கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Tuesday, March 24, 2009

தியானம் 2


தியானம் முதல் பகுதி இங்கே.....

தியானம் 2

தியானம் என்ற முதல் பகுதியை எழுதியதில் ரொம்ப திருப்தி, ஏன்னா அதுல ரொம்ப இட் கிடைச்சது, மட்டுமல்ல விகடனிலும் பிரசுரித்து மேலும் ஊக்கப்படுத்தியிருந்தாங்க. அதோட நம்ம நண்பர்கள் எல்லாமே பின்னுட்டம் மூலம் கொடுத்த ஊக்கத்தில் தைரியத்தில் இரண்டாவது பதிவு தொடர்கிறது. முதல் பதிவில் ஒரு சில விடயங்களை தெளிவுப்படுத்தவில்லை என்று அதை அழகா பின்னுட்டத்தில் எப்படி எழுதியிருக்க வேண்டும் என கூறியிருந்த நண்பருக்கும் (அறிவே தெய்வம்) நன்றியை சொல்லிக்கொண்டு நேரா பதிவுக்குள் போவோம்.

"தியானத்தின் போது இதயத் துடிப்பு நிமிடத்திற்கு மூன்று தரம் குறைவாகத் துடிக்கிறது. நமது மூளை, ஒரு நல்ல தூக்க நிலையின் போது உண்டாகும் "ஆல்பா" நிலையினை அடைகிறது.மின்சக்தியை எதிர்க்கும் சுமார் ஒரு மரத்து போன தோல் உணர்வு நிலை சுமார் நான்கு மடங்கு அதிகமாகிறது. மனிதர்கள் மிக அமைதி அடைந்தவர்களாகக் காண்ப்படிகிறார்கள் என ஹார்டுவர்டு மருத்துவ பேராசிரியர் பென்சன் கூறுகிறார்.

ஆகவே தியானத்தின் உண்மை தன்மையை (நன்மையை) விஞ்ஞான மூலமும்
தெளிவுப்படுத்துகிறார்கள். அதேபோல் அமெரிக்காவின் ஹார்டு வார்ட் பல்கலைக்கழகத்திலும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பலரைத் தியானம் செய்ய கூறி அவர்களது ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, ஆசனவாயின் வெப்பநிலை,தோலின் உண்ர்வு,மூளையின் மின் துடிப்பு முதலியவற்றை மருத்துவக் கருவி கொண்டு சோதித்தனர். தியானத்தின்போது நமது ஆக்சிஜன் தேவை குறைந்து அதே போல வெளிவரும் மூச்சில் கார்பனைட் ஆக்சைடின் அளவும் குறைந்தது. அதாவது மனிதன் நல்ல நினைவுடன் விழிப்பு நிலையில் இருக்கும் போது தியானம் செய்தவன் மூலம், தூக்க நிலையையும் கடந்து ஓர் உரிய ஓய்வை உடல் பூரணமாக அனுபவிக்கிறது என கண்டனறாம். நமது உடலின் உள்ளே நிகழும் உணவு மாறுபாடுகள், ரசாயன் மாற்றங்கள் எல்லாம் சுமார் 20 சதம் குறைகின்றன எனவும் அறிந்துள்ளனர். (இதற்கான ஆதாரம் தேடியும் கிடைக்க வில்லை யாருக்காவது தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.)

