மலையக நாட்டார் பாடல்களை கொஞ்சம் இங்கு அறிமுகப்படுத்தலாம் என நினைக்கின்றேன் நண்பர்களே
உங்கள் கருத்துக்கள் முக்கியம்.
மலையக நாட்டார் பாடல்கள் தமிழகத்திலிருந்து மக்கள் கூலிகலாக இலங்கைக்கு இடம் பெயர்ந்த போது அம்மக்கள் கொணர்ந்தவைகள் தான் இந்த நாட்டார் பாடல்கள். அம்மக்கள் இலங்கையில் பணிபுரியும் காலத்தில் அவர்களுக்கு ஏற்ப்பட்ட அநீதிகள், இன்னல்களை வெளிப்படுத்தும் முகமாகவே அனேகமான மலையக நாட்டார் பாடல்கள் காணப்படும்.
இப்பாடல்கள் யாவும் எங்கும் எழுதப்பட்டவை அல்ல அவர்கள் வாழ்வோடு பின்னி பினைந்தவை என்றால் மிகையாகாது. இப்பாடல்களை அலைசிபார்தோமானல் அவர்களின் இன்னல்களும் அநீதிகள் , இவர்களுக்கு எத்தரப்பிடமிருந்து கொடுமைகள் இழைக்கப்பட்டன என்பது வெளிச்சமாகும்.
மலையக நாட்டார் பாடல்களில் பபூன் பாடல்கள், நாடகப் பாடல்கள், சமூக எழுச்சிப் பாடல்கள், வீதிப் பாடலகள், பஜனை பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள், கேலிப் பாடல்கள், கோலாட்டப் பாடல்கள், கூத்துப் பாடல்கள் என ஏராளமான வகைகள் உண்டு.
1972 - 1976ம் ஆண்டுகளில் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சியின் போது ஏற்ப்படுத்தப்பட்ட சுய உற்பத்திக் கொள்கையினால் (உள்நாட்டு உற்பத்தி) அதிகமாக மலையக மக்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சொந்த விவசாய நிலமற்ற தோட்ட தொழிலாளர்கள் உணவுப்பொருட்களை உற்பத்தி செய்வதற்க்கு வழியிலாம் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அந்த வேதனை எடுத்து கூறும் பாடலே இது!
பண்டாவின் ஆட்சியிலே.. - நாங்கள்
பட்டினியில் வாடலானோம்...
அதை நினைத்துப் பார்க்கையிலே நெஞ்சம்
பதை பதைத்து துடிக்குதடீ தங்கமே தங்கம்
அரிசியில்ல மாவுமில்ல தங்கமே தங்கம் - நமக்கு
ஆட்டா மாவும் பஞ்சமாக்கி தங்கமே தங்கம்
சோறுயில்ல ரொட்டியில்ல தங்கமே தங்கமே - நமக்கு
சோளம் மாவும் பஞ்சமாச்சி தங்கமே தங்கம்
மலைநாட்டு மக்கள்ளெல்லாம் தங்கமே தங்கம் - நாங்க
மாண்டு மடியலாமோ தங்கமே தங்கம் - நாங்க
மரவள்ளியைத் தேடலாமோ தங்கமே தங்கம்
சேந்து மடியலாமோ தங்கமே தங்கம் - நமக்கு
சேமங்கீரை பஞ்சமாச்சி தங்கமே தங்கம்
தட்டு முட்டுச் சாமானெல்லாம் தங்கமே தங்கம் - இங்கே
தவிடு பொடியாச்சுதடி தங்கமே தங்கம்
தவிடு பொடியாச்சுதடி தங்கமே தங்கம் - நம்ம
தாலிமணி பறிபோச்சு தங்கமே தங்கம்..!
ஒரு ராத்தல் பானுக்குத்தான் தங்கமே தங்கம் - நாம
ஓடி யலைஞ்சோமே தங்கமே தங்கம்
ஓடி யலைஞ்சோமே தங்கமே தங்கம் - நாம
ஒரு யாரு சீத்தைக்குதான் தங்கமே தங்கம்.
