கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Sunday, March 29, 2009

பட்டாம் பூச்சி விருது யாரால், எப்போ, அறிமுகப்படுத்தப்பட்டது?


என்னையும் ஒரு வலைப்பதிவாளராக மதித்து என்னை ஊக்கப்படுத்தும் விதமாக எனக்கு பட்டாம்பூச்சி விருது வழங்கினார் நண்பர் ஷி‍-நிசி. அவருக்கு நன்றின்னு சொல்லி நட்பை தூரப்படுத்த விரும்பாவிட்டாலும் இப்போதைக்கு அதை தவிர வேறு வார்த்தை என்னிடம் இல்லையென்பதால் (ஆமா புதுசா இவரு வார்த்தை கண்டுப்பிடிக்க போறாறாம் அப்பிடினு கேக்க கூடாது) அவருக்கு எனது மன்மார்ந்த நன்றிகள்.

அட சத்தியமா விருது கொடுத்தார். நம்புங்கப்பா! நம்பமுடியலையா இதே அவருது படத்தின் மேல் ஒரு கிலிக் போடுங்க, போட்டாச்சா? நம்பிட்டிங்களா?. (ம்ம்ம் எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதாயிருக்கு. முடியல!!!)
இவர்தாங்க தங்க மனசுகாரர்

இந்த பட்டாம்பூச்சி எப்படா நம்ம வீட்டுப்பக்கம் வருமென்று எவ்வளவு நாளா காத்திருந்தேன் தெரியுமா? இதே வந்துடுச்சி. எனக்கே எனக்கா.. நீ எனக்கே எனக்கானு பேக்ரவுன்ட் மீயுசிக் போகுது! (அடப்பட்டாம் பூச்சி விருதை பாத்து பாடுனது! அதுக்குள்ள வீன் கற்பனை, அய்யோ அய்யோ..) சந்தோசமா இருக்கு.

இந்த வண்ணாத்திபூச்சி விருதை தந்த நண்பர் ஷி நிசி க்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை (ஒன்னே ஒன்னானு கேக்காதிங்க) என்வென்றால் நானும் வைரமுத்துவின் கவிப்பிரியன் அவரும்தான். காதல் கவிதைகள்,
சமூக கவிதைகள், குறுங்கவிதைகள், புகைப்பட கவிதைகள்,
உறவு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள், நட்பு இப்படி பலவகையாக பிரித்து கவிதைகளை அவருடைய வலைப்பூவில் தருகின்றார். கவிதைகள் சூப்பரா இருக்குமுங்க போய் வாசித்துப்பாருங்க!

சரி வலையுலக பட்டாம்பூச்சி விருதுகளின் விதிக்கு அமைய ( பட்டாம் பூச்சி விருது யாரால், எப்போ, அறிமுகப்படுத்தப்பட்டது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்) நமக்கு பிடித்த மூன்று நண்பர்களுக்கு கொடுக்கனும். சரி நம்ம விருது கொடுத்தா யாரு வாங்குவானு ஒரு பயத்தோடு யோசித்து யோசித்து யோசித்து... (யோசித்தது போதும் நிப்பாட்டுனு சொல்லுறிங்களா?) சரி பட்டாம் பூச்சி விருதை இவர்களுக்கு நான் கொடுத்தா வாங்குவார்கள் என்ற நம்பிக்கையில் ஒரு முன் அறிவித்தல் இல்லாமலே அறிவித்துட்டேன்! நண்பர் கமல் (தமிழ் மதுரம்!), நண்பர் கவின் (கவின் பார்வையில்), நண்பர் ஸ்ரீதர்ஷன் ஆகியோருக்குதான்.

என்னது நண்பர்களே வாங்கி கொள்வீர்கள் தானே?


சரி முதலில் கமலைப்பற்றி பார்ப்போம் இவர் எனக்கு வலையுலகில் அதிக ஊக்கம் கொடுத்தவர்களில் ஒருவர். அதோடு கமலின் பதிவுகளில் எதையுமே பிரித்து பாக்க முடியாதளவிற்கு எல்லாமே சூப்பரா இருக்கும்.
அரசியல் அலசல், ஒலி நயம், ஒளிக் கீற்றுக்கள், கவிதைக் கலசம்,
பல் சுவைக் கதம்பம், ஊர்ப் புதினம், என்ற பிரிவுகளில் கலக்கி இருபார்!