தியான‌த்தில் இவ்வளவு உண்மைகள் இருக்கின்ற போதிலும் யாருமே தானாய் முன் வந்து நாளுக்கு ஒரு 30 நிமிடம் சொலவு செய்ய விரும்பாமைக்கு காரணம் ஏதுவாயிருக்கும்? பொதுவாக நோக்கினோமானால் தியானத்திப்பற்றிய போதிய அறிவினை எந்த பாடசாலை புத்தகங்களிலும் வழங்காமை, தியானத்தை இந்து அல்லது பெளத்த மதம் சார்பானவை என பலரும் என்னுதல், அதோடு தியானத்தை மதம் சார்ந்த அமைப்புகள் கொண்டு நடாத்துவதையும் குறிப்பிடலாம். ஒரு நாளுக்கு 30 நிமிடம் நாம் தியானத்திற்கு சொலவிடுவதால் மீதி 23.5 மணித்தியாலம் நிம்மதியடையலாம் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். அதோடு பாடசாலைகளில் இதற்கு நேரம் ஒதுக்கி பயிற்சியினை அழிப்பதன் மூலம் தியானத்தின் உண்மை நிலையினை பலரும் புரிந்துக்கொள்ள வழிவகுக்கலாம்.

"ஒரு நாட்டில் ஒரு சதவீத மக்கள் தியானம் செய்வதால் அந்நாட்டில் 10 சதவீத குற்றமும், களவும், கொலையும் குறையும்" என்று ஞானிகள் கூறுவர்.

தியானத்தை பின்ப்பற்ற‌ மதம் தேவையில்லை தியானத்தின் போது ஓம், சிவாய நம, யேசு, அல்லா, புத்தம் இப்படி எதுவேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.நம்மை நாமே அறிந்து கொள்ள, நம்மில் உள்ள சக்தியை உணர்ந்துக்கொள்ள ஒரு முறை தான் தியானம்.


தியானம் தொடரும்...


அறிவே தெய்வம் என்பவரால் விபஸ்ஸனா தியான முறை பற்றி தெரிந்துக்கொண்டேன் நீங்களும்...





22 comments:

வடுவூர் குமார் said...

தியானம் செய்வது பற்றிய அடிப்படைகளை சொல்லியுள்ளீர்கள் ஆனால் மிக முக்கியமாக யாராவது கூன் விழாத முதுகுடன் கண் மூடி கை சேர்த்து உட்காந்திருக்கும் போது பக்கத்தில் இருப்பவர்கள் சத்தம் செய்யக்கூடாது என்று தெரிந்துகொண்டாலே தியானம் செய்பவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
பலருக்கு இது பற்றி எதுவும் தெரிவதில்லை.

malar said...

தியானம் பற்றி அழாகாக சொல்லிஇருக்கிறீர்கள்.நீங்கள் சொன்ன அறிவே தெய்வம் பார்தேன் அதில் " அதுபோல் மனத்துள் வரும் ஒவ்வாத எண்ணங்களை ALERGIC THOUGHTS இனங்கண்டு, எதுவாய் இருந்தாலும் இரக்கமின்றி, தயக்கமின்றி எடுத்து வெளியே எறியுங்கள். இறுக்கம் குறையும்; தானாக மன அமைதி வாய்க்கும்." இனங்கண்டுவிடலாம் ஆனால் எப்படி எறிவது ?சுத்தி சுத்தி மனதிலேயே தான் கிடக்கிறது .

புல்லட் said...

ம்ம்! நல்லாயிருக்கு... எங்கள் பல்கலையில் ஒரு ஒப்சனல் பாடம் தியானத்தை பறறி இரந்தது.. நானும் எடுத்திருந்தேன்..இப்போது மீட்டுப்பார்க்க உதவியாயுள்ளது உங்கள் பதிவு

பதிவை தொடர வாழ்த்துக்கள்..

சி தயாளன் said...

தொடருங்கள்...

மனதுக்கு அமைதி தரும் தியானம் மதம் சார்ந்தது அல்ல..மனம் சார்ந்தது...:-) அனைவரும் செய்யலாம்

kuma36 said...

///வடுவூர் குமார் said...
தியானம் செய்வது பற்றிய அடிப்படைகளை சொல்லியுள்ளீர்கள் ஆனால் மிக முக்கியமாக யாராவது கூன் விழாத முதுகுடன் கண் மூடி கை சேர்த்து உட்காந்திருக்கும் போது பக்கத்தில் இருப்பவர்கள் சத்தம் செய்யக்கூடாது என்று தெரிந்துகொண்டாலே தியானம் செய்பவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
பலருக்கு இது பற்றி எதுவும் தெரிவதில்லை.///


வாங்க சார் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

kuma36 said...