(அரிசியில்ல)
பின் குறிப்பு: மலைக நாட்டார் பாடல்கள் பெரும்பாலானவைகள் பேச்சு வழக்கு மொழியிலே காணப்படும். எழுதிவைக்கப்படாத காவியங்கள் நிலைப்பதற்கில்லை எனவே இங்கு சேமித்து வைப்பது பொருத்தமாகும்.
31 comments:
me the first.. padichitu varaen .. nalla irukunga unga title
//மலையக நாட்டார் பாடல்கள் தமிழகத்திலிருந்து மக்கள் கூலிகலாக இலங்கைக்கு இடம் பெயர்ந்த போது அம்மக்கள் கொண்ர்ந்தவைகள் தான் இந்த நாட்டார் பாடல்கள்//
arumaiyana research pani alasi aranchu potu irukinga pathivu ..
nalla intresting a irunthuchu .. pathivu
//அரிசியில்ல மாவுமில்ல தங்கமே தங்கம் - நமக்கு
ஆட்டா மாவும் பஞ்சமாக்கி தங்கமே தங்கம்
சோறுயில்ல ரொட்டியில்ல தங்கமே தங்கமே - நமக்கு
சோளம் மாவும் பஞ்சமாச்சி தங்கமே தங்கம்//
padal varigal ellam elimaiyagavum arumaiyagavum irukku.. kandippa intha mathiri padalgalai namma pirabala padthanum...
ungal muyarchikku mikka nandrigal
நல்ல முயற்சி! உங்கள் முயற்சி சிறக்கட்டும்! ஒலிப்பதிவும் இருந்தால் நன்றாக இருக்கும்!
நன்றி கலை ...........
"பின் குறிப்பு: மலைக நாட்டார் பாடல்கள் பெரும்பாலானவைகள் பேச்சு வழக்கு மொழியிலே காணப்படும். எழுதிவைக்கப்படாத காவியங்கள் நிலைப்பதற்க்கில்லை எனவே இங்கு சோமித்து வைப்பது பொருத்தமாகும்."
நிட்சயமாக கலை பேட்சு வழக்கிலே அமைந்த பாடல்களாக இருந்தாலும் அதன் பெறுமதி சொல்ல முடியாது ellaya
மலையக மக்களின் அபிலாசைகளை நன்கு உணர்ந்த நீங்கள இப்படி ஒரு தொடரினை எழுவது நான் மட்டுமல்ல மலையக மக்களும் உங்களை மறக்கமாட்டார்கள்.......
உங்களது பதிவுகள் அத்தனையுமே சூப்பர் இத்தொடரின் மூலமாகவும் ஒரு கலக்கு கலக்குங்க........ எல்லாப்புகழும் உங்களுக்கே..................
"நமக்காக வாழ்வதை விட நமது மக்களுக்காகவும் சமூகத்துக்காகவும் வாழ்வதே மேல்"
வாழ்த்துக்கள் கலை கலக்குங்க...
///Suresh said...
me the first.. padichitu varaen .. nalla irukunga unga title///
::::::::::::::::::::::::::::::::
வாங்க சுரோஸ் மிக்க நன்றி நண்பரே முதல் ஊக்கத்திற்கு
//சந்தனமுல்லை said...
நல்ல முயற்சி! உங்கள் முயற்சி சிறக்கட்டும்! ஒலிப்பதிவும் இருந்தால் நன்றாக இருக்கும்!//
::::::::::::::::::::::::::::::
வாங்க சந்தனமுல்லை , உங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றிகள்.
ம்ம்ம் ஒலிப்பதிவு கிடைக்குமா என முயற்சி பன்னுறேன்!
///சந்ரு said...
நன்றி கலை ...
"பின் குறிப்பு: மலைக நாட்டார் பாடல்கள் பெரும்பாலானவைகள் பேச்சு வழக்கு மொழியிலே காணப்படும். எழுதிவைக்கப்படாத காவியங்கள் நிலைப்பதற்க்கில்லை எனவே இங்கு சோமித்து வைப்பது பொருத்தமாகும்."
