கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Sunday, April 5, 2009

சிரட்டையும் மண்ணும்



நானும் நீயும்
ஓடிப்பிடித்து விளையாடிய‌
ஒற்றையடிப்பாதை,
காடுப்பத்தி...
காணாமல் போயிருந்தது

சலசலத்து
சங்கீதம் பாடி!
ஊரின் நடுவால்
ஊடறத்து ஓடிய‌
ஆறுகள் இரண்டும்
அடையாளமற்றுப்போயிருந்தன‌

ஊஞ்சல் கட்டி ஆடிய
எல்லைப்புற ஆலமரம்
எப்படி மறைந்தது
சுவடுகளற்று...
கறையானும் பாம்பும்
வாழ்வதற்காய்
புதிதாக அங்கே
புத்துகள் முளைத்திருந்தன‌

ஊர்ப‌ற்றி
ஒவ்வொரு நினைவும்
ஊசியாய் குத்தியது மனசை

திரும்பிடும்
திசைகள் தோறும்
நமதான ஞாபங்கள்
கைகாட்டி முறுவலிக்கிறது

கிட்டி, கிளித்தட்டு
பட்டம், பம்பரம்
மறந்துபோன விளையாட்டுக்கள்
மறுபடியும்
ஞாபகம் வந்தது

மயானத்தை
நினைவூட்டுவதாய்
நமதான..
அழகிய கிராமம்

அழுக்காகிப்போன‌
நினைவுகளை...
தூசுதட்டி,துடைத்து
வாசிக்கையில்
அழுகை வந்தது

தூரத்தில்
சிரட்டையும் மண்ணும்
சிதறிக்கிடந்தன..
விளையாட யாருமில்லாமல்.

நன்றி
நாச்சியாதீவு பர்வீன்
நூல் : சிரட்டையும் மண்ணும்.

22 comments:

ஆ.ஞானசேகரன் said...

//தூரத்தில்
சிரட்டையும் மண்ணும்
சிதறிக்கிடந்தன..
விளையாட யாருமில்லாமல்//

நச்... நச்... நச்.... நச்சுன்னு வரிகள்

ஆ.சுதா said...

வலியும் ஏக்கமும் உண்மையும் நிறந்த கவிதை, ஊர் பற்றிய நம் நினைவுகள் இப்படிதான் சுவடுகளை மட்டும் நம்மிடம் விட்டுவிட்டு ஒவ்வொன்றும் மறைந்துவிடுகின்றன
உங்கள் கவிதை அதை ஏக்கத்துடன் வெளிபடுத்துகின்றது

Suresh said...

//தூரத்தில்
சிரட்டையும் மண்ணும்
சிதறிக்கிடந்தன..
விளையாட யாருமில்லாமல்//

:-) arumai

தர்ஷன் said...

படித்த நல்ல விடயங்களை அனைவரோடும் பகீர்கிறீர்கள்
பகிர்வுக்கு நன்றி

SASee said...

கலை அழகான
வரிகளை புசித்துப் பின்
பகிர்ந்துள்ளீர்கள்..
அழகான வலிக்கின்ற வரிகள்.
நன்றி கலை...

ஆதவா said...

அருமையான கவிதை.. கொஞ்சம் பின்னோக்கி செல்லவேண்டிய வாய்ப்பை இக்கவிதத வழங்கியது! பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கலை!!

ஆதவா said...

அருமையான கவிதை.. கொஞ்சம் பின்னோக்கி செல்லவேண்டிய வாய்ப்பை இக்கவிதத வழங்கியது! பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கலை!!

malar said...

சரி !என்னை ஒருத்தர் தாறுமாறாக திட்டுகிறார் அவர் கோபபடும் வேகம் 100 டிகிரிக்கு மேல் அந்த நிலையில் நான் என்னசெய்ய வேண்டும் ? உங்கள் பதிலை என்பதிவுக்கே அனுப்புங்கள் .நன்றி
உங்கள் பதிவை தேடி அதில் உங்கள் பதிலை தேடி உங்கள் மெயில் id தொலைத்து

Anonymous said...

நல்ல பகிர்வு!

kuma36 said...

ஆ.ஞானசேகரன்
ஆ.முத்துராமலிங்கம்
Suresh
தர்ஷன்
SASee
ஆதவா
malar
கவின்

:::::::::::::::::::::::::::::
அனைவருக்கு மனமார்ந்த நன்றிகள். இக்கவிதை நண்பர் ஒருவரின் சிரட்டையும் மண்ணும் என்ற நூலில் உள்ளவை, அவை பல்பேரை சொன்றடைய வேண்டும் என்ற நோக்குடனே அவரதின் விருப்பப்டி இங்கு வெளியானது. இன்னும் சில கவிதைகள் மலரும்..

குடந்தை அன்புமணி said...

