கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Wednesday, March 25, 2009

உருகியதே எனதுள்ளம்

இந்த சின்னக்குயிலின் குரலில் ஒரு தரம் நீங்களும் இப்பாடலை கேட்டுப்பாருங்களே!



மலர்களே மலர்களே இது என்ன கனவா?
மலைகளே மலைகளே இது என்ன நினைவா?
உருகியதே எனதுள்ளம்
பெருகியதே விழிவெள்ளம்

விண்ணோடும் நீதான்
மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான் வா ஆ அஅஅ...
(மலர்களே..)

மேகம் திறந்துகொண்டு
மண்ணில் இறங்கி வந்து
மார்பில் ஒளிந்துக் கொள்ள வா வா

மார்பில் ஒளிந்துக் கொண்டால்
மாறன் அம்பு வரும்
கூந்தலில் ஒளிந்துக் கொள்ள வரவா

என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா!
மலர் சூடும் வயதில் என்னை மறந்து போவது தான் முறையா?

நினைக்காத நேரமில்லை காதல் ரதியே ரதியே..
உன் பேரைச் சொன்னால் போதும் நின்று வழிவிடும் காதல் நதியே..

என் ஸ்வாசம் உன் மூச்சில்..
உன் வார்த்தை என் பேச்சில்..
ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா..
(மலர்களே..)

பூவில் நாவிருந்தால்
காற்று வாய்திறந்தால்
காதல் காதல் என்று பேசும்..

நிலா தமிழறிந்தால்
அலை மொழி அறிந்தால்
நம் மேல் கவி எழுதி வீசும்..

வாழ்வோடு வளர்பிறை தானே வண்ண நிலவே நிலவே..
வானோடு நீலம் போலே இழைந்து கொண்டது இந்த உறவே..

உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே..
ஊனோடு உயிரைப் போலே உறைந்து போனது தான் உறவே..

மறக்காது உன் ராகம்
மரிக்காது என் தேகம்

உனக்காக உயிர் வாழ்வேன், வா என் வாழ்வே வா..
(மலர்களே..)

10 comments:

புல்லட் said...

உதைப்பற்றி ஆதிரை ஒரு பதிவு போட்டிருந்தார்..
உது மலையாளப்பிள்ளைகள்...தமிழில் தமிழர்களை விட நன்கு பாடுகிறார்கள்.. :) அதுமட்டுமல்ல பெரியவரகளை விட சிறியவர்கள் நன்கு பாடுகிறார்கள்... :)

M.Rishan Shareef said...

அடடா..என்ன ஒரு குரல்வளம்..எவ்வளவு அருமையாகப் பாடுகிறார்..நல்ல எதிர்காலம் வாய்க்கட்டும்.

திரு.புல்லட் பாண்டியின் கருத்தினை ஏற்றுக்கொள்கிறேன்.

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி கலை !

தர்ஷன் said...

குரலை விடுங்க கலை சின்ன பிள்ளை அதுவும் கஷ்டமான பாட்டு
அந்த குழைவு,பாவம் ,உச்சரிப்பு பார்த்தீர்களா ழகரம் அட்ச்சர சுத்தம்

ஆதவா said...

எனக்கு லோட் எடுக்க ரொம்ப லேட் ஆவுங்க!!!

ஹேமா said...

உண்மையிலேயே இந்தப் பாட்டு எத்த்னை தரம் கேட்டாலும் அலுக்காது.மெருகுக்கு மெருகு சேர்த்தமாதிரி இருக்கு.நல்ல எதிகாலம் தெரிகிறது குரலில்.சுத்தமான உச்சரிப்பு,பாவம் தாளம் என்று முழு அம்சமும் கூடிய பாடகி.

kuma36 said...

என்னோடு சேர்ந்து பாடலை இரசித்த அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

kuma36 said...

//ஆதவா said...
எனக்கு லோட் எடுக்க ரொம்ப லேட் ஆவுங்க!!!///

ஆதவா மிஸ்ப்பனிடாம பாருங்க‌

kuma36 said...

//புல்லட் பாண்டி said...
உதைப்பற்றி ஆதிரை ஒரு பதிவு போட்டிருந்தார்..
உது மலையாளப்பிள்ளைகள்...தமிழில் தமிழர்களை விட நன்கு பாடுகிறார்கள்.. :) அதுமட்டுமல்ல பெரியவரகளை விட சிறியவர்கள் நன்கு பாடுகிறார்கள்... :)///

சரியா சொன்னிங்க புல்லட். ஆமாம் நீங்க கூறிய பிந்தான் எனக்கு தெரிந்தது ஆதிரையும் இதைப்பற்றி பதிவு போட்டிருக்காரு.

Anonymous said...

கேட்டேன்! என்ன குரல் வளம்!

மிக அருமை!


பகிர்ந்தமைக்கு நன்றி கலை!

தமிழ் மதுரம் said...

உருகியதே எனதுள்ளம்
பெருகியதே விழிவெள்ளம்//



எங்கையப்பா உதெல்லாம் தேடி எடுக்கிறீங்கள்?? பிள்ளை நல்லாத்தான் பாடுது......... சுபம்..சுபம்..

.