நிட்சயமாக கலை பேட்சு வழக்கிலே அமைந்த பாடல்களாக இருந்தாலும் அதன் பெறுமதி சொல்ல முடியாது ellaya
மலையக மக்களின் அபிலாசைகளை நன்கு உணர்ந்த நீங்கள இப்படி ஒரு தொடரினை எழுவது நான் மட்டுமல்ல மலையக மக்களும் உங்களை மறக்கமாட்டார்கள்.......
உங்களது பதிவுகள் அத்தனையுமே சூப்பர் இத்தொடரின் மூலமாகவும் ஒரு கலக்கு கலக்குங்க........ எல்லாப்புகழும் உங்களுக்கே..................
"நமக்காக வாழ்வதை விட நமது மக்களுக்காகவும் சமூகத்துக்காகவும் வாழ்வதே மேல்"
/வாழ்த்துக்கள் கலை கலக்குங்க...////
::::::::::::::::::::
வாங்க சந்துரு ஊக்கத்திற்கு நன்றிகள் நண்பா!
உண்மைதான் கலை-இராகலை...1970 களின் நிலையை அப்பட்டமாக உணர்த்துகின்றது...இன்றும் இந்த நிலை நீடிப்பது கவலைக்குரியதே
//ம்ம்ம் ஒலிப்பதிவு கிடைக்குமா என முயற்சி பன்னுறேன்!//
நிட்சயமாக ஒலிப்பதிவை எதிர்பார்க்கிறேன் கலை நானும் முயற்சி செய்கிறேன். விரைவில் ஒலிப்பதிவு வர வேண்டும். உங்களை விரைவில் சந்திக்கிறேன். எதிர்பாருங்கள்....
தொடரட்டும் உங்கள் பணி..... வாழ்த்துக்கள்...
ம்ம்! வருத்தம்தான்... ஆனால் நல்ல பதிவு... உந்த பாடலை எங்கிருந்து பெற்றுக்கொண்டீர்கள? உது இசை வடிவத்தில உண்டா?
மலைநாட்டு மக்கள்ளெல்லாம் தங்கமே தங்கம் - நாங்க
மாண்டு மடியலாமோ தங்கமே தங்கம் - நாங்க
மரவள்ளியைத் தேடலாமோ தங்கமே தங்கம்////
உலகெங்கும் ஒலிக்கும் மக்களின் ஓலம் கண்ணீரில் எழுதப்பட்ட காவியங்கள்!!
///டொன்’ லீ said...
உண்மைதான் கலை-இராகலை...1970 களின் நிலையை அப்பட்டமாக உணர்த்துகின்றது...இன்றும் இந்த நிலை நீடிப்பது கவலைக்குரியதே///
::::::::::::::::::::::::::::::::::::
வாங்க டொன் லீ , என்ன கவலைகுறியதே!!!!!!!
////சந்ரு said...
//ம்ம்ம் ஒலிப்பதிவு கிடைக்குமா என முயற்சி பன்னுறேன்!//
நிட்சயமாக ஒலிப்பதிவை எதிர்பார்க்கிறேன் கலை நானும் முயற்சி செய்கிறேன். விரைவில் ஒலிப்பதிவு வர வேண்டும். உங்களை விரைவில் சந்திக்கிறேன். எதிர்பாருங்கள்....
தொடரட்டும் உங்கள் பணி..... வாழ்த்துக்கள்...////
::::::::::::::::::::::::::::::::::::
மறுபடியும் வாங்க சந்துரு! நன்றிகள் சந்திப்போம்!
///புல்லட் பாண்டி said...
ம்ம்! வருத்தம்தான்... ஆனால் நல்ல பதிவு... உந்த பாடலை எங்கிருந்து பெற்றுக்கொண்டீர்கள? உது இசை வடிவத்தில உண்டா?///
:::::::::::::::::::::::::::::::::
வாங்க புல்லட் பாண்டி ஓர் பழைய சஞ்சிகையிலிருந்து! இசை வடிவம் கிடையாது நண்பரே! இனி வேண்டுமானால் முயற்சி பன்னலாம்.
