

Artists: Ananya, Sasi Kumar
Director: Samuthirakani
Music Director: Sundar C Babu
Singer : ஹரிஹரன்
உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது..
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது
காதல் தோற்றதாய் கதைகள் ஏது?
தோற்றால் தோற்றது காதல் ஆகாது.
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தத்பர்த்தம்
உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது..
வலிகள் தாங்கும் காதல் மிகவம் வலியது
நினைவுகளாலே நிச்சயதார்த்தம் நடந்தது அவனோடு..
அவனில்லாது அடுத்தவன் மாலை ஏற்பது பெரும்பாடு
ஒரு புறம் தலைவன் மறுபுறம் தகப்பன் இதற்குள் எறும்பானாள்
பாசத்துக்காக காதலை தொலைத்து ஆலையில் கரும்பானாள்
யார் காரணம் ? யார் காரணம் ?
யார் பாவம் யாரைச்சேரும் யார்தான் சொல்ல..
கண்ணீர் வார்த்தாள் கன்னி மானே
சுற்றம் செய்த குற்றம்தானே..
உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ்நிலை
உணர்வைப்பார்ப்பதேது உறவின் சூழ்நிலை.
மனமெனும் குளத்தில் விழி என்னும் கல்லை முதல் முதல் எறிந்தாளே..
அலையலையாக ஆசைகள் எழும்ப அவன் வசம் விழுந்தானே
நதிவழி போனால் கரைவரக்கூடும் விதிவழி போனானே..
விதையொன்று போட வேறொன்று முளைத்த கதையென்று ஆனானே
என் சொல்வது..???என் சொல்வது ?
தான் கொண்ட நட்புக்காக தானே தேய்ந்தான்
கற்பைப்போலே நட்பைக்காத்தான்..
காதல் தோற்கும் என்றா பார்த்தான்..
உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது..
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது
காதல் தோற்றதாய் கதைகள் ஏது?
தோற்றால் தோற்றது காதல் ஆகாது.
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தத்பர்த்தம்
உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது..
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது
உணர்வைப்பார்ப்பதேது உறவின் சூழ்நிலை.
Get Your Own Hindi Songs Player at Music Plugin
10 comments:
நல்ல பாடல் கலைக்குமார்..பகிர்வுக்கு நன்றி ! படமும் நன்றாக இருந்தது !
கலை,வந்தீங்களா வாங்கோ...வாங்கோ.எங்கள் மக்களும் நீங்களும் சுகம்தானே...!
நானும் இப்போ ஒரு வாரமாகத்தான் பதிவுகளோடு உலா வருகிறேன்.என்ன என்னைத் தனியா விட்டிட்டீங்க கலை.கமல்,கவின்,ஆதவா
ஒருத்தரையும் காணேல.
நீங்களாச்சும் ஒரு பாட்டோட... எங்கட பாட்டைச் சொல்லிக்கொண்டு பாட்டோட பாடிக்கொண்டு வந்தீங்களே.சந்தோஷம்.
மீண்டும் சந்திக்கிறதில சந்தோஷம் கலை.
பாடல் மிகவும் அருமை....!! ஒரு மென்மையை ஏற்படுத்துது.....!!!!
ஆம்மாங்க தலைவரே ..... உங்களைய இத்தன நாளா ஆளையே காணோம்.....? எங்க போயிட்டீங்க......???
இப்பவாவது வந்தீங்களே, மூணு மாசமா தேடிட்டிருந்தேன்.
பாடல் பகிர்வுக்கு நன்றி.
நீண்ட நாளாக உங்கள் வருகைக்காக காத்திருந்தோம்.... வாருங்கள் கலை.
எழுதுவதற்கு நிறையவே இருப்பதாக அறிந்தோம் விரைவில் எதிர்பார்க்கிறோம்
வாழ்த்துக்கள் கலை மீண்டும் கலக்குங்கள். இப்போது வந்த பாடல்களில் என்னை மீண்டும் கேட்கவைத்தது இதுவே.
பாடல் பகிர்வுக்கு நன்றி கலை. பாடல் வரிகள் அழுத்தமாக இருக்கின்றன..
நன்றிகள் எம்.ரிஷான் ஷெரீப்
உங்களையும் மீண்டும் சந்திக்கிறதில சந்தோஷம் அக்கா
லவ்டேல் மேடி
Subankan
சந்ரு
sshathiesh
நிலாமுற்றம்
ஆதவா
அனைவருக்கும் நன்றிகள்!!!
Post a Comment