கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Sunday, August 2, 2009

எம லோகம் போகலாம் வாடி தாயே!!


மலையக நாட்டார் பாடல் - 01 இங்கே



கண்டிக்குத்தான் போறமுன்னு
கறி சோறு தின்னுப்புட்டு
தோணி ஏற மாட்டமுன்னு
தொங்கலிலே ஒழிஞ்சிக்கிட்டா
தங்க ரத்தினமே..! அவனந்
தொலைச்சுடுவான் ஆளுக்கட்டி
பொன்னே ரத்தினமே..!

தோணி வருகுதுண்ணு
துறைமுகமே காத்திருந்தேன்
தோணி கவுந்திருச்சே
துறைமுகமே ஆசையில்ல‌

கப்பல் வருகுதுண்ணு
கடற் கரையே காத்திருந்தேன்
கப்பல் கவுந்திருச்சே
கடற் கரையே ஆசையில்ல‌

எட்டடி குடிசையிலே
இருப்பது நியாயமில்லே
எம லோகம் போகலாம் வாடி தாயே
எம லோகம் போகலாம் வாடி தாயே!!

பட்டுப் பாவாடைக் கட்டி
பகட்டு மினுக்கி கொண்டு
பரதேசம் போகலாம் வாடி தாயே
பரதேசம் போகலாம் வாடி

கங்காணி கோவத்துக்கும்
காட்டுத் தொங்க ஏத்தத்துக்கும்
இந்த இடைஞ்சலிலே
இனி இருக்க நியாயமில்லே
வாடி செவத்தப் புள்ள‌
வதுளை பக்கம் போய் பொழைப்போம்..!!!!

10 comments:

ஹேமா said...

வாங்கோ...வாங்கோ பாட்டுப் பாடிக்கொண்டு வந்தீங்களோ.

//கங்காணி கோவத்துக்கும்
காட்டுத் தொங்க ஏத்தத்துக்கும்
இந்த இடைஞ்சலிலே
இனி இருக்க நியாயமில்லே
வாடி செவத்தப் புள்ள‌
வதுளை பக்கம் போய் பொழைப்போம்..!!!!//

என்னவோ மனசுக்கு சிநேகமான வரிகள் போல இருக்கு.

கலை சுகம்தானே.திரும்பவும் வந்திருக்கீங்க.சந்தோஷமாயிருக்கு.
ஏன் வேலைப்பளுவா?இருந்தாலும் முடிஞ்ச நேரங்களில் தலை காட்டிப் போங்கோ.

இனிய நண்பியாய் வாழ்த்துக்கள் பல.

ஆ.ஞானசேகரன் said...

அருமையா இருக்கு தோழா.. பாராட்டுகள்

ஆ.ஞானசேகரன் said...

நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பா

புல்லட் said...

வழமை போல அருமை! யாரெழுதியது?

துபாய் ராஜா said...

நாட்டார் பாடல் அருமை.

வாழ்த்துக்கள்.

சப்ராஸ் அபூ பக்கர் said...

பாடினேன்.... ஆனால் நாட்டுப் புற நடனம் தான் வரமாட்டேங்குது அண்ணா....

அருமை... வாழ்த்துக்கள்.......

Muruganandan M.K. said...

நல்ல பதிவு. படித்து மகிழ்ந்தேன். நன்றி

நிலாமதி said...

நாட்டுப் பாடல் வடிவில் அமைந்த உங்கள் பாடல் வரிகள் அழகு
மேலும் தொடருங்கள் வாசிக்க காத்திருக்கிறோம்.

kuma36 said...

அனைவரின் கருத்துக்களுக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள்!! எனது தாமதமான பின்னூட்டளுக்கு வருந்துகின்றேன்.

kuma36 said...

/////புல்லட் said...

வழமை போல அருமை! யாரெழுதியது?////

நன்றி புல்லட்! மலைக நாட்டார் பாடல்கள் உண்மையில் எழுதப்பட்டவைகள் என்பதைவிட தொகுக்கப்பட்டவைகள் என்பதே சரியானதாகும்! இதுவும் அப்படி ஒன்றே!

.