கமலின் ஒரு ஸ்பெசல் என்னவென்றால் குரல் பதிவு போடுவது தான். வலையுலக நண்பர்களுடன் இணைந்து பல்வேறு விடயங்களை அலசி ஒரு குரல் பதிவா தருவது. எதிர்கால யாழ்ப்பாணம் எப்படி இருக்கும்?? என்ற தலைப்பில் நண்பர் புல்லட்டுடனும், அப்புகுட்டியுடனும் இணைந்து ஒரு குரல் பதிவு சூப்பரா இருந்தது. கேட்டுப்பாருங்க! வளங்கொழித்த தமிழும் வழக்கொழிந்த தமிழும்..! தலைப்பில் ஹேமா அக்காவுடன் இணைந்து இன்னொரு பதிவு அதுவும் சூப்பர்.

நான் கட்ட(க்) கவுணொடு குட்டி ஒன்றைக் கண்டேன்..!, தேடலும் தெறிப்பும் . எரிகின்ற எனது நகரம்! (4) நக்கலும் நளினமும்! (02)
மறைந்திருக்கும் மர்மங்கள்...!
புதுமைகள் படைக்கும் புதுவையின் கவிதைகள்! பாகம் (04...

இப்படி இன்னும் ஏராளம் இருக்கு.

நன்றியுடன் வாழ்த்துக்கள் கமல்.இன்னும் மீதமிருக்கின்றது வாழ்வின் இரகசியங்கள் எனும் தொடங்கும் கவினின் வலைப்பதிவு கவிதகள், காதல் கவிதைகள் என்று இரு பிரிவுகள் மட்டுமே இருந்தாலும் இன்னும் பல விடயங்களை பகிர்ந்திருக்கின்றார். அடிக்கடி பதிவுகள் போடாவிட்டாலும் போடுகின்ற பதிவுகள் சூப்பரா இருக்கும். எவ்வளவு சீரியஸ்சான் விஷயத்தையும் நகைச்சுவையாக தந்து சீரியஸாக்கிடுவார்.( நான் சொல்லுவது ஏதாவது புரிஞ்சதா, புரியாவிட்டால் உடனே கவினின் பார்வைக்கு போங்க புரியும்)

அடிக்கடி புது புது முகங்களுடன் வருவார் சின்ன குழந்தாயாய் சிரிந்து கொண்டுய்ருப்பார் திடிரென்று சீரியஸ்சான முகத்துடன் இருப்பார். இப்ப குழந்தையாய் தான் இருக்காரு, ஆனா பாருங்க கவினின் ஈ மெய்ல கடவுச்சொல்லை எந்தப்படும் பாவியோ திருடிவிட்டானாம், ம்ம்ம் எதை எதையெல்லாம் திருடுராங்க பாத்திங்களா?

கவினின் பதிவுகளில் பிடித்தது பல அவைகளில் சில‌

துர்தேவதைகளால் சபிக்கப்பட்டவர்கள்,

போராளிகள் பிறப்பதில்லை….

கண் எதிரில் ஒரு சோகம்

எனக்கு பிடித்தவர்கள் (அ) என்னை பிடித்தவர்கள்

காதல், திருமணமும்

யாழ்பாணத்து இராத்திரிகள்(3)கண் எதிரில் ஒரு சோகம்

நன்றியுடன் வாழ்த்துக்கள் கவின்.பெரிதாக சொல்ல எதுவுமில்லை பல வலைப்பூக்களை பார்த்து ஆர்வத்தால் எழுத வந்த ஒருவன் என கூறிகொண்டு வலையுலகிற்கு நுழைந்தவர்தான் நம்ம நண்பர் தர்ஷன். இவர் ஒரு விஞ்ஞான ஆசிரியர்ங்க ( நமக்கு விஞ்ஞானம் எல்லாம் அலர்ஜிக்) இது அது என வகைப்படுத்தாமல் ஒரு மிக்ஸீங்க அண்மைகாலமாக கலக்கி வருகிறார். அதுலையும் சினிமாப்பற்றிய அலசல் சூப்பராகவே இருக்கும். சொதப்புவரா கமல் என்ற பதிவு விகடனிலும் சூப்பர் ஹிட்டானது! பெரியார் மேல் ரொம்ப பிரியமானவர் என நினைக்கின்றேன் அடிக்கடி பதிவுகளில் பெரியாரை ஞாபகப்படுத்துவார்.

