்கும், ஆனால் செங்கோல் ஆட்சி.......???..... //
அது சரி...இதைத் தானே றக்பி பந்து மாதிரி ஆள் மாறி ஆள் எடுத்துக் கொண்டு போய் ஓடி விளையாடுறாங்கள்?
பேசாமல் இலங்கையில் கொடுங்கோல் என்று பேரை மாற்றியிருக்கலாம்..
வாங்க கமல்
மாற்ற தேவையில்லை கமல் அது தானாகவே மாறிவிட்டது.
//ஆதவா said...
நல்ல அலசல்... இப்படி ஒரு கோல் இருப்பதே எனக்கு இப்பொழுதுதான் தெரியும்... பகிர்தலுக்கு நன்றி கலை. இறுதி கேள்விக்கு பதில்????
யாரிடமும் இல்லை///
வாங்க ஆதவா
யாரிடமும் பதில் இல்லை என்பது தான் வருத்தமாயிருக்கின்றது.
// சந்ரு said...
"செங்கோல் மட்டுமே இருக்கும்,
ஆனால் செங்கோல் ஆட்சி.......???..... //"
அதுக்கும் இலங்கைக்கும் வெகு துரம் கலை. இப்ப செங்கோல் ஆட்சி இல்ல் அது வேற கோல் ஆட்சி நடக்குதென்று........................ ஐயோ இனி வேண்டாம் ஆளவிடுங்க சாமி...//
வாங்க சந்துரு.
// ஹேமா said...
கலை,என்ன திடீர் என்று எங்கள் செங்கோலைப் பற்றிய ஒரு நினைவு-அலசல்.உது எங்களுக்குத் தேவையிலாத ஒன்று.
பிரயோசனமில்லாத ஒரு தடி.
சாக்கடை கழுவவும்,இலங்கைப் பாரளுமன்றத் தூசுக்கள் துடைக்கவும் பாவிக்க உதவும் ஒரு தும்புத்தடி.
உதைப் பற்றின கதை எங்களுக்கெதுக்கு !
அதையும் ஒவ்வொருத்தனும் தூக்கிக் கொண்டு ஓடி ஒளிச்சு வேற வைக்கிறாங்கள்.//
வாங்க அக்கா
உண்மையாகவே நமக்கு தேவையில்லாத விடயம் தான். இப்படியொரு பொருளையும் வைத்துக்கொண்டு சும்மா மக்களை ஏமாற்றுவதை நாள்பேரு தெரிஞ்சிகட்டுமேனுதான்.. (தெரிஞ்சிகிட்டு என்ன தான் செய்றது!)
இலங்கை பராளுமன்றத்தின்
செங்கோல் அழகானது.
பாவம்!
அது அழகான செங்கோல்
பார்த்ததே இல்லை.!
அடடே புதுசா ஒருத்தரை சந்திக்கிறதில மகிழ்ச்சி.. இனி அடிக்கடி வருவன்... எனக்கும் பதிவுலக நண்பர்கள் போதாது என்ற பீலிங் இருக்கு...
இப்ப கமண்டுக்கு போவம்...
ம்ம்...அந்த செங்கோலிண்ட பக்ரௌண்ட் சிவப்பாக இருப்பது தற்செயலானதா திட்டமிடப்பட்டதா?ஏனெனில் முதலில் பார்த்தவுடனே இரத்தத்தில் மிதப்பது போல் தெரிந்தது... உண்மையும் அதுதானே? என்ன நான் சொல்லுறது :)?
//SASee said...
இலங்கை பராளுமன்றத்தின்
செங்கோல் அழகானது.
பாவம்!
அது அழகான செங்கோல் //
வாங்க சசி, நல்லா சொன்னிங்க!
//புல்லட் பாண்டி said...
அடடே புதுசா ஒருத்தரை சந்திக்கிறதில மகிழ்ச்சி.. இனி அடிக்கடி வருவன்... எனக்கும் பதிவுலக நண்பர்கள் போதாது என்ற பீலிங் இருக்கு...//
வாங்க புல்லட் பாண்டி உங்கள் வருகைக்கு நன்றி. எனக்கும் அந்த பீலிங் இருக்கு.
//இப்ப கமண்டுக்கு போவம்...
ம்ம்...அந்த செங்கோலிண்ட பக்ரௌண்ட் சிவப்பாக இருப்பது தற்செயலானதா திட்டமிடப்பட்டதா?ஏனெனில் முதலில் பார்த்தவுடனே இரத்தத்தில் மிதப்பது போல் தெரிந்தது... உண்மையும் அதுதானே?//
திட்டமிட்டது தான் நான்னல்ல இலங்கையின் இனவிரோதிகளால்! அவர்களுக்கு இரத்தத்தின் மேல் அப்படி ஒரு ஈர்ப்பு.ம்ம்ம்ம்ம்ம்
"செங்கோல் மட்டுமே இருக்கும், ஆனால் செங்கோல் ஆட்சி.......???..... "
இதுக்கான விடை எல்லாத் தமிழர்களுக்குமே தெரியும் ஆனால் சொல்ல மாட்டாங்க..
konjam therinthu konden
செங்கோலாட்சியெங்கே இலங்கையில் ? எல்லாம் கொடுங்கோல்தானே.எப்போதோ மறந்து போன செங்கோலை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றிகள்.
சாந்தி
யார் சொன்னது! கால் பந்தாட்ட காரங்களால மட்டும்தான் வலைக்குள்ள கோல் போடமுடியும்னு....
எங்க கலை-இராகலை யாலயும் முடியும்.... வலைக்குள்ள கோல் (பற்றி) போடறதுக்கு!!
செங்கோல் பற்றிய பதிவு எனக்கு புதியது நண்பா!
// Sinthu said...
"செங்கோல் மட்டுமே இருக்கும், ஆனால் செங்கோல் ஆட்சி.......???..... "
இதுக்கான விடை எல்லாத் தமிழர்களுக்குமே தெரியும் ஆனால் சொல்ல மாட்டாங்க..//
வாங்க சிந்து. ம்ம்ம்ம்
//MayVee said...
konjam therinthu konden///
வாங்க MayVee உங்கள் வருகைக்கு நன்றி சார்
//tamil24.blogspot.com said...
செங்கோலாட்சியெங்கே இலங்கையில் ? எல்லாம் கொடுங்கோல்தானே.எப்போதோ மறந்து போன செங்கோலை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றிகள்.
சாந்தி//
வாங்க அக்கா. ம்ம்ம்ம்
///ஷீ-நிசி said...
யார் சொன்னது! கால் பந்தாட்ட காரங்களால மட்டும்தான் வலைக்குள்ள கோல் போடமுடியும்னு....
எங்க கலை-இராகலை யாலயும் முடியும்.... வலைக்குள்ள கோல் (பற்றி) போடறதுக்கு!!
செங்கோல் பற்றிய பதிவு எனக்கு புதியது நண்பா!///
வாங்க ஷீ-நிசி அடடா பின்னூட்டதிலும் கவி நயம். நன்றி நண்பரே!
Post a Comment