// malar said...
தியானம் பற்றி அழாகாக சொல்லிஇருக்கிறீர்கள்.நீங்கள் சொன்ன அறிவே தெய்வம் பார்தேன் அதில் " அதுபோல் மனத்துள் வரும் ஒவ்வாத எண்ணங்களை ALERGIC THOUGHTS இனங்கண்டு, எதுவாய் இருந்தாலும் இரக்கமின்றி, தயக்கமின்றி எடுத்து வெளியே எறியுங்கள். இறுக்கம் குறையும்; தானாக மன அமைதி வாய்க்கும்." இனங்கண்டுவிடலாம் ஆனால் எப்படி எறிவது ?சுத்தி சுத்தி மனதிலேயே தான் கிடக்கிறது .///

வாங்க மலர் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

தொடர்ந்து முயற்சி பன்னிபாருங்க. எவ்வள்வு நாள் தான் ஒரு விடயத்தை மனம் சுத்தி வர போகுது.

kuma36 said...

//புல்லட் பாண்டி said...
ம்ம்! நல்லாயிருக்கு... எங்கள் பல்கலையில் ஒரு ஒப்சனல் பாடம் தியானத்தை பறறி இரந்தது.. நானும் எடுத்திருந்தேன்..இப்போது மீட்டுப்பார்க்க உதவியாயுள்ளது உங்கள் பதிவு
பதிவை தொடர வாழ்த்துக்கள்..///

வாங்க புல்லட் நன்றி. இப்படியென்றால் உங்களுக்கு நல்லாவே தியானத்தைப்பற்றி திரிந்திருக்குமே!!

kuma36 said...

//டொன்’ லீ said...
தொடருங்கள்...
மனதுக்கு அமைதி தரும் தியானம் மதம் சார்ந்தது அல்ல..மனம் சார்ந்தது...:-) அனைவரும் செய்யலாம்//

வங்க டொன் லீ வருகைக்கு நன்றி.
அருமையான கருத்தை சொன்னிங்க!

நிகழ்காலத்தில்... said...

கலை-தொடர்ச்சியாக தியானத்தினால்
மனதில் ஏற்படும் மாற்றங்களை
எழுதுங்கள்...

\\மலர்-சுத்தி சுத்தி மனதிலேயே தான் கிடக்கிறது.\\ தனி மடல் எழுதுங்கள்,
அலசிப் பார்ப்போம்

\\வடுவூர் குமார்--பக்கத்தில் இருப்பவர்கள் சத்தம் செய்யக்கூடாது என்று தெரிந்துகொண்டாலே தியானம் செய்பவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.\\
உங்களுக்கு உதவ வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். அதையும் ஏற்றுக்
கொண்டு அமைதியடையுங்கள்.
தியானம் தானாய் வாய்க்கும்

ஹேமா said...

கலை எனக்கு ஒரு குழப்பம்.மனம் அமைதியா இருந்தால்தான் தியானம் செய்ய முடியும்.மனம் ஒரு நிலைப்படணும்.சரியா.தியானம் செய்தால்தான் இந்த அமைதி கிடைக்குமா?அப்போ அமைதி தியானத்துக்கு முன்னமா....பிறகா !(திட்டாதீங்க)

malar said...

\\மலர்-சுத்தி சுத்தி மனதிலேயே தான் கிடக்கிறது.\\ தனி மடல் எழுதுங்கள்,
அலசிப் பார்ப்போம் "///

தனி மடல் எந்த முகவரிக்கு எழுத ?

ஆதவா said...

தியான வகுப்பு வந்துட்டேன் கலை!!