பெண்ணியமும் பெரியாரும் என்ற தலைப்பில் மகளிர் தினத்தன்று ஒரு அருமையான ஆக்கம் இருந்தது, ஆனாலும் அன்மைகாலமாக சினிமாப்பற்றிய பதிவுகளினால் தான் அதிகமானோர் கண்களில்ப்பட்டிருக்கார் என்று சொன்னால் மிகையில்லை. ஆனால் அவருடைய பதிவுகளில் அதைவிட அழகான ஆக்கங்கள் பல் உள்ளன்.
தமிழகச் சொந்தங்களுக்கு மலையகத்திலிருந்து ஓர் விண்ணப்பம் என்ற தலைப்பில் ஒரு அருமாயான ஆக்கம் பதிவு செய்திருந்தார். பகுத்தறிவு சிந்தனை கொண்டவர்தாங்க நம்ம தர்ஷன்? என்ன தர்ஷன் நான் சொல்வது சரியா? ஏதாவது பிழையென்றால் பக்கத்துல உள்ளவருக்கு இழுத்து மூஞ்சில குத்திடுஙக . ஹா ஹா..

தர்ஷனின் பதிவுகளில் சில,
அம்மா தமிழனக் காப்பாத்தும்மா

எல்லாப் புகழும் ரஹ்மானுக்கே

படமெடுப்பது எப்படி Dr.விஜய் கௌதம் மேனனுக்கு ஆலோசனை

தமிழா தமிழா

ரஜினி the mass

சொதப்புவரா கமல்

கவிதை போல ஏதோ ஒன்று

தமிழகச் சொந்தங்களுக்கு மலையகத்திலிருந்து ஓர் விண்ணப்பம்


நன்றியுடன் வாழ்த்துக்கள் தர்ஷன்


பட்டாம்பூச்சி விருதின் விதிப்படி உங்கள் தளத்தில் இந்த பட்டாம்பூச்சியை பறக்கவிட்டு, பட்டாம்பூச்சியை சொடிக்கினால் இந்த பதிவுக்கு வருமாறு தொடர்பு கொடுத்துவிடுங்கள். நீங்கள் உங்களுக்கு பிடித்த மூன்று நண்பர்களுக்கு இந்த விருதை அளித்திடுங்கள்.

அன்புடன்
கலை ‍- இராகலை
19 comments:

தமிழ் மதுரம் said...

சரி முதலில் கமலைப்பற்றி பார்ப்போம் இவர் எனக்கு வலையுலகில் அதிக ஊக்கம் கொடுத்தவர்களில் ஒருவர். அதோடு கமலின் பதிவுகளில் எதையுமே பிரித்து பாக்க முடியாதளவிற்கு எல்லாமே சூப்பரா இருக்கும்.//
வாழ்த்துக்கள் கலை...தொடர்ந்தும் சீரிய நெறியில் பாரிய பாங்குடன் அதிக பதிவுகளைத் தருவீர்கள் என நம்புகிறேன்.


மலையகத்தின் அவலங்களையும், அங்குள்ள மக்கள் படும் துன்பங்களையும் தொடர்ந்தும் பதிவாக்குவீர்கள் என நம்புகிறேன்..என்னையும் ஒரு பதிவராகக் கண்டு கொண்டதற்கு நன்றிகள் நண்பரே!


நாங்கள் எல்லாம் நேற்றுப் பெய்த மழையிலை இன்று முளைத்த காளான்கள்....எங்களுக்குப் போயி விருதா கலை...


நாம எல்லாம் சின்னப் பதிவர்கள்...


உங்கள் ஊக்கப்படுத்தும் விருதுக்கு நன்றிகள் நண்பா...

தமிழ் மதுரம் said...

கலை ம்..என்ன சொல்லுவது?


எனக்கு இந்த விருதினை கடந்த வருடத்தின் இறுதியில் சகோதரி ஹேமா வழங்கியிருந்தா...அதன் பிறகு கடந்த வாரம் சகோதரன் வேத்தியனும் வழங்கியிருந்தார்...

இப்போது நீங்கள் பட்டாம்பூச்சியைப் பறக்க வைத்திருக்கிறீர்கள்..


எனக்கு மூன்று பட்டாம்பூச்சிகள் கிடைத்திருக்கின்றன...

என்னுடைய பக்கத்தில் பறக்க விடுவதற்கு இடமே இல்லை: சும்மா ஜோக்கிற்கு:)))நன்றிகள் கலை...தொடர்ந்தும் இயற்கை எழில் கொஞ்சும் இன்பமயம் கலந்த மலையகத்தின் காட்சிகளையும் சம்பவங்களையும் பதிவாக்குவீர்கள் என நம்புகிறேன்...

வேத்தியன் said...

வாழ்த்துகள் கொடுத்தவருக்கும், பெற்றவர்களுக்கும்...

சி தயாளன் said...

வாழ்த்துகள்...அனைவருக்கும்..

கார்த்திகைப் பாண்டியன் said...

விருது கொடுத்தவருக்கும், பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

Anonymous said...

விருது கொடுத்தவருக்கும், பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

Suresh said...