///////thevanmayam said...
மலைநாட்டு மக்கள்ளெல்லாம் தங்கமே தங்கம் - நாங்க
மாண்டு மடியலாமோ தங்கமே தங்கம் - நாங்க
மரவள்ளியைத் தேடலாமோ தங்கமே தங்கம்////
உலகெங்கும் ஒலிக்கும் மக்களின் ஓலம் கண்ணீரில் எழுதப்பட்ட காவியங்கள்!!//////////
:::::::::::::::::::::::::::::::::::
வாங்க சார், நிச்சியமாக நிச்சியமாக உண்மை.
நம்ம மக்களின் வாழ்வியலோடு ஒன்றிய கலைகள் நிறைய உண்டு. நிறைய நேரம் ஒதுக்கினால் மட்டுமே தரமான முழுமையான பதிவு கிடைக்கும் என பேசாமல் இருந்தேன். அதுதான் இருக்கீங்களே கலக்குங்க
பாடலைப் பாடவேண்டும் போல இருக்கிறது கலை.... முதல் வரியிலிருந்து அரசியல் பிரச்சனையைத் துவக்கி வறுமையை அப்படியே கொண்டு வந்து அநாயசமாக பயணிக்கிறது!!
இவ்வகை நாட்டுப்புறப்பாடல்கள்தான் பிற்பாடு சங்க காலத்தில் அகப்பாடல்களாக வந்தன என்பது நாம் அறிந்ததுதான்... அதனுள் பொதிந்திருக்கும் கருத்து அப்படிப்பட்டது!!
தொடர்ந்து எழுதுங்கள் கலை!பாடலைப் பாடவேண்டும் போல இருக்கிறது கலை.... முதல் வரியிலிருந்து அரசியல் பிரச்சனையைத் துவக்கி வறுமையை அப்படியே கொண்டு வந்து அநாயசமாக பயணிக்கிறது!!
இவ்வகை நாட்டுப்புறப்பாடல்கள்தான் பிற்பாடு சங்க காலத்தில் அகப்பாடல்களாக வந்தன என்பது நாம் அறிந்ததுதான்... அதனுள் பொதிந்திருக்கும் கருத்து அப்படிப்பட்டது!!
தொடர்ந்து எழுதுங்கள் கலை!
கலை,என்னை அப்படியே மலையகம் கூட்டிப் போகிறீர்கள்.எனக்குக் கனவு போல ஒரு ஞாபகம்.தேயிலை பறிக்கையில்,கவாத்து (சரியா)வெட்டுகையில் சில வயதானவர்கள் பாடிப்பாடியே வேலை செய்வார்கள்.
பாடல் என்னவென்று சொல்லத் தெரியுதில்லை.ஆனால் அந்த நாட்டார் இசை கனவாய்க் கேட்கிறது.
ஒன்று ஞாபகம்.கோவில் திருவிழாக் காலத்தில் ஏதோ ஒரு விழாவில்
"ரதியே ரதிக்கிளியே,ரதிக்கேற்ற மன்மதனே.."என்று தொடங்கி தப்பு அடித்துப் பாடுவார்கள்.மாவில் விளக்குச் செய்து திரி விட்டு விளக்கேற்றுவார்கள்.மஞ்சத் தண்ணீர் ஊற்றி விளையாடுவார்கள்.நல்ல நினைவில் இல்லாவிட்டாலும் நானும் கலந்திருக்கிறேன் இவற்றில் எல்லாம் அவர்களோடு.
கலை,
மலையக பார்வை,
வரவேற்பவர்களில் நானும் ஒருவன்.
தொடருங்கள்...... எம் மலையக வலை விஜயத்தினை.
ம்ம்... எதோ ஒரு நாள் மலையகம் என்று நண்பர்களோடு வந்து விடுப்பு கேட்ட போது.. ஒரு அம்மா சொன்ன பாட்டு இது... எழுத்து வடிவத்தில கூட விளக்கமா இருக்கு...தொடருங்கள் உங்கள் பணியை...
///தர்ஷன் said...
நம்ம மக்களின் வாழ்வியலோடு ஒன்றிய கலைகள் நிறைய உண்டு. நிறைய நேரம் ஒதுக்கினால் மட்டுமே தரமான முழுமையான பதிவு கிடைக்கும் என பேசாமல் இருந்தேன். அதுதான் இருக்கீங்களே கலக்குங்க///
:::::::::::::::::::::::::::::::::::
வாங்க தர்ஷன் ஆஹா இப்படி சொல்லி தப்பிக்க முடியாது, நேரம் ஒதுக்கியே தீரனும்.
////ஹேமா said...
கலை,என்னை அப்படியே மலையகம் கூட்டிப் போகிறீர்கள்.எனக்குக் கனவு போல ஒரு ஞாபகம்.தேயிலை பறிக்கையில்,கவாத்து (சரியா)வெட்டுகையில் சில வயதானவர்கள் பாடிப்பாடியே வேலை செய்வார்கள்.
பாடல் என்னவென்று சொல்லத் தெரியுதில்லை.ஆனால் அந்த நாட்டார் இசை கனவாய்க் கேட்கிறது.////
:::::::::::::::::::::::::::::::
கவாத்து சரி. பரவாயில்லையே வயசானாலும் நல்ல ஞாபக சக்த்திதான். ஹி ஹி ஹி,,
ஆனா பாருங்கோ இப்போதெல்லாம் இப்படி பட்ட பாடல்கள் இல்லை எல்லாம் சினிமாவின் ஆக்கிரமிப்புதான்
:::::::::::::::::::::::::::::::
////ஒன்று ஞாபகம்.கோவில் திருவிழாக் காலத்தில் ஏதோ ஒரு விழாவில்
"ரதியே ரதிக்கிளியே,ரதிக்கேற்ற மன்மதனே.."என்று தொடங்கி தப்பு அடித்துப் பாடுவார்கள்.மாவில் விளக்குச் செய்து திரி விட்டு விளக்கேற்றுவார்கள்.மஞ்சத் தண்ணீர் ஊற்றி விளையாடுவார்கள்.நல்ல நினைவில் இல்லாவிட்டாலும் நானும் கலந்திருக்கிறேன் இவற்றில் எல்லாம் அவர்களோடு.//////
:::::::::::::::::::::::::::::::::::
ஆமா கொஞம் பொறுங்கோ சீக்கிரம் அப்பாடலும் வரும். அது தான் காமன் கூத்து அக்கா
////ஆதவா said...
பாடலைப் பாடவேண்டும் போல இருக்கிறது கலை.... முதல் வரியிலிருந்து அரசியல் பிரச்சனையைத் துவக்கி வறுமையை அப்படியே கொண்டு வந்து அநாயசமாக பயணிக்கிறது!!
இவ்வகை நாட்டுப்புறப்பாடல்கள்தான் பிற்பாடு சங்க காலத்தில் அகப்பாடல்களாக வந்தன என்பது நாம் அறிந்ததுதான்... அதனுள் பொதிந்திருக்கும் கருத்து அப்படிப்பட்டது!!
தொடர்ந்து எழுதுங்கள் கலை!பாடலைப் பாடவேண்டும் போல இருக்கிறது கலை.... முதல் வரியிலிருந்து அரசியல் பிரச்சனையைத் துவக்கி வறுமையை அப்படியே கொண்டு வந்து அநாயசமாக பயணிக்கிறது!!
இவ்வகை நாட்டுப்புறப்பாடல்கள்தான் பிற்பாடு சங்க காலத்தில் அகப்பாடல்களாக வந்தன என்பது நாம் அறிந்ததுதான்... அதனுள் பொதிந்திருக்கும் கருத்து அப்படிப்பட்டது!!
தொடர்ந்து எழுதுங்கள் கலை!////
:::::::::::::::::::::::::::::::::::
வாங்க ஆதவா ரொம்ப பிஸியா? ஓய்வு எடுத்துக்கங்க ஓகேவா சீக்கிரம் ஒரு தாலாட்டுப்பாட்டுப் போடுறேன்.
நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் ஆதவா
////SASee said...
கலை,
மலையக பார்வை,
வரவேற்பவர்களில் நானும் ஒருவன்.
தொடருங்கள்...... எம் மலையக வலை விஜயத்தினை./////
:::::::::::::::::::::::::::
வாங்க சசி நன்றி நண்பரே உங்கள் ஆதரவிற்கு
////////பிளாட்டினம் said...
ம்ம்... எதோ ஒரு நாள் மலையகம் என்று நண்பர்களோடு வந்து விடுப்பு கேட்ட போது.. ஒரு அம்மா சொன்ன பாட்டு இது... எழுத்து வடிவத்தில கூட விளக்கமா இருக்கு...தொடருங்கள் உங்கள் பணியை...////////////
வாங்க பிளாட்டினம் உங்கள் வருகையால் என் வலைப்பூவும் பிளாட்டினாமாய்டுச்சி. நன்றி நண்பரே உன்கள் வருகைக்கும் ஆதரவிற்கும்.
வரவேற்க வேண்டிய விடயம். தங்கள் முயற்சி தொடரட்டும், வாழ்த்துகள்!
நல்ல முயற்சி!
//கலை - இராகலை said...
//தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தாள் யாழினி. அவளது கோபத்தின் சதவிகிதம் 67 % மாக இருப்பதை அது சுட்டியது.. //
எங்க கிடைக்கும் இது!!!!!
நல்லாயிருக்கு ஆதவா//
ஹா ஹா :-) நல்லாயிருக்கு உங்க நக்கலு
சந்தம் கலந்து தாளலயம் சேர்ந்ததாகப் பாடல்கள் அனைத்தும் அமைந்துள்ளன..
பகிர்வுக்கு நன்றிகள் கலை....
தொடர்ந்தும் மலையகம் பற்றிய நிறைய விடயங்களை எதிர்பார்க்கிறோம்...!
//குடந்தைஅன்புமணி
வரவேற்க வேண்டிய விடயம். தங்கள் முயற்சி தொடரட்டும், வாழ்த்துகள்!//
:::::::::::::::::::::::::::
வாங்க அன்புமணி, நன்றிங்க.
///கடையம் ஆனந்த்
நல்ல முயற்சி!///
::::::::::::::::::::::::
வாங்க ஆனந்த் நன்றி நண்பரே!
///கமல்
சந்தம் கலந்து தாளலயம் சேர்ந்ததாகப் பாடல்கள் அனைத்தும் அமைந்துள்ளன..
பகிர்வுக்கு நன்றிகள் கலை....
தொடர்ந்தும் மலையகம் பற்றிய நிறைய விடயங்களை எதிர்பார்க்கிறோம்...!
::::::::::::::::::::::::::::::::::::::
வாங்க கமல் கடைசியாக வந்திருக்கின்றீர்கள், வேளை பளுவா? நிச்சியமாக தொடரும்.
மிகவும் நல்ல முயற்சி மிக மிக நல்ல பதிவு. நாட்டுபுற பாடல்கள் நாட்டுபுற கலைகள் அழிந்து வருவதை சமீபமாக
ஒருசிலர் கவனம் கொள்வது சற்று
மகிழ்சியளிக்கின்ற விசயம், இன்னும் அதிகம் பேர் இதில் கவனம் கொள்ளவேண்டும். எஸ்.இராமகிருஷ்னனின் கர்னமோட்சம் பார்த்தபோது அதன் பின்னனியும் சமகாலத்தில் அது தம் சங்கதிகளிடமிருந்து விளகிச்செல்வதையும் உணரமுடிந்தது.
உங்கள் முயற்சியை நான் வெகுவாக பாராட்டுகின்றேன் தொடர்ந்து இப்பணியை செய்யுபாறு வேண்டிக் கொள்கின்றேன்
Kalaikumar,
Ennaku thamil typing theriathu!Mannikawum. Ungalodu thanipatta muriyil thodarbu kollawendrum. Eemail pannunka.
sashi.joshua@gmail.com
Nandri
Sasi-USA
Post a Comment