நல்ல கவிதை நண்பா! பால்ய கால நினைவுகள் மனதிற்குள் சுழன்றடிக்கின்றன.பகிர்ந்துகொண்ட தங்களுக்கும், படைத்தவருக்கும் வாழ்த்துகள்!

புல்லட் said...

நல்லா நிறைய புத்தக ஸ்டொக் வச்சிருக்கீங்க போல... எடுத்து எடுத்து விடுறிங்்க... ம்ம் நல்ல கவிதை! நன்றி! :)

kuma36 said...

///////malar said...
சரி !என்னை ஒருத்தர் தாறுமாறாக திட்டுகிறார் அவர் கோபபடும் வேகம் 100 டிகிரிக்கு மேல் அந்த நிலையில் நான் என்னசெய்ய வேண்டும் ? உங்கள் பதிலை என்பதிவுக்கே அனுப்புங்கள் .நன்றி
உங்கள் பதிவை தேடி அதில் உங்கள் பதிலை தேடி உங்கள் மெயில் id தொலைத்து///////

என் மெயில் ஐடி?? விளங்கவில்லை!!!

நல்ல கேள்வி என்னால முடியல! ஆமா அது எப்படி அவரின் கோபத்தின் அள‌வை கண்டுபிடிச்சிங்க?

சரி ஏன் ஒருத்தர் உங்களை தாறுமாறா திட்டனு அவருக்கென்ன லூசா? அப்படி திட்டுவதா இருந்தா அவரு திட்டுவதற்கு நீங்க ஏதாவது தவறு சொய்திருக்கனும் இல்லையா? சும்மா ஒன்னுமே பன்னாம யாரும் யாரையும் பொதுவாக திட்டுவதில்லை. பைத்தியகாரன்கள் வீதியோரம் போற வாற எல்லாத்தையும் திட்டுவதை கண்டிருக்கேன். அவனை நாம் ஒன்று கூறுவதில்லையே அதே போல் இருந்துவிட வேண்டியது தானே?

ஓகே அவரு ரொம்ப கோவகாரருனு வச்சுகுவோம் நீங்க அவரு கோபப்ப‌டும் போது அவருடைய கோபத்தை தணிக்க முயற்சி செய்யலாம், அவருடைய கோபம் உங்கள் மீது இருக்கும் பட்சத்தில் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சொல்வதே மேல்! அது இருவருக்கும் நன்மை பயக்கும்.

இவை தனிப்பட்ட என் கருத்து மாத்திரமே!

என்னை வைச்சு கொமடி கிமடி பன்னலையே?

kuma36 said...

குடந்தைஅன்புமணி
புல்லட் பாண்டி

நன்றிகள் நண்பர்களே!

யாழினி said...

ம் கவிதை நன்றாக இருக்கிறது இராகலை!

Anonymous said...

hi bady i'm sory to write here in english.ur this attamed is very very...good fentastic exelent... i'm sory i cant find the word to discribe and wish for your this activity.hey kali kumar heds up for u man heds up.

this is mathan Currently living in australia native place hatton srilanka i like to read poems about our up country.kali kumar your front page poem are very nice keep doing any help fell free tex me i'll try to do

thanks

sakthi said...

//தூரத்தில்
சிரட்டையும் மண்ணும்
சிதறிக்கிடந்தன..
விளையாட யாருமில்லாமல்//

arumai kalai

sakthi said...

சலசலத்து
சங்கீதம் பாடி!
ஊரின் நடுவால்
ஊடறத்து ஓடிய‌
ஆறுகள் இரண்டும்
அடையாளமற்றுப்போயிருந்தன‌
nice

sakthi said...

புல்லட் பாண்டி said...

நல்லா நிறைய புத்தக ஸ்டொக் வச்சிருக்கீங்க போல... எடுத்து எடுத்து விடுறிங்்க... ம்ம் நல்ல கவிதை! நன்றி! :)

hahahaha

nathimoolam rishi moolam ellam parka kudathu nanba

ஹேமா said...

கலை வந்திட்டேன்.பதிவுகள் வாசித்து பின்னூட்டம் போடுவேன்.

இந்தக் கவிதை பழையதை தூசு தட்டியநினைவுகள்.அருமை.வலியோடு வந்த வார்த்தைகள்.அந்தச் சிரட்டையை எடுத்து வைத்துக்கொள்வோம் ஞாபகச் சின்னமாக.

Unknown said...

// கிட்டி, கிளித்தட்டு
பட்டம், பம்பரம்
மறந்துபோன விளையாட்டுக்கள்
மறுபடியும்
ஞாபகம் வந்தது //


அய்யய்யோ... !! பழைய ஞாபகம் வந்துருச்சே....!!! இருந்தாலும் எங்க ஊருல இதெல்லாம் மறக்க கூடாதின்னு ... நாக இன்னுமும் கோலி குண்டு , பம்பரம் எல்லாம் விளையாடுறோம்...!!

Anonymous said...

rgg

.