Kalai iruthu vanthathu yendru solla poringa yendru vantha kelvi kettu vittuputinga :-)

விருது கொடுத்தவருக்கும், பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

குடந்தை அன்புமணி said...

பட்டாம்பூச்சி விருது வழங்கிய தங்களுக்கும், அதனைப் பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்! நாளை எனது வலையிலும் அறிவிப்புகள் வரும்! விருது பெறப்போவது யார்? பொறுத்திருங்கள!

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் said...

விருது கொடுத்தவருக்கும், பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

Anonymous said...

இது உங்க பெருந்தன்மையை காட்டுது(எனக்கு விருது கொடுத்தை தானுங்க சொல்றன்!)
வாழ்துக்கள்!

தர்ஷன் said...

விவேக்குக்கு பத்மஸ்ரீ கிடைத்த போது எப்படி உணர்ந்தாரோ தெரியவில்லைஎனக்கோ ரொம்ப சங்கடமாய் இருந்தது நீங்கள் விருது தந்த போது.
பட்டாம்பூச்சி விருது நல்ல புதிய பதிவர்கள் பரவலாக அறியப்பட பொருத்தமானதொன்று என்ற போதும் எனக்கு வழங்கப்பட்டது Too earlyயோ என்று தோன்றுகிறது.
இருந்தாலும் உங்கள் அன்புக்கு பணிந்து விருதைப் பெற்றுக் கொள்கிறேன்.
அது எப்படி கலை இந்த ஒன்றரை மாதத்தில் அப்படி ஒரு புரிதல் நீங்க என்னைப் பத்தி எழுதுனததான் சொல்றேன். நட்புக்கு காலம் பொருட்டல்ல உணர்த்தியதற்கு நன்றி

kuma36 said...

///கமல் said...
வாழ்த்துக்கள் கலை...தொடர்ந்தும் சீரிய நெறியில் பாரிய பாங்குடன் அதிக பதிவுகளைத் தருவீர்கள் என நம்புகிறேன்.

மலையகத்தின் அவலங்களையும், அங்குள்ள மக்கள் படும் துன்பங்களையும் தொடர்ந்தும் பதிவாக்குவீர்கள் என நம்புகிறேன்..///

நிச்சியமாக கமல். தொடர்ந்து வரும். நன்றி

ஆஹா மூன்று தடவை படாம்பூச்சி விருது கிடைச்சிருச்சா!

kuma36 said...

///வேத்தியன் said...
வாழ்த்துகள் கொடுத்தவருக்கும், பெற்றவர்களுக்கும்...///

:::::::::::::::::::::::::::::
வாங்க வேத்தியன் , நன்றிகள்
:::::::::::::::::::::::::::::

///டொன்’ லீ said... வாழ்த்துகள்...அனைவருக்கும்.///

:::::::::::::::::::::::::::::
வாங்க டொன்’ லீ, மிக்க நன்றிகள்
:::::::::::::::::::::::::::::::

///கார்த்திகைப் பாண்டியன் said...
விருது கொடுத்தவருக்கும், பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.///

:::::::::::::::::::::::::::::::::
வாங்க கார்த்திகை பாண்டியன், மிக்க நன்றி நண்பரே!
:::::::::::::::::::::::::::::::::

kuma36 said...

///கடையம் ஆனந்த் said...
விருது கொடுத்தவருக்கும், பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்///

:::::::::::::::::::::::::::::::::::
வாங்க ஆனந்த் மிக்க நன்றிகள் நண்பரே!
::::::::::::::::::::::::::::::::::::


///Suresh said...
Kalai iruthu vanthathu yendru solla poringa yendru vantha kelvi kettu vittuputinga :-)
விருது கொடுத்தவருக்கும், பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்///

::::::::::::::::::::::::::::::::
வாங்க சுரேஸ் நீங்களாவது பதில் சொல்லுவிங்க என்று நான் இருந்தேன். நன்றிகள் நண்பரே!
:::::::::::::::::::::::::::::::::

///குடந்தைஅன்புமணி said...
பட்டாம்பூச்சி விருது வழங்கிய தங்களுக்கும், அதனைப் பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்! நாளை எனது வலையிலும் அறிவிப்புகள் வரும்! விருது பெறப்போவது யார்? பொறுத்திருங்கள!///

::::::::::::::::::::::::::::::
வாங்க அன்புமணி, அழகான பெயர். நன்றிகள் நண்பரே, ஓகே உங்கள் பதிவிற்காக வெய்டிங்!
::::::::::::::::::::::::::::::::

kuma36 said...