/////////
"ஒரு நாட்டில் ஒரு சதவீத மக்கள் தியானம் செய்வதால் அந்நாட்டில் 10 சதவீத குற்றமும், களவும், கொலையும் குறையும்" என்று ஞானிகள் கூறுவர்./////////

தியானம் என்பது புலனடக்கம் மட்டுமல்ல, மன அடக்கமும் கூட. இல்லையா கலை!! இந்த தியான வகுப்பில் தியான செய்திகளை அறிந்து கொண்டேன்.

அடுத்த வகுப்பாக காத்திருக்கோம்...

நிகழ்காலத்தில்... said...

\\மலர்-சுத்தி சுத்தி மனதிலேயே தான் கிடக்கிறது.\\ தனி மடல் எழுதுங்கள்,
அலசிப் பார்ப்போம் "///

தனி மடல் எந்த முகவரிக்கு எழுத ?

arivhedeivam@gmail.com

தர்ஷன் said...

அருமையான பதிவு நிறைய நாள் இடைவெளி விடுகிறீர்கள்
அடுத்த பாகத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன்

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் said...

நன்றி கலை ஒரு அருமையான பதிவு. உங்கள் பதிவுகள் அனைத்துமே சுப்பர். தொடர்ந்தும் தியானம் பற்றி எழுதுங்கள்......

kuma36 said...

//அறிவே தெய்வம் said...
கலை-தொடர்ச்சியாக தியானத்தினால்
மனதில் ஏற்படும் மாற்றங்களை
எழுதுங்கள்...//

வாங்க சார் ரொம்ப நன்றி. நிச்சியமாக தொடர்வேன்.

kuma36 said...

//ஹேமா said...
கலை எனக்கு ஒரு குழப்பம்.மனம் அமைதியா இருந்தால்தான் தியானம் செய்ய முடியும்.மனம் ஒரு நிலைப்படணும்.சரியா.தியானம் செய்தால்தான் இந்த அமைதி கிடைக்குமா?அப்போ அமைதி தியானத்துக்கு முன்னமா....பிறகா !(திட்டாதீங்க)//

வாங்க அக்கா! மன அமைதிக்காகதான் தியானம்.தியானத்தின் மூலம் தான் மனம் ஒரு நிலைப்படும். அதற்கும் சில நாட்கள் எடுக்கும். அமைதி தியானத்திற்கு பிறகுதான்.

kuma36 said...

ஆதவா said...
தியான வகுப்பு வந்துட்டேன் கலை!!
/////////
"ஒரு நாட்டில் ஒரு சதவீத மக்கள் தியானம் செய்வதால் அந்நாட்டில் 10 சதவீத குற்றமும், களவும், கொலையும் குறையும்" என்று ஞானிகள் கூறுவர்./////////
////தியானம் என்பது புலனடக்கம் மட்டுமல்ல, மன அடக்கமும் கூட. இல்லையா கலை!! இந்த தியான வகுப்பில் தியான செய்திகளை அறிந்து கொண்டேன்.
அடுத்த வகுப்பாக காத்திருக்கோம்...///

வாங்க ஆதவா! வகுப்பின் ஆரம்பகர்த்தா நீங்க தானே! உங்களால் தான் இவ்வளவு தூரம்.

kuma36 said...

//தர்ஷன் said...
அருமையான பதிவு நிறைய நாள் இடைவெளி விடுகிறீர்கள்
அடுத்த பாகத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன்//

வாங்க தர்ஷன். விரைவில் சந்திபோம் தியானத்தில்.

kuma36 said...

//சந்ரு said...
நன்றி கலை ஒரு அருமையான பதிவு. உங்கள் பதிவுகள் அனைத்துமே சுப்பர். தொடர்ந்தும் தியானம் பற்றி எழுதுங்கள்......//

வாங்க சந்ரு . நன்றிகள்

COOL SUTHAN said...

best of luck

kuma36 said...

//COOL SUTHAN said...
best of luck//

thx suthan

.