//சந்ரு said...
விருது கொடுத்தவருக்கும், பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்...///

:::::::::::::::::::::::::::::::::
வாங்க சந்ரு நண்றிகள் நண்பா!
::::::::::::::::::::::::::::::::

///////கவின் said...
இது உங்க பெருந்தன்மையை காட்டுது(எனக்கு விருது கொடுத்தை தானுங்க சொல்றன்!)
வாழ்துக்கள்!//////

:::::::::::::::::::::::::::::::::::::::::
வாங்க கவின், நன்றிகளுடன் வாழ்த்துக்கள்!
:::::::::::::::::::::::::::::::::::::::::

////தர்ஷன் said...
விவேக்குக்கு பத்மஸ்ரீ கிடைத்த போது எப்படி உணர்ந்தாரோ தெரியவில்லைஎனக்கோ ரொம்ப சங்கடமாய் இருந்தது நீங்கள் விருது தந்த போது.
பட்டாம்பூச்சி விருது நல்ல புதிய பதிவர்கள் பரவலாக அறியப்பட பொருத்தமானதொன்று என்ற போதும் எனக்கு வழங்கப்பட்டது Too earlyயோ என்று தோன்றுகிறது.
இருந்தாலும் உங்கள் அன்புக்கு பணிந்து விருதைப் பெற்றுக் கொள்கிறேன்.
அது எப்படி கலை இந்த ஒன்றரை மாதத்தில் அப்படி ஒரு புரிதல் நீங்க என்னைப் பத்தி எழுதுனததான் சொல்றேன். நட்புக்கு காலம் பொருட்டல்ல உணர்த்தியதற்கு நன்றி////////

::::::::::::::::::::::::::::::::::
வாங்க தர்ஷன் பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லுறிங்க! நண்றியுடன் வாழ்த்துக்கள் நண்பரே!
:::::::::::::::::::::::::::::::

kuma36 said...

//சந்ரு said...
விருது கொடுத்தவருக்கும், பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்...///

:::::::::::::::::::::::::::::::::
வாங்க சந்ரு நண்றிகள் நண்பா!
::::::::::::::::::::::::::::::::

///////கவின் said...
இது உங்க பெருந்தன்மையை காட்டுது(எனக்கு விருது கொடுத்தை தானுங்க சொல்றன்!)
வாழ்துக்கள்!//////

:::::::::::::::::::::::::::::::::::::::::
வாங்க கவின், நன்றிகளுடன் வாழ்த்துக்கள்!
:::::::::::::::::::::::::::::::::::::::::

////தர்ஷன் said...
விவேக்குக்கு பத்மஸ்ரீ கிடைத்த போது எப்படி உணர்ந்தாரோ தெரியவில்லைஎனக்கோ ரொம்ப சங்கடமாய் இருந்தது நீங்கள் விருது தந்த போது.
பட்டாம்பூச்சி விருது நல்ல புதிய பதிவர்கள் பரவலாக அறியப்பட பொருத்தமானதொன்று என்ற போதும் எனக்கு வழங்கப்பட்டது Too earlyயோ என்று தோன்றுகிறது.
இருந்தாலும் உங்கள் அன்புக்கு பணிந்து விருதைப் பெற்றுக் கொள்கிறேன்.
அது எப்படி கலை இந்த ஒன்றரை மாதத்தில் அப்படி ஒரு புரிதல் நீங்க என்னைப் பத்தி எழுதுனததான் சொல்றேன். நட்புக்கு காலம் பொருட்டல்ல உணர்த்தியதற்கு நன்றி////////

::::::::::::::::::::::::::::::::::
வாங்க தர்ஷன் பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லுறிங்க! நண்றியுடன் வாழ்த்துக்கள் நண்பரே!
:::::::::::::::::::::::::::::::

ஆதவா said...

நான் இங்கே கொடுத்த ஊக்கத்தைக் காணவில்லை... :(

எனிவே.... வாழ்த்துக்கள்...

kuma36 said...

//ஆதவா said...
நான் இங்கே கொடுத்த ஊக்கத்தைக் காணவில்லை... :(///

எனிவே.... வாழ்த்துக்கள்...

::::::::::::::::::::::
வாங்க ஆதவா, இப்ப கண்டுகொண்டிங்க தானே! நன்றிகள் ஆதவா
::::::::::::::::::::::::::

ஹேமா said...

பட்டாம்பூச்சி கலைக்கு வாழ்த்துக்கள்.பட்டாம்ப்பூச்சியை வாங்கிக்கொண்ட கடுக்கன் கமல்,
ஹீரோ கவின்.தர்ஷன் க்கும் என் வாழ்த்துக்கள